ஏகாதிபத்தியப் போரின் கோர முகத்தை அம்பலப்படுத்தும் பேரழிவுகளும் துயரங்களும்
இன்று 800 கோடி மக்களைக் கொண்ட இந்த பூமிப்பந்தில், அமைதியை விரும்பி வாழும் எளிய மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு பெரும் சுமையாக ஈரான் மீதான போர் உரு வெடுத்துள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தொடுத்த இந்தத் தாக்குதல், ஏற்கெ னவே நிலவி வரும் சர்வதேச பதற்றங்களின் தொடர்ச்சி யாகவே பார்க்கப்படுகிறது. இந்த போர் வெறும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல; இது உலகளாவிய பொருளாதாரச் சங்கிலியை அறுத்து, சாதாரண மக்களின் அடுப்பங்கரை வரை பாதிப்புக ளை ஏற்படுத்தியுள்ள ஒரு பேரழிவாகும்.
குறிப்பாக, பிப்ரவரி இறுதி வாரத்தில் தொடங்கிய இந்தத் தாக்கு தல்கள், 15 நாட்களுக்குள்ளேயே உலகெங்கும் உண வுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அத்தியா வசியப் பொருட்களின் தட்டுப்பாட்டை உருவாக்கி, மனிதகுலத்தின் அன்றாட வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளது. போரின் பின்னணியும் மனிதநேயமற்ற தாக்குதல்களும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் திடீரென ஈரானின் முக்கிய இலக்குகளைத் தாக்கத் தொடங்கின. ஈரானின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவ ரான காமேனி கொல்லப்பட்டதுடன், அந்நாட்டின் துறை முகங்கள் மற்றும் அரசு அலுவலகக் கட்டடங்கள் தரை மட்டமாக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் மிகவும் கொடூரமாக 160 பள்ளிச் சிறுமிகள் கொல்லப்பட்டது, ஏகாதிபத்திய நாடுகளின் மனிதாபிமானமற்ற முகத்தை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு, இது வெறும் ‘ஆட்சி மாற்றத்திற்காக’ (Regime Change) நடத்தப்படும் நடவடிக்கை என்று அமெரிக்கா கூறுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் செயலாகும். இந்தச் சூழலைப் பயன்படுத்தி இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை ஒரு காரணமாகக் காட்டி லெபனான் மற்றும் அண்டை நாடுகள் மீதும் தனது போரை விரிவுபடுத்தி வருவது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதிக்கும் அச் சுறுத்தலாக மாறியுள்ளது.
பொருளாதாரப் பாதிப்புகளும் போக்குவரத்து முடக்கமும் இந்தத் திடீர் போரினால் வளைகுடா நாடுகளின் வழியாகச் செல்லும் விமானப் போக்குவரத்து கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், ஓமன் போன்ற நாடுகள் வழியே தினசரி ஆயிரக்கணக்கான விமானங்கள் பறந்த இடத்தில், இன்று ஒரு விமானம் இயக்கு வது கூட பெரும் சவாலாக மாறியுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச வர்த்தகம் முடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதன் பாதிப்புகள் உணரப்படு கின்றன. எரிபொருள் தட்டுப்பாட்டால் சரக்குப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. ஒரு நாட்டின் மீதான போர், மற்றொரு நாட்டின் சாதாரண புலம் பெயர் தொழிலாளியின் தட்டில் இருக்கும் உணவைப் பறிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
திரு மணங்கள் தள்ளிப்போவதும், இறப்புச் சடங்கு களுக்குக் கூடக் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளதை வைத்துப் பார்க்கும்போது, ஒரு குறுகிய காலப் போர் கூட எவ்வளவு பெரிய சமூகச் சீர்குலைவை ஏற்படுத்தும் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் போர்வெறியும் ஆயுத வணிகமும் கடந்த ஓராண்டில் மட்டும் நைஜீரியா, சிரியா, லெபனான், ஏமன் என வரிசையாக ஏழு நாடுகள் மீது அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ போரைத் தொடுத்துள்ளது. 2025 ஜனவரி 19-இல் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது, அமைதி நோபல் பரிசு கோரினார்; போர்களை நிறுத்தப் போவதாகப் பேசினார்.
ஆனால், யதார்த்தம் அதற்கு நேர்மாறாக உள்ளது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்திச் சிறையில் அடைத்தது முதல், ஈரானைத் தாக்குவது வரை அமெ ரிக்காவின் நோக்கம் ஒரே விதமானவை தான்: ஒன்று, அந்த நாடுகளின் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவது; இரண்டாவது, தங்களுக்கு அடி பணியாத நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்வது. அமெ ரிக்காவைப் பொறுத்தவரை ஆயுத விற்பனைதான் அதன் மூச்சுக் காற்றாகும். ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் லாபத்திற்காக உலகெங்கும் செயற்கையான போர்ச் சூழலை உருவாக்குவதே அந்நாட்டின் ‘ராணுவத் தொழில் கட்டமைப்பு’ (Military Industrial Complex) கொள்கையாகும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் சவால்களும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பல்லா யிரக்கணக்கான பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் கைகோர்த்துக் கொண்டு பயங்கரவாதத்தை எதிர்ப்போம் என்று பிரதமர் மோடி பேசுவது, இந்தியாவின் பாரம்பரி யமான அணிசேரா கொள்கைக்கு முரணானது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா தடைபோடும் போதும், பின்னர் வாங்கிக் கொள்ளலாம் என்று ‘அனுமதிக்கும்’ போதும் இந்தியா அதற்கேற்ப நடப்பது, ஒரு சுதந்திரமான தேசத்தின் வெளியுறவுக் கொள்கையாகத் தெரியவில்லை. ஈரானுடன் இந்தியாவுக்கு நீண்டகால வரலாற்று மற்றும் வர்த்தக உறவுகள் இருந்தும், அந்நாட்டுத் தலைவர் காமேனி கொல்லப்பட்டபோது இந்தியா காட்டிய மௌனம் கண்டிக்கத்தக்கது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஒரே வரிசையில் இந்தியா நிற்பது என்பது, நமது நாட்டின் சர்வதேச நற்பெய ருக்குக் களங்கம் விளைவிக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
சீனாவின் வளர்ச்சி மற்றும் டாலர் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு அமெரிக்கா இந்த அளவுக்குத் தீவிரமாகப் போர்களில் ஈடுபடுவதற்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கியமான அரசியல் காரணம், சீனாவினுடைய அபரி மிதமான வளர்ச்சியாகும். வாங்கும் சக்தியின் அடிப்ப டையில் (Purchasing Power Parity) சீனா இன்று உலகின் முதல் பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. இது அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்திற்குச் சவாலாக மாறியுள்ளது.
மேலும், சர்வதேச வர்த்த கத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக யுவான், ரூபிள் மற்றும் இந்திய ரூபாய் போன்ற நாணயங்க ளைப் பயன்படுத்தும் முயற்சிகள் (De-dollari sation) அதிகரித்து வருகின்றன. பிரிக்ஸ் (BRICS) போன்ற அமைப்புகளின் எழுச்சி, அமெரிக்காவின் ஒற்றைத் துருவ ஆதிக்கத்தைச் சிதைக்கிறது. இத னைத் தடுக்கவே, லித்தியம் போன்ற அரிய தாதுக்கள் நிறைந்த லத்தின் அமெரிக்க நாடுகளை யும், எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்கா துடிக்கிறது. ஏகாதிபத்தியத்தின் தோல்வி உறுதி ஈரான் ஒரு சாதாரண நாடு அல்ல; அது நீண்ட காலப் போராட்ட வரலாற்றைக் கொண்டது. 1
979-இல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வெளி யேற்றியது முதல் இன்று வரை, ஈரான் தனது இறை யாண்மையைக் காக்கத் தொடர்ந்து போராடி வருகிறது. தற்போதைய போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் பின்னடைவைச் சந்தித்து வருவது, ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியையே காட்டு கிறது. வியட்நாம் போரில் சந்தித்த அதே போன்ற ஒரு தோல்வி அமெரிக்காவிற்கு இங்கேயும் காத்தி ருக்கிறது. சர்வதேச அளவில் அமைதியை விரும்புவோ ரும், உழைக்கும் மக்களும் இந்த அநியாயமான போருக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். உலக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு ஏகாதிபத்தி யத்திற்கு எதிராகவும், ஈரானின் இறையாண்மைக்கு ஆதரவாகவும் பொதுக் கருத்தை உருவாக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
