டிரம்ப்பின் வரி பயங்கரவாதம்’ அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் அரசியல் நடவடிக்கை தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் உ.வாசுகி, ஆர்.சச்சிதானந்தம் பேச்சு
தூத்துக்குடி, செப். 20- தூத்துக்குடியில் வியாழனன்று மாலை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டத் தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் நாடா ளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் ஆகியோர் அமெரிக்க வர்த்தக கொள்கைகள் மற்றும் உள்நாட்டு அரசியல் குறித்து கடு மையாக விமர்சித்தனர். டிரம்ப்பின் வரி பயங்கரவாதம் “இந்தியா மீது 50 சதவீதம், ரஷ்யா-சீனா மீது 100 சதவீதம் வரி விதிப்பது வெறும் பொருளாதாரப் பிரச்சனை அல்ல. உலகளாவிய அமெரிக்க ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் அரசியல் நடவடிக்கை” என்று உ.வாசுகி குறிப்பிட்டார். சோசலிசம் காட்டும் பாதை தான் மனிதகுல விடுதலைக்கான பாதை என்று வலியுறுத்திய அவர், “முன்பு மாஸ்கோவில் மழை பெய் தால் மதுரையில் குடைபிடிப் பார்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்று கிண்டல் செய்வார்கள். இன்று அமெ ரிக்காவில் டிரம்ப் வரிவிதித்தால் தமிழ்நாடு உட்பட நாடே அல்லோல கல்லோலப்படுகிறது” என்று சுட்டிக் காட்டினார். “அனைத்து நாடுகளும் அமெ ரிக்கா சொல்வதை ஏற்க வேண்டும், இல்லையெனில் வரி விதிக்கப் படும். இந்தியா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வேகத் தில் நடக்காததால் முதலில் 25 சத வீதம், பின்னர் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் மேலும் 25 சதவீதம் அபராத வரிவிதிக் கப்பட்டது” என்று விளக்கினார். இந்திய ஆட்சியாளர்களின் அடிமைத்தனம் எந்த நாடு எங்கிருந்து பொருட்க ளை வாங்க வேண்டும் என நிபந் தனை விதிக்க அமெரிக்காவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்ற கேள்வியை மோடி எழுப்பவில்லை என்று வாசுகி சுட்டிக்காட்டினார். “இன்னொரு ஏகாதிபத்தியத்தின் காலில் இந்திய ஆட்சியாளர்கள் விழுவதைக் குறித்து கம்யூனிஸ்ட்டு கள்தான் கேள்வி எழுப்புகிறோம்” என்றார். செல்வ வரி மற்றும் வாரிசுரிமை வரி வசதி படைத்தவர்களிடமிருந்து கார்ப்பரேட் வரியும், செல்வ வரியும் வசூலிக்க வேண்டும் என்று உ.வாசுகி வலியுறுத்தினார். “ஏற்க னவே இருந்த செல்வ வரியைக் கடு மையாகக் குறைத்துவிட்டனர். மிகப்பெரிய குடும்பங்களில் சொத்துக்களை வாரிசுகளுக்கு மாற் றும்போது ஒருமுறை வாரிசுரிமை வரி விதிக்க கோருகிறோம்” என்றார். தூத்துக்குடி உப்பளத் தொழில் பாதுகாப்பு கட்சியின் திண்டுக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் பேசுகையில், “செப்டம்பர் 17 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெரியார் நினைவுநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க மறந்துவிட்டார்” என்று கடுமை யாக விமர்சித்தார். “மோடியின் 75வது பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண் டாட ஏற்பாடு செய்துள்ளனர். அனைத்து மத்திய பள்ளிகளிலும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்க ளை தவறாகப் பயன்படுத்தும் மோடி அரசு, சர்வ சிக்சா அபியான் திட்டத்துக்கான தமிழக நிதியைத் தர மறுக்கிறது” என்று அவர் கூறினார். “நாட்டின் இரண்டாவது உப்ப ளத் தொழில் மையமான தூத்துக் குடியில், மோடி அரசு உப்பள நிலை யங்களைத் தனியாருக்குக் கொ டுத்து கப்பல் கட்டும் துறைமுகம் கொண்டுவர முயற்சிக்கிறது. பாரம் பரியத் தொழில்களை அழித்து விட்டு புதிய தொழில்கள் கொண்டு வரப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது” என்று சச்சிதானந்தம் தெரிவித்தார். “நாடாளுமன்றம் 34 மணி நேரம் மட்டுமே நடந்துள் ளது. நாடாளுமன்றம் துதிபாடும் அவையாக மாறிவிட்டது” என்றும் கடுமையாக விமர்சித்தார். பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் மாநகரச் செயலாளர் எம்.எஸ்.முத்து தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் கே.பி.ஆறுமுகம், மாநி லக்குழு உறுப்பினர் பி.பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.