நீதிபதி சேகர் குமார் யாதவ், பொது சிவில் சட்டத்தை பற்றி பேசும்போது இஸ்லாமிய சமூகத்தின் மீது மறைமுகமான தாக்குதல்களை தொடுத்தார்.
தங்கள் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என இந்துக்கள் எதிர்பார்க்க வில்லை. ஆனால் அதை அவமரி யாதை செய்யக்கூடாது என்று மட்டுமே விரும்புகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.
பல மனைவிகள் முத்தலாக்அல்லது ஹலாலா போன்றவற்றிற்கு எந்த நியாயமும் இல்லை. இவற்றிற்கு இனி வேலை இல்லைஎனவும் குறிப்பிட்டார்.
பிறந்ததிலிருந்தே சகிப்புத் தன்மையையும், கருணையையும் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம். விலங்குகளையும் இயற்கையை யும் நேசிக்க கற்றுத் தருகிறோம். மற்றவர்களின் வலியால் நாம் வருத்தப்படுகிறோம். ஆனால் அதை நீங்கள் உணரவில்லை. குழந்தைகளுக்கு முன்னால் விலங்குகளை வெட்டுகிறீர்கள். சகிப்புத்தன்மையையும் கருணை யையும் அந்த குழந்தை எப்படி கற்றுக் கொள்ளும் என்று கேள்வி எழுப்பினார்.
இது இந்துஸ்தான் என்று கூறுவதில் எனக்கு எவ்வித தயக்க மும் இல்லை. அது பெரும்பான் மையினரின் விருப்பப்படி இயங்கும்.
ஒரு இந்துவாக இருப்பதால் அவர் தனது மதத்தை மதிக்கி றார். அதற்காக அவருக்கு மற்ற மதங்களின் மீது தவறான எண்ணம் உள்ளதாகக் கூற முடியாது. திருமணம் செய்யும்பொழுது நெருப்பைச் சுற்றி ஏழு முறை வலம் வருவீர்கள் என எதிர்பார்க்க வில்லை.
நீங்கள் கங்கையில் நீராடுவதை நாங்கள் விரும்பவும் இல்லை என்றும் கூறினார். வழக்கறிஞர்கள் மற்றும் வி எச் பி தொண்டர்களிடம் பேசிய நீதிபதி யாதவ், பெண்களை மோச மாக நடத்தக் கூடாது என்றும் ‘அறி வுரை’ வழங்கினார். இந்து சாஸ்தி ரங்கள் மற்றும் வேதங்களில் தெய்வமாகக் கருதப்படும் பெண்ணை நீங்கள் அவமரியாதை செய்ய முடியாது. பெண்களுக்கு ஜீவனாம்சம் மறுப்பது உள்ளிட்ட அநீதிகளை இனி ஏற்க முடியாது. ஷாபானு வழக்கில் பாதிக்கப் பட்ட விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூட கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார்.
இதற்கு எதிராக அப் போதைய மத்திய அரசு மற்றொரு சட்டத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கூறினார். ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி மட்டும் பொது சிவில் சட்டத்தை ஆத ரிக்கவில்லை; நாட்டின் உச்சநீதி மன்றமும் ஆதரிக்கிறது என்றார். சதி மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட தீய பழக்கங்களை இந்து சமுதாயம் விட்டு ஒழித்து விட்டது. தவறுகளை ஏற்று, சரியான நேரத்தில் அதை சரி செய்வதில் தவறில்லை என்றும் கூறினார். தான் எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டு இவற்றை கூறவில்லை என்றும் கூறிக்கொண்டார்.
இது நம் அனைவருக்கும் பொருந்தும். ஒவ்வொரு மதமும் தங்கள் அனைத்து தீய பழக்கங்க ளையும் ஒழிக்க முன்வர வேண்டும். அப்படி அவர்களே செய்யத் தவறி னால் நாடு அதன் குடிமக்கள் அனை வருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வரும் என்றும் எச்சரித்தார். ஆர்எஸ்எஸ் 2025இல் தனது நூற்றாண்டு விழாவை கொண்டா டும் என குறிப்பிட்ட அவர் ஆர்எஸ்எஸ்-உம் விஎச்பியும் நாட்டின் இன்றியமையாத பிரச்ச னைகளில் எப்படி தலையீடு செய்கின்றன என்பதையும் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை பாராட்டி னார். நீதிபதி தினேஷ் பதக் நிகழ்ச்சி யில் பங்கேற்றார். உரை எதுவும் நிகழ்த்தவில்லை. ஆனால் அரசு பணியில் இருக்கும் ஒரு நீதிபதி விஎச்பி நிகழ்வில் பங்கேற்பது குறித்து மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங் எக்ஸ் தளத்தில் தன்னுடைய கடும் கண்டனத்தை இப்படி பதிவு செய்துள்ளார்: இந்து அமைப்பு ஒன்று தனது அரசியல் நிகழ்ச்சி நிரலாக ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் பதவியில் இருக்கும் ஒரு நீதிபதி தீவிரமாக பங்கேற்பது எவ்வளவு பெரிய அவமானம்!
இஷிதா மிஸ்ரா
நன்றி : தி இந்து 9/12/24,
தமிழில் : கடலூர் சுகுமாரன்