articles

img

இன்சூரன்ஸ் துறையை சீர்குலைக்க தாயக் கட்டைகளை உருட்டும் சகுனி அரசு -​​​​​​​செ. முத்துக்குமாரசாமி

சுதேசி, தேசியம், ஆத்ம நிர்பர் என மூச்சுக்கு முன்னூறு முறை  பேசுகிற ஆட்சியாளர்கள் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதமாக உயர்த்தப் போவ தாக வணிக இதழ்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. 2008 உலக நிதி நெருக்கடியில் பல பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வீழ்ந்தன என்பது உலகப் பொருளாதாரத்தின் அனுபவம். அங்கே வீழ்ந்தது மட்டுமல்ல; இங்கே  டாடா உடன் கைகோர்த்து இருந்த அமெரிக்க நிறுவனம் ஏ.ஐ.ஜி இந்திய இணை வினையி லிருந்து வெளியேறியது. ஆஸ்திரேலியாவின் ஏ எம் பி நிறுவனமும் வெளியேறியது. 

பாஜக 1999 க்கு முன்பும், 2009லும் அந்நிய முதலீட்டு உயர்வுக்கு எதிராகப் பேசிய  வசனங்களெல்லாம் “ஆவிகளாய்” (!) வந்து இன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்து கேள்வி  கேட்கும். ஆனால் வசனங்களுக்கும், அவர்களின் வழித் தடங்களுக்கும் சம்பந்த மில்லை என்பதை வரலாறு சொல்லும்.  

இன்சூரன்ஸ் கூடாரம் - ஒட்டகத்தின் மூக்கு

இன்சூரன்ஸ் துறை சீர்திருத்தங்களின் வர லாற்றைப் பார்ப்பவர்களுக்கு ஓர் உண்மை  தெரியும். 1999 இல் அந்நிய முதலீட்டை  இந்தி யாவில் அனுமதித்தவர்கள் இவர்கள்தான். முதலில் 49 சதவீதம் என்று தான் மசோதா வில் அறிவித்தார்கள். ஆனால் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக 26 சத வீதம் என குறைத்தார்கள். 26% வரம்பு என்ப தால் அந்நிய நிறுவனங்கள் இளைய பங்காளி களாக இருப்பார்கள் என்று சமாதானம் சொன்ன வர்கள் உண்டு. பிறகு 2015 இல் 49% ஆக  உயர்த்தியவர்களும் இவர்கள்தான். அப்போதும் எதிர்ப்பு வெளிப்பட்டவுடன் “இந்தி யர் கட்டுப்பாடு” என்ற வார்த்தை, இடதுசாரிகள் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களின் எதிர்ப்பால் சட்டத்தில் இணைக்கப்பட்டது. ஆகவே நிறுவனங்கள் அந்நியர் கட்டுப் பாட்டிற்குள் போய் விடாது என்று ஆறுதல் தரப்பட்டது.

 ஆனால் 2021 ல் 74% வரை அனுமதிக்க லாம் என்கிற சட்ட வரைவு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின்  விவாதத்திற்குப் பதில் அளித்த நிதியமைச்சர் அந்நிய முதலீட்டிற்கு இப்போதும் சில நிபந்தனைகளை விதித்திருப்ப தாகச் சுட்டிக் காட்டிப் பேசினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய இயக்கங்கள், அதன் வழி உருவான மக்கள் கருத்து இப்படி சில பாதுகாப்புக் கவசங்களை  அவ்வப்போது உருவாக்கப்பட்டது. ஆனாலும் பன்னாட்டு மூலதனம் இத்தகைய பாதுகாப்புக் கவசங்களை நொறுக்குவதற்கான முனைப்பு களையும் தொடர்ந்து வந்துள்ளது.  அதன் அடுத்த கட்டம்தான் 100 சதவீத அந்நிய முதலீடு என்ற முன் மொழிவு. 

சொந்த நாடுகளிலேயே ஏமாற்றியவர்கள் 

2008 உலக நிதி நெருக்கடியில் பல பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வீழ்ந்தன என்பது உலகப் பொருளாதாரத்தின் அனுபவம். அங்கே வீழ்ந்தது மட்டுமல்ல; இங்கே  டாடா உடன் கைகோர்த்து இருந்த அமெரிக்க நிறுவனம் ஏ.ஐ.ஜி இந்திய இணை வினையி லிருந்து வெளியேறியது. ஆஸ்திரேலியாவின் ஏ எம் பி நிறுவனமும் வெளியேறியது. 

2008 இல் இருந்து நெருக்கடி நீடிக்கும் நிலையில், அந்நிய முதலீட்டு வரம்பு உயர்த்து வது மட்டுமே இங்கு முதலீடுகளைக் கொண்டு வந்து விடாது.

கடந்த காலங்களில் 26% வரம்பும், 49 % வரம்பும், 74 % வரம்பும் இருந்தாலும், அந்த அளவிற்கு அந்நிய முதலீடு வந்து விட வில்லை. ஆனால் 100 % என்று அந்நிய முத லீட்டை உயர்த்தினால் உள்ளே முதலீடுகள், அதிகமாக வந்து குவிந்துவிடும் என்பது ஒன்றிய ஆட்சியாளர்களின் கணக்கு. ஒரு துறையை பன்னாட்டு மூலதனத்திற்கு திறந்து விடுவது இந்திய தொழிலதிபர்களுக்கு வேறு சந்தை களை பேரம் பேசுகிற உத்தியுமாகும். ஆனால் இப்படி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் நிறுவனங்கள் வரும் என்பதால் பன்னாட்டு மூலதனம்  இன்சூரன்ஸ் வினையில் கவனம் செலுத்தும் என்று கூற முடியாது. தொழில் நடத்துவதை விட ஊக வணிகத்தில் தங்கள் கவனத்தை செலுத்துவது தான் உலகம் முழுக்க நடந்தேறு வது. உலக நிதி நெருக்கடியின் போது பன்னாட்டு நிறுவனங்களின் வீழ்ச்சியும் நமக்கு உணர்த்திய பாடம் இதுதான். 

இன்சூரன்ஸ் தொழில் நீண்ட கால நம்பிக்கையைத் தக்க வைக்க வேண்டிய தன்மை கொண்டது. ஆனால் தொழில் நடத்துவதை விட பங்குச் சந்தையில் காற்று அடிக்கிற நேரத்தில் தூற்றிக் கொள்கிற போக்கு அந்நிய முதலீடுகளிடம் வெளிப்பட்டால் நுகர்வோர் நலன் என்னாவது?

இந்திய நிறுவனங்களைக் கைப்பற்றுவதே திட்டம்

இந்திய கூட்டாளிகளும் அந்நிய முதலீடு வரம்பு உயர்ந்தவுடன் தங்களின் பங்கை உடனே குறைத்துக் கொள்ள பரபரக்கவி‌ல்லை. 

2021 ஆம் ஆண்டில் காப்பீட்டுத் துறை யில் 74% அந்நிய நேரடி முதலீடு (FDI) அனு மதிக்கப்பட்ட போதிலும், பல இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் 74% அந்நிய நேரடி முத லீட்டைக்  கொண்டிருக்கவில்லை, ஏனெனில், பல இந்திய நிறுவனங்கள் நிர்வாகக் கட்டுப் பாட்டைத் தன்வசம் வைத்துக்கொள்ள விரும்பு கின்றன. அல்லது நல்ல பேரத்திற்கு பங்கு களை கைமாற்ற காத்திருப்பார்கள். 

செப்டம்பர் 2022 இல், ஏஜியாஸ் ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ், 74% அந்நியக் கூட்டாளியின் பங்குகளைக் கொண்ட முதல் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆனது. 31.03.2023 வரையிலான ஐஆர்டிஏ ஆண்டு அறிக்கையின்படி, 3 ஆயுள் காப்பீட்டு  நிறுவனங்கள் மட்டுமே, 49% முதல் 74%  வரை அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டி ருந்தன.  (Ageas Federal life, Aviva Life Insurance, Future General Life Insurance.) மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களில், அந்நிய நேரடி முதலீடு   49 சதத்தைத் தாண்ட வில்லை.  மார்ச் 31, 2023 நிலவரப்படி அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் சராசரி யாக அந்நிய நேரடி முதலீடு 44.3% மட்டுமே இருந்தது. ஆகவே இந்த முரண்பாட்டை அந்நிய முதலீட்டுக்கு எதிரான போராட்ட இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

அந்நிய நேரடி முதலீடு, உள்நாட்டு சேமிப்புக்கு மாற்றாக இருக்க முடியாது. அந்நிய நேரடி முதலீட்டினை அதிகமாக நம்பிய தால் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தினை இந்தியா சமீப காலமாக காணத் தொடங்கி யுள்ளது. பெரும்பாலான அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய நிறுவன முதலீடுகள், ஊக  முதலீடுகளில் ஈடுபடவும், இணைப்பு மற்றும்  கையகப்படுத்துதல்  மூலம் இந்திய நிறு வனங்களைக் கைப்பற்றவும் மட்டுமே நம் நாட்டிற்குள் வந்துள்ளன. 

‘கருத் தொற்றுமையில்’ விரிசல்

1999 இல் பாஜக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்காவே 2009 இல் நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக இருந்து 49% அந்நிய முதலீட்டு உயர்வு வேண்டாம் என்று பரிந்துரை எழுதினார்.  ஆகவே எந்த முடிவும் மக்கள் கருத்தின் வாயிலாக எதிர்கொள்ளப்படும் போது அதனை தள்ளிப் போட முடியும். ஓரளவு நீர்த்துப் போகச் செய்யவும் முடியும். ஆனால் பொருளாதாரப் பாதையில் மாற்றம் என்கிற விரிந்த வியூகம் நோக்கி நகர வேண்டியுள்ளது. அதுவே நீடித்த பாதுகாப்பை ஒரு துறைக்கு தர முடியும். 

ராகுல் காந்தி தனியார்மயத்திற்கு எதிராக  பேசி வருகிறார். உலகமயம் மீதான கருத்தொற்று மையில் விரிசல் ஏற்பட்டிருப்பதன் அறிகுறி இது. ஆனால் போராட்டங்கள் தான் இந்த விரிசல்களை மேலும் உறுதி செய்ய இயலும். இந்த முரண்களைப் பயன்படுத்தி அரசு நிறுவனங்கள் முன்னேற வேண்டும். பொதுத் துறை பாதுகாப்பு இயக்கமும் இவற்றை யெல்லாம் உள் வாங்கி தங்களின் வியூகங் களை வகுக்க வேண்டும்.

பென்சனை நோக்கி நீளும் கொடுங் கரங்கள்

அந்நிய முதலீட்டு வரம்பு உயர்வு இன்சூரன்ஸ் துறையோடு மட்டும் நின்றுவிடப் போதில்லை. பென்சன் ‌துறையில்‌அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்த வேண்டும்‌ என்ற பன்னாட்டு மூலதனத்தின், இந்தியப் பெரும் தொழில் நிறுவனங்களின் நிர்ப்பந்தமும் ‌அரசுக்கு உள்ளது. இன்சூரன்ஸ்‌ துறையில் ‌உயர்த்தினால் ‌அங்கேயும் ‌உயர்த்துவது மிகவும்‌ எளிதாகிவிடும்‌.

பென்சன் ‌நிதியை நிர்வகிப்பவர்களாக இன்று ஏழு நிறுவனங்கள்‌ உள்ளன. அவர்கள்‌ நிர்வகிக்கும்‌ தொகை 2022ல் ‌7,17,467 கோடி ரூபாயாக இருந்தது. 2023ல் ‌11 லட்சம் கோடி ரூபாயாக 46 % அதிகரித்தது. இந்தத்தொகை அந்நியக்‌ கம்பெனிகளின் ‌கண்களை உறுத்துகிறது.

அந்நிய மூலதன வரம்பை உயர்த்து வதன்‌ பொருள்‌ என்பது ஒன்றுதான்‌. இந்திய  மக்களின்‌ உள்நாட்டு சேமிப்பில்‌ ஒரு பகுதி தான் ‌இன்சூரன்ஸ்‌ பிரிமியமாக மாறுகிறது. அப்படிப்பட்ட உள்நாட்டு சேமிப்பின்‌ மீதான கட்டுப்பாடு அந்நிய மூலதனத்‌தின்‌ கைகளுக்குச் ‌செல்லும்‌. இது நாட்டின் ‌பொரு ளாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும்‌.

1956 ஐ மறக்கலாமா?

மேலும் பன்னாட்டு, இந்தியப் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சந்தையில் பெரும் தடையாக விளங்குகிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இன்சூரன்ஸ் தொழிலில் நுழைவதற்குரிய குறைந்தபட்ச மூலதன அளவை மேலும் குறைப்பதன் மூலம் சிறு சிறு போட்டியாளர்களையும் அனுமதிப்பதாக கூறி  வருகிறார்கள். 1956க்கு முன்பாக 245 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருந்த  தேசம் தான் இது, அவர்களின் பித்தலாட்டங் களையும் மோசடிகளையும் கண்ட அனுபவங் களையும் கொண்ட துறை தான் இது. 

இது ஓர் பொருளாதாரச் சூதாட்டம். இதில் தார்மீக நெறிகளுக்கு இடம் கிடையாது. எளிய வர்களுக்கு எதிரான அரசியலே உண்டு. இச்சது ரங்கத்தின் ஒரு பக்கத்தில் பன்னாட்டு மூலதன மும், இந்திய பெரும் தொழிலதிபர்களும் இருக்கிறார்கள். இந்தியப் பெரும் தொழிலதி பர்கள் உலகம் முழுவதிலும் தங்கள் முதலீடு களைக் கொண்டு செல்வதற்காகச் சந்தைக ளைத் தேடுகிறார்கள். பரிகாரமாக பன்னாட்டு மூலதனமும் இந்திய இன்சூரன்ஸ், வங்கி, ரெயில்வே, பாதுகாப்புத் துறைகளில் பங்கு கேட்கிறது. இது மூலதனத்தின் லாபத்திற்கான பேரம். இதில் நியாயங்களுக்கு இடமில்லை.

சதுரங்கத்தின் இன்னொரு பக்கம் சாதா ரண, நடுத்தர, அடித்தள மக்கள் நிற்கிறார்கள். சிறு தொழில் முனைவோர், சிறு வணிகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உடமைகளை, உரிமைகளை ஏன் உயிர்களைக் கூட பணயம் வைக்கிறார்கள். தேச இறையாண்மை பணயமாக நிறுத்தப்படுகிறது.

உருள்கின்றன தாயக்கட்டைகள்... உருட்டுகிறது சகுனி அரசாங்கம்.

செ. முத்துக்குமாரசாமி
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்