பரதனுக்குப் பொருந்திய நீதி பாபருக்குப் பொருந்தாதா?
உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் கே. சந்துரு அவர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டில், அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி தகர்ப்பு நாள் கருத்தரங்கில் ஆற்றிய உரையின் பகுதிகள்:
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். மசூதி இடிப்பைத் தொடர்ந்து, அப்போதைய குடியர சுத் தலைவரின் உத்தரவின் பேரில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய பாஜக மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. அவ்வாறு டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன் றத்தில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வாயத்தால் விசாரிக்கப்பட்டது. இந்த அமர்வு, பாஜக மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டது சரியே என்றும், அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றும் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில் அவர்கள் மேலும் தெளிவாக, “இந்தியாவுடைய அடிநாதம் மதச் சார்பற்ற தன்மை. மதச்சார்பற்ற தன்மை என்றால் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வது அல்ல, எல்லா மதங்க ளுக்கும் சமமான வாய்ப்பு, சமமான அணுகுமுறை” என்று கூறியிருக்கிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் குழப்பமும் நீதிமன்ற விளக்கமும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள், அரச மைப்புச் சட்டத்தைப் படித்ததாகவும், அதில் “செக்கு லரிசம்” (Secularism) என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லையே என்றும் கூறினார். இது முற்றிலும் தவ றான கூற்று.
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை எப்படி இருக்க வேண்டும் என்று வியாக்கியானம் செய்வது உச்சநீதிமன்றத்தினுடைய கடமையாகும். உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறதோ, அதுதான் சட்டம். அரசமைப்புச் சட்டத்தின் 141ஆவது பிரிவின்படி, உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறதோ, அது தான் இந்த நாட்டினுடைய சட்டமாக ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். மேற்கண்ட வழக்கில் மதச்சார்பின்மை குறித்துத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிற போது, ஆளுநர் “செக்குலரிசம்” பற்றிச் சட்டத்தில் எங்கும் சொல்லவில்லை என்று கூறுவது விந்தை. ஆளுநர் போன்ற உயர் பதவிக்குச் சட்டம் பற்றிய அடிப்படையான புரிதல் கூட இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆர்எஸ்எஸ் மீதான சட்டத் திருத்தங்கள் புறக்கணிக்கப்படுதல் 1992இல் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கம் மறுபடியும் தடை செய்யப் பட்டது. ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்களைக் கட்டுப் படுத்துவதற்காக, 1994ஆம் வருடம் குற்றவியல் நடை முறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவை திருத்தப்பட்டன. * புதிய பிரிவுகள்: யாரும் ஆயுதம் தாங்கிப் பொது வழிகளில் எந்தவிதமான பயிற்சியும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் ஆறு மாதம் சிறைத் தண்ட னை என்று புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டன. *ஆயுதத்தின் விளக்கம்: ஆயுதம் என்றால் துப்பாக்கி மட்டுமல்ல, அது கழி, கொம்பு, தடி, லத்தி என எதுவாகவும் இருக்கலாம் என்று சட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
*நடைமுறைப்படுத்தாமை: இந்தக் குறிப்பிட்ட சட்டத் திருத்தம் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட போதிலும், இந்தச் சட்டத்தை நடைமுறை க்குக் கொண்டுவரும் உத்தரவைக் குடியரசுத் தலைவர் செய்யவில்லை. சட்டமியற்றினாலும், அதை நிறைவேற்றாமல் விடுவது என்பது, ஆளும் கட்சிக்குள் அவர்களுக்கு வேண்டிய ஆட்கள் இருப்பதைக் காட்டுகிறது. புதிய இந்தியச் சட்டங்கள் – இந்திப் பெயர்களும் சட்டப்பிரிவு நீக்கமும் ஒன்றிய அரசு தற்போது பாரதிய நியாய சம்கிதா, பாரதிய நகரிக் சுரக்சா சம்கிதா, பாரதிய சாட்சிய சம்கிதா எனப் புதிய கிரிமினல் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இவற்றின் தலைப்புகள் இந்தியில் உள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 348ஆவது பிரிவில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. புதிய பாரதிய நியாய சம்கிதா மற்றும் பாரதிய நகரிக் சுரக்சா சம்கிதா ஆகிய சட்டங்களில், மேலே குறிப்பிடப்பட்ட, ஆயுதம் தாங்கிப் பொதுப் பயிற்சி யைத் தடுக்கும் அந்த இரண்டு முக்கியமான பிரிவுக ளும் காணாமல் போய்விட்டன. காவல்துறை சங் கங்கள் உட்பட, இந்தக் காரணத்தால் கலவரங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கடிதங்கள் எழுதியும், ஒன்றிய அரசு இதற்குப் பதிலளிக்கவில்லை. வேண்டு மென்றே ஆர்எஸ்எஸ் மற்றும் அவர்களின் ஆதரவா ளர்களுக்காகவே இந்தப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்பது வெளிப்படையானது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் காலதாமதம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில், உத்தரப்பிரதே சத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண்சிங் இரண் டாவது குற்றம் சாட்டப்பட்ட நபராக (Accused No.2) இருந்தார். அவர் நீதிமன்ற நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக, ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
*ஆளுநருக்கான பாதுகாப்பு (Immunity): ஆளுநராகப் பதவி வகிக்கும் ஐந்து வருட காலத்தில் அவர்மீது சிவில், கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்க முடியாது. இந்தச் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்தி, வழக்கு விசாரணை தாமதப்படுத்தப்பட்டது. * வழக்கு தள்ளுபடி: ஐந்து வருட காலதாமதத்திற்குப் பிறகு, போதுமான சாட்சி இல்லை என்று கூறி அல காபாத் நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது. *பத்ம விபூஷன் விருது: உச்சநீதிமன்றத்தில் பொய் வாக்குமூலம் அளித்ததற்காக ஒரு நாள் சிறைக்குச் சென்றவரும், கிரிமினல் குற்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டவருமான அதே கல்யாண்சிங்குக்கு, 2014க்குப் பிறகு பாஜக அரசு பத்ம விபூஷன் விருது கொடுத்தது, அவர்கள் கொள்கைகளில் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டு கிறது. ராமர் கோவில் தீர்ப்பும் நம்பிக்கையின் அடிப்படையிலான சட்டமும் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த தீர்ப்பு மிகவும் விசித்திரமானது. *தீர்ப்பின் அடிப்படை: தீர்ப்பின் 946ஆவது பத்தியில், “கடந்த 500 வருடங்களாக இந்துக்கள் அங்கே வழி பட்டார்கள்.
அந்த அடிப்படையில் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்” என்று சொல்லப்பட்டுள்ளது. *சட்டத்துக்குப் புறம்பான நம்பிக்கை: சொத்து யாரு க்குச் சொந்தம் என்று பார்க்காமல், பெரும்பான்மையா னோரின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்ப ளிப்பது சட்டப்படி மிகவும் தவறான முன்னுதாரணம். *ராமாயணமும் கால வரையறைச் சட்டமும் (Law of Limitation): ராமாயணத்தில், பரதன் ஆட்சி செய்ய ராமர் ஈரேழு ஆண்டுகள் (14 ஆண்டுகள்) வன வாசம் செல்ல வேண்டுமென்று கைகேயி வரம் கேட்டதற்குக் காரணம், இந்தச் சட்ட நியதிதான். ஒரு சொத்தை 12 அல்லது 14 வருடங்களுக்கு ஒருவர் அனுபவிக்க முடியவில்லை என்றால், சொத்தை அனுபவிப்பவருக்கே அது சொந்தமாகும். அதாவது, ராமர் திரும்பி வந்தபின் சட்டப்படி அரி யணையைக் கோர முடியாது என்பதை உறுதி செய்யவே 14 ஆண்டுகள். ஆனால், 500 வருடமாக இருந்த மசூதியை, நம்பிக்கை அடிப்படையில் மாற்றித் தீர்ப்பளிப்பது, சட்டத்தையே மாற்றி எழுது வதற்குச் சமமாகும். வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாக்கும் சட்டம் (Places of Worship Act, 1991) பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றம் வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாக்கும் சட்டம் (1991) என்ற புதிய சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டத்தின் படி, இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருக்கிறதோ, அவை அப்படியேதான் இருக்க வேண்டும்,
அதை மாற்றக் கூடாது. (ராமர் கோவில் பிரச்சனை 1948இலிருந்தே இருப்பதால் இதற்குப் பொருந்தாது எனச் சொல்லப் படுகிறது.) நீதித்துறையின் முரண்பாடு இதே உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்கள், மசூதி இடிப்பு வழக்கில், அந்த இடத்தில் 500 வருடமாக மசூதி இருந்தது ஒரு அடாவடித்தனமான செயல் என்று தீர்ப்பிலே குறிப்பிட்டிருந்தார். இவ்வாறாக, ஒரு நீதிபதி ஒரே வார்த்தையை இரண்டுவிதமாகப் பயன்படுத்த முடியும் என்று சொல்வது, நீதித்துறையைப் பார்த்து நாம் பயப்பட வேண்டிய சூழலை உருவாக்குகிறது. நம்பிக்கை அல்ல, சட்டமே முக்கியம் நம்பிக்கையின் அடிப்படையில் சொத்தைக் கொடுக்க முடியும் என்று சொன்னால், எதுவும் நிச்ச யம் இல்லை. அயோத்தியைத் தொடர்ந்து வாரணாசி, மதுரா போன்ற இடங்களிலும் இது போன்ற பிரச்ச னைகள் எழ வாய்ப்புள்ளது. ஆகவே, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இந்த நாளில், நாம் ஓர் உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்: நாம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம். மதச் சார்பின்மை என்பது இந்த அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதி. இதனை என்றைக்கும் நாம் நினைவு கூர்ந்திட வேண்டும்.
