articles

img

உழைப்பாளிகளுக்குச் சொந்தமான மாநகரை மீட்டெடுப்போம்! - ஆர்.அருண்குமார்

உழைப்பாளிகளுக்குச் சொந்தமான மாநகரை மீட்டெடுப்போம்! - ஆர்.அருண்குமார் 

இந்தியாவில் நகரமயமாக்கல் வெகுவேகமாக நடந்து வருகிறது. 2011 மக்கள் தொகை கணக் ்கெடுப்பின் படி, தேசிய அளவில் 30 சதவீதமாக இருந்த நகரமயமாதல், தமிழகத்தில் 55 - 58 சதவீத மாக இருந்தது. தற்போது இதனையும் கடந்து வேக மாக நகரமயமாதல் நடைபெறுகிறது. வடசென்னை மிகப்பெரிய தொழில் பகுதியாக இருந்தது. தற்போது திருபெரும்புதூர் பெரிய தொழிற் பேட்டையாகிவிட்டது. தொழிற்சாலைகள் நகரத்தின் விளிம்பிற்கு  இடம் பெயர்ந்துவிட்டதால், நகரம் விரி வடைந்து புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கி பெரு நகரமாக மாறுகிறது. ஹைதராபாத், மும்பை போன்ற பல நகரங்களிலும் இத்தகைய விரிவாக்கம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

பெருகி வரும்  ‘கிக்’ தொழிலாளர்கள்

 ஐடி துறையில் உள்ள ஊழியர்களின் அளவிற்கு சொமெட்டோ, ஸ்விக்கி, ரேபிடோ, ஊபர் போன்ற நிறுவனங்களில் ‘கிக்’ தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்கள் மிக மோசமான பகுதிகளி லேயே குடியிருக்கின்றனர். இங்கிலாந்து நாட்டின் ஜவுளித் தொழில் நகரமான மான்செஸ்டரில் தொழி லாளர்களின் குடியிருப்புகள் எவ்வளவு மிக மோச மாக இருந்தது என்பதை 1844இல் பிரடெரிக் ஏங்கெல்ஸ் விவரித்து இருப்பார்.  வடசென்னையின் பல பகுதிகள் அதைப்போலவே சேறும் சகதியுமாக, குப்பைக் கழிவு களோடு வாழத் தகுதியற்ற நிலையில் இருக்கின்றன.

 உயிரோட்டமான  தொடர்பு பறிபோனது  

தொழில் வளர்ச்சிக் காலத்தில் தொழிலாளர்க ளுக்குத் தங்குமிடத்தை உறுதி செய்ய வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பாக இருந்தது. அதனால்தான் கிராமப்புற கூலிகளை கொண்டு வந்து வீடு கட்டிக் கொடுத்து முதலாளிகள் வேலைக்கு அமர்த்தினர். ரயில்வே தொழிலாளர்களுக்கு அரசும் குடியிருப்பு களை கட்டிக் கொடுத்தது. பணி நிலைமைகளுக்காக மட்டுமல்ல, தங்குமிடத்திற்காகவும் தொழிற்சங்கங் கள் போராட வேண்டும் என்கிறார் ஏங்கெல்ஸ்.  முதலாளித்துவ வளர்ச்சி, நவீன தாராளமயம், பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் போன்றவற்றால், குடியிருப்பை உறுதி செய்வது எனும் பொறுப்பை முதலாளிகள் கை கழுவினர்.  வேலை யில்லாப் பட்டாளம் பெருகிவிட்டதால் ஆசை வார்த்தை கள் தேவைப்படவில்லை.  சந்தையில் இடம் பிடிப்பது, உபரியைப் பெருக்கி லாபத்தை ஈட்டுவது போன்ற வற்றிற்காக செலவுகளைச் சுருக்குகின்றனர்.  தொழி லாளர்கள் வெவ்வேறு இடங்களில் குடியிருக்கத் தொடங்கிய பிறகு தொழிற்சங்கங்களும் உறுப்பினர்க ளுடனான  உயிரோட்டமான உறவை பேண இயலா மல் போயின.  

குடிசைப் பகுதி மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி

நகரமயமாக்கலுக்கு ஈடாக, நகரங்களில் குடிசை மயமும் அதிகரித்து வருகிறது.  நாடு முழுவதும் நகரங்களில் 60 சதவீத அளவுக்கு குடிசைமயம் பெருகி யுள்ளது.  அதனால்தான், அணிதிரட்டப்படாத தொழில் களில் உழலும் இந்தப் பகுதி மக்களின் பிரச்சனைக ளைக் கையிலெடுக்க வேண்டும் என்று 2015இல் கொல் கத்தா சிறப்பு மாநாட்டில் (பிளீனம்) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முடிவெடுத்தது. சிஐடியு சங்கமும் புவ னேஸ்வரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் இதே முடிவுக்கு வந்தது. கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு, கே.பி.பார்க் குடியிருப்புக்கான போராட் டத்தை வெற்றிகரமாக நடத்தியது, இதற்கு ஓர் உதாரணம்.

மன அழுத்தத்தில் திணறும் நடுத்தர வர்க்கம்

 நகரத்தின் அடுத்த பகுதியினரான நடுத்தர வர்க்கத்தின் ஊதிய நிலைமை பெரிய அளவில் உயர்ந்திருந்தாலும், கடன் பளுவும் ஏறியுள்ளது.  இளைய தலைமுறைக்கு வீடு வாங்குவதும், திரு மணச் செலவுகளும் முக்கிய பிரச்சனைகள்.  எல்லாமே  கடனில் பெற்று மாதத் தவணைகளில் சிக்கித் திணறு கின்றனர். இதனால் குடும்பத்தில் சச்சரவு ஏற்படுகிறது. யாரைக் கேட்டாலும் மன அழுத்தம் என்கின்றனர்.  இதி லிருந்து விடுதலை தேடி மது, போதைப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். கேளிக்கைகளில் ஆழ்கின்றனர். இந்த நிலைமையை இந்துத்துவா பயன்படுத்திக் கொண்டு கடவுளின் பெயரால் பஜனைகள், யாத்தி ரைகள், ஆன்மீகப் பிரசங்கம் என்று அந்தப் பக்கம் இழுக்கிறது. பாஜக தலைவர்கள்  கருத்தியலுக்கு எதி ரான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக் கின்றனர்.   மன அழுத்தத்தில் தவிக்கும் நடுத்தர வர்க்கத்தி னருக்கு, பிரச்சனைகளின் அடிப்படை என்ன, தீர்வுக்கான மாற்று என்ன என்பதை புரிய வைக்க வேண்டும். அவற்றை கலைகள், நிகழ்வுகள் மூலம் உணர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் காம்ரேட் டாக்கீஸ், டயலாக் சேனல் போன்ற எத்தனையோ முயற்சிகள் தொடங்கி இருப்பது வரவேற்புக்கு உரியது.

பண்பாட்டுத் தளத்தில் தேவை வலுவான தலையீடு  

கேரளாவில் ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு எதிராக வலதுசாரிகள் உடனடி குறுக்கீடு செய்து காட்சிகளை வெட்டச் சொல்லிப் பணிய வைத்துள்ளனர்.  ஆர்.ஆர்.ஆர் படத்தில் சத்ரபதி சிவாஜியை இந்திய விடு தலைப் போராட்டத்தில் அண்ணல் காந்தி, நேரு இவர்களுடைய சம காலத்தவர் போல் சித்தரித்து அவ ருடைய மகனை இஸ்லாமியர் தாக்கியதாகக் கட்டுக் கதை சொன்னார்கள்.  அப்படியானால், இந்து - இஸ்லா மியர்களுக்கு நடுவே நடந்ததா விடுதலைப் போர்? இத்தகைய பொய்யான, வலதுசாரி சித்தரிப்புக்காக ராஜ் மௌலியின் தந்தையை பாஜக மாநிலங்களவை உறுப்பினராக்கியது.  கலை இலக்கியங்களை விமர்ச னப் பார்வையில் பார்க்கவும், உரிய தலையீடுகள் செய்யவும் வேண்டும்.  இல்லாவிடில் இந்துத்துவ சக்திகள் சமூகத்தில் இன்னும் வேகமாக ஊடுருவிச் செல்வார்கள்.  மாநிலத்தில் ஆட்சியில் உள்ள, புதிய தாராள மயத்தை ஏற்கும் கட்சிகள் உலக வங்கி, ஐஎம்எஃப் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நுகர்வோர் கட்டணங்களை மக்கள் தலையில் சுமத்துகின்றன.  நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்சனைகள், கோரிக்கை களில் கவனம் செலுத்தி அவர்களுக்கான  குரலை நாம் எழுப்ப வேண்டும்.

மாநகரை மீட்டெடுத்தல்

 மாநகரங்களில் உள்ள மூன்றாவது தரப்பு, வேண்டிய அளவு தங்களைத் திரட்டிக் கொண்டு எல்லா சுக போகங்களையும்  துய்த்துக் கொண்டிருப்பவர்கள். இந்தச் செல்வச் செழிப்பு மிக்க குடும்பங்களை பாது காக்கவே மற்ற பகுதியினர் தங்களது உழைப்பை ஓயாது செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.   ஆகவே, உழைப்பாளிகளின் நகரத்தை யாரிடமிருந்து மீட்டு எடுப்பது என்பது தெளிவாகிறது. 1844இல் மான்செஸ்டர் நகரம் பற்றி ஏங்கெல்ஸ் வர்ணித்தது போன்று அல்லாமல், எழில்மிகுந்த தூய்மையான, எல்லோருக்கும் கல்வி - வேலை - வீடு - பொது சுகாதாரம் - குண்டும் குழியுமற்ற சாலைகள் கொண்ட உன்னத நகரத்தை உழைப்பாளி மக்கள் தங்கள் வசம் மீட்டு எடுத்துக் கொள்ள, உழைப்பாளி, நடுத்தர வர்க்கத்தை உள்ள டக்கிய ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். உடைமை வர்க்கம் அபகரித்துக் கொண்டு விட்ட மாநகரை உழைப்பாளிகளுக்காக மீட்டெடுப்போம். 

 எழில்மிகுந்த தூய்மையான, எல்லோருக்கும் கல்வி - வேலை - வீடு - பொது சுகாதாரம் - குண்டும் குழியுமற்ற சாலைகள் கொண்ட உன்னத நகரத்தை உழைப்பாளி மக்கள் தங்கள் வசம் மீட்டு எடுத்துக் கொள்ள, உழைப்பாளி, நடுத்தர வர்க்கத்தை உள்ளடக்கிய ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.