ஸ்மார்ட் மீட்டர் எதிர்ப்பு: மேற்குவங்க மக்கள் போராட்டத்தின் வெற்றிக் கதை
மேற்கு வங்கத்தில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தப்பட்டிருக் கிறது. இது அம்மாநிலத்தின் கடந்த 15 ஆண்டு களில் முதல்முறையாக மக்கள் ஒழுங்க மைக்கப்பட்ட போராட்டத்தின் மூலம் திரிணா முல் அரசின் மக்கள் விரோத கொள்கையை திரும்பப் பெற வைத்த வரலாற்று வெற்றியாகும்.
பெருநிறுவனங்களின் மறைந்த நோக்கம்
ஒன்றிய அரசின் ஆர்டிஎஸ்எஸ் (RDSS) திட்டத்தின் கீழ் திணிக்கப்பட்ட இந்த முறை, மின்சார மீட்டர் தொழில்நுட்பம் மற்றும் பரா மரிப்பை முழுவதும் தனியார் நிறுவனங்களி டம் ஒப்படைக்கும் ஆபத்தான திட்டமாகும். ‘ஒவ்வொரு மீட்டரின் விலை ₹10,000-12,000, ஆனால் ஆயுட்காலம் வெறும் 6 ஆண்டுகள் மட்டும்.’ இதன்மூலம் ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஆண்டுக்கு ₹2,000 கூடுதல் சுமை. இந்திய அளவில் ₹50,000 கோடி கூடுதல் செலவு மக்கள் மீது திணிக்கப்படும். ‘இந்த திட்டத்தின் கொடுமைகள் இதோடு நிற்கவில்லை.’ தனியார் நிறுவனங்கள் நுகர்வோரின் பணத்தில் தொழில் நடத்தும். ப்ரீபெய்ட் பணம் தீர்ந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலோ மின்சாரம் தானாக துண்டிக்கப்படும். விவசாயிகள் மற்றும் ஏழை களுக்கான அனைத்து மானியங்களும் நீக்கப்படும். மாறும் விலைகள், தனிநபர் தரவு சேகரிப்பு, சைபர் தாக்குதல் அபாயங்கள் ஆகி யவை மக்களின் இறையாண்மையையே அச்சுறுத்தும்.
போராட்டத்தின் நவீன உத்தி
இந்திய மின்சார ஊழியர் கூட்டமைப்பு (EEFI) முன்னெடுத்த இந்த இயக்கம், முத லில் பிரச்சனையின் மறைந்த நோக்கத்தை சரியாக அடையாளம் கண்டு அம்பலப்படுத்தி யது. ‘ஆனால் இதன் உண்மையான சக்தி, மின்துறை ஊழியர்களிடமிருந்து தொழிலா ளர்கள், விவசாயிகள், சிறுவணிகர்கள், சிறு குறு நடுத்தர தொழில்முனைவோர் வரை விரிவுபடுத்தப்பட்டதில் இருந்தது.’ ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர்-ஊழியர் மாநாடுகள் நடத்தப்பட்டன. கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டு வாரியான கூட்டங் கள், விவசாயிகளுடன் நூற்றுக்கணக்கான உரையாடல்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களுடனான விரிவான பிரச்சாரம் - இப்படி ஒரு விரிவான மக்கள் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. ‘மிகவும் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், தொலைதூர கிராமங்களில் கூட மக்கள் திரளாக வந்து, இந்த சிக்கலான தொழில்நுட்பப் பிரச்சனையை கவனமாக கேட்டனர்.’ சிறிய தெருமுனை கூட்டங்கள் பெரிய கூட்டங்களாக மாறத் தொடங்கின. மக்கள் தங்கள் வாழ்க்கையையும் வாழ் வாதாரங்களையும் நேரடியாக தாக்கும் இந்த திட்டத்திற்கு எதிராக தன் எழுச்சியான முறை யில் திரண்டனர்.
வெற்றியின் சுவையான தருணங்கள்
2023 டிசம்பரில் 37 லட்சம் வீடுகளுக்கு பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், போராட்டத்தின் தீவிரத்தால் அரசால் செயல் படுத்த முடியவில்லை. 2024 முழுக்க முழுக்க கூட திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலை. ‘2024 இறுதியில் சில பகுதிகளில் ஏமாற்று முறையில் பொருத்த முயன்றபோது மக்கள் கோபம் வெடித்தது.’ முறையாக தெரிவிக்கா மல் ஏற்கனவே உள்ள மீட்டர்களை மாற்று வது, அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் மக்களின் எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தின. சிஐடியு தலைமையில் மின் விநியோக அலு வலகங்களுக்கு வெளியே தீவிர ஆர்ப்பாட்டங் கள் நடந்தன. ‘போராட்டங்கள் மாநிலம் முழு வதும் பரவியதால், பொதுமக்களின் எதிர்ப்பின் பலத்தையும், திட்டத்தை பரவலாக நிராகரிப்ப தையும் அரசாங்கம் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.‘ இறுதியில் மேற்கு வங்க அரசு திட்டத்தை முழுவதும் திரும்பப் பெற்றது.
நமக்கான பாடங்கள்
‘இந்த வெற்றி பல முக்கியமான பாடங் களைச் சொல்கிறது.’ சரியான பிரச்சனை அடை யாளம் மற்றும் முறையான மக்கள் விழிப்புணர்வு வெற்றிக்கு அடிப்படை. சேவைத் துறை தொழிலாளர்கள் அந்த சேவையைப் பயன்படுத்தும் நுகர்வோருடன் இணைந்தால் போராட்ட சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். ‘தனியார்மயமாக்கலின் சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் வடிவங்களைப் புரிந்து கொள்வது இன்றைய அவசரத் தேவை.’ பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பது நவதாராள வாத எதிர்ப்பின் மையமாக உள்ளது. ‘மேற்கு வங்க மக்களின் இந்த வெற்றி, இருண்ட காலங்களில் நம்பிக்கையின் ஒளிகீற்றாக விளங்குகிறது.’ கூட்டுப் போராட்டத்தின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தி, எண்ணற்ற எதிர்கால மக்கள் இயக்கங்களுக்கான கதவைத் திறக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, இது மக்கள் இயக்கங்களின் மீதான நம்பிக்கையை மீண்டும் தூண்டும் ஒரு வரலாற்று வெற்றியாகும்.