articles

img

41 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒன்றிய அரசு தகவல்

41 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுதில்லி, மார்ச் 26- மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அதன் காரணமாக இந்தியர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்க, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புதனன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், வளைகுடா நாடுகளில் வாழும் சுமார் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, போர் நடைபெறும் சூழலில் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அரசின் முன்னுரிமை எனத் தெரிவிக்கப்பட்டது.  கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவ டிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. இந்தியா தற்போது 41 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் தட்டுப்பாடு ஏற்படாது என உறுதி அளிக்கப்பட்டது.  செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டணங்கள் அதிக ரிப்பது குறித்தும், அதனை எதிர்கொள்ளும் முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என செய்திகள் வெளி யாகியுள்ளன.