தேனீக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்
போர், கலவரங்கள், தெரு விளக்குகள், நுண் பிளாஸ்டிக்குகளால் தேனீக்கள் அச்சுறுத்தப்படுகின்றன. ரீடிங் (Reading) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தேனீக்களை மிக அதிக அளவில் பாதிக்கும் பன்னிரண்டு பிரச்சனைகளைப் பட்டியலிட்டுள்ளனர். இதில் பின்வரும் ஒரு சில அம்சங்களும் உள்ளன. உலகளவில் வரும் பத்தாண்டில் மகரந்தச் சேர்க்கை செய்யும் இந்த உயிரினங்கள் எதிர்கொள்ள உள்ள பிரச்சனைகள் பற்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கலவரங்கள் முதல் தெரு விளக்குகள் வரை
போர் காரணமாக சில வகை பயிர்களை மட்டுமே பயிரிட நாடுகள் கட்டாயப்படுத்தப்படு கின்றன. இதனால் பருவ காலம் முழுவதும் தேனீக்களுக்கு பன்முகத் தன்மை உணவுகள் கிடைக்காமல் போகிறது. ஐரோப்ப்பா முழு வதும் உள்ள தேனீக்களின் கூடுகள் நுண் பிளாஸ்டிக்குகளால் மாசடைந்துள்ளன. பரி சோதனை நடந்த 315 தேனீ காலனிகளில் பாலி எத்திலீன் டெரிப்தாலேட் (Poly Ethylene Teriphthalate PET) போன்ற செயற்கை பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. தெரு விளக்குகளின் செயற்கை வெளிச்சத் தால் இரவு நேர மகரந்த சேர்க்கை செய்யும் உயிரினங்கள் பூக்களில் தேன் சேகரிக்க செல்வது 62% குறைந்துவிட்டது. காற்று மாசு அவற்றின் இனப்பெருக்கம், வளர்ச்சியைக் வெகுவாகப் பாதிக்கிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரி எதிர் பொருட்கள் தேனீக்கள் உணவு உண்பதையும் பூக்களில் இருந்து அவை தேன் சேகரிப்பதை யும் குறைத்துள்ளது. சில வகை பூச்சிக்கொல்லி களின் பயன்பாட்டிற்குரிய வரையறை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இவ்வகை வேதிப்பொருட்கள் மற்றவற்றுடன் வினைபுரிந்து தேனீக்கள் மற்றும் வன உயிரினங்களில் ஆபத்தான விளைவு களை ஏற்படுத்துகின்றன. “தேனீக்கள் போன்ற நன்மை செய்யும் பூச்சியினங்களை பாது காக்கும் வழிமுறைகள் பின்பற்றப்பட்டால் இந்த உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கப்படும்” என்று ஆய்வறிக்கையின்முன்னணி ஆசிரிய ரும் ரீடிங் பல்கலைக்கழக விஞ்ஞானியுமான பேராசிரியர் சைமன் பாட்ஸ் (Prof Simon Potts) கூறுகிறார். “இது வெறும் ஒரு சூழல் பாதுகாப்புப் பிரச்சனை மட்டும் இல்லை. நமது உணவு முறை, காலநிலைக்கு எதிரான போராட்டம் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு இந்த உயிரி னங்களே மையமாக உள்ளன. மகரந்தச் சேர்க்கை செய்யும் உயிரினங்களை பாது காப்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்கு ஒப்பானது. தேனீக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பாக்டீரியா எதிர்ப்பொருட்களால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்துதல், காற்று மாசைக் குறைக்க மின்சார வாகனங்களுக்கு மாறுதல், சூரியப் பூங்காக்களில் மலர்கள் அதிகம் உள்ள வாழிடங்களை உருவாக்குதல், மேம்பட்ட சத்து ணவுகளைப் பெற தேனீக்களுக்கு உதவும் வகையில் அதிக மகரந்தத் தூளையும் தேனை யும் தரும், இனப்பெருக்கத்திற்கு உதவும் பயிர் களை அதிக அளவில் வளர்த்தல் போன்ற பல வழிமுறைகளை ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் பரிந்துரைகள்
“நம் ஒவ்வொருவரில் இருந்தும் தேனீக் களுக்கு ஏற்பட்டுள்ள இந்த புதிய அச்சு றுத்தல்களை குறைக்க உதவும் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். சுற்றிலும் உள்ள இயற்கை வாழிடங்களை மேலாண்மை செய்து பராமரிக்கவேண்டும். மகரந்தச் சேர்க்கை செய்யும் உயிரினங்கள் வாழ பாதுகாப்பான இடங்களை ஏற்படுத்தவேண்டும். உணவு வழங்குதல், கூடு கட்ட உதவும் பகுதிகளை நம் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டங்களில் உருவாக்குதல் போன்ற தனிநபர் செயல்பாடு கள் அவற்றிற்கு பெரிதும் உதவும். அரசின் கொள்கைகள் தனிநபர் செயல்களு டன் கை கோர்க்கும்போது தோட்டங்கள், பண்ணைகள் முதல் பொது இடங்கள், பரந்து விரிந்த நிலப்பரப்புகள் வரை பார்க்கும் எல்லா இடங்களும் இந்த உயிரினங்களுக்கு நட்புடையவையாக மாறும்” என்று ஆய்வ றிக்கையின் இணை ஆசிரியரும் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியு மான டாக்டர் தீபா சேனாபதி (Dr Deepa Senapathi) கூறுகிறார். தேனீக்களை பாது காப்போம். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.