அம்மாக்கோழி
பள்ளி இறுதிமணி அடித்தது. மாணவா்கள் ஓரே ஆரவாரத்துடன் தங்களது புத்தக மூட்டையைச் சுமந்தபடி வெளியேற ஆரம்பித்தனர். பள்ளியின் நுழைவுவாயில் அருகே ஒரு சிறு கூட்டம். அதில் மாணவர்களும் சேர்ந்து கொண்டனர்.
”வாங்கய்யா வாங்க! ஒரு ரூபாய்க்கு ரெண்டு கோழிக்குஞ்சு . அதிர்ஷ்டம் இருக்கி றவங்க அள்ளிக்கிட்டுப் போங்க. ”வாங்கய்யா வாங்க! ஒரு ரூபாய்க்கு ரெண்டு கோழிக்குஞ்சி”. கோழி வியாபாரி ஒருவன் அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட கூடை விரித்து அதில் நுாற்றுக்கணக்கான கோழிக்குஞ்சு களை அடைத்து வைத்து கூவிக் கொண்டி ருந்தான். டேய் குமாரு அங்க பாரு ஏதோ கூட்ட மாக இருக்கு. வா, நாமும் போய் என்னானு பார்ப்போம்! வாடா முருகா! இருவரும் கூட் டத்தைத் துளைத்துக் கொண்டு கோழிக் குஞ்சுகளையும், கோழி வியாபாரியையும் பார்த்தனர். தம்பிகளா ! கடைசி அஞ்சு அட்டை தான் இருக்கு. ஒரு அட்டை ஒரு ரூபாய். குலுக்க லில் விழுந்தா இரண்டு கோழிக்குஞ்சு. வாங்கய்யா வாங்க! வாங்க தம்பிகளா வாங்க
என்று தன் கையில் உள்ள சிகரெட் பெட்டி அட்டையில் எழுதப்பட்ட நம்பரைக் காண்பித்து மாணவர்களுக்கு ஆசையைத் தூண்டிவிட்டார் கோழி வியாபாரி. டேய் முருகா! என் சாமன்ட்ரிபாக்சிலே ஒரு ரூபாய் இருக்குடா. அதில் இருந்த ஒரு ரூபாயை எடுத்து குமாரிடம் கொடுத் தான் முருகன். “கடைசி அட்டை, கடைசி அட்டை’ அண்ணே ! இங்க குடுங்க குமார் ஒரு ரூபாயை எடுத்து நீட்ட, கோழி வியா பாரி கடைசி அட்டையை குமாரிடம் கொடுத்தார். சந்தோசத்தில் எகிறிக்குதித்தான் முருகன். டேய்! பிள்ளையாரை நல்லா வேண்டிக்க. நமக்கு பிரைஸ் அடிச்ச துன்னா அவருக்கு சர்க்கரை வாங்கி சாமி கும்பிடுவோம். குமார் மனதுக்குள் வேண்டிக் கொண்டான். நம்பர் அட்டையை பார்க்கவே இல்லை. பாருங்கய்யா, பாருங்க இப்ப குலுக்கப்போறேன் என்று கூறியபடி சுருட்டிப் போடப்பட்ட சீட்டுகளை ஒவ் வொன்றாக காண்பித்து 1 முதல் 10 வரை சரியா இருக்கா என்று கேட்டுவிட்டு ஒரு டப்பாவில் போட்டு நன்றாக குலுக்கினான் வியாபாரி. டேய்! பாப்பா இங்க வாடா. இதிலே ஒரு சீட்டு எடு என்று கூறியபடி டப்பாவை நீட்ட ஒரு சீட்டு எடுக்கப்பட்டது. யார் அந்த அதிர்ஷ்டசாலி சீட்டை பிரித்து பார்ப்போமா என்று கூறியபடியே சீட்டைப் பிரித்துக் காட்டினான் வியாபாரி. அதிர்ஷ்ட எண் 5. யார் வைத்திருக்காங்க அந்த அட்டை யை? எல்லோரும் தாங்கள் வைத்திருக்கும் அட்டையைப் பார்த்து மௌனமாக இருந்தனர். டேய்! குமாரு, உன்னோட அட்டை யைப் பாருடா
. பதற்றத்தில் உள்ளங்கை யில் வேர்த்துக் கொட்டியது குமாருக்கு, மெல்ல மெல்ல நடுக்கத்துடன் அட்டை யைத் திருப்பிப்பார்த்தான். ”5” என்ற எண் முருகன் கண்ணில் பட்டது. டேய் ! குமாரு நமக்கு கோழிக்குஞ்சு கிடைச்சிருச்சு. குமாரால் நம்ம முடியவில்லை. அட்டை யைப் பார்த்தான். ”5”ம் நம்பர் சந்தோ சத்தில் எகிறிக்குதித்தான். அண்ணே! எங்க கிட்டதான் அந்த 5ஆம் நம்பர் இருக்கு. பாருங்க இந்த அதிர்ஷ்டசாலியை என்று கூறிய படியே எல்லோரிடமும் அட்டையை வாங்கிக் கொண்டு, இரண்டு கோழிக்குஞ்சு களை குமாரிடம் தந்தான் வியாபாரி. கோழிக்குஞ்சுகளை பெற்றுக்கொண்டு குமாரும், முருகனும் அந்த இடத்தை விட்டு நடையைக் கட்டினர். இருவரும் ஆளுக் கொரு குஞ்சாக கையில் வைத்துக் கொண்டு வாயெல்லாம் பல்லாக சிரித்து மகிந்தனர். டேய் குமாரு இந்தக் கோழிக்குஞ்சியை வச்சு என்னடா செய்வே! என்னடா அப்படிக்கேட்டுப்புட்டே! இந்த ரெண்டு கோழிக்குஞ்சியை வளர்த்து அடைக்கு வைப்பேன். அதுக குஞ்சு பொறிக்கும், அதையும் அடைக்கு வைப்பேன். இப்படியே ஒரு கோழிப் பண்ணையை உருவாக்கப்போறேன். டேய்! குமாரு, நீ பெரிய ஆள்தான்டா, செஞ்சாலும் செய்வே. இப்படியே பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான் குமாரு!. அம்மா, இங்க பாருங்க நான் என்ன கொண்டு வந்திருக்கேன்னு. என்னடா குமாரு கோழிக்குஞ்சி, எப்படிடா கிடைச் சது. நடந்தவற்றை யெல்லாம் ஒன்று விடாமல் கூறினான் குமார். ஏன்டா நம்ம வீடே ஒரு கோழிக்குடிசை மாதிரிதான் இருக்கு. இதிலே கோழிக்குஞ்சி வளர்க்கப்போறயா? சரி, சரி நான் அம்மாச்சி வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன். சாப்பிட்டு படி என்று கூறிய படியே கிளம்பி னாள் குமாரின்
அம்மா பவுனு. குமார் புத்தகமூட்டையை துாக்கி எறிந்து விட்டு இரண்டு கைகளிலும் கோழிக்குஞ்சியை துாக்கி கொஞ்சத் துவங்கினான். தனக்கு வைக்கப்பட்ட சோற்றை பிசைந்து இரண்டு கோழிக் குஞ்சுகளுக்கும் ஊட்டி விட்டான். தண்ணீா் கொடுத்தான். கோழிக்குஞ்சுகளுடன் விளையாடிக் கொண்டே இருந்தான். இரவு துாங்கும் போது கூட அந்தக் கோழிக் குஞ்சுகளை தனது மார்பில் ஏறி நிற்க வைத்த படி துாக்கினான். கோழிக்குஞ்சு களின் கியாக் கியாக் சத்தம் அவனுக்குத் தாலாட்டுப் பாடுவது போல் இருந்தது. டேய்! குமாரு எந்திரிடா 8 மணி ஆகுது. ஸ்கூல் போகவேண்டாமா? ராத்திரியிலாம் கோழிக்குஞ்சிகளோடக் கொஞ்சிட்டு, காலையிலே 8 மணி வரைக்கும் துாக்கமா? பதறி எழுந்தான் குமாரு, எழுந்தவுடன் கோழிக்குஞ்சுகள் முகத்தில் தான் கண் விழித்தான். ஓடிச்சென்று கோழிக்குஞ்சு களை கையில் எடுத்தான். டேய், இப்ப மரி யாதையா குளிச்சிட்டு ஸ்கூலுக்கு போறயா? இல்லை, கோழிக்குஞ்சுகளை வெளியே விடட்டுமா? ஒரு வழியாக குளித்து சாப்பிட்டு விட்டு கோழிக்குஞ்சுகளைப் பார்த்து டாட்டா, நான் ஸ்கூலுக்கு போயிட்டு வர்றேன் என்று கை அசைத்தபடி பள்ளிக்கு கிளம்பி னான் குமாரு. ஏன்டா எப்பவும் எங்கிட்டச் சொல்லிட்டுத்தான் ஸ்கூலுக்கு போவே, இன்னிக்கு கோழிக்குஞ்சுக்கிட்ட சொல்லிட்டுப் போறயா? பள்ளி சென்ற குமாருக்கு எந்தப்பாட மும் மண்டையில் ஏறவில்லை. கோழிக் குஞ்சுகள் சப்தம் மட்டுமே அவன் காது களில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று முழுவதும். பள்ளி இறுதி மணி 4.20க்கு அடித்தவுடன் பள்ளியின் முதல் ஆளாக வெளியே வந்தான். ஓரே ஓட்டமாக வீட்டிற்கு வந்தான். அம்மா, கோழிக்குஞ்சுகளை எங்கேம்மா? பவுனு விக்கமும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் குமாரைப் பார்த்தாள். உன்னத்தாம்மா கோழிக்குஞ்சு களை எங்க! வீடு முழுவதும் தேடினான். வீட்டைச் சுற்றியும் பார்த்தான். கோழிக் குஞ்சுகளை காணவில்லை. ”கியாக் கியாக்” சப்தம் கேட்கவில்லை.
அம்மா, எங்கம்மா என் கோழிக்குஞ்சு! குமாரு என்ன மன்னிசிடுமா! கோழிக்குஞ்சு வீட்டை அசிங்கம் பண்ணிடுச்சுக. அத னாலே வெளியே விட்டேன்டா, பருந்து துாக்கிட்டுப் போயிடுச்சு. என்னம்மா சொல்றே! ஆமான்டா, கண்ணீா் விட்டு அழுதான் குமாரு. அன்று இரவு சாப்பிடவும் இல்லை. துாங்கவும் இல்லை. காலையிலே குமாரு நான் உனக்கு வேற கோழிக்குஞ்சு வாங்கித்தா ரேன். அதைப்பத்திரமா பார்த்துக்கிடுவோம். குளிச்சிட்டு சாப்பிட்டு ஸ்கூலுக்கு போயிட்டு வாப்பா. அழுதபடியே கொஞ்சம் சாப்பிட்டு விட்டு ஸ்கூலுக்கு கிளம்பினான் குமாரு. அம்மா உங்ககிட்ட ஒன்னு கேட்க லாமா? ஏம்மா! அந்தக் கோழிக்குஞ்சு களோட அம்மாக்கோழி இருந்தா கண்டிப்பா பருந்து கிட்ட இருந்து அந்தக் கோழிக் குஞ்சுகளை காப்பாத்தியிருக்குமுலே. என்ன எப்படி பொத்தி வளர்க்கிற, அது மாதிரி தாம்மா அந்த கோழிக்குஞ்சுகளும்”. பவுனு என்ன பேசுவது என்று தெரியா மல் கண்ணீர் விட ஆரம்பித்தாள். கனத்த இதயத்துடன் பள்ளிக்குச் சென்றான் குமாரு.