தொழிலாளர் சட்டத் தொகுப்பு: பாஜகவின் பொய்களை முறியடிப்போம்!
நிலவுடைமையாளர்களின் ஆதிக்கம், அடிமைத்தனம், சாணிப் பால், சவுக்கடி ஆகியவற்றை எதிர்த்துத் தொழிலாளர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவே முதலாளித்துவ காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி. உழைப்பு நேரம், கூலி, குழந்தைத் தொழிலாளர் போன்ற எதையும் முதலாளித்துவம் தானாக முன்வந்து மாற்றி அமைக்கவில்லை; இச்சீர்திருத்தங்களுக்கு நெடிய போராட்டங்களும், உயிர்ப்பலியும், சிறைவாசமும் தேவைப்பட்டன.
இந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு நன்மை தரக்கூடியவை என்றும், கருணையின் அடிப்படையில் மாற்றங்களை உருவாக்க முன்மொழிந்ததாகவும் பாஜக கூறுவது கடைந்தெடுத்த பிரச்சாரமாகும். முதலாளி தானாக முன்வந்து நல்லது செய்தால், அதன் பொருள் ஆபத்தா னது. இந்தியா முழுவதும், மோடி ஆட்சியின் இந்த அமலாக்கத்தைக் குறித்துத் தொழிலாளர் யாரும் கொண்டாடவில்லை. மாறாக, முதலாளிகள் வரவேற்கின்றனர், முதலாளித்துவ ஊடகங்கள் தலையங்கம் தீட்டிக் கொண்டாடுகின்றன.
சீர்திருத்தம்: யாருக்கு விஷம்?
இந்தச் சட்டத் தொகுப்பு அமலாக்கம் என்பது சீர்திருத்தம் என்கிறது தினமணி நாளிதழின் தலையங்கம். நிலக்குவியலைத் தகர்த்துப் பரவலானோருக்கு நிலம் விநியோகித்தது நிலச் சீர்திருத்தம். ஒடுக்கப்பட்டோர் கல்வி, வேலை பெறும் போராட்டம் சமூகச் சீர்திருத்தம். காலங்காலமாக நடந்துவரும் சுரண்டல் முறையைக் கைவிட்டால் மட்டுமே சீர்திருத்தம் எனச் சொல்லலாம்.
வ.உ.சிதம்பரனார் போராடிய கோரல் பஞ்சாலை, மெட்ராஸ் லேபர் யூனியன் 1918 ஆகியவை இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு. சோவியத் யூனியன் போன்ற கம்யூனிஸ்ட் அரசுகளின் முன்மாதிரி நடவடிக்கைகள், காலனியாதிக்க ஆட்சியாளர்களை நெருக்கடிக்குள் தள்ளி, சட்டச் சீர்திருத்தங்கள் உருவாகக் காரண மாகின.
ஆனால், 1990களுக்குப் பின்னர், முதலாளித்துவம் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கையை “சீர்திருத்தம்” எனக் கூறுவது, மேலே குறிப்பிட்ட உண்மையான சீர்திருத்தங்களுக்கு எதிரானது. இது முதலாளி களுக்கு ஆதரவானது; மூலதனத்தை மேலும் மேலும் குவிக்க உதவுவது. அரசுகளும், ஆளும் வர்க்க ஊடகங்களும் உச்சரிக்கும் சீர்திருத்தம், கொடிய விஷம் ஆகும்.
சட்டங்கள்: கார்ப்பரேட்டுகளின் சேவைக்காக
மாமேதை காரல் மார்க்ஸ் பொருளாதாரக் கட்டமைப்பைச் சமூகத்தின் அடிக்கட்டுமானம் என்றும், சட்டம், நீதி, நிர்வாகம் உள்ளிட்டவற்றை மேல் கட்டுமானம் என்றும் கூறுகிறார். இதன் பொருள், பொருளாதார உடமைக்காக, சட்டம், நீதி, நிர்வாகம் ஆகியவை சேவை செய்யும் விதத்தில் செயல்படுகிறது என்பதாகும்.
நாம் வாழும் இந்த நூற்றாண்டில், நிதி மூல தனமும், உற்பத்தி மூலதனமும் பெருகி வருகின்றன. முதலாளிகள் தனித்து இயங்குவதில்லை; கூட்டாக இயங்குகின்றனர். அன்றைய நில உடமையாளர் களுக்குச் சாதகமாக இயங்கி வந்த அரசு, இன்றைக்கு தொழில் முதலாளிகளுக்காகச் சேவை செய்து வரு கிறது. இதன் விளைவாகவே இந்தப் புதிய தொழி லாளர் சட்டங்கள் அவர்களுக்கு தேவைப்படுகின்றன.
* “ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ்” என்ற வார்த்தை களுக்குள், தொழிலாளரை நினைக்கும் நேரத்தில் வேலைக்கு வைத்துக்கொள்ளவும், நினைக்கும் நேரத்தில் விரட்டி அடிக்கவுமான “அமர்த்து பின் துரத்து” (Hire and Fire) வசதிகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
* 2014-இல் ஆட்சிக்கு வந்தவுடன், பயிற்சியாளர் சட்டத்தைத் திருத்தி, பல வருடங்கள் தொழிலாளர் களைப் பயிற்சியாளர்களாகவே வைத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கினர். நீம் (NEEM), நாப்ஸ் (NAPS) திட்டங்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தாராளமாகப் பயன்படுத்த வழிவகுக்கின்றன.
* தொழிலாளர் பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2020-இன் பிரிவு 57, உற்பத்தி சார்ந்த முக்கியப் பணிகளில் கூட, ஒப்பந்தத் தொழிலாளர்களை அனுமதிக்கிறது. இது நிரந்தரமாகவே ஒப்பந்தத் தொழிலாளர்களை உருவாக்கி, தொழிலாளர்களின் கூட்டுப் பேர உரிமையைப் பெரிய அளவில் அழிக்கும்.
* மேலும், புலம் பெயர் தொழிலாளர் சட்டத்தில், மாதம் ரூ. 18,000-க்கு மேல் வருமானம் பெறுவோர் சட்ட வரம்பிலிருந்து நீக்கப்படுகின்றனர். இவை முதலாளிகளுக்குச் சாதகமானது மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரல் சார்ந்ததுமாகும். இது நிரந்தர வேலை மற்றும் வருமானத்தைப் பாதிக்கும்.
நிராயுதபாணியாகும் தொழிலாளர்கள்
தொழில் உறவுச் சட்டத் தொகுப்பு 2020 ஆனது, முன்பு இருந்த இந்தியத் தொழிற் தகராறு சட்டம் 1947 வழங்கிய உரிமைகளைப் பறிக்கிறது.
நிறுவனங்களை மூடும் உரிமை: ஆலையை மூடத் தொழிலாளர் துறையின் அனுமதி தேவைப்படும் தொழிலாளர் எண்ணிக்கையை 100-லிருந்து 300 தொழிலாளர் வரை என அதிகரித்துள்ளது. பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்த நிறுவனங்கள் 100-க்கும் குறைவான வேலைவாய்ப்பே வழங்குவதால், நிறுவனங்களைத் திறக்கவும், மூடவும் விருப்பத்திற்கேற்ப அனுமதிக்கிறது.
வேலை நிறுத்த உரிமை: வேலை நிறுத்த அறிவிப்புக் காலத்தை 14 தினங்களிலிருந்து 60 தினங்களுக்கு முன் வழங்க வேண்டும் என வரையறை செய்கிறது. மேலும், தொழிலாளர் துறை சமரசப் பேச்சு வார்த்தை நடந்திருந்தால், வேலை நிறுத்தம் செய்யக் கூடாது எனக் கூறுகிறது. ஆக மொத்தத்தில், தொழிலாளர்களுக்கு இருந்த கூட்டுப் பேர உரிமை மற்றும் வேலை நிறுத்த உரிமை உள்ளிட்டவை பறிக்கப்பட்டு, தொழிலாளர்களையும், தொழிற்சங் கங்களையும் நிராயுதபாணியாக மாற்றுகிறது.
பாஜகவும் கார்ப்பரேட்டுகளும்
ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பாஜக அரசு, மறுபக்கம் நிறுவன விபத்துகளைக் கண்டுகொள்வ தில்லை. 2018 முதல் 2020 வரை, 3331 தொழிலாளர் மரணங்கள் பதிவாகி உள்ளன. ஆனால், தொழிற்சாலைச் சட்டங்களின் கீழ் 14 பேருக்கு மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போதைய புதிய தொகுப்புகள், முதலாளிகள் தப்புவதற்கான ஓட்டைகளை பெரிதாக்கி உள்ளது.
ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பாஜக அரசு, மறுபக்கம் நிறுவன விபத்துகளைக் கண்டுகொள்வ தில்லை. 2018 முதல் 2020 வரை, 3331 தொழிலாளர் மரணங்கள் பதிவாகி உள்ளன. ஆனால், தொழிற்சாலைச் சட்டங்களின் கீழ் 14 பேருக்கு மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போதைய புதிய தொகுப்புகள், முதலாளிகள் தப்புவதற்கான ஓட்டைகளை பெரிதாக்கி உள்ளது.
எனவே, சட்டத் தொகுப்புகள் மூலம் பாஜக செய்யும் வெற்று ஆரவாரக் கூச்சலை முறியடித்து, போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கவும், புதிய உரிமைகளுக்குப் போராடுவதுமே, இன்றைய தேவையாகும்.
