articles

img

புரட்சிகர தகவல் தொடர்பைக் கூர்மைப்படுத்துவோம்! முதலாளித்துவ தகவல் திரிபுகளைத் தோற்கடிப்போம்!

புரட்சிகர தகவல் தொடர்பைக் கூர்மைப்படுத்துவோம்! முதலாளித்துவ தகவல் திரிபுகளைத் தோற்கடிப்போம்!

“புரட்சிகர தகவல் தொடர்பைக் கூர்மைப்படுத்துங்கள்; முதலா ளித்துவ தகவல் திரிபுகளைத் தோற்கடியுங்கள்”  – இதுதான் கியூபத் தலைநகர் ஹவானா வில் உள்ள நிகோ லோபஸ் பல்கலைக்கழகத் தில் 2025 அக்டோபர் 15-17 தேதிகளில் நடை பெற்ற “இடதுசாரி கட்சிகள் மற்றும் இயக்கங்க ளது தத்துவார்த்த பத்திரிகைகளின் 3ஆவது சர்வதேச மாநாட்டில்” இருந்து வெளிப்பட்ட பொதுவான அறைகூவல். கியூபாவின் ஜனாதிபதியும் கியூப கம்யூ னிஸ்ட் கட்சி (PCC) மத்திய குழுவின் முதன் மைச் செயலாளருமான தோழர் தியாஸ் கேனல் இரண்டு வெவ்வேறு நாட்களில் இரண்டு அமர்வு களில் கலந்துகொண்டது மாநாட்டின் முக்கி யத்துவத்தைக் காட்டுகிறது. 30 நாடுகளிலிருந்து  200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தியாவிலிருந்து ஒரே பிரதிநிதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நான் பங்கேற்றேன். கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மத்தியக் குழுவின் ஸ்தாபனத் துறை செயலாளருமான தோழர் ராபர்டோ மொராலஸ் ஒஜெடா மாநாட் டைத் துவங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து இடதுசாரிகளின் அரசியல் நோக்கத்தைப் பற்றிய தோழர் பிடல் காஸ்ட்ரோவின் கருத்துக் களை உள்ளடக்கிய ஆவணப்படம் நூற்றாண்டு அஞ்சலியாக முன் வைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது. புவிசார் அரசியலும் வர்க்க நோக்கும் “புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச உறவு களின் சூழலில் உலகளாவிய பதற்றங்கள் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் மீது அவற்றின் தாக்கம்” என்ற பொருளில் ஓர் அமர்வு நடை பெற்றது. பேச்சாளர்கள், “எதிரிகளுக்கு எல்லைகள் இல்லை, அடிமட்ட வரம்பு இல்லை. ஏகாதி பத்தியத்தால் பின்பற்றப்படும் இத்தகைய அராஜக விதியை எதிர்கொள்ள இடதுசாரி சக்தி களை ஒன்று திரட்ட வேண்டும். புவிசார் அரசிய லின் மையத்தில் எப்போதும் வர்க்க நோக்கு இருக்க வேண்டும்” என வலியுறுத்தினர். பொதுக் கருத்தைத் திரட்டுவதில் இடதுசாரி பத்திரிகைகளின் பங்கு வலியுறுத்தப்பட்டது.

 H பாலஸ்தீனப் பிரச்சனை: இது வெறும் மனித இழப்பு பற்றியது அல்ல. முதலாளித்து வம், ஏகாதிபத்தியம் மற்றும் சியோனிசத்தின் (யூத இனவெறி) தாக்குதல்களிலிருந்து பாலஸ்தீனப் பிரச்சனையை நாம் பிரிக்க முடி யுமா? பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அவர வர் நாடுகளில் பொதுக் கருத்தை நாம் வெல்ல வேண்டும்.  H கியூபாவின் எதிர்ப்பின் மையம்: ஏகாதி பத்திய சதிகளை எதிர்கொள்ளும் கியூபா தமது எதிர்ப்பின் மையமாக சோசலிசப் புரட்சியைப் பாதுகாப்பது என்பதை வைத்துள்ளது. கியூபா வைப் பாதுகாப்பது என்பது சோசலிசத்தைப் பாதுகாப்பதன் பகுதியாகும்.  H நேட்டோ எதிர்ப்பு: நேட்டோ நாடுக ளில் உள்ளகம்யூனிஸ்டுகள் நேட்டோவுக்கு எதிராகப்பொதுக் கருத்தைத் திரட்டி, நேட்டோ விலிருந்து விலக அந்தந்த அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொண்டுவர வேண்டும் -என்றும் வலியுறுத்தப்பட்டது. கருத்தாளர்களில் சிலர், தெற்கு உலகத்தின் பங்கினை வலியுறுத்தினர். ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் பல துருவ உலக அமைப் பை வலுப்படுத்துவது இக்காலத்தின் தேவை. பகுப்பாய்வே இலக்கல்ல, அது இலக்கை அடைய ஒரு வழிமுறை. அதாவது நாம் பகுப் பாய்வு செய்து இலக்கை துல்லியமாக அடைய வேண்டும்; பகுப்பாய்வு செய்து செயல்பட வேண்டும் என்ற அழுத்தமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

பாலினப் பரிமாணத்தின் அவசியம் குறித்த தலையீடு பார்வையாளர் தளத்திலிருந்து தலையீடு கள் அனுமதிக்கப்பட்டதைப் பயன்படுத்தி, புவிசார் உத்திகள் உருவாக்கலில் பாலின அக்க றைகள் குறித்த அம்சத்தை நான் எழுப்பி னேன். “ஏகாதிபத்தியம் மற்றும் அதன் யுத்த வெறி யைப் பற்றிப் பேசுகிறோம், யுத்தம் பாதிக்கப் பட்ட பகுதிகளில் கூடுதல் துன்பங்களை அனு பவிப்பது பெண்கள். அகதிகள் பிரச்சனைக ளில், நிவாரண முகாம்களில் கூடுதலாக பாதிக்கப்படுவது பெண்கள். அதேசமயம் எதிர்ப்புகளைக் கட்டமைப்பதில், போராட்ட பங்கேற்பில் முதல் வரிசையில் பெண்கள் என்ற எதார்த்தத்தை அங்கீகரிக்க வேண்டும். பெண்கள் பிரச்சனைகள் குறித்து மார்க்சி யக் கண்ணோட்டத்தில் தோழர் லெனின் ஏராளமாகப் பேசியதையும் எழுதியதையும் மனதில் வைக்க வேண்டும். மாநாட்டு இலச்சி னையில் கூட பெண்ணின் பிம்பம் இல்லை. கருத்தாளர்களில் ஒருவர், எலிசபெத் டெய்லர் என்கிற ஹாலிவுட் நட்சத்திரம் ஒன்றுக் கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து கொண் டதை உதாரணமாகக் காட்டினார்.

அவையில் லேசாக சிரிப்பொலி எழுந்ததைக் காண முடிந் தது. சட்டத்துக்கு முரணற்ற வகையில் எது செய்தாலும் நாம் சொல்ல ஏதுமில்லை. சொல்லித் தான் ஆக வேண்டும் என்றால், ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்த எத்தனையோ ஆண் நட்சத்திரங்கள் உண்டு. உதாரணம் கூறும்போது அது ஏன் நினைவுக்கு  வரவில்லை? சோசலிசத்தின் கூறுகளைப் பெரு மையோடு நினைவுபடுத்தும் போது சமத்து வத்தைப் பேணும் சோசலிசப் பண்பாடு நினை வுக்கு வர வேண்டாமா” என்று பாலின பரிமா ணத்தின் அவசியத்தை முன்வைத்தேன்.  இத்தலையீடு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளால் பெரிதும் பாராட்டப் பட்டது. தகவல் தொடர்பு மற்றும் புவிசார் அரசியலின் கோட்பாடு: ராமோனெட் உரையாடல் இக்னேசியோ ராமோனெட்டுடனான உரை யாடல் ஒரு நிகழ்வாக நடைபெற்றது. இவர் ஸ்பா னிய கல்வியாளர், பத்திரிகையாளர் மற்றும் உலகமயமாக்கல், ஊடகம், புவிசார் அரசி யல் பற்றிய விமர்சன பகுப்பாய்வுக்காக அறியப் பட்ட எழுத்தாளர். அவர் செல்வாக்கு மிக்க பிரெஞ்சு செய்தித்தாளான லெ மொண்டே டிப்ளமாட்டிக்கின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.

மேலும் உலகமயமாக்கல் எதிர்ப்பு ஆர்வலர் அமைப்பான ஏடிடி ஏசி (ATTAC)இன் இணை நிறுவனர் ஆவார். ஏகாதிபத்தியத்தால் தகவல்கள் எவ்வாறு திரிக்கப்படுகின்றன, இணையத்தின் படையெ டுப்புக்குப் பிறகு போர்க்களம் எவ்வாறு கருத்துக ளின் போராக மாறியுள்ளது, இப்போது செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஏகாதிபத்தியத்திற்குச் சாதகமாக எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்து அவர் விரிவாகப் பேசினார்.  H தொழில்நுட்பத் துறையின் மகத்தான வளர்ச்சியை அவர் விளக்கினார். இன்று முக்கிய மூலப்பொருளாக விளங்குவது தரவு என்று சுட்டிக்காட்டினார். எனவே தான், ஏகாதி பத்தியம் தொழில்நுட்பத்தின் மீதான தமது கட்டுப்பாட்டுக்கு யாரும் சவாலாக இருந்து விடக் கூடாது என்பதில் குறிப்பாக உள்ளது, ஆனால் சீனா அந்தக் கட்டுப்பாட்டை உடைத் தது.

அதிக முதலீடுகள் தேவைப்படாத ‘டீப் சீக் சாட்’ பாக்ஸ் வடிவத்தில் வந்த அது அமெ ரிக்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.  H டீப் ஃபேக்கைப் பயன்படுத்தி, சோசலிச அமைப்பு குறித்தும், கியூபா, வெனி சுலா மற்றும் ஈக்வடார் போன்ற நாடுகளைப் பற்றியும் மிகவும் தவறான, தீங்கு விளை விக்கும் வாதங்கள் வைக்கப்படுகின்றன.

 H பல நாடுகளில் இடதுசாரிகள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதில் பலவீனமாக உள்ளனர். எதிரிகள் தீய குப்பைகளை உரு வாக்கும்போது, இடதுசாரிகள் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும்.  H தோழர் பிடல் காஸ்ட்ரோ, இந்த அம்சத்துக்கு நீண்ட காலத்திற்கு முன்பே முன்னுரிமை அளித்தார். புரட்சிக்குப் பிறகும், மக்கள் முன்னேற்றத்திற்குத் தொழில்நுட்ப வளர்ச்சி தேவை என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். டிஜிட்டல் நிறுவனங்களைத் தொடங்கினார், பல்கலைக்கழகங்களில் அதற்கான துறைகளை உருவாக்கினார். செயற்கைக்கோள் தகவல் தொடர்பை மேம்படுத்துவதில் அவர் ஆர்வமாக இருந் தார். ஆனால் அமெரிக்கத் தடை இவை அனைத்தையும் சுமுகமாக நடக்க அனு மதிக்கவில்லை. கியூபாவின் முன்னேற்றம் இவ்வளவு தடைகளுக்கு மத்தியில் தான் நடந்தது. சமூக வலைப்பின்னல் தளங்களின் பயன்பாடு உலகத் தொழில்நுட்ப விவகாரங்களை ஒரு சில நிறுவனங்கள் (oligarchy) தமது கட்டுப் பாட்டில் வைத்துள்ளன. சமூக வலைப்பின்னல் கள் மூலம் அவதூறுகளும், பொய் செய்திகளும் வெளியாகின்றன. சமூக வலைப்பின்னல் தளங்கள் முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது என்ற காரணத்துக்காக, அவை குறித்து இடதுசாரிகள் எதிர்மறையான அணுகு முறையைக் கொண்டிருக்கக் கூடாது.

அத்த கைய தளங்கள் வழங்கும் சிறிய இடத்தைக் கூட நாம் பயன்படுத்த வேண்டும். நேபாளம், இந்தோனேஷியா மற்றும் மடகாஸ்கர் போன்ற சில நாடுகளில் ஜப்பானிய மாங்கா (காமிக்ஸ்) கதாபாத்திரங்கள் இளை ஞர்களை அரசுக்குச் சவால் விடுக்க ஊக்கு விக்க முடிந்தது. இந்த நாடுகளில் போராட்டக் காரர்கள் ஏந்திய கொடிகள், மாங்கா கதாபாத்தி ரங்கள் ஏந்திய கொடிகள் தான். வலதுசாரி சக்திகளின் ஏகபோக பயன்பாட்டுக்கு இதை விட்டுவிட முடியாது. இடதுசாரிகள் இதைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது என்று ராமோனெட் முடித்தார். கியூப ஜனாதிபதியின் முழக்கம்: சிந்தித்தல் என்பது போராடுவது! இந்த அமர்வில் பார்வையாளராக அமர்ந்தி ருந்த ஜனாதிபதி தியாஸ் கேனல் பேசும் போது, உரையாற்றும் நோக்கத்தோடு தான் வர வில்லை, முக்கியமாக ராமோனெட் பேசுவதைக் கேட்கத் தான் அமர்வில் கலந்து கொண்டதாக அவர் கூறினார். அவர் இரண்டு விஷயங்களு க்கு உறுதியளித்தார்: H இந்த சர்வதேசக் கூட்டம் ஒவ்வொரு வருட மும் கியூபாவில் நடத்தப்படும்.

 H இடதுசாரிகளின் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு செய்தித் தளம் ஒழுங்கமைக்கப்படும். இது இடி முழக்கமான கைதட்டலைப் பெற்றது. அவர் மேலும் கூறுகையில், “இந்த விவா தம் அறிவுசார் தளத்துக்கானது மட்டுமல்ல, உலகை மாற்ற விரும்பும், புதிய உலக ஒழுங்கை உருவாக்க விரும்பும் ஆழமான புரட்சிகர உறுதி கொண்டவர்களால் செய்யப்படும் அனுபவப் பகிர்வுகள். வார்த்தைகளும், கருத்துக்களும் கருவிகள், அவை இடதுசாரி மற்றும் சோசலிச நோக்கு அடங்கிய மொழியில் மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். தகவல் தொடர்பு என்பது தகவலை வெடிமருந்தாக மாற்றுவது மற்றும் அதை விடுதலைக்கான வழியில் பயன்படுத்துவது என்பதைப் பற்றியதே. இடதுசாரிகள் இந்தத் தளங்களில் திறனுடன் செயல்படவில்லை என்றால், நாம் மக்களை முதலாளிகளின் கருணைக்கு விட்டு விடுகிறோம் என்று பொருள். ஏகாதிபத்திய சக்திகளால் திணிக்கப்பட்ட கருத்துக்களே ஆதிக்கம் செலுத்தும். இடதுசாரிகளுக்கு இந்த வரலாற்றுப் பொறுப்பு உள்ளது” என்று அவர் முழங்கினார்.

 “சிந்திப்பது என்பது போராடுவது, வெளியி டுவது என்பது ஆயுதமாக்குவது” (To think is to combat, to publish is to weaponize). இது அரசியல் தகவல் தொடர்பு மற்றும் சித்தாந்த இறையாண்மையுடன் தொடர்பு கொண்டது. விவாதங்கள் உத்திகளாக உருவெடுக்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார். நிறைவாக அவர் இடி முழக்கமிட்டார்: “நாம், கியூபர்கள், நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பதைச் செய்வோம்.. ஏகாதிபத்தியத் திற்கு நாம் வளைவதில்லை; பணிவதில்லை.” பலத்த கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. நவ பாசிசம் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் அவசியம் இரண்டாவது நாளில் இரண்டு குழு விவா தங்களும் ஒரு பட்டறையும் இருந்தன. வெனி சுலா, பெல்ஜியம், வியட்நாம், கியூபா, மெக்சிகோ மற்றும் பிற பிரதிநிதிகளுடன் சேர்ந்து, நான் “காலனியாதிக்க எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு பாசிச எதிர்ப்பு சிந்தனைகள் மற்றும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மான அடிப்படையில் எனது உரை அமைந்தி ருந்தது. நவ பாசிசம் குறித்தும், ஏகாதிபத்தியம் குறித்தும் நமது நிர்ணயிப்புகள், இந்தியாவில் மோடி ஆட்சியில் வெளிப்படும் நவ பாசிசப் போக்குகள், மதவெறி வெறுப்பு அரசியல், சாதிய பாகுபாடுகள், சாதி ஆணவக் கொலைகள், பெண்களுக்கு எதிரான வரதட்சணை உள்ளிட்ட வன்முறை, சுரண்டலுக்கு எதிரான போராட்ட மும் சமூக ஒடுமுறைக்கு எதிரான போராட்டமும் வர்க்கப் போராட்டத்தின் இரு பகுதிகள் போன்ற வற்றை முன்வைத்தேன். அந்த உரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பல்வேறு பிரதிநிதிகள் அந்த உரையைத் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகை “பீப்பிள்ஸ் வேர்ல்டு” எனது உரை யின் சுருக்கத்தைப் பின்னர் பிரசுரித்தது. சர்வ தேச அரங்கில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்ணயிப்பு களுக்கும் நிலைபாடுகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாக அதைக் கருதுகிறேன். மாநாட்டு நிறைவும்  கியூபப் புரட்சியின் உயிர்ப்பும் மூன்றாவது நாள் குழு விவாதங்களின் தொகுப்பை வழங்கும் அமர்வு இருந்தது. ஒரு இனிமையான இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர் சர்வதேச கீதம் இசைக்கப்பட்டது, பிரதிநிதிகள் கைகளைப் பிடித்துக் கொண்டு இசைக்கு ஏற்ப அசைந்தனர், முஷ்டி உயர்த்தி னர். மாநாடு முடிவுக்கு வந்தது. அடுத்த மூன்று நாட்கள் தோழர் பிடல் காஸ்ட்ரோவால் நிறுவப்பட்ட, 60 ஆண்டுகளை முடித்த செய்தித்தாள்களான கிராண்மா, ரெபெல்டே ஆகியவற்றின் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. தோழர் தியாஸ் கேனல் இதைத் துவக்கி வைத்தார், அவர் இதை பிட லின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவிற்கு அர்ப்பணித்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு சுவரோவியங்கள் அமைக்கப்பட்டன.

இக்னேசி யோ ராமோனெட் உள்ளிட்டோர் இருந்த குழு விவாதத்தில் பங்கேற்பாளர்கள் அனைவரும் பிடலுடன் நெருக்கமாக இருந்தவர்கள், அவர் கள் பார்வையாளர்களுடன் தங்கள் தனிப்பட்ட அனுபவங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டனர். 44 லட்சம் கையெழுத்து ஒரு தனி நிகழ்ச்சியில், கியூப ஜனாதிபதி, வெனிசுலாவின் மீதான அமெரிக்க அரசாங் கத்தின் தாக்குதல்களுக்கு எதிராகப் பெறப் பட்ட கியூப மக்களின் 44 லட்சம் கையெழுத்துக் களை வெனிசுலா பிரதிநிதிகளிடம் ஒப்ப டைத்தார். கியூபக் கட்சியின் சில துறைகளுடன் கலந்து ரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உரையாடல்களின் மூலம், ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்கள் மற்றும் தவறான பிரச்சாரம், சோசலிச அரசாங்கத்தை சீர்குலைக்க அவர்கள் செய்யும் தொடர்ச்சியான சூழ்ச்சி, பொருளாதாரத் தடையின் விளைவுகள் மற்றும் மக்கள் நலனை நிவர்த்தி செய்ய கியூப அரசாங்கம் எவ்வளவு கடினமாக உழைக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர்க ளின் எதிர்ப்பும் உயிர்ப்பும் அற்புதமானவை. கியூபா வெறும் நாடு அல்ல, அது போராட்டத் தின் சின்னம் என்பது முன்னுக்கு வந்தது.