articles

img

சிவப்பு புத்தக தினம்

        சிவப்பு புத்தக தினம்

பிப்ரவரி 21 சிவப்பு புத்தக தினத்தையொட்டி, உலகளவில் நடைபெறும் வாசிப்பு பேரியக்கத்தின் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகக் கிளை மற்றும் சமூக ஊடகக் கிளை சார்பில் கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலி உழைப்பும் மூலதனமும்” நூல் வாசிப்பு நிகழ்வு மாநிலக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே. சரவணன் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தொடக்க உரையாற்றினார். தோழர் ஆர். ராஜலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி நிறைவுரையாற்றினார். தோழர் அய்யனி நன்றியுரை வழங்கினார். மேலும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிப்பு நிகழ்வு தாரா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வெ.ராஜசேகர், இரா.சிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கன்னிமாரா நூலகம் காரல் மார்க்ஸ் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாணவர் அரங்க தோழர்கள் சிவப்பு புத்தக தின வாசிப்பில் ஈடுபட்டனர். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் தமிழ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.