articles

img

அதிகாரம் - அரசியல் - ஜனநாயகம் குறித்து அம்பேத்கர்

அதிகாரம் - அரசியல் - ஜனநாயகம் குறித்து அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் ஏப்ரல் 14 அரசு விழாவாக மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் ஒவ்வொரு ஆண்டும் தன் எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீண்டாமைக்கு எதிரான போர்க்குணம், அயல்நாடு சென்று கடுமையாக உழைத்து பெற்ற பட்டங்கள், உலக வட்ட மேசை மாநாடு களில் சிறப்புமிக்க பங்களிப்பு, நாடாளுமன்ற அரசியல் செயல்பாடுகள், உலகின் பெரிய அரசமைப்பை தலைமையேற்று உருவாக்கு வதில் சீரிய பணி, பவுத்த மறுமலர்ச்சிக்கு நல்கிய வரலாற்றுப் பங்களிப்பு என பல்வேறு கார ணங்களுக்காக அம்பேத்கர் போற்றப்படுகிறார். இன்று நிலவும் தனித்தொகுதி முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி தலித் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பேச இயலாத சூழல் இருக்கலாம். இதை எல்லாம் மீறித்தான் அம்மக்களுக்கான சில நலத் திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.இவை சமத்துவமற்ற சமூக அடிப்படையால் ஏற்படும் இன்னல்களுக்கான நிவாரணங்கள்தானே தவிர,தீர்வுகள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இத்தகைய நலத் திட்டங்க ளுக்கான நிதியை உயர்த்தக் கோரியும் பாதிக்கப்படும் மக்களுக்கான சட்டப் பாது காப்பைப் போராடிப் பெறுவதுமே இங்கு அரசியல் செயல்பாடாக மாற்றப்பட்டுள்ளது. நிவாரணங்களையும் பாதுகாப்பையும் கோரிப் பெறுவது அரசியல் அதிகாரமாகாது என்பதையும் இங்கே கவனிக்கவேண்டும். அரசியல்ரீதியாக இப்பிரச்சனைக்குத் தீர்வு இல்லை என்பதால்தான், வலிமை பொருந்திய பிற சிறுபான்மைச் சமூகங்க ளோடு தலித் மக்கள் தங்களை அடையா ளப்படுத்திக்கொள்கின்றனர். அதில்தான் அவர்களின் பாதுகாப்பும் சுயமரியாதையும் அடங்கி இருக்கிறது என வலியுறுத்திய அம்பேத்கர்,தன் இறுதிக் காலத்தில் அதற்குச் செயல்வடிவமும் கொடுத்தார் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதிகாரத்தின் பலனை அச்சாதியைச் சேர்ந்த ஒரு சிலரே அனுபவிக்க முடியும்.அதிகா ரத்தின் பண்பு நிலை அது. எனவேதான் அம்பேத்கருடைய போராட்டம் அதிகாரத்தை நோக்கியதாக இல்லை. மாறாக,அது சாதி,மத, வர்க்கப் பேதமின்றி ஒட்டுமொத்தச் சமூகத்தையும் ஜனநாயகப்படுத்துவதாக இருந்தது. எனவே தான் ஜனநாயகம் என்பது ஓர் அரசியல் செயல்பாடோ, அரசாங்கத்தின் வடிவமோ அல்ல; முதன்மையாக அது ஒரு கூட்டு வாழ்க்கை முறை என்று தெளிவுபடுத்தி, அதற்கொரு புதிய பரிமாணத்தை வழங்கினார் அம்பேத்கர். அரசியல் ‌ஜனநாயகத்தை விரைவில் ஒரு சமூக ஜனநாயகமாக மாற்ற வேண்டிய தன் அவசியத்தையே அவர் அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாகவும் பிரகடனப்படுத்தினார். அதுமட்டுமல்ல, அம்பேத்கர் தம்முடைய இறுதிக் காலத்தில் 10 லட்சம் மக்களைச் சாதியின் நுகத்தடியில் இருந்து முற்றாக விடுதலை செய்த போது, எவ்வித அதிகாரமும் அற்றவராகவே இருந்தார்! சாதிய அமைப்பிற்கான பொருளாதார அடிப்படை மறைந்து வரும் அதே நேரத்தில் சுரண்டும் வர்க்கங்களாலும் அவற்றின் அர சியல் நிர்வாகிகளாலும் வளர்த்தெடுக்கப்பட்டு வரும் அரசியல் கட்டுமானத்தில் அது தன்னை இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டுள்ளது. ராஜாராம் மோகன்ராய் போன்றவர்களால் துவங்கப்பட்டு பூலே,அம்பேத்கர் ஆகியோரால் சாதிய அமைப்பினை ஒழிப்பதற்காக நடந்த கிளர்ச்சிகளால் முன்னெடுக்கப்பெற்ற சமூக சீர்திருத்தத்திற்கான இயக்கம், மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாக நில பிரபுத்துவ எதிர்ப்புக் கடமையை நிறைவேற்று வதற்கு செயல்பட வேண்டும்.