articles

img

பாஜக: ஒரு வழக்கமான வலதுசாரிக் கட்சி அல்ல!

1 பாஜகவைப் பற்றிய அடிப்படைப் புரிதல்
1986-ஆம் ஆண்டிலிருந்து பாஜக இந்து பெரும்பான்மை வகுப்புவாதத்தை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. ஆனால் மார்க்சிய கண்ணோட்டத்தில், இக்கட்சியை வெறும் வகுப்புவாத கட்சி யாக மட்டும் புரிந்துகொள்வது போதாது. பல ஆய்வாளர்கள் செய்வது போல இதனை வலதுசாரி தேசியவாத கட்சியாக மட்டும் பார்ப்பதும் சரியல்ல.

பாஜக என்பது உண்மையில் ஒரு வலது சாரி வகுப்புவாத கட்சி. வழக்கமான வலது சாரிக் கட்சிகளில் இருந்து இது வேறுபட்டது. பாரம்பரிய வலதுசாரிக் கட்சிகள் ஆளும் வர்க்கத்தின் நலன்களை வெளிப்படை யாக ஆதரிக்கும். மாறாக பாஜக தனது வர்க்க நலன்களை மறைத்து, மத அடிப் படையில் மக்களை அணிதிரட்டுகிறது.

பிற்போக்கு குணாம்சம்

வலதுசாரிக் கட்சிகளுக்கும் பாஜக விற்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதன் தீவிர வகுப்புவாத நிலைப்பாடு. வழக்க மான வலதுசாரிக் கட்சிகள் நிலவும் சமூக அமைப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும். ஆனால் பாஜக, சமூகத்தின் ஒரு பிரிவினரை எதிரியாக சித்தரித்து, அதன் மூலம் மக்களை அணிதிரட்ட முயல்கிறது.

நவீன-வலதுசாரி போக்குகள்

உலகின் பல நாடுகளில் காணப்படும் நவீன-வலதுசாரிக் கட்சிகளைப் போலவே பாஜகவும் செயல்படுகிறது. பிரான்சில் லூ பென்னின் தேசிய முன்னணி, குடியேற்ற மக்களை எதிரியாக சித்தரித்தது போல, ஜெர்மனியில் புதிய வலதுசாரி கட்சிகள் வெளிநாட்டவர்களை எதிர்ப்பது போல, மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்ப டைவாத கட்சிகள் தீவிரமாக செயல்படுவது போல, பாஜகவும் சிறுபான்மையினரை இலக்கு வைத்து அரசியல் செய்கிறது.

2 பாஜக வளர்ச்சி : வரலாற்று பின்னணி 

            ஜனதா பரிசோதனையின் வீழ்ச்சியும் பாஜகவின் தோற்றமும்

1980ஆம் ஆண்டில் ஜனதா கட்சியின் முயற்சி தோல்வியுற்ற பின்னர் பாஜக உருவானது. பாரதிய ஜனசங்கத்தின் ‘மறு பிறவி’யாக தோன்றிய இக்கட்சி, ஆரம்பத் தில் பழைய ஜனசங்க-ஆர்எஸ்எஸ் கருத்தியலில் இருந்து விலகி புதிய பாதையில் செல்வதாக தோற்றமளித்தது.  

வாஜ்பாய் தலைமையிலான இக்கால கட்டத்தில் (1980-86) இந்து வகுப்புவாத கோஷங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், கிராம -நகர ஏழைகள் என பரந்த மக்கள் தளத்தை உருவாக்க முயற்சிகள் மேற் ற்கொள்ளப்பட்டன. ஜனதா கட்சியுடனான அனுபவமும், ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்ற இரட்டை உறுப்பினர் சர்ச்சையும் இக்கட்சியை மையநிலை முதலாளித்துவ கட்சிகளைப் போல செயல்பட வைத்தன

காந்திய சமதர்மத்திலிருந்து இந்துத்துவா வரை

984 தேர்தலில் பாஜக வெறும்  இரண்டு நாடாளுமன்ற இடங்களை மட்டுமே பெற்றது. கட்சியின் அடையாள மும் இருப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளா யின. இந்த நெருக்கடியில் இருந்து மீள இக்கட்சி தனது அடிப்படை கருத்தியல் மற்றும் கொள்கை நிலைப்பாடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்து வாக்குகளை கவரும் இந்திரா காந்தியின் முயற்சியும், அவரது படு கொலைக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்வினை யும் காங்கிரஸ் கட்சி பாஜகவின் தளத்தை கைப்பற்றி அதில் இருந்து பலனடைவதாக பாஜக கருதியது. 1980 தேர்தல்களில் பல பகுதிகளில் காங்கிரஸின் வெற்றிக்கு ஆர்எஸ்எஸ் உதவியது குறிப்பிடத்தக்கது

அத்வானியின் காலமும்

இந்துத்துவா உருவாக்கமும் 1986-89 காலகட்டத்தில் கட்சியின்  தலைவராக இருந்த எல்.கே.அத்வானி யின் கீழ் பாஜக முற்றிலும் மாற்றமடைந் தது. இந்த மாற்றம் ஆர்எஸ்எஸ்-சின்  வழிகாட்டுதலில் அத்வானியால் திட்ட மிட்டு நிகழ்த்தப்பட்டது. ஆர்எஸ்எஸ் உட னான உறவுகள் வெளிப்படையாக அறி விக்கப்பட்டன. இந்துத்துவா கோட்பாடு வலுப்படுத்தப்பட்டது. இறுதியாக ராமர் கோவில் பிரச்சனை இக்கட்சியின் முக்கிய அடையாளமாக மாறியது. பழைய கருத்துக்களுக்கு புதிய வடிவம் பாரம்பரிய ஜனசங்க-ஆர்எஸ்எஸ் நிலைப்பாடுகளான தேசியவாதம், தீனதயாள் உபாத்யாயா வின் “ஒருங்கிணைந்த மானுடவியல்” போன்ற வை மீண்டும் முன்னிலைப் படுத்தப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை தூண்டும் எந்த விஷயத்தையும் பயன்படுத்த இக்கட்சி தயாராக இருந்தது. 1986க்குப்பிறகு இந்த பழைய விஷயங்களுக்கு புதிய தீவிரத்தன்மை கொடுக்கப்பட்டது. மீனாட்சிபுரம் மதமாற்றம், அயோத்தி ராமர் கோவில், காஷ்மீர் பிரச்சனை, வங்கதேச அகதிகள் என புதிய விஷ யங்களும் சேர்க்கப்பட்டன. சிறுபான்மை யினர் ஆணையம் சிறுபான்மையினர் தொடர்பான சலுகைகளின் அடையாள மாக கண்டனம் செய்யப்பட்டது.

3 பொருளாதாரக் கொள்கைகளும் வர்க்க நலன்களும்

            தாராளமயமாக்கல் ஆதரவும் பொருளாதார நிலைப்பாடும்

பாஜக தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலை தீவிரமாக ஆதரிக்கிறது. இது அவர்களின் நாடாளு மன்ற உரைகளிலும், கொள்கை முடிவு களிலும் தெளிவாகத் தெரிகிறது. 1992 மே மாதம் காந்திநகரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொரு ளாதாரக் கொள்கை அறிக்கை இந்த நிலைப்பாட்டை சொற்ஜாலங்களால் மறைக்க முயன்றாலும், அதன் உள்ள டக்கம் பெரு முதலாளித்துவ-நிலப்பிர புத்துவ நலன்களையே பிரதிபலித்தது.

முதலாளித்துவ  ஆதரவு கொள்கைகள்

            பாஜகவின் முக்கிய பொருளாதாரக் கொள்கைகள்

1. ஏகபோக கட்டுப்பாடுகளை நீக்குதல்: 1991 தேர்தல் அறிக்கையில் ஏகபோக  கட்டுப்பாட்டு சட்டத்தை தளர்த்த வேண்டும் என்று கோரியது. ஏகபோக  நிறுவனங்களின் மூலதன உச்ச வரம்பை ரூ.100 கோடியில் இருந்து ரூ. 1000 கோடியாக உயர்த்த ஆதரித்தது. 2. பொதுத்துறையை சிதைத்தல்: பாது காப்பு மற்றும் சில அடிப்படை கட்ட மைப்பு துறைகளைத் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களை கட்டுப் படுத்த வேண்டும் என்கிறது. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதை ஆதரிக்கிறது. 3. வங்கிகள் தனியார்மயமாக்கல்: தேசியமயமாக்கப்பட்ட வங்கி களின் செயல்பாடுகளை கட்டுப் படுத்தி, தனியார் வங்கிகளை ஊக்குவிக்க வேண்டும் என்கிறது.  4. நிலச்சீர்திருத்த எதிர்ப்பு: நிலச்சீர்திருத்தங்களை பற்றி மிகவும் மேலோட்டமாக பேசினாலும், அவற்றை நடைமுறைப்படுத்து வதற்கு தெளிவாக எதிராக உள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நிலச்சீர்திருத்தங்கள் குறித்த பதிவு மோச மானதாக உள்ளது. “சுதேசி” கோஷத்தின் உண்மை முகம் ஆர்எஸ்எஸ்-சின் பிரச்சாரத்தை பின்பற்றி பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவலை எதிர்ப்பதற்காக “சுதேசி” கோஷ த்தை பாஜக முன்வைத்தது. பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர இந்திய பெரு முதலாளிகள் ஆர்வமாக உள்ள நிலையில், இந்திய பெரு வணிகத்தை ஆதரிக்கும்படி மக்களை கோருவது என்பது அர்த்தமற்றதாக இருந்தது.

வர்க்க நலன்களின் பிரதிநிதித்துவம்

பாஜகவின் பொருளாதார கொள்கை களின் முக்கிய அம்சம் அதன் தெளிவற்ற தன்மையும், உண்மையான பொருளாதாரப் பிரச்சனைகளை மறைப்பதும் ஆகும். மே 1992இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட “மனித நேய அணுகுமுறையுடனான பொருளா தார வளர்ச்சி (சுதேசி அணுகுமுறை)” என்ற ஆவணம் ஏகபோக முதலாளிகளின் செல்வக் குவிப்பு, நிலப்பிரபுக்களின் நில குவிப்பு பற்றி பேசவில்லை. பெருவணிக துறையை கட்டுப்படுத்த வேண்டும் என்றோ, பணக்காரர்கள் மீது வரி விதிக்க வேண்டும் என்றோ கோரவில்லை.

4 போலி தேசியவாதமும் கூட்டாட்சி

              எதிர்ப்பும் போலி தேசியவாதத்தின் தன்மை

பாஜகவின் தேசியவாத கருத்தாக்கம் பழைய ஜனசங்கத்தின் ‘இந்தி-இந்து-இந்துஸ்தான்’ சூத்திரத்திலிருந்து மேம் பட்டதல்ல. ஆர்எஸ்எஸ்-சின் இந்து ராஷ்டிரா கோட்பாடு இப்போது இந்துத்துவா என்ற கலாச்சார கருத்தாக்கமாக முன்வைக்கப்படுகிறது.

1980களின் பிற்பகுதியில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கடுமையான அச்சு றுத்தல்கள் எழுந்தபோது பாஜகவின் இந்து பெரும்பான்மைவாத தேசிய வாதம் வளர்ந்தது. பஞ்சாப், காஷ்மீர், வட கிழக்கில் பிரிவினைவாத சக்திகளும்; சிறுபான்மையினரிடையே அடிப்படை வாத சிந்தனைகளும் எழுச்சி பெற்றன.  சுதந்திரத்திற்குப் பின்  தேசிய ஒருமைப் பாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால் இது.

தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாப்பது என்ற பெயரில்

இந்த அச்சுறுத்தலுக்கு பாஜகவும் இந்து வகுப்புவாத சக்திகளும் இந்துத்துவாவை முன்னிறுத்தி பதி லளித்தன. தொழிலாளர் வர்க்கமும் ஜன நாயக சக்திகளும் இந்தியாவின் பன்முகத் தன்மையை அங்கீகரித்து தேசிய ஒரு மைப்பாட்டை பாதுகாக்க முன்வந்தபோது, பாஜக இந்து பெரும்பான்மைவாத அரசை திணிக்க முயன்றது.

ஜனநாயகமற்ற அரசுக் கட்டமைப்பே தேசிய ஒருமைப்பாட்டில் விரிசல்களுக்கு காரணம் என்பதை புரிந்துகொள்ளாமல்; கூட்டாட்சியை மறுப்பதும், சமச்சீரற்ற முதலாளித்துவ வளர்ச்சியும்தான் பிரச்ச னை என்பதை உணராமல் - பாஜக மேலும் மேலும் ஒன்றிய அரசின் அதிகாரங் களை வலுப்படுத்த விரும்புகிறது.

கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரான நிலைப்பாடு

மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்குவதற்கும், உண்மையான கூட்டா ட்சி அமைப்பை உருவாக்குவதற்கும் பாஜக எதிராக உள்ளது. நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களை உருவாக்குவதைப் பற்றி பேசுகிறது. குறைந்தது 60 மாநி லங்களாவது இந்தியாவில் இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.

மொழிவாரி மாநிலங்களை பலவீனப் படுத்தி, ஒன்றிய அரசின் பிடியை வலுப் படுத்துவதே இதன் நோக்கம். மொழி/கலாச்சார/மத பன்முகத்தன்மையை மறுக்கும் அதிகார மைய மனப்பான்மை யிலிருந்தே இந்த எதிர்ப்பு எழுகிறது. ஜனாதி பதி ஆட்சி முறையை பாஜக ஆதரிப்பதும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் அதிகார மைய ஆட்சிக்கு வழிவகுக்கும்.

சிறுபான்மையினர்  மீதான தாக்குதல்

பாஜகவின் வெற்றிக்கு சமீப ஆண்டு களில் சிறுபான்மையினரிடையே வளர்ந்துள்ள பிரிவினைவாத போக்கு களும் ஒரு காரணம். பஞ்சாப், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் சிறுபான்மையாக உள்ள பெரும்பான்மை சமூகத்தினரின் (இந்து சமூகம்) அச்சங்களை பாஜக பயன்படுத்திக்கொள்கிறது.

ஆனால் பெரும்பான்மை சமூகத்தின் அச்சங்களை தூண்டுவது தேசிய ஒருமைப்பாட்டிற்கான அச்சுறுத்தல்களை மேலும் வலுப்படுத்துகிறது. இந்து நலன் களை மட்டும் முதன்மைப்படுத்தி பேசுவது, சிறுபான்மை சமூகங்களிடையே பிரிவினைவாத, அடிப்படைவாத போக்கு களை வளர்க்கிறது. அயோத்தி ராமர் கோவி லை “தேசிய ஒருமைப்பாடு” மற்றும்  “தேசிய கௌரவத்தின்” பிரச்சனை யாக முன்னிறுத்துவது இந்து அல்லாத வர்களை தேசிய ஒருங்கிணைப்பிலிருந்து விலக்கி வைக்கிறது. (வைத்தது).

5அமைப்பு அரசியலும் வன்முறை

             அரசியலும் ஆர்எஸ்எஸ் உடனான நெருக்கமான உறவு

பாஜக பற்றிய எந்த ஆய்வும் ஆர்எஸ்எஸ் உடனான அதன் தனித்துவ மான உறவை கருத்தில் கொள்ளாமல் முழுமையடையாது. தற்போதைய பாஜக ஆர்எஸ்எஸ் உடன் பிரிக்க முடியாத தொப்புள்கொடி உறவு கொண்டுள்ளது. 1986-இல் அத்வானி தலைவரானபோது இந்த உறவு வெளிப்படையாக்கப்பட்டது.