articles

img

ஆளுநரின் சண்டித்தனமும் உச்சநீதிமன்ற தலையீடும்

ஆளுநரின் சண்டித்தனமும் உச்சநீதிமன்ற தலையீடும்

மாநில சட்டமன்றத்தால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக இருந்தால் அதுகுறித்து மாநில அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் அல்லது மசோதாவை குடியரசுத்தலைவரின் பரிசீலனை க்கு வைத்திருப்பதாக அறிவிக்க வேண்டும் அது பண மசோதாவாக இல்லாவிட்டால், அம் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விதி களை மறுபரிசீலனை செய்யக்கோரி கூடிய விரை வில் மாநில அரசுக்கே திருப்பி அனுப்ப வேண்டும். அவ்வாறு திருப்பி அனுப்பப்படும்போது, அதை மாநில அரசு பரிசீலித்து தேவைப்பட்டால் திருத் தங்களை மேற்கொள்ளும் அல்லது அப்படியே ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். அத்தகைய நிலையில் ஆளுநர் அதற்கான ஒப்புதலை நிறுத்தி வைக்கக்கூடாது. இது ஆளுநருக்கு வழங் கப்பட்டுள்ள அதிகாரத்தில் தெளிவாக கூறப் பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ள  மசோ தாக்களை மட்டும் ஆளுநர் நிறுத்திவைக்கலாம். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக  அரசு நிறைவேற்றி அனுப்பிய 14 மசோதாக்க ளில் இரண்டை மட்டும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார். மற்ற 12 மசோதாக்களை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில்  3 ஆண்டுக ளாக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

ஒரு மசோதாவை ஆளுநரின் பரிசீல னைக்காக ஒதுக்கும்போது, குடியரசுத் தலைவர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதாகவோ அல்லது அதற்கான ஒப்புதலைத் தடுத்து நிறுத்து வதாகவோ அறிவிக்க வேண்டும். மேலும், ஒரு மசோதா அவ்வாறு திருப்பி அனுப்பப்படும்போது, அத்தகைய செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அந்த மசோதா, திருத் தங்களுடன் அல்லது திருத்தம் இல்லாமல் பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால், அதை மீண்டும் குடியரசுத் தலைவரின் பரிசீல னைக்காக  அனுப்பவேண்டும்.  ஆனால் ஆளுநர் ரவி இது எதையும் செய்யாமல் சண்டித்தனம் செய்துகொண்டிருக்கிறார். எனவேதான் மசோ தாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.  இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி கள் கேட்ட கேள்விகளுக்கு ஆளுநர் என்ன பதில் சொல்லப் போகிறார். 

ஆளுநரின் உண்மையான செயல்பாடுதான் என்ன?  அரசு செய்யும் விஷயங்கள் பிடிக்க வில்லை என்றால் அது ஆளுநரின் சொந்த கருத்துதானே?  இந்த கேள்விகளுக்கு ஆளுநர் நீதிமன்றத்தில் மட்டுமல்ல மக்கள் மன்றத்தி லும் பதில்சொல்ல வேண்டும். நியமன பதவியை கொண்டிருப்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கிவைக்க எந்த அதிகாரமும் கிடையாது. இதனை உச்சநீதிமன்றம் தெளிவாக ஆளு நருக்கு புரிய வைக்கவேண்டும்.