articles

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏன் பதிவு செய்யப்படவில்லை? என்ற கேள்விக்கு அபத்தமான பதிலை அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசி இருக்கிறார். அவரது பேச்சை கேட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே ஆர்எஸ்எஸ்ஸால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களிடம் பேசுவதால் எந்த பயனும் இல்லை. 

ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

தில்லியில் காற்றின் தரத்தை மதிப்பிடுவதற்காக காற்றின் தரக் குறியீட்டுத் திரைகளில் பாஜக அரசு தண்ணீரை தெளித்து, தரவுகளை கையாளுகிறது. இது பாஜகவின் நேர்மையையும் நம்பகத் தன்மையையும் குறைக்கிறது. அதே பாஜகவினர் காற்று சுத்திகரிப்பான்களுடன் வீட்டில் அமர்ந்து இருக்கிறார்கள். 

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு, நவ., 6 அன்று நடந்தது. ஆனால் 4 நாட்கள் ஆகியும் வாக்குப்பதிவு விபரங்கள் வெளியிடப்படவில்லை. முன்பெல்லாம், வாக்குப்பதிவு விவரத்தை வாக்குப்பதிவு முடிந்த அன்றே சொல்லி விடுவார்கள். இப்போது ஏன் மறைக்கப்படுகிறது? 

திரிணாமுல் எம்.பி., சாகேத் கோகலே

எஸ்ஐஆர் செயல்பாடு ஏன் 2024 மக்களவை தேர்தலுக்கு முன் நடத்தப்படாமல், ஜூன் 2025 வரை காத்திருந்து நடத்தப்படுகிறது? ஏனெனில், அமித் ஷாவின் நெருங்கிய நபரான ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக பிப்., 2025இல் தான் நியமிக்கப்பட்டார். ஞானேஷ் குமார் போன்ற ஆட்கள் இல்லாததால் தான் மக்களவை தேர்தலில் பாஜக குளறுபடி செய்ய முடியாமல் 240 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது.