articles

img

முகமது சலீம், மேற்கு வங்க மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக மம்தா பானர்ஜி மிகப்பெரிய அளவில் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். தேர்தல் ஆணையமும் தற்போது சில மாற்றங்களைச் செய்து வருகிறது. ஆனால், தலைமைச் செயலாளர் அல்லது டிஜிபியை மட்டும் மாற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. வேட்பாளர் தேர்வில் கூட மாவட்ட ஆட்சியர்களும் , காவல் கண்காணிப்பாளர்களும் தலையிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. “ஐபேக்” (I-PAC) நிறுவனமும் மாவட்ட அதிகாரிகளும் சேர்ந்து யாருக்கு சீட் வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாகத் திரிணாமுல் கட்சியினரே கூறுகின்றனர்.