articles

img

உலகின் நான்காவது மிகப்பெரிய உணவு உற்பத்தியாளர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

உலகின் நான்காவது  மிகப்பெரிய உணவு உற்பத்தியாளர்

மண் புழுக்கள் அங்ககப்பொருட்களை சிதைத்து மண்ணை காற்றோட்டம் உடையதாக மாற்றுகின்றன. மண் வளத்தை அதிகரித்து பயிர் விளைச்சலை உயர்த்துகின்றன. ரஷ்யா உற்பத்தி செய்யும் தானியங்களின் அளவிற்கு சமமான உணவு உற்பத்தியை உலகெங்கும் மண்ணில் வாழும் மண் புழுக்கள் ஆண்டுதோறும் செய்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அல்பமாக நாம் நினைக்கும் இந்த உயிரினங்கள் உலக தானிய உற்பத்தியில் 6.5% தானியங்களின் உற்பத்திக்கு காரணமாக இருக்கின்றன.

ஆண்டிற்கு 140 மில்லியன் டன் உலக உணவு உற்பத்தியில் இவற் றின் பங்கு பற்றிய விரிவான ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. இவை ஆண்டிற்கு 140 மில்லியன் டன்  உணவுக்கு சமமான அளவு உற்பத்தி யை நிகழ்த்துகின்றன. மண் புழுக்களை  ஒரு நாடாக கருதினால் இது உலக  உணவு உற்பத்தியில் நான்காவது இடத்தைப் பெறும் என்று விஞ்ஞானி கள் கூறுகின்றனர். 2022 இல் ரஷ்யா 150 மில்லியன் டன் தானியங்களை உற்பத்தி செய்தது. 2023 இல் இது 120 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. நெல், சோளம், கோதுமை மற்றும் பார்லி போன்ற தானியங்களின் உற்பத்தியில் இவை முக்கியப்பங்கு வகிக்கின்றன. விலை குறைந்த ஒரு ரொட்டிப் பொட்ட லத்தில் 15 ரொட்டித்துண்டுகள் இருந்தால் அதில் ஒரு துண்டு இந்த உயிரினங்களின் உதவியால் உண்டாக்கப்படுகிறது. உலகளவில் 2.3% சோயா பீன், பட்டாணி, கடலைப்பருப்பு, உளுந்து, கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகள் மண் புழுக்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன.  இவ்வகைப் பயிர்கள் தங்களுக்குத் தேவையான நைட்ரஜனை தாங்களே நிலைநிறுத்திக் கொள்ளும் பண்பைப் பெற்றுள்ளன. இதனால் இப்பயிர்கள் மண்ணின் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவும் நைட்ரஜனை பெற மண் புழுக்  களை சார்ந்திருப்பது மிகக் குறைவு  என்பதால் இவற்றின் உற்பத்தியில் இந்த உயிரினங்களின் பங்கு குறை வாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த புழுக்கள் மண்ணைத் துளைத்து உள்ளே சென்று உணவை  உண்பதால் அங்ககப் பொருட்களை சிதைக்கின்றன. மண்ணில் காற்று நுழைந்து செல்ல வழி ஏற்படுத்தித் தருகின்றன. விளைச்சலை அதி கரிக்கின்றன. மண்ணில் வாழும் மற்ற சிறிய உயிரினங்களுக்கு சத்துகள் கிடைக்கச் செய்கின்றன. மண் நீரைப் பிடித்து தக்கவைத்துக்கொள்ள உதவு கின்றன. பயிர் உற்பத்தியும்  மண் புழுக்களும் பயிர்கள் நன்கு வளர மண் புழுக்கள்  உதவுகின்றன என்பது நீண்ட காலம்  முன்பே விஞ்ஞானிகளுக்கு தெரி யும். இயற்கை விஞ்ஞானி சார்லஸ் டார்வின் இது பற்றி 1881 இல் எழுதி னார். ஆனால் இதற்கு முன்பு வரை மண் புழுக்கள் எந்த அளவு பயிர் உற்பத்திக்கு துணை செய்கின்றன என்பது பற்றி துல்லியமான விவ ரங்களை அறிய எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. “மண்ணின் ஒரு சிறு பகுதியில் இருக்கும் வளம், அதில் இருக்கும் சத்துப்பொருட்கள், அதைப் பெற மண் புழுக்கள் ஆற்றும் பங்கு, அதன் உயிர்ப்பன்மயத்தன்மை போன்றவை பற்றி உலகளவில் நடத்தப்பட்ட முதல்  ஆய்வு இதுவே. இந்த ஆய்வின் மூலம்  மண்ணின் மதிப்பு, மண் புழுக்களின் மதிப்பு எந்த அளவு முக்கியம் என்பது  தெரிகிறது” என்று கொலராடோ ஸ்டேட் பல்கலைக்கழக மண்ணியலா ளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆய்வாளர் ஸ்டீவன் ஃபாண்ட் (Steven Fonte) கூறுகிறார். உலக உணவு உற்பத்தி மற்றும் உயிர்ப் பன்மயத்தன்மை செழுமைக்கு மண் எந்த அளவு முக்கியமானது என்பது பற்றி இதுவரை மிகக் குறை வான ஆய்வுகளே நடந்துள்ளன. பூமி யில் உயிரினங்களின் பெரும்பாலான வற்றில் வாழ்க்கையில் மண் முக்கி யப்பங்கு வகிக்கிறது. மண்ணின் தன்மை, பயிர் உற்பத்தி தொடர்பான உலகளவிலான படங்கள், தரவுகளை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகள் மண் புழுக்கள் குறிப்பாக தானியங்கள் மற்றும் பருப்பு  வகைப் பயிர்களின் உற்பத்தியில் வகிக்கும் பங்கு குறித்தே ஆராயப் பட்டது. உலகின் தென்பகுதியில் உணவு உற்பத்தியில் மண் புழுக்களின்  பங்கு அதிகமாக உள்ளது. ஆப்பிரிக்க சஹாராவின் சில பகுதிகளில் மண்  புழுக்கள் 10%தானியங்களின் உற்பத்திக்கு முக்கியக்காரணமாக உள்ளது. தென்னமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் 8% தானிய உற்பத்திக்கு மண் புழுக்களே காரண மாக இருக்கின்றன. இப்பகுதிகளில் விவசாயிகள் மிகக் குறைவான அளவே செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். பதிலாக மக்கிய  உரங்கள், மண் புழு உரம் போன்ற வற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதுவே இதற்கு ஒரு காரணம். இத னால் மண்ணில் அதிக அளவில் மண்  புழுக்கள் வாழ்கின்றன என்று ஆய்வா ளர்கள் கூறுகின்றனர். உலகின் 95%  உணவு உற்பத்தியும் மேல் மண்ணி லேயே விளைகிறது. அறியப்படாத கருப்புப் பெட்டி உலகில் வாழும் உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மண்ணி லேயே வாழ்கின்றன என்று சமீபத்தில் வெளிவந்த மற்றொரு ஆய்வு கூறு கிறது. இந்த ஆய்வின் மூலம் மண்  புழுக்களின் முக்கியத்துவம் பற்றி தெரியவந்துள்ளது என்றாலும் மண்ணில் வாழும் மற்ற உயிரினங்க ளும் இது போல முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கலாம். இயற்கை படைத்த மண் என்னும் பெரும் செல்வத்தின் ஒரு சிறிய பகுதி யை மட்டுமே நம்மால் இப்போது அறிய  முடிந்துள்ளது. மண்ணில் வாழும் உயிரினங்களில் ஒரு சில பற்றி மட்டுமே இது வரை  ஆராயப்பட்டுள்ளன. அதனால் இது பற்றிய தொடர் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. வரலாற்று காலம்  முதல் மண்ணின் உயிர்ப் பன்ம யத்தன்மை, அதன் செழுமை போன்  றவை குறைவாகவே மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த எண்ணத்தை மாற்ற இந்த ஆய்வு உதவும் என்று ஆய்வுக்குழுவினர் நம்புகின்றனர். உயர்ந்த உணவு உற்பத்திக்கும் நல்ல விளைச்சலுக்கும் இந்த ஆய்வ றிக்கை விவரங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயிரினங்கள் போலவே மண்ணிலும் பல வகைகள்  உள்ளன. மண் என்பது இன்னும் மனி தனால் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத மிகப்பெரிய கறுப்புப்பெட்டி. இந்த ஆய்வுக்கட் டுரை மண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பாதுகாத்தால் மனித குலத்திற்கு ஏற்படும் எண்ணற்ற நன்மைகளை வலியுறுத்துகிறது.