articles

img

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நவ. 26 விவசாயிகள் தொழிலாளர்கள் போராட்டம்

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நவ. 26 விவசாயிகள் தொழிலாளர்கள் போராட்டம்

கோவை, நவ.10- ஒன்றிய பாஜக அரசின் விவசாயிகள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நவ. 26  அன்று போராட்டம் நடைபெறும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன் அறிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற சிஐடியு மாநில மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் ஜி.சுகுமாறன் பேசியிருப்பதாவது: கோயம்புத்தூரில் நடைபெற்ற சிஐடியு மாநில மாநாட்டில்  தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பது, சிறு குறு தொழில்களை பாதுகாப்பது, மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது என்பதற்காக தமிழ்நாட்டின் 700 பிரதிநிதிகள் நான்கு நாட்கள் விவாதித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.  ஆபத்தான தொழில்களில் பணியிடங்க ளில் இரவு நேரங்களில் கர்ப்பிணிப் பெண்களை பணியாற்ற வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்கு சிஐடியு வலுவாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்தக் காலம் வலுவான போராட்டங்கள் நடைபெறும் ஆண்டுகளாக மாறிக் கொண்டிருக்கின்றது.  நவ. 26 விவசாயிகள் தொழிலாளர்கள் போராட்டம் நவம்பர் 26 ஆம் தேதி என்பது மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை துவக்கிய நாள். இந்த ஆண்டு வரும் நவம்பர் 26 ஆம் தேதி விவசாயிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களையும் சேர்த்து வலு வான போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்காமல் தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. காண்ட்ராக்ட் முறையை திட்டமிட்டு அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு அமலாக்கி வருகிறது.  புதிய பணிகளுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்குப் பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களை எடுக்கிறது. அனைத்துமே ஒப்பந்த முறைதான் என்று செல்கிறது. இதற்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்த மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.  2 மாதம் கொசு லீவு போடுகிறதா? குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் யாருக்குக் கிடைக்கிறது? சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை  எங்குமே நிறைவேற்றவில்லை. அணி திரட்டப்படாத தொழிலாளர்களுக்கு பணப் பலன்கள் உடனடியாக வழங்கப்படுவதில்லை. குறைந்தபட்ச பென்ஷன் மூன்றாயிரம் கொடுக்க வேண்டும், காலிப் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தவில்லை. அங்கன்வாடி திட்ட ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். டெங்கு கொசு ஒழிப்பு ஊழியர்களுக்கு 10 மாதம் தான் வேலை. 2 மாதம் கொசு இருக்காது, எனவே 2 மாதம் வேலை இல்லை என்கின்றனர். கொசு லீவு போட்டு கடிக்காமல் இருக்கிறதா? இதை ஏற்க முடியாது.  எனவே அனைத்து பகுதி தொழி லாளர்களின் கோரிக்கைகளுக்காக ஜனவரி 19 ஆம் தேதி முதல் 25 வரை நகரம் கிராமம் என வீடு வீடாக இருசக்கர வாகனங்களில் பிரச்சாரம் செய்வது, 29ஆம் தேதி மாவட்டங்களில் சக்தி மிக்க மறியல் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  தொழிலாளர் பிரச்சனை மட்டுமின்றி, சிறுகுறு தொழில்கள் அழிவுப் பாதையில் செல்கிறது. அந்தத் துறையை பாதுகாக்க வேண்டும், மக்களுக்காக, சிறு குறு தொழில்களை பாதுகாக்க போராடுவதற்கும் இந்த மாநாடு முடிவு செய்துள்ளது.  இவ்வாறு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன் கூறினார். மாலதி சிட்டிபாபு,  ஆர்.கருமலையான் முன்னதாக இந்த பொதுக்கூட்டத்தில்சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு உரையாற்றினார்.  சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், மாநிலப் பொருளாளர் எஸ்.ராஜேந்திரன், மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன், இ.முத்துக்குமார், வர வேற்புக் குழுத் தலைவர் சி.பத்மநாபன், மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், மாநில துணைத் தலைவர்கள் எம்.மகாலட்சுமி, ஐடாஹெலன், மாநிலச் செயலாளர் எம். தனலட்சுமி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள், கோவை மாவட்டப் பொருளாளர் வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.  முன்னதாக புதுகை பூபாளம் உள்ளிட்ட கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. பொதுக்கூட்டத்தின் முடிவில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன் நன்றி கூறினார்.