articles

நிறைவேறாத அரசியலமைப்பு வாக்குறுதிகளும் நீதித்துறைப் போக்குகளும் - ஆர்யா சுரேஷ்

நிறைவேறாத அரசியலமைப்பு வாக்குறுதிகளும் நீதித்துறைப் போக்குகளும்

இந்திய உச்சநீதிமன்றத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையம் (Centre for Research and Planning - CRP) வெளியிட்டுள்ள ‘சாதி குறித்த நீதித்துறையின் கருத்தாக்கங்கள் (2025)’ என்ற அறிக்கை, மிக முக்கியமான ஒரு வரலாற்று ஆவணமாகும். இந்திய நீதித்துறை கடந்த பல தசாப்தங்களாக சாதியை எவ்வாறு அணுகியுள்ளது என்பதை இந்த அறிக்கை விரிவாக ஆய்வு செய்கிறது. இது ஒரு சுயபரிசோதனை முயற்சியாக முன்வைக்கப்பட்டாலும், நுணுக்கமாகப் பார்த்தால், அரசியலமைப்பின் சமத்துவக் கோட்பாட்டிற்கும், நீதித்துறையில் வேரூன்றியுள்ள மேல்தட்டுச் சமூ கத்தின் உலகப்பார்வைக்கும் இடையே நடக்கும் நீண்டகால கருத்தியல் போராட்டத்தையே இது வெளிப்படுத்துகிறது. அம்பேத்கரின் எச்சரிக்கையும்  வர்க்கப் பின்னணியும் அரசியலமைப்புச் சட்டம் என்பது சாதியை ஒழிப்பதற்கான ஒரு முழுமையான ஆயுதம் அல்ல  என்பதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நன்கு அறிந்தி ருந்தார்.

1949 நவம்பர் 25 அன்று அவர் ஆற்றிய உரை யில், “சாதி என்பது தேச விரோதமானது; ஏனெனில் அது சமூக வாழ்வில் பிரிவினையை உருவாக்குகிறது” என்று எச்சரித்தார். சகோதரத்துவம் (Fraternity) இல் லாமல் சமத்துவமும் சுதந்திரமும் வெறும் “வண்ணப் பூச்சாக” மட்டுமே இருக்கும் என்றார். தோழர் பி.டி. ரணதிவே அவர்கள் குறிப்பிட்டது போல, சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய தேசிய முதலாளித்துவ வர்க்கம், சாதியின் வேர்களைக் கண்டறிந்து அதனை வேரோடு களைவதில் ஆர்வம் காட்டாததே இந்த வரம்புகளுக்குக் காரணமாகும். நீதித்துறையின் மொழி நடுநிலையானது அல்ல; அது ஏற்கனவே உள்ள அதிகார உறவுகளைப் பிரதி பலிக்கும் மற்றும் வலுப்படுத்தும் ஒரு கருத்தியல் களமாகும். நீதித்துறையின் முரண்பட்ட அணுகுமுறைகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைப் பகுப்பாய்வு செய்யும்போது, சாதி குறித்த புரிதலில் ஒரு முரண் பட்ட நிலையைக் காண முடிகிறது. ஒருபுறம், சாதியை ஒரு பொருள்முதல்வாத மற்றும் சுரண்டல் அமைப்பாக அங்கீகரிக்கும் போக்கு உள்ளது.

நீதி யரசர்கள் சின்னப்ப ரெட்டி (வசந்த் குமார் வழக்கு,  1985), ரத்தினவேல் பாண்டியன் மற்றும் பி.பி. ஜீவன் ரெட்டி (இந்திரா சஹானி வழக்கு, 1992) ஆகியோர் சாதி-தொழில்-வறுமை என்ற சுழற்சியையும், அதன் படிநிலை சமத்துவமின்மையையும் ஆவ ணப்படுத்தினர். சாதி என்பது வெறும் அடையாளம் அல்ல, அது உற்பத்தியின் சமூக உறவுகளோடும் அதி காரத்தோடும் பிணைக்கப்பட்டது என்பதை அவர் கள் உணர்த்தினர். இதன் உச்சமாக, சபரிமலை தீர்ப் பில் (2018) நீதியரசர் டி.ஒய். சந்திரசூட், “தீட்டு மற்றும் புனிதக் கோட்பாடுகளுக்கு அரசியலமைப்பு ஆட்சி யில் இடமில்லை” என்று உறுதிபடக் கூறினார். மறுபுறம், சாதியை ஒரு தூய்மையான அல்லது வெறும் தொழில் பிரிவினையாகச் சித்தரிக்கும் ‘பாலஜி (1963)’ போன்ற தீர்ப்புகள், சாதி வன்முறை களுக்கும் வர்ணக் கோட்பாட்டிற்கும் இடையிலான தொ டர்பைத் துண்டித்தன. இது சாதியின் பெயரால் நடக்கும் வன்முறைகளை அதன் தத்துவார்த்த அடித் தளமான பிராமணியத்திலிருந்து (மனுஸ்மிருதி, புரு ஷசூக்தம்) விடுவிக்கும் முயற்சியாகும்.

சாதியை ஒரு “தன்னார்வ கலாச்சார நடைமுறை” என்று சித்த ரிப்பது அதன் கட்டாய மற்றும் ஒடுக்குமுறைத் தன்மையை மறைப்பதாகும். மதங்களைக் கடந்த சாதி: நீதிமன்றத்தின் பாராமுகம் இந்த முரண்பட்ட போக்கின் மிக மோசமான வெளிப்பாடு, சாதியை இந்து மதப் பிரச்சனையாக மட்டும் சுருக்க முயல்வதாகும். முஸ்லிம்கள், கிறிஸ்த வர்கள் மற்றும் சீக்கியர்களிடையேயும் சாதி இருப்ப தற்கான வலுவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், ‘இந்திரா சஹானி’ வழக்கின் சில மாறுபட்ட கருத்துக் கள் (Kuldip Singh’s dissent) அதனை அங்கீகரிக்கத் தயங்கின. இது தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் வாழ்வியல் எதார்த்தங்களைப் புறக்கணிப்பதுடன், ஒட்டுமொத்த சாதியக் கட்ட மைப்பை ஒழிக்கும் அரசியலமைப்பு வாக்குறுதியை மீறுவதாகும். சாதி என்பது மதங்களைக் கடந்த ஒரு இந்தியச் சமூக எதார்த்தம் என்பதை ஏற்க மறுப்பது, அரசு தனது பொறுப்பிலிருந்து நழுவுவதற்கே வழி வகுக்கும். தந்தைவழிப் போக்கும்  மொழி கையாளுதலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களைப் பற்றி நீதிமன்றம் பயன்படுத்திய மொழியை சிஆர்பி அறிக்கை கடுமையாக விமர்சிக்கிறது. ‘பந்தயக் குதிரை மற்றும் ஊனமுற்றோர்’ என்ற ஒப்பீடு (தேவ தாசன் வழக்கு, 1964), ‘வாழ்க்கை முழுவதும் ஊன்று கோல் வழங்க முடியாது’ (இந்திரா சஹானி வழக்கு,  1992)

போன்ற இழிவான வார்த்தைகள் நீதித்துறை யின் தந்தைவழிப் போக்கை (Paternalism) வெளிப் படுத்துகின்றன. பல நூற்றாண்டுகால வன்முறை மற்றும் ஒதுக்குதல் என்ற சமூகக் கொடுமையை, ‘ஊனம்’ என்று அழைப்பது, ஒரு வரலாற்றுச் சமூக  அநீதியை தனிநபர் குறைபாடாக மாற்றும் சூழ்ச்சியா கும். இதற்கு மாறாக, நீதியரசர் சின்னப்ப ரெட்டி கூறியது போல, “ஒடுக்கப்பட்டவர்களின் கோரிக்கை கள் உரிமைகள் சார்ந்தவை, தர்மம் சார்ந்தவை அல்ல; அவர்கள் கேட்பது சமநிலை, தானம் அல்ல.” திறமை மற்றும் தகுதி:  ஒரு பிராமணியப் புனைவு நீதித்துறையில் ‘திறமை’ (Merit) மற்றும் ‘நிர்வாகத் திறன்’ (Efficiency) ஆகிய சொற்கள் பெரும் பாலும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. இட ஒதுக்கீடு தரத்தைக் குறைத்து விடும் அல்லது அரசாங்கத்தின் சக்கரங்களை முடக்கி விடும் (என்.எம். தாமஸ் வழக்கு, 1976) என்ற வாதங் கள், மேல்தட்டு வர்க்கத்திற்கு கிடைத்த சலுகையை ‘திறமை’ என்று தவறாக அடையாளப்படுத்துவதாகும். சமீபத்தில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவின ருக்கான (EWS) இட ஒதுக்கீட்டை உறுதி செய்த போது, இத்தகைய ‘நிர்வாகத் திறன்’ குறித்த கவலை கள் நீதிமன்றத்திற்கு எழவில்லை என்பது, அதன் சாதியப் பாரபட்சத்தையே அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தனியார்மயமும் தீர்வுகளும் சாதியை எதிர்கொள்ள கல்வி மட்டுமே போதும் என்ற அசோக் குமார் தாக்கூர் வழக்கின் வாதம் மிகவும் பலவீனமானது. கல்வி நிறுவனங்களே சாதியப் பாகு பாட்டின் மையங்களாக இருப்பதை (ரோகித் வெமுலா முதல் பாயல் தத்வி வரை)

நாம் காண்கிறோம். அதே போல், தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தாமல், ‘கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு’ (CSR)  மூலம் தீர்வுகளைத் தேடுவது என்பது, அரசியலமைப்பு உரிமையை முதலாளித்துவத்தின் விருப்பத்திற்கு விட்டுவிடுவதாகும். அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 15 மற்றும் 16-இன் கீழ் தனியார் துறையில் பாகுபாடற்ற நிலையை உறுதி செய்ய நீதிமன்றம் இன்றுவரை தயங்குவது கவலைக்குரியது. இது கட்டாயமான மறுபகிர்வு நீதிக்கு (Redistributive Justice) பதிலாக, தன்னார்வ மற்றும் அரசியலற்ற தீர்வுகளுக்கே முன்னுரிமை அளிக்கிறது. மாற்றுப் பாதையும் அரசியலும் இந்த சிஆர்பி அறிக்கை, நீதித்துறை ஒரு முரண் பட்ட கூட்டாளி என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. வெறும் இட ஒதுக்கீடோ அல்லது பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்களோ மட்டும் சாதியை ஒழிக்கப் போது மானவை அல்ல.

இன்றைய காலக்கட்டத்தில், சாதி ஒடுக்குமுறைகளை மூடிமறைத்து ஒரு ‘இந்து தேசத்தை’ உருவாக்க முயலும் இந்துத்துவ அரசிய லுக்கு, சாதியை ஒரு “பிரிவினைவாத அடையாளம்” என்று கருதும் நீதித்துறையின் போக்கு மறைமுக வலு சேர்க்கிறது. சாதியை உண்மையாக ஒழிப்பதற்கு நில மறு விநியோ கம் (Land redistribution), உற்பத்தி வளங்களின் மீதான சமூகக் கட்டுப்பாடு மற்றும் பிராமணிய கலாச் சார மேலாதிக்கத்தைத் தகர்ப்பது போன்ற தீவிரமான அரசியல் திட்டங்கள் தேவை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திட்டத்தில் சாதி ஒழிப்பு என்பது மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு முக்கிய அங்க மாகும். 1979-இல் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியது போல, “பிராமணிய கலாச்சாரம் மற்றும் சாதி படிநிலை க்கு எதிரான சமரசமற்ற போராட்டம் இல்லாமல் மதச்சார்பற்ற ஜனநாயகத்தையோ அல்லது சோச லிசத்தையோ இந்தியாவில் கட்டி எழுப்ப முடியாது. சாதிச் சமூகத்திற்கு எதிரான போராட்டமும் சோச லிசத்திற்கான போராட்டமும் பிரிக்க முடியாதவை.” பீப்பிள்ஸ் டெமாக்ரசி, டிச.28 தமிழில் சுருக்கம் : ராகினி