articles

img

பாட்டாளி வர்க்கத்தின் பதிலடியே ஜூலை 9 பொதுவேலைநிறுத்தம் - டி.கே.ரங்கராஜன்

பாட்டாளி வர்க்கத்தின் பதிலடியே ஜூலை 9 பொதுவேலைநிறுத்தம் மூலதனத்தின் வேட்டைக்காடல்ல இந்தியா!

“முதலாளித்துவ உற்பத்தி முறையில் சமூகங்களின் செல்வம் ‘மகத்தான பண்டங்களின் (அதாவது, உற்பத்திப் பொருட்களின்)  தொகுப்பாக’ தோன்று கிறது, ஒவ்வொரு பண்டமும் அதன் அடிப்படை வடிவமாக காணப்படுகிறது. ஆகவே நமது ஆராய்ச்சி பண்டத்தின் பகுப்பாய்வுடன் தொடங்குகிறது.”

- கார்ல் மார்க்ஸ், மூலதனம், முதல் தொகுதி

மார்க்ஸ் இந்த வரிகளில் முதலாளித்து வத்தின் அடிப்படை இயல்பை வெளிப் படுத்துகிறார். முதலாளித்துவ சமூகத்தில் எல்லாமே பண்டங்களாக மாற்றப்படு கின்றன. உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவம், வேலை, மக்களின் உழைப்பு - இவை அனைத்தும் வாங்க விற்க முடிகிற பொருள்களாக மாறு கின்றன. இந்த பண்டமயமாக்கல் செயல் முறையில் தான் சுரண்டல் மறைந்திருக்கி றது. ஒரு பண்டத்தின் மாற்று மதிப்பு என்பது அதை உற்பத்தி செய்வதற்கு தேவை யான சமூக உழைப்பு நேரத்தால் நிர்ண யிக்கப்படுகிறது. ஆனால் முதலாளி தொழிலாளரின் உழைப்பு சக்தியையும் ஒரு பண்டமாக வாங்கி, அதன் உண்மை யான மதிப்பை விட குறைவான கூலி கொடுக்கிறார். உழைப்பின் இந்த உபரி  மதிப்பு தான் முதலாளியின் லாபமாக மாறு கிறது. இன்று இந்த செயல்முறை தேசிய எல்லைகளைத் தாண்டி நடக்கிறது. உலக முதலாளித்துவம் இன்று ஒரு கொடூரமான வேட்டையாடல் முறையில் இயங்குகிறது. மார்க்ஸ் 150 ஆண்டுக ளுக்கு முன்பே எச்சரித்த பண்டங்களின் ஆதிக்கம் இன்று உலகளாவிய பரிமாணம் எடுத்துள்ளது. முன்பு ஒரு நாட்டுக்குள் நடந்த சுரண்டல் இன்று ஏகாதிபத்திய நாடு கள் மூன்றாம் உலக நாடுகளை சுரண்டும் வகையில் மாறியுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் வெறும் சந்தைகள் மட்டுமல்ல,  அவை மூலதனத்தின் லாப வெறிக்கான இரைகள். நம் நாட்டின் புள்ளிவிவரங்க ளை கூர்ந்து பார்த்தால் இந்த கொடூர உண்மை தெளிவாகத் தெரியும்.

புதிய காலனியாதிக்கம்  எப்படி நடக்கிறது?

21ஆம் நூற்றாண்டில் காலனியாதிக்கம் என்பது, முன்பு ஆங்கிலேயர்கள் நம் மீது ஆட்சி செய்த மாதிரி அல்ல. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இன்று வர்த்தக ஒப்பந்தங்கள், சுங்க வரிகள், சர்வ தேசச் சட்டங்கள் மூலம் நம்மை தங்கள் பொருளாதார அடிமைகளாக மாற்று கின்றன. டிரம்ப்பின் வர்த்தக அச்சுறுத் தல்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். கடந்த ஆண்டு இந்தியா அமெரிக்காவிடம்  ₹3.8 லட்சம் கோடிக்கும் அதிகமாக பொ ருள்களை விற்றிருக்கிறது. இதனால் கோப மடைந்துள்ள அமெரிக்கா நம் மீது சுங்க வரியை அதிகரிப்போம் என மிரட்டுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அமெரிக்க பெரிய நிறுவனங்கள் இந்தி யச் சந்தையில் மிகப் பெரிய லாபம் சம்பா தித்துக் கொண்டிருக்கின்றன. அந்த லாபத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்தியத் தொழிலாளர்க ளும் விவசாயிகளும் ஒட்டச் சுரண்டப் படுகின்றனர். மார்க்ஸ் சொன்னார், முதலாளிகளின் லாபம் எங்கிருந்து வருகிறது என்றால் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டு வதில் இருந்து தான். இன்று அந்த சுரண்டல் ஒரு நாட்டுக்குள் மட்டும் நடக்கவில்லை, உலகம் முழுவதும் நடக்கிறது. இந்தியத் தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். அதே பொருள்கள் அமெரிக்கா, ஐரோப் பாவில் 10 முதல் 20 மடங்கு விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த மிகப்பெரும் விலை வித்தியாசம் எங்கே போகிறது? மேற்கத்திய பெரிய நிறுவனங்களின் லாபக் கணக்குகளுக்குச் செல்கிறது.

சுரண்டலின் கணக்கு என்ன?

நம் நாட்டின் வர்த்தகக் கணக்குகளை பார்த்தால் ஒரு பயங்கரமான உண்மை தெரியும். கடந்த ஆண்டு இந்தியா ₹35 லட்சம் கோடி மதிப்பில் பொருள்களை வெளிநாடுகளுக்கு விற்றது. ஆனால் ₹44 லட்சம் கோடி மதிப்பில் பொருள்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கியது. அதாவது ₹9 லட்சம் கோடி நம் நாட்டில் இருந்து வெளியே போனது. இந்த ₹9 லட்சம் கோடி என்பது எவ்வளவு பெரிய தொகை தெரியுமா? இது நம் நாட்டின் ஒரு வருட முழு கல்வி பட்ஜெட்டை விட அதிகம். இன்னும் அதிர்ச்சி தரும் உண்மை என்னவென்றால், இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் ₹1.83 லட்சம் கோடி நம் நாட்டில் இருந்து வெளியே போனது. ஒரே மாதத்தில் இவ்வளவு பணம் வெளியே போவது என்பது நம் நாட்டின் செல்வம் கொள்ளையடிக்கப்படுவதின் அறிகுறி. இதற்கு முக்கியக் காரணம் என்ன வென்றால், நாம் மலிவான மூலப்பொருள் களை ஏற்றுமதி செய்கிறோம், ஆனால் விலை உயர்ந்த தயாரிப்புகளை இறக்கு மதி செய்கிறோம். உதாரணமாக நாம்  பருத்தி, இரும்புத் தாது, நெல் போன்ற  மூலப்பொருள்களை வெளியே அனுப்பு கிறோம். ஆனால் இயந்திரங்கள், மின்ன ணுப் பொருள்கள், அதி நவீன தொழில் நுட்பம் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்குகிறோம். இது நம் நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை மலிவாக விற்று, அந்த பணத்தில் வெளிநாட்டு முத லாளிகளின் விலை உயர்ந்த பொருள்க ளை வாங்குவது போன்றது. மிக வேதனையான உண்மை என்ன வென்றால், வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடு செய்து சம்பாதித்த லாபத்தை தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்கின்றன. 2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதிய வெளிநாட்டு முதலீடு 96% குறைந்து வெறும் ₹294 கோடியாக மாறியிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் இருந்து ₹4.3 லட்சம் கோடி முத லீடாக எடுத்துச் சென்றிருக்கின்றன. இது கடந்த 10 ஆண்டுகளிலேயே மிக அதிக மான தொகை. இதன் அர்த்தம் என்ன? வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டு தொழிலாளர்க ளின் உழைப்பால் சம்பாதித்த பணத்தை தங்கள் நாட்டிற்கு கொண்டு போகின்றன. அதாவது நம் மக்களின் வியர்வையால் உருவான செல்வம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.  

மூலப்பொருள்  சுரண்டலின் தீவிரம்

இந்தச் சுரண்டல் எவ்வளவு கொடூரமா னது என்பதை எண்ணெய் வர்த்தகத்தில் பார்க்கலாம். நாம் ₹18.5 லட்சம் கோடி  மதிப்பில் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து வாங்கு கிறோம். நம் நாட்டில் அதை சுத்திகரித்து பெட்ரோல், டீசல் ஆக்கி ₹7.5 லட்சம் கோடி மதிப்பில் வெளிநாடுகளுக்கு விற்கி றோம். கணக்கு பார்த்தால் ₹11 லட்சம் கோடி நஷ்டம். இந்த நஷ்டம் யாருக்கு லாபம் ஆகிறது? வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு. இதுபோலத்தான் தங்க வர்த்தகத்தி லும் நடக்கிறது. நாம் ₹4.7 லட்சம் கோடி மதிப்பில் தங்கம் வாங்கி ₹3.5 லட்சம் கோடி மதிப்பில் தங்க நகைகளாக விற்கி றோம். இதிலும் நம் நாட்டு கைவினைஞர்க ளின் உழைப்பு மலிவாக விற்கப்படுகிறது. மேலும் ஜப்பான் நாட்டில் இருந்து தங்க வேதியியல் கலவைகள் என்ற பெயரில் தங்கத்தை இறக்குமதி செய்து சுங்க வரி தவிர்க்கும் ஏமாற்று வேலையும் நடக்கி றது. இதனால் நம் அரசுக்கு வரி வருவாய் இழப்பும் வர்த்தகப் பற்றாக்குறை அதிக ரிப்பும் ஏற்படுகிறது. இந்தியாவின் 87% கச்சா எண்ணெய் தேவை வெளிநாடுகளில் இருந்து வாங்கப் படுகிறது. இது வெறும் இயற்கை வளக் குறைபாடு அல்ல, இது ஒரு அரசியல் ஆயுதம். எண்ணெய் விலை ஏறினால் நம் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும், மக்க ளின் வாழ்க்கைத் தரம் குறையும்.  எண்ணெய் விலை சர்வதேசச் சந்தை யில் குறைந்தாலும் இந்தியாவில் மோடி  அரசு பல விதமான வரிகளை விதித்து, மக்க ளிடம் இருந்து கொள்ளையடிக்கிறது. அந்த வகையில் எண்ணெய் விசயத்தில் இந்திய மக்கள் மீது இரட்டைத் தாக்கு தல் நடக்கிறது.  

உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை -  பெரிய ஏமாற்று வேலை

அரசு ₹1.97 லட்சம் கோடி ஒதுக்கி “உற் பத்தி சார்ந்த ஊக்கத்தொகை” திட்டம் என்று ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. இதனால் “ ₹1.47 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது, ₹13 லட்சம் கோடி உற்பத்தி நடந்திருக்கிறது, ₹4.5 லட்சம் கோடி ஏற்றுமதி நடந்திருக்கிறது” என்று அரசு பெருமையாகச் சொல்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த முதலீட்டில் 70% முதல் 80% வரை சாம்சங், ஆப்பிள், ஃபாக்ஸ்கான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வந்தது. அதாவது இந்திய அரசு இந்திய மக்களின் வரிப் பணத்தை வெளிநாட்டு நிறு வனங்களுக்கு மானியமாக கொடுத்து நம் சந்தையையும் அவர்களிடம் ஒப்படைக்கி றது. 2000 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தியாவிற்கு வந்துள்ள மொத்த வெளிநாட்டு முதலீடு ₹84 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதனால் நம் நாட்டின் சிறு, குறு, நடுத்த ரத் தொழில்கள் அழிக்கப்படுகின்றன. 2019-20இல் இந்த தொழில்களின் ஏற்றும திப் பங்கு 49.8% ஆக இருந்தது. 2021-22இல் அது 45% ஆக குறைந்துவிட்டது. இது தற்செயல் நிகழ்வல்ல, இது திட்டமிட்ட அழிப்பு.

ஏழைகளிடமிருந்து பணக்காரர்களுக்கு மடைமாற்றம்

பொருள்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) என்பது ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை. ஏழை மனிதர் தனது வருமானத் தில் 70% முதல் 80% வரை சாப்பாடு, உடை,  வீடு போன்ற அத்தியாவசியப் பொருள்க ளுக்கு செலவிடுகிறார். இந்த எல்லா பொ ருள்களுக்கும் பொருள்கள் மற்றும் சேவை வரி கட்ட வேண்டும். ஆனால் பணக்கா ரர் தனது வருமானத்தின் பெரும்பகுதி யை சேமிப்பிலோ பங்குச் சந்தையிலோ போடுகிறார். அவர் மீது ஜிஎஸ்டி வரியின் தாக்கம் குறைவு. அதே நேரத்தில் பெரிய நிறுவனங்கள் மீதான வரி 35% இல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொருள்கள் மற்றும் சேவை வரியில் இருந்து கிடைக் கும் பணம் இந்த பெரிய நிறுவனங்களு க்கு மானியமாக கொடுக்கப்படுகிறது. இதன் விளைவு ஏழைகளிடமிருந்து பணக் காரர்களுக்கு பணம் மடை மாற்றப்படு கிறது; இங்கு உறிஞ்சி அங்கு கொட்டப் படுகிறது.

வெகுஜன  இயக்கங்களின் வலிமை

2020-21இல் விவசாயிகள் நடத்திய போராட்டம் ஒரு முக்கியமான பாடம் கற்றுத் தந்தது. ஒழுங்கமைக்கப்பட்ட வெகுஜன இயக்கத்தால் ஏகாதிபத்தியக் கொள்கைகளை திரும்பப் பெற வைக்க முடியும் என்பதை நிரூபித்தது. மோடி அரசு, மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த மூன்று சட்டங்கள் வெறும் கொள்கை மாற்றங்கள் அல்ல, விவசாயத் துறையை கார்கில், ஏடிஎம் போன்ற வெளி நாட்டு விவசாய ராட்சத நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கும் சதி ஆகும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத்தில் கட்டுப்பாடு வழங்குவ தற்காக  திட்டமிடப்பட்டவை இவை. ஜூலை 9, 2025 பொது வேலைநிறுத்தம் இதே வகையான ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பின் தொடர்ச்சி ஆகும். தொழி லாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கங் கள் ஒன்றுபட்டு நடத்தும் இந்த வேலை நிறுத்தம் ஏகாதிபத்திய-முதலாளித்துவ அமைப்பு முறையின் கொடிய சுரண்ட லுக்கு எதிரான போராட்டம். பெருகும் வேலையின்மை, பணவீக்கம், தனியார் மயமாக்கல், வெளிநாட்டு மூலதன ஆதிக்கம் ஆகியவற்றிற்கு எதிரான மக்கள் கூட்டணி இது.

மாற்று வழி - சோசலிசப் பொருளாதாரம்

உலகமயமாக்கப்பட்ட முதலாளித்து வத்திற்கு மாற்று சோசலிசப் பொருளா தாரம் தான். முக்கியத் தொழில்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, சந்தை யின் குழப்பத்திற்குப் பதிலாக சமூகத் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை திட்டமிடுவது,  பிற சோசலிச நாடுகளுடன் நியாயமான வர்த்தகம் நடத்துவது போன்றவை அவசியம். உடனடியாகச் செய்ய வேண்டியவை - வெளிநாட்டு மூலதனத்தின் கட்டுப் பாட்டை குறைப்பது, பன்னாட்டு நிறுவ னங்களின் கொள்ளையைத் தடுப்பது, பெட்ரோலியம், தொலைத்தொடர்பு, வங்கித்துறையை மீண்டும் அரசு கட்டுப் பாட்டில் கொண்டு வருவது, நிலச் சீர்திருத் தம் மற்றும் கூட்டுறவு விவசாயம், குறைந்த பட்ச ஆதரவு விலை உத்தரவாதம், சிறு குறு நடுத்தரத் தொழில்களுக்கு முன்னு ரிமை, சுதேசி தொழில்நுட்ப மேம்பாடு, தொழிலாளர்களின் தொழிற்சங்க மற்றும் கூட்டுப்பேர உரிமை, குறைந்தபட்ச கூலி உயர்வு ஆகியவை. முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாளர்-விவசாயி வர்க்கத்திற்கும் இடையேயான இந்த முரண்பாடு மேலும் தீவிரமாகும். ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரே மாற்று சோசலிசம். இந்திய மக்களின் விடு தலை வெறும் அரசியல் சுதந்திரத்தில் மட்டுமல்ல, பொருளாதார சுதந்திரத்தி லும் உள்ளது. அது சுரண்டலற்ற சோச லிச அமைப்பை நிறுவுவதன் மூலம் மட்டுமே சாத்தியம். அத்தகைய மாபெரும் பயணத்தின் ஒரு மைல்கல்தான், ஜூலை 9 - பொது வேலை நிறுத்தம்!  அதை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்.