ஜவஹர்லால் நேரு: ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதச்சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை
பண்டித ஜவஹர்லால் நேரு ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதச்சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை ஆகிய மூன்று முக்கியக் கோட்பாடுகளுக்கான ஒரு நிலைத்த அடையாள மாகத் திகழ்ந்தார். இந்தக் கொள்கைகளே நவீன இந்தியக் குடியரசை வடிவமைத்த அடித்தளங்க ளாகும்.
‘விதியுடன் சந்திப்பு’: தேசத்தின் இலக்கு
1947, ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில், இந்தியா சுதந்திரம் அடைந்த நன்னாளில், அரசியல் நிர்ணய சபையில் நேரு ஆற்றிய புகழ்பெற்ற ‘விதியுடன் சந்திப்பு’ (Tryst with Destiny) உரை, இந்தியக் குடியரசின் தொலைநோக்கு இலக்கை நிலைநிறுத்தி யது:
“சாதாரணக் குடிமக்களுக்கும், இந்திய விவசாயிக ளுக்கும், உழைப்பாளிகளுக்கும் விடுதலையும், வாய்ப்புகளும் கிடைக்க ஏழ்மை, நோய், அறியாமை ஆகியவற்றுடன் போராடி, அவற்றை வேரோடு ஒழிக்க, வளமை நிறைந்த முன்னேற்றத்தை நோக்கிய, நாட்டை உருவாக்குவது... ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆணுக்கும் நீதியை நிலைநாட்டி, வாழ்வில் நிறைவை அளிப்பதற்கேற்ற சமூக, பொருளாதார, அரசியல் நிறுவனங்களை உருவாக்குவது...”
இந்த இலக்கை அடைய, ஏகாதிபத்தியத்தை எதிர்க் கக்கூடிய மதச்சார்பற்ற அரசாங்கமும், அறிவியல் மனப்பான்மை கொண்ட சமூகமும் அத்தியாவசியம் என்று அவர் திட்டவட்டமாக நம்பினார். மேலும், தேசத்தின் ஒற்றுமையைப் பேணும் நோக்கில் வகுப்பு வாதத்தையும் குறுகிய மனப்பான்மையையும் கண்டித்தார்:
“நாம் அனைவருமே எம்மதத்தைச் சார்ந்தவரானா லும், இந்தியத் தாயின் புதல்வர்கள், சம உரிமைகளும், சலுகைகளும், பொறுப்புகளும் உடையவர்கள் நாம்... குறுகிய மனப்பான்மை செயலிலோ, எண்ணங்களிலோ காட்டும் மக்களைக் கொண்ட நாடு உயர்ந்ததாக இருக்க முடியாது.”
ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் பாசிச எதிர்ப்பு
நேருவின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அவர் வாழ்நாள் முழுவதும் மேலோங்கி இருந்தது. 1927ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடை பெற்ற “காலனி ஆதிக்க, ஏகாதிபத்திய எதிர்ப்பு அனைத்துலக மாநாட்டில்” பங்கேற்று, தலைமைக் குழு உறுப்பினராகவும், கவுரவத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது, சர்வதேச அளவில் ஏகாதி பத்தியத்தை எதிர்ப்பதில் அவர் கொண்டிருந்த தீவிரத்தின் அடையாளம். இம் மாநாட்டில் சீனா, இந்தோனேஷியா, சில ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க விடுதலை இயக்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
சோவியத் நாட்டில் நடைமுறையில் இருந்த விவசாயச் சீர்திருத்தம், எழுத்தறிவின்மை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், வர்க்க வேறுபாடுகளைக் களைதல் ஆகியவை நேருவைக் கவர்ந்தன. இந்த உணர்வின் வெளிப்பாடாகவே, உலக நாடு கள் இரு துருவங்களாக இருந்தபோது எந்தப் பக்க மும் சாயாமல், அணிசேராக் கொள்கைக்குத் தலைமை தாங்கி, பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கினார். இந்தக் கொள்கை 1957இல் ஐக்கிய நாடுகள் சபை யில் சர்வதேச பிரகடனமாக மாறியது.
பாசிச சக்திகளுக்கு அவர் எந்தவித ஆதரவை யும் வழங்கவில்லை. விடுதலைப் போராட்டத்தில் நாஜி ஹிட்லருடன் இணைந்து பிரிட்டிஷை எதிர்க்க நேதாஜி ராணுவத்தை அமைத்த போதும், ஹிட்லரை ஏற்க முடியாது என்று வெளிப்படையாக அறிவித்தார். மேலும், இத்தாலிய முசோலினி சந்திக்கத் தூது அனுப்பியபோது, சந்திக்க மறுத்தார். அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்துச் செல்வதே தனது கோட்பாடு என்று அறிவித்தவர் நேரு. பாலஸ்தீன விடுதலை இயக்கம் முதல் வியட்நாம், கொரியா, கியூபா வரையிலான அனைத்து நாடுகளின் விடு தலைப் போராட்டங்களையும் ஆதரித்ததன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சிற்பி யாகத் திகழ்ந்தார்.
மதச்சார்பற்ற கோட்பாட்டின் நாயகன்
இந்திய அரசு மதச்சார்பற்ற அரசாக இருப்பதே நாட்டின் வலிமை என்பதை நேரு ஆழமாக உணர்ந்தி ருந்தார். மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்திற்கு வருவதற்கு முன்னதாகவே இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்கு அவர் பணியாற்றினார்.
இந்துத்துவா கும்பல், மதச்சார்பின்மைக் கருத்தை மேலைநாட்டிலிருந்து இறக்குமதி செய்த தாக அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடினார். இந்திய ஒற்றுமை என்பது வெளியில் இருந்து திணிக்கப்பட்டதல்ல என்றும், “வேற்றுமை யில் ஒற்றுமையை” உருவாக்குவது இந்தியப் போராட்ட வரலாற்றின் சாரம் என்றும் அவர் வலி யுறுத்தினார்.
l மதச்சார்பற்ற அரசியலுக்காக, கருத்து வேறுபாடு இருந்தபோதும், ராஜாஜியை முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்கச் சம்மதிக்க வைத்தார்.
l 1946இல் இடைக்கால அரசு அமைத்தபோது, முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த லியாகத் அலிகானை நிதியமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தார்.
l மதச்சார்பற்ற அரசின் தலைவர் என்ற கோட்பாட் டில் உறுதியாக இருந்ததால், பிரதமராக இருக்கும் போது வாரணாசி கோவிலுக்கு வருமாறு வந்த அழைப்பை மறுத்தார்.
கடவுள் மறுப்பாளராகவும், மூடநம்பிக்கை எதிர்ப் பாளராகவும் இருந்த நேரு, பத்தாம் பசலித்தனத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. இந்துமதப் பழமை வாதிகளான சில காங்கிரஸ் தலைவர்களுடனும், முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிர சாத்துடனும் கூடப் பல சமயங்களில் முரண்பட்டார். இவர் மதச்சார்பற்ற கோட்பாட்டை உயர்த்திப் பிடித்த முன்னுதாரணமான தலைவர்.
அறிவியல் மனப்பான்மையின் வளர்ச்சி
நேருவின் அசைக்க முடியாத நம்பிக்கை, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது அறிவியல்ப்பூர்வ மான முன்னேற்றமே என்பதுதான். 1937இல் தேசிய அறிவியல் கழகத்தைத் தொடங்கி வைத்துப் பேசும் போது, “நம் தேசத்தின் அனைத்து வகைச் சிக்கல்க ளில் இருந்தும், நம்மை மீட்க வல்ல ஒரே பாதை அறி வியல் பாதை தான்” என்று திட்டவட்டமாக அறிவித்தார். பகுத்தறிவு, சுய சிந்தை என்பதே அவரது வாழ்க்கை அணுகுமுறை.
l விடுதலைக்கு முன்பே 1939இல் தேசிய திட்டக் குழுவை ஏற்படுத்தி, அறிவியல் தொழில்நுட்ப அறி ஞர்களை நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல ஆலோசனைகள் வழங்குமாறு கூறினார்.
l இரண்டாம் உலகப் போரினால் ஆய்வுகளைத் தொடர முடியாத ஹோமி ஜஹாங்கீர் பாபா, விக்ரம் சாராபாய் உட்படப் பல அறிவியல் அறிஞர்களை இந்தியாவிலேயே இருந்து ஆய்வுகளைத் தொடர வேண்டுகோள் விடுத்து, உதவியும் செய்தார். இந்தியாவில் இன்று அணுவியல் மற்றும் விண்வெளி ஆய்வுகள் வெற்றிகரமாக நடப்பதற்கு நேருவின் பணியே வித்திட்டது.
l அவர் அமைத்த இந்தியத் தொழில்நுட்பக் கழகங்க ளும் (IITs), ஐந்தாண்டுத் திட்டங்களும், பொதுத் துறை நிறுவனங்களும் நாட்டிற்கு வளர்ச்சிப் பாதை யை அமைத்துக் கொடுத்ததை மறுக்க முடியாது.
குழந்தைகள் மற்றும் மனிதநேயம்
மனிதநேயம், பரஸ்பர சகோதரத்துவம், பெண் விடு தலை, கல்வியறிவு இவை அறிவியல் வளர்ச்சியின் அடையாளங்கள் என்பதில் நேரு உறுதியாக இருந்தார். “ஒரு நாட்டின் எதிர்காலம் குழந்தைக ளின் கையில்” என்பதில் உறுதியாக இருந்த அவர், இந்தியக் குழந்தைகள் திரைப்படக் கழகம், குழந்தை கள் புத்தக வெளியீடு போன்ற நிறுவனங்களை உரு வாக்கினார். நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் குழந்தைகளுக்கான தனிப் பிரிவுக்கு உத்தரவிட்டார். அவர் பிறந்தநாள் ‘குழந்தைகள் தினமாகக்’ கொண்டாடப்படுவது பொருத்தமானது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1947இல் நேருவைப் பாராட்டி, “கொத்தடிமைத் தனத்திலிருந்து லட்சக்க ணக்கான இந்தியக் குழந்தைகளை மீட்டவராகவும், தீண்டாமை ஒரு குற்றச் செயல் என்று சட்டம் இயற்றி யதற்காகவும், அறிவியல் மனப்பான்மையோடு வாழ்க்கையை அணுகுகின்ற மனிதர்களை உரு வாக்கும் ஒரு கல்வி முறையை முன்மொழிந்ததற்கா கவும்... உங்களைப் பார்த்து வியந்து நெகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
தற்போதைய பாசிச ஆட்சியாளர்களுக்கு, நேரு வின் பெயரைக் கேட்டாலே எரிச்சல்-பயம் ஏற்பட அவரது இந்தக் கொள்கைகளே காரணம். புதுச்சேரி ‘தியாகச் சுவரில்’ அவர் பெயர் தவிர்க்க முடியாமல் பொறிக்கப்பட்டிருந்தாலும், அலகாபாத்தில் அவரது சிலையை எடுப்பதற்கு முயற்சி நடந்தது. தில்லியில் உள்ள தீன்மூர்த்தி பவனத்தை பிரதமர் இல்ல மாக மாற்றி தன்னளவில் மகிழ்ந்து கொண்டிருக்கிறது காவிக் கூட்டம்.
