ஒட்டாவா,டிச.26- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக அவரது லிபரல் கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு களையும் கருத்துக்களையும் தெரிவித்து வரு கின்றனர். இந்த எதிர்ப்புகளால் நடைபெற உள்ள கனடா பொதுத்தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது எனக்கூறப்படுகிறது. தற்போதுவரை சுமார் 50 க்கும் மேற்பட்ட லிபரல் கட்சி உறுப்பினர்கள் ட்ரூடோவை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். ட்ரூடோ மீதான எதிர்ப்புக்கு காரணம் என்ன? கனடாவில் (Ipsos) அரசியல் மற்றும் பொது கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி லிபரல் கட்சியின் 43 சதவீதமான வாக்கா ளர்கள் உட்பட 73 சதவீதமான கனடா வாக்கா ளர்கள் ட்ரூடோவை பிரதமர் பதவியில் இருந்து அகற்ற விரும்புகிறார்கள் என தெரிய வந்துள்ளது. பழமைவாதக் கட்சியினர் (கன்சர்வேடிவ்கள் ) கடந்த காலத்தில் மூன்று முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். டிசம்பர் 9 அன்று கூட நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ட்ரூடோவின் லிபரல் கட்சியுடன் கூட்ட ணியில் உள்ள புதிய ஜனநாயக கட்சியின் ஆதர வின் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. மேலும் ட்ரூடோ மீதான அதிருப்தி காரணமாக துணை பிரதமராக இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்டின் ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமா கனடாவில் ட்ரூடோ மீது அதிகரித்துள்ள அதிருப்தியின் வெளிப்பாடாக முன்னிறுத்தப் பட்டது. இந்நிலையில் 2025 ஜனவரி 27 அன்று நாடாளுமன்றம் கூடும் போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரப் போவதாக புதிய ஜனநாயக கட்சியே அறிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலை கனடாவில் பணவீக்கம் 4 ஆண்டுகளில் சுமார் 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டினர் குடியேற்ற அதிகரிப்பை எதிர்கொள்ள தேவையான கட்டிடங்கள் உள்ளிட்ட வீட்டு வசதிகளை திட்டமிட்டு உருவாக்காததால் கனடாவில் வீட்டுவசதி நெருக்கடி உருவாகியுள்ளது. இது உள்நாட்டு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. அதே போல வேலைவாய்ப்பும் மிக கடுமை யாக சரிந்துள்ளது. 2019 -ம் ஆண்டில் வெளி யிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி வேலை யின்மை 6.8 சதவீதமாகவும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 8.2 சதவீதமாகவும் மட்டுமே உள்ளது. முறையான திட்டமிட்ட சுகாதார சேவை இல்லாததால் மருத்துவ சேவைகளை பெறு வதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கல்வி உள்ளிட்ட பொது மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங் களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் சிக்கனம் என்ற பெயரில் நிதிகளை வெட்டுவது ட்ரூடோ ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது. மோசமான உள்நாட்டுக் கொள்கை மட்டுமின்றி கனடா கடைப்பிடித்த மோசமான வெளியுறவுக்கொள்கைகளும் மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கும் உக்ரைன் போருக்கும் கொடுத்துவரும் நிபந்தனை யற்ற ஆதரவு மற்றும் ஆயுத உதவி மக்களுக்கு கோபத்தை தூண்டும் மிக முக்கியமான கொள்கைகளாகும். உக்ரைனுக்கு கனடா கொடுக்கும் ஆயுதங்களின் காரணமாக கனடா குடி மக்களின் 7.7 பில்லியன் டாலர்கள் வரிப்பணம் வீணாகிவருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய காரணங்களால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோமீது அவரது கட்சிக்குள்ளேயே அதிருப்தி கடுமையாக அதிகரித்துள்ளது.