articles

img

கர்நாடக அரசின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம்! அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

கர்நாடக அரசின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம்! அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

சென்னை, டிச.13 - மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் அறிவித்துள்ளார்.  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ஒரு பெரிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நவம்பர் 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஆணை நவம்பர் 22 ஆம் தேதி வெளி வந்தது. இந்த ஆணையில், “மேகதாது அணை தொடக்க நிலையில்தான் உள்ளது என்றும், இத்திட்டம் உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட் பட்டதா இல்லையா என் பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம்தான் தீர்மானிக்க முடியும்” என்றும் கூறி யுள்ளது. இத்தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ள சில கருத்துகள், 2018 ஆம் ஆண்டு அளிக்கப் பட்ட தீர்ப்பிற்கு முரணாக உள்ளதாகவும், ஆகையால் மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படியும், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவுபடியும், உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மறுபரிசீலனை செய்ய டிசம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் அமைச் சர் துரைமுருகன் தெரி வித்தார். மேலும், மத்திய நீர்வ ளக் குழுமத்திடமும் மேக தாது அணை எவ்வாறு தமிழ கத்திற்கு பாதகமாக இருக் கும் என்பதை குறிப்பிட்டு, டிசம்பர் 9ஆம் தேதி ஒரு விரி வான மனு அளித்துள்ளதா கவும், தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிக ளின் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கர் நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரி வித்துள்ளார்.