இந்திய நாட்டில் இரண்டாம் சூரியன்!
கிழக்கில் சூரியன் முளைக்கும் எனத்தெரி யும்அனை வருக்கும் ! இந்திய நாட்டினில் இன்னொரு சூரியன் தெற்குத் திசையிலும் உதிக்கும் ! அருணா சலப்பிர தேசம் அருணனின் ஒளிப்பிர காசம் ! கீழ்த்திசைக் கதிர்என அறிந்த நண்பரே! இன்னொரு கதிர்எது கூறும்?! கேரளம் என்கிற நாடு தெற்குத் திசைத்தேன் கூடு! அங்கே முளைக்குது மார்க்சியச் செங்கதிர் ! வறுமை இருளேநீ ஓடு! அனைவருக் கும்அங்கு வீடு! அரசின் சாதனையைப் பாடு ! சொந்த வீடில்லா குயில்மட்டும் வரும்அங்கு வீடுகேட்டு விண்ணப்பத் தோடு ! மக்கள் சீனத்தின் ஆட்சி! வறுமையை ஒழித்த மாட்சி! முதலா ளியஉலகில் முதன்முத லாய்பார் கேரளத்தில் சீனத்தின் நீட்சி! நம்ப முடியலை நண்பா! கேரளத்தின் அகலமோர் வெண்பா கட்டியது போல்எனக்கு கவிதைக் கிறுகிறுப்பு! எதிரிதான் பார்ப்பான்இதை வம்பா (ய்) !! நாமநடுக் கோடுபோல் நேராய் மார்க்சியப் பாதைஇல்லை பாராய்! வானவில் கோடு போல் வளைவு நெளிவுடன் சமைக்கப் படும்அது ஜோராய் ! கல்லுக்குள் தேரைக்கும் சிவனார் படிஅளப்ப தாய்புளு கிடுவார்! மனுசர்க்குச் சோறளிக்க மாட்டாத சிவனே! மார்க்சியம் சோறளிக்கும் பார்பார்! “பைத்தியக் காரரின் விடுதி “ விவேகா னந்தர்தந்த தகுதி! பசிப்பிணி மருத்துவம்! இன்றைய கேரளம்.... வைத்தியக் காரரின் விடுதி! அமெரிக் காவின்அணு குண்டு! அதைவிட மாபெரும் குண்டு! முதலா ளியஉலகை மூச்சுமுட்ட வைக்கும் கேரளம் எனும்பூச் செண்டு ! புளிஏப்ப ஒன்றிய அரசே! பசிஏப்ப மாஎமக்குப் பரிசே ? மாநிலம் எனும்மிட்டாய் சப்பிச்சப்பிச் சாப்பிட்டாய்! கேள்கேள் கேரளப்போர் முரசே! இந்துத்துவா எவரையும் வெறுக்கும் ! எங்கள்கேர ளத்தைக்கண்டு திகைக்கும் ! விருந்தாளி போலவட தொழிலாளி யின்வரவை வரவேற்கும் கேரளமே வணக்கம்! இறுதி அல்ல!இது தொடக்கம்! எழுதுபார் கேரள முழக்கம் ! இமயத்தில் எதிரொலி கேள்தம்பி! கேரளம் இந்தியாவின் கலங்கரை விளக்கம்!
