மாதர் சங்க அகில இந்திய மாநாடு பெண்கள் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிரான போர்க்குரல் - அ. ராதிகா
“எங்கேயாவது ஒரு பெண் அநீதியைச் சந்தித் தால், அவளுக்குத் துணையாக அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) இருக்கும்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இந்தியச் சமூகத்தில் விதைத்த பெருமை இந்த இயக்கத்திற்கு உண்டு. இன்றைய சர்வதேச மற்றும் இந்தியச் சூழலின் பின்ன ணியில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகை யான சுரண்டல்களுக்கும், ஒடுக்குமுறை களுக்கும், வன்முறைகளுக்கும் எதிராக இந்திய பெண்களைத் திரட்டிப் போராடுவதற்கான ஒரு தீர்க்கமான பாதையை ஹைதராபாத்தில் நடைபெற்ற 14-வது அகில இந்திய மாநாடு வகுத்துள்ளது. இந்தியப் பெண்கள் இன்று எதிர்கொள்ளும் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளையும், அவர்கள் மீது ஏவப்படும் திட்டமிட்ட ஒடுக்குமுறைகளையும் ஆழமாக ஆராய்ந்த ஒரு முக்கிய வரலாற்றுத் தருணமாக இந்த மாநாடு அமைந்தது. அரசியல் மற்றும் சமூகச் சூழலின் பின்னணி இம்மாநாடு நடைபெறும் காலகட்டம் என்பது சர்வதேச அளவில் ஏகாதிபத்தியமும், இந்திய அளவில் இந்துத்துவ கார்ப்பரேட் சக்திகளும் இணைந்து, உழைக்கும் மக்களிடம் பிளவுவாத அரசியலைத் திணித்து அவர்களைச் சுரண்டும் ஒரு மிக மோசமான காலகட்டமாக இருக்கிறது. சர்வதேச அளவில் அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உலக நாடுகள் வரி பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை யும், அவரது மனைவியையும் அமெரிக்கா கடத்திய நிகழ்வானது, உலக மக்களின் ஜன நாயகம் மற்றும் இறையாண்மை உரிமையைக் கேலிக் கூத்தாக்குவதோடு அவற்றைச் சிதைக்கும் செயலாகும் என்பதையும் மாநாடு சுட்டிக்காட்டியது. இந்தியச் சூழலில் பாஜகவின் ஆட்சி என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆணாதிக்க மற்றும் இந்துத்துவக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தும் ஒரு கருவியாகச் செயல்படு கிறது. இது ஏகாதிபத்தியத்திற்கும், கார்ப்பரேட் சக்திகளுக்கும் சேவை செய்யும் ஒரு அமைப்பாக மாறி, பெண்கள், சிறுபான்மையினர், தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதும், ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் மீதும் இடைவிடாத தாக்கு தல்களை நடத்தி வருகிறது. பாஜகவின் இந்த 12 ஆண்டுகால ஆட்சியில் சாதி, ஆணாதிக்க மற்றும் மதவெறி சக்திகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமும் பலமும் பெற்றுள் ளன. இவை பெண்களை மிக மோசமான அடக்குமுறைக்கு உள்ளாக்கி வருகின்றன. இதன் விளைவாகப் பெண்கள் மீதான வன்முறை எண்ணிக்கை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னணியில் இருக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதை மாநாடு கவலையுடன் பதிவு செய்தது. மாநாட்டின் ஆய்வு மற்றும் எதிர்காலப் பாதை கடந்த மூன்றாண்டு காலத்தில் மாதர் சங்கம் முன்னெடுத்த பல்வேறு செயல்பாடுகள் மற்றும் இயக்கங்கள் குறித்த விரிவான ஆய்வை இந்த நான்கு நாள் மாநாடு மேற்கொண்டது. இன்றைய சர்வதேச மற்றும் இந்திய நிலைமை களில் பெண்களின் நிலையைத் துல்லியமாக ஆராய்ந்து, இனிவரும் காலத்தில் மாதர் சங்கம் செயல்பட வேண்டிய திசைவழியை இம்மாநாடு மிக வெற்றிகரமாகத் தீர்மானித்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒரு புறமிருக்க, மறுபுறம் சமூக வலைதளங்களில் பெண்கள் மீது திட்டமிட்டு ஏவப்படும் பாலின இழிவுகள் மற்றும் மத-சாதி அரசியலால் பெண்கள் சந்திக்கும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் திட்டமிட்டுச் சிதைக்கப்படும் பின்னணியில் பெண்களின் வேலைவாய்ப்பு உரிமைகள் பறிக்கப்படுவதையும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் நெருக் கடிகளையும் மாநாடு விரிவாக விவாதித்தது. இந்தப் பிரச்சனைகள் யாவும் தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல, இவை அனைத்தும் ஆழமான அரசியல் பின்னணியைக் கொண்ட அரசியல் பிரச்சனைகள் என்ற அடிப்படை உண்மையை மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது. கார்ப்பரேட் சுரண்டலும் விழிப்புணர்வும் கார்ப்பரேட் லாபங்களுக்காக பாஜக அரசு மக்களைச் சுரண்டி, அவர்களை மீள முடியாத வறுமைச் சுழலில் சிக்க வைத்து வருகிறது. இந்த வறுமை நெருக்கடியின் மிகத் தீவிரமான பாதிப்புகளைப் பெண்கள் கூடுதலாகச் சந்திக்கிறார்கள். இந்தச் சூழலில் தேர்தலுக்கு முன்னதாக ‘பெண்கள் கையில் பணம்’ என்ற கவர்ச்சிகரமான உத்தியைப் பயன்படுத்தி பெண்களின் வாக்குகளைக் கவரும் தந்திரம் நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இது குறித்து மாநாட்டுப் பிரதிநிதிகள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். பெண்களுக்குப் பணம் தரும் திட்டங்கள் தற்காலிகமாகப் பலன் தந்தாலும், அவர்கள் நிரந்தர ஆதரவு சக்தி களாக பாஜகவுக்கு மாறிவிடவில்லை. எனவே, பெண்கள் மத்தியில் முறையான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி பாஜகவின் இந்தத் தந்திரத்தை அம்பலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மாநாடு பிரதிநிதிகள் மத்தியில் பதிய வைத்தது. ஏகாதிபத்தியம் உலக நாடுகளைச் சுரண்டி, சோஷலிச நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்த லை அளித்து வரும் வேளையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் இந்திய மக்களை, குறிப்பாக உற்பத்தித் துறையில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்களை நேரடியாகப் பாதிக்கும் என்பதை மாநாடு சுட்டிக்காட்டியது. ஏகாதிபத்தியத்தின் இத்தகைய முகமூடிகளை அம்பலப்படுத்தி மாதர் சங்கம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் இம்மாநாடு வலியுறுத்தியது. மாநில வாரியான கள நிலவரங்கள் மாநாட்டின் விவாதங்களின் மையமாக ஆணாதிக்கம், வர்க்கச் சுரண்டல், மதவெறி அரசியல் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவை பெண்கள் மீது செலுத்தும் பலமடங்கு தாக்குதல்கள் அமைந்தன. மணிப்பூர்: மணிப்பூரிலிருந்து வந்த பிரதிநிதிகள், அங்கு நிலவும் இன-மத அடிப்படையிலான மோதல்கள் பெண்களை எவ்வாறு நேரடியாகப் பாதித்துள்ளன என்பதைப் பகிர்ந்து கொண்டனர். பாலியல் வன்முறை ஒரு போர்க்கால ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதும், பெண்களின் உடல் “அரசியல் செய்தி எழுதும் தளமாக” மாற்றப்படு வதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க அரசு மறுப்பதும் கவலைக்குரிய உண்மை களாக முன்வைக்கப்பட்டன. கேரளா: கேரளப் பிரதிநிதிகள் அங்குள்ள குடும்பஸ்ரீ திட்டமானது, நுண்நிதி நிறுவனங் களின் சுரண்டலை எவ்வாறு தடுத்தது என்பதை யும், மதவெறி அரசியலை முறியடிக்க மாதர் சங்கம் மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் விளக்கினர். காஷ்மீர் & குஜராத்: காஷ்மீரில் நிலவும் இராணுவமயச் சூழலில் பெண்கள் சந்திக்கும் தனித்துவமான பிரச்சனைகளையும், குஜராத்தில் பாஜக கட்டவிழ்த்துவிடும் மதவெறி மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மனோநிலை குறித்தும் பிரதிநிதிகள் விரிவாகப் பேசினர். மதமாற்றச் சட்டங்கள் மூலம் பெண்களின் இணையரைத் தேர்வு செய்யும் அடிப்படை உரிமையைப் பாஜக பறிப்பதையும், நீதிமன்றங்கள் பல நேரங்களில் இத்தகைய சக்திகளுக்குச் சேவை செய்வதையும் மாநாடு கடுமையாகச் சாடியது. “மதவெறி அரசியலில் பெண்கள்தான் முதல் பலி” என்பதை பிரதிநிதிகள் தங்களின் அனுபவங்கள் வாயிலாகத் தெளிவாக எடுத்துரைத்தனர். குழு விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் மாநாட்டில் பல்வேறு முக்கியப் பிரச்சனை கள் குறித்துத் தனித்தனியான குழு விவாதங்கள் (Commissions) நடைபெற்றன. பெண்களும் இன்றைய ஏகாதிபத்தியமும், சட்டங்களில் மனு வாத சித்தாந்தத்தின் தாக்கம், சாதி-பாலினச் சமத்துவமின்மை மற்றும் வர்க்கப் போராட்டம், 21-ஆம் நூற்றாண்டின் அமைப்புசாரா தொழி லில் பெண்கள், நகரமயமாக்கலும் ஸ்மார்ட் சிட்டி திட்டமும், விளையாட்டு மற்றும் டிஜிட்டல் உலகில் பெண்கள் சந்திக்கும் சைபர் குற்றங்கள் போன்ற தலைப்புகளில் கமிஷன் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. மாலினி பட்டாச்சார்யா மற்றும் அர்ச்சனா பிரசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த விவாதங்களை முன்னெடுத்தனர். விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல, அது பெண்களின் வளர்ச்சிக் கான ஒரு கருவி மற்றும் அடிப்படை உரிமை என்ற புதிய அணுகுமுறையை மாநாடு முன் வைத்தது. மேலும், நுண்நிதி நிறுவனங்களின் சுரண்டல்கள் மற்றும் மோடி அரசு அவர்களுக்கு செய்யும் சேவைகள் குறித்த ஆய்வு நூல், தோழர் சுசீலா கோபாலன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் ஆகியவை வெளியிடப்பட்டன. அறைகூவல் இந்த 14-வது அகில இந்திய மாநாடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் திட்டமிடப்பட்ட அரசியல் மற்றும் கருத்தியல் தாக்குதல் என மதிப்பீடு செய்தது. ஆணாதிக்க மற்றும் மதவெறி அரசியலுக்கு எதிரான போராட்டத்தை மாதர் சங்கம் மேலும் கூர்மை யாக்க வேண்டும் என்ற விமர்சனம் முன்வைக்க ப்பட்டது. அடுத்து வரும் காலங்களில் தேசம் எங்கும் உள்ள பெண்களை ஒன்றிணைத்து, மோடி அரசுக்கு எதிராகவும், இந்துத்துவக் கருத்தி யல் பிரச்சாரங்களுக்கு எதிராகவும், வெறுப்பு அரசியலை முறியடிக்கவும் நாடு தழுவிய வலு மிக்க போராட்டங்களை நடத்துவது என மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. “ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம், மனுவாதத்திற்கு எதிராகப் போர் தொடுப்போம், பெண்ணுரிமையை உயர்த்திப் பிடிப்போம்” என்ற உன்னத முழக்கத்துடன் மாநாடு நிறைவு பெற்றது.
