articles

img

அமெரிக்கா உடனான ‘சரணாகதி’ வர்த்தக ஒப்பந்தம் மார்ச்சில் கையெழுத்து!

அமெரிக்கா உடனான ‘சரணாகதி’ வர்த்தக ஒப்பந்தம் மார்ச்சில் கையெழுத்து!

புதுதில்லி, பிப். 21 - இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாக உள்ளதாக ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று தெரிவித்தார்.  இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “பிரிட்டன் மற்றும் ஓமன் நாடுகளுடனான இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஏப்ரல் மாதத்தில் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதே போல  இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்தாகி, ஏப்ரல் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார். அதேபோல, “நியூசிலாந்துடனான ஒப்பந்தம் செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செயல்படுத்த விரும்புகிறோம்” என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.