மக்களிடம் அரசியல் உரையாடல் நடத்த வேண்டும் திருப்பூர் நிதி அளிப்பு பேரவையில் உ.வாசுகி உரை
திருப்பூர் , பிப். 24 - “பாஜக, அதிமுக கூட்டணியை வரும் சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்துவதற்கும், அரசியல் அற்ற ரசிக மனநிலையில் வரக்கூடி யவர்கள் மத்தியிலும் உரிய முறை யில் அரசியல் உரையாடலை முன்னெடுக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் உ.வாசுகி வலியுறுத்தினார். திருப்பூரில் திங்களன்று நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி அளிப்பு பேரவையில், மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். பேரவையில், மக்களிடையே திரட்டப்பட்ட ரூ. 52,23,755 (ஐம்பத்திரண்டு லட்சத்து இருபத்தி மூவாயிரத்து எழுநூற்று ஐம்பத்தைந்து) நிதியைப் பெற்றுக் கொண்டு உ.வாசுகி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: திரைக்கவர்ச்சியும் அரசியல் வறுமையும் தமிழக அரசியலில் இளைஞர் களை அரசியல் அற்ற ரசிக மன நிலையிலேயே வைத்திருக்க முயற்சிக்கும் விஜய் கட்சியின் அர சியல் ஆபத்தானது என்று வாசுகி எச்ச ரித்தார். “நூறு நாள் வேலைத் திட்டப் பெண்களின் துயரையோ, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய விவ சாயிகளை எப்படிப் பாதிக்கிறது என்பதையோ பற்றிய புரிதல் அவ ரிடம் இருக்கிறதா? வேலை வாய்ப்பைப் பறிக்கும் ஒன்றிய அரசை பற்றிக் கேள்வி எழுப்பாமல், ‘மந்தி ரக் கோல்’ வைத்திருப்பதாகப் பேசு வது வேடிக்கையானது. எல்லோ ருக்கும் வேலை கொடுப்போம், பெண்கள் மீதான வன்முறையைத் தடுத்து நிறுத்துவோம் என்று கூறும் அவரிடம் என்ன தீர்வு இருக்கிறது? திமுக கூட்டணியில் உள்ள கட்சி களைக் ‘கல்லா கட்டும் கட்சிகள்’ என்று விமர்சிக்கும் அவர், கம்யூ னிஸ்ட் என்ற வார்த்தையின் ‘க’ என்ற எழுத்தைக் கூட உச்சரிக்கத் தகுதி யற்றவர். காகிதம் இல்லாமல் அவ ரால் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்த முடியாது. அவருக்கு அரசியல் தெரியாது என்பதை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்” என்று அவர் சாடினார். ஏகாதிபத்திய மிரட்டலும் வாழ்வாதாரப் போராட்டமும் திருப்பூர் போன்ற தொழில் நக ரங்களில் ஒரு வீட்டில் அடுப்பு எரிய வில்லை என்றால், அதற்குப் பின் னால் சர்வதேசப் பொருளாதாரக் கார ணங்கள் இருப்பதை நாம் மக்களி டம் விளக்க வேண்டும். வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்கா சிறை பிடித்தது, இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றி யத்துடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் என ஒவ்வொன்றும் திருப்பூரின் பின்னலாடைத் தொழி லையும், உழைக்கும் மக்களையும் பாதிக்கின்றன. “வெனிசுலா, கியூபா, மெக்சிகோ, கொலம்பியா போன்ற நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் அமெரிக்காவிற்கு இந்தி யாவுக்கு வர எத்தனை நாள் ஆகும்? ஏகாதிபத்தியத்தைப் பற்றி இன்று சாதாரண மக்கள் கூடப் பேசத் தொடங்கியுள்ளனர். வர்க்க உரி மைகளைப் பேசுவதற்கான வெளி சுருங்கி வரும் நிலையில், நாம் களத்திற்குச் சென்று மக்களை அர சியல் படுத்த வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். சிவப்பு புத்தக தினத்தின் தேவை பிப்ரவரி 21 அன்று கொண்டாடப் பட்ட ‘சிவப்பு புத்தக தினத்தின்’ முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட அவர், பாசிஸ்டுகள் எப்படிச் சிந்த னையை முடக்க முயன்றார்கள் என்பதை நினைவு கூர்ந்தார். “ஹிட்லர் புத்தகங்களை எரித்தார்; முசோலினி அந்தோனியோ கிராம்ஸியின் மூளையை 20 ஆண்டுகள் முடக்க, சிறை யிலடைத்தார். இன்று மோடி அரசு அதே பாணியில் பாடப்புத்தகங் களில் இருந்து சமூக சீர்திருத்தவாதி களை அகற்றிவிட்டு, இந்துத்துவா செயல்திட்டத்தைப் புகுத்துகிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் அரசியல் சட்டத்தைச் சீர்குலைக் கின்றனர். மாநில உரிமைகளைப் பறிப்பது, தொழிலாளர் சட்டங் களைச் சிதைப்பது என உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படு கிறது. இத்தகைய சூழலில், அதிமுக- பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் கூட அது தமிழகத்திற்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கும்” என்றார். பொருளாதாரத் தீர்வும் இடதுசாரி மாடலும் வரி வருவாய் குறைந்துவிட்ட தாகக் கூறும் நிர்மலா சீதாராமன், அதற்கு ஈடாக உர மானியம், உணவு மானியம் மற்றும் கல்வி, சுகாதாரச் செலவுகளை வெட்டுகிறார். “இதற்கு மாற்றுத் தீர்வு கம்யூனிஸ்டு களிடம் உள்ளது. மிகப்பெரும் பணக்காரர் களுக்குச் செல்வ வரி (Wealth Tax), கார்ப்பரேட் வரி மற்றும் வாரிசு வழி வரும் சொத்துக்கு வரி விதித்தால் வருமானம் அதிகரிக்கும். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாமல் இருப்பதற்குத் திராவிட சித்தாந்தம் ஒரு காரணம் என்றால், இடதுசாரிகளின் ‘கம்யூனிஸ்ட் மாடல்’ போராட்டங்களும் ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுப் பெறுவது காலத்தின் கட்டாயம்” என உ.வாசுகி நிறைவு செய்தார். முன்னதாக, மாநிலச் செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் உரை யாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் வரவேற்க, எஸ்.சுப்பிரமணி நன்றி கூறினார். இதில் திரளான பெண்கள் உள் ளிட்ட கட்சி அணியினர் உற்சாகத்து டன் பங்கேற்றனர். (ந.நி)
