இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: மோடி அரசின் அபத்தமான வாதங்கள்
முற்றிலும் நியாயப்படுத்தவே முடியாத இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் ஆவலில், மோடி அர சாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக மிகவும் அபத்தமான வாதங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து சிவப்புச் சோளம், சோயா பீன்ஸ் மற்றும் ‘உலர்ந்த டிஸ்டில்லர்ஸ் தானியங்க ளை’ (DDGs - ஆல்கஹால் தயாரிப்பில் தானியங்களி லிருந்து மாவுச்சத்தை எடுத்த பின் எஞ்சியிருக்கும் புரதச்சத்து நிறைந்த கால்நடைத் தீவனம்) வரி இன்றி இந்தியச் சந்தைக்குள் அனுமதிப்பதை அரசு நியாயப் படுத்துகிறது.
இத்தகைய இறக்குமதி கால்நடைத் தீவ னத்தின் விலையைக் குறைத்து இந்திய விவசாயி களுக்கு உதவும் என்பது அரசின் வாதம். ஆனால், நாட்டின் முன்னணி விவசாய அமைப்புகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், விவசா யிகள் பயன்படுத்தும் பல்வேறு இடுபொருட்களின் உள்நாட்டு விலை இதனால் குறைந்திடும் என்ற கவர்ச்சிகரமான போர்வையில், இந்த விபரீத வர்த்தக ஒப்பந்தத்தை அரசு திணிக்கப் பார்க்கிறது.
இறக்குமதித் தீர்வை: ஏன் தவிர்க்க முடியாது? பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை விட, அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்குச் செலவு அதிகமாகிறது என்பதால்தான் ‘இறக்குமதித் தீர்வை’ (Tariff) என்பதே விதிக்கப்படு கிறது. மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காகவே இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என்றால், ஒரு நாட்டில் இறக்குமதித் தீர்வை என்ற ஒன்றே இருக்கக் கூடாது. உண்மையில், இரண்டு முழுமை யான வேறுபட்ட காரணங்களுக்காகவே தீர்வைகள் விதிக்கப்படுகின்றன: l வேலைவாய்ப்பை ஊக்குவித்தல்: இறக்குமதிக்கு மாற்றாகப் பொருட்களை உள்நாட்டிலேயே உற் பத்தி செய்வது, நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்நாட்டு வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கி றது. உதாரணமாக, கால்நடைத் தீவனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது என்பது அந்தத் துறையில் நேரடியாக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது.
அதுமட்டுமின்றி, இத்தகைய பொ ருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்பவர்களின் கைகளில் வருமானம் சேருவதால், அது பல்வேறு இதர பொருட்களுக்கான கிராக்கியை உருவாக்கு கிறது. இத்தகைய கிராக்கி, இதர துறைகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. மாறாக, பொருட்க ளை இறக்குமதி செய்யும்போது, இந்த வருமான மும் வேலைவாய்ப்பும் உருவாக்கும் விளைவுகள் வெளிநாடுகளுக்கு ‘கசிந்துவிடும்’. l அந்நியச் செலாவணிப் பாதுகாப்பு: இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி தேவைப்படுகிறது. இதில் வெளிப்படையாக ஒரு பற்றாக்குறை நிலவு கிறது. எனவே, பொருட்களை இறக்குமதி செய்வ தற்குப் பதிலாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது என்பது, பற்றாக்குறையான அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் நன்மை பயக்கும் விளைவைக் கொண்டுள்ளது.
இது நாட்டின் வெளிநாட்டுக் கடனைத் தீவிரமாகக் குறைக்க உதவும். மலிவு விலையில் இடுபொருட்களை இறக்குமதி செய்வதால், இறுதிப் பொருட்களின் விலையைக் குறைவாக வைத்திருக்க இயலும் என்றும், அதன் மூலம் உலகச் சந்தையில் நாட்டை போட்டித்தன்மை யுடன் வைத்திருக்க முடியும் என்றும் வாதிடப்பட லாம். ஆனால், இடுபொருட்களின் விலையை மலி வாக்க அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை. சில இடுபொருட்களின் விலையை குறைவாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என அரசு கருதினால், சம்பந்தப்பட்ட பொருளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிப்ப தோடு, அதற்குத் தேவையான நிதி மானியத்தை அரசு அளிக்கலாம். இதன் மூலம் அந்நியச் செலாவணி யையும் சேமிக்கலாம், வெளிநாட்டுக் கடனையும் குறைவாக வைத்திருக்கலாம். அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடும் மானிய அரசியலும் அமெரிக்க அரசு நீண்டகாலமாகத் தனது விவசா யத் துறையில் இதையேதான் செய்து வருகிறது. அங்கு அளிக்கப்படும் மானியத்தின் அளவு பிரம்மாண்ட மானது. சில ஆண்டுகளில், மொத்த விவசாய உற்பத்தி யின் மதிப்பில் கிட்டத்தட்ட பாதியளவில் மானியம் வழங்கப்படுகிறது.
அமெரிக்காவில் விவசாயத்தைச் சார்ந்து இருக்கும் நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால், அங்கே ‘நேரடி வருமான ஆதரவு’ (Direct Income Support) என்ற வடிவத்தில் இந்த மானியம் தாராளமாக வழங்கப்படுகிறது. சர்வதேச அரங்கில் இந்தியா போன்ற நாடுகள் வழங்கும் மானியங்களை ‘சந்தையைச் சிதைப்பவை’ (Market distorting) என்று அமெரிக்கா கடுமை யாக விமர்சிக்கிறது. அதே நேரத்தில், தனது விவசாயி களுக்கு அளிக்கப்படும் மானியங்களை மட்டும் “சந்தையைச் சிதைப்பவை” அல்ல என்ற போலியான வாதத்தின் கீழ் மறைத்து வைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் இதே தந்திரத்தையே பின்பற்றுகிறது. மூன்றாம் உலக நாடுகளின் மானியங்களைக் கட்டுப் படுத்தும் இவர்கள், தங்கள் நாட்டு மானியங்களை எந்தக் கட்டுப்பாடும் இன்றித் தொடர்கின்றனர். இந்திய விவசாயிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள பருத்தி இறக்குமதியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
அமெரிக்காவில் ஒரு பருத்தி விவசாயிக்கு வழங்கப்படும் மானியம் மட்டும் இந்திய மதிப்பில் தலா 1 கோடி ரூபாய்க்கும் மேல் (தற்போ தைய செலாவணி மாற்று விகிதப்படி) உள்ளது. அமெரிக்காவில் 27,000-க்கும் குறைவான பருத்தி விவசாயிகளே இருப்பதால், இவ்வளவு பெரிய தொகையை மானியமாக வழங்குவது அமெரிக்க அரசால் நிர்வாக ரீதியாகச் சமாளிக்கக் கூடியதாக உள்ளது. எனவே, “மலிவான இறக்குமதி” என்ற வாதமே முற்றிலும் போலியானது. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், மானியங்களின் ஆதரவு பெற்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பியத் தானியங்கள் இந்தியச் சந்தையில் குவியும். இது இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு, நாட்டின் உணவுப் பாதுகாப்பையே முற்றிலுமாகச் சிதைத்துவிடும். 30 டிரில்லியன் டாலர் சந்தை: ஒரு வெற்று மாயை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியப் பொருட்க ளுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கச் சந்தை திறந்துவிடப்படும் என்ற மோடி அரசின் வாதம் நகைப்பிற்குரியது.
இந்த 30 டிரில்லியன் டாலர் என்பது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பேயன்றி, இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு அல்ல. இந்தியா மிகப்பெரிய ஏற்றுமதியா ளராக வெற்றிகரமாக மாறினாலும் கூட, அமெரிக்கச் சந்தையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கைப்பற்ற முடியும் என்பது தெளிவாகிறது. இத்தனை டிரில்லி யன் டாலர் சந்தையை அணுகுவது பற்றிய பேச்சு வெற்று ஆரவாரமே தவிர வேறில்லை. இத்தகைய நகைப்பிற்குரிய, போலியான வாதத்தை ஏற்றுக் கொண்டால், இந்தியாவுக்கு எவ்வளவு பாதகமான ஒப்பந்தமாக இருந்தாலும் அதைக் கைக்கொள்ள லாம். விவசாயிகளிடையே பிளவை ஏற்படுத்தும் சூழ்ச்சி விவசாயிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க அரசு ‘பிரித்தாளும் சூழ்ச்சியை’க் கையாள்கிறது. உதாரண மாக, மேற்கு உத்தரப் பிரதேச விவசாயிகளிடம், இந்த ஒப்பந்தம் அவர்கள் பயிரிடும் கோதுமை அல்லது நெல் பயிர்களைப் பாதிக்காது என்பதால் அவர்கள் எதிர்க்கத் தேவையில்லை எனக் கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் அல்லது இமாச்சலப் பிரதேசத்தின் பழ விவசாயிகள் அல்லது மகாராஷ்டிர பருத்தி விவ சாயிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டால், மற்ற பகுதி விவசாயிகள் அது குறித்துக் கவலைப்பட வேண்டிய தில்லை என்ற அரசின் போக்கு அப்பட்டமான ஜனநாயக விரோதமாகும். ஒரு குடிமகனாக மற்றவர்க ளின் நலனில் அக்கறை கொள்ளும் பண்பைத் தடுத்து, விவசாயிகளை வெறும் சுயநலவாதிகளாக மாற்ற அரசு முயல்கிறது.
இது அவர்களின் குடியுரி மையை அவமதிப்பதாகும். ஜனாதிபதி டிரம்ப்பின் தோல்வியும் இந்தியாவின் நல்வாய்ப்பும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தன்னிச்சையாக வரி விதித்தது (Tariff aggression) சட்டவிரோதமானது என்றும், அது அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதி காரத்தைப் பறிக்கும் செயல் என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. டிரம்ப்பு டன் நெருக்கம் காட்ட விரும்பி, அவரது மிரட்டலுக்கு அடிபணிந்த இந்திய அரசிற்கு, இந்த ஒப்பந்தத்தி லிருந்து வெளியேற தற்போது ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. எத்தகைய அடிப்படைச் சூழலில் இந்தியா அடிபணிந்ததோ, அந்தச் சூழலே இப்போது மாறிவிட்டது. இப்போதும் இந்த ‘அசமத்துவ மான ஒப்பந்தத்திலிருந்து’ (Unequal Treaty) இந்திய அரசு வெளியேறவில்லை என்றால், இந்திய மக்கள் ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
வளர்ச்சி உத்தி இந்த ஒப்பந்தம் சமமானதாக இருந்தாலுமே கூட, அதன் பின்னணியில் உள்ள ‘ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி’ (Export-led growth) என்ற கொள்கையே தவறானது. உலகச் சந்தையின் மொத்தத் தேவை என்பது வெளிப்புறக் காரணிகளால் தீர்மானிக்கப்படு வது. ஒரு நாட்டின் ஏற்றுமதி வெற்றி என்பது மற்றொரு நாட்டின் இழப்பிலேயே அமையும். இது தெற்குலக நாடுகளை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துகிறது. மேலும், ஏற்றுமதிக்காக பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகார வரம்பைக் குறைத்து ‘வெளிநாட்டுத் தன்மையை’ (Extra-territoriality) மீண்டும் கொண்டு வரும். இது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை யும் துண்டு துண்டாகப் பிரிக்கும்.
ஒரு ஜனநாயகப்பூர்வமான மற்றும் சமநிலையான வளர்ச்சித் திட்டம் என்பது, தொழில்துறையிலிருந்து செய்யப்படும் “ஏற்றுமதிகள்” மற்ற நாடுகளை நோக்கி தாக இல்லாமல், உள்நாட்டு விவசாயத் துறையை நோக்கிச் செலுத்தப்படுவதேயாகும். ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் விவசாயத்தின் வளர்ச்சியைப் பொறுத்ததாக ஆக்குவதால் இது மிகவும் சமத்துவமானதாகும். சுதந்திரத்திற்குப் பின் இந்தியா பின்பற்றிய இந்த உத்தியைத்தான், நவீன தாராளவாதம் வந்த பிறகு நாம் கைவிட்டுவிட்டோம். இதை எவ்வளவு விரைவில் இந்தியா உணர்ந்து கொள்கிறதோ, அவ்வளவு நல்லது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மார்ச் 01, 2026 தமிழில்: எம்.கிரிஜா
