articles

img

கிரீன்லாந்து ஒரு பரிசுப் பொருளல்ல! ஏகாதிபத்தியப் பசிக்கு இரையாகும் ‘கலாலிட் நுனாட்’

கிரீன்லாந்து ஒரு பரிசுப் பொருளல்ல!  ஏகாதிபத்தியப் பசிக்கு இரையாகும் ‘கலாலிட் நுனாட்’ 

ஒவ்வொரு சில ஆண்டு களுக்கும் ஒருமுறை, உலக ஏகாதிபத்தியத்தின் மைய மான அமெரிக்கா தனது ‘நாகரிகத்தை’ மறந்துவிடுகிறது. ஈரான் அல்லது வெனிசுலா போன்ற நாடுகளிடம் அமெரிக்கா முரட்டுத் தனமாக நடப்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால், இப்போது அது டென்மார்க் போன்ற நாடுகளிட மும் அதே முரட்டுத்தனத்தைக் காட்டத் தொடங்கி யுள்ளது. 1939-ல் ஹிட்லர் போலந்துக்கு எதிராக திரும்பிய பிறகு, வடக்கு அட்லாண்டிக் பிராந்தியம் இத்தகைய கசப்பான சூழலைச் சந்தித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அமெரிக்கா விற்கு டென்மார்க் மீது ஆசை இல்லை; அதன் பார்வை முழுவதும் கிரீன்லாந்தின் மீதுதான் விழுந்துள்ளது.  ஒரு காலனியின் கதை  305 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1721-ல்  டென்மார்க் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கத் தொடங்கி யது. 1953-ல் அது டென்மார்க்கின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டதாகவும், 2009-ல் அதற்குத் தன்னாட்சி அதிகாரம்

வழங்கப்பட்டதாகவும் சட்ட வல்லு நர்கள் கூறலாம். ஆனால் யதார்த்தத்தில் கிரீன்லாந்து இன்றும் ஒரு காலனியாகவே நீடிக்கிறது.  பரப்பளவில் கிரீன்லாந்து (20 லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் மேல்) டென்மார்க்கை விட 50 மடங்கு பெரியது. இது ஒரு தனி நாடாக இருந்தால், உலகின் 12-வது பெரிய நாடாக இருக்கும். ஆனால்,  அங்குள்ள மக்கள் தொகையோ வெறும் 57,700 மட்டுமே. அமெரிக்காவின் கற்பனையில் கிரீன்லாந்து  என்பது மக்களின் தாயகம் அல்ல; அது ஒரு வரை படத்தில் உள்ள புள்ளி அல்லது ரேடார் திரையில் தெரியும் ஒரு இடம் மட்டுமே. அமெரிக்கா இதனை தனக்கான ஒரு ‘பரிசுப் பொருளாகவே’ பார்க்கிறது.  கலாலிட் மக்களின் நிலம்  கிரீன்லாந்து பழங்குடி இனத்தவரான இன்யூட் (Inuit) மக்கள், தங்கள் நாட்டை ‘கலாலிட் நுனாட்’ (Kalaallit Nunaat) என்று அழைக்கிறார்கள்.

இதன் பொருள் ‘கலாலிட் மக்களின் நிலம்’. டொனால்டு டிரம்ப் போன்ற தலைவர்கள் கிரீன்லாந்தைப் பற்றிப் பேசும்போது, அங்கு வாழும் மக்களைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. மாறாக, அதன் ராணுவ முக்கியத்துவம் குறித்தும், அங்கு சீனா மற்றும் ரஷ்யாவின் ஊடுருவல்  இருப்பதாகவும் மட்டுமே பேசுகிறார்கள். பல தலைமுறை டென்மார்க் பிரத மர்களும் சரி, அமெரிக்கத் தலைவர்களும் சரி, கலாலிட் மக்களை அரசியல் உரிமையுள்ள மனிதர்களாக மதிப்பதில்லை.  தாது வளங்களும்  ராணுவத் தளங்களும்  1794-ல் அலுமினியத் தயாரிப்பிற்குத் தேவை யான ‘கிரையோலைட்’ (Cryolite) தாது அங்கு கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்தே கிரீன்லாந்தின் மீதான டென்மார்க்கின் சுரண்டல் தொடங்கியது. 1956-ல்  யுரேனியம் மற்றும் அரிய வகை தாதுக்கள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு இது இன்னும் தீவிரமானது. 1941-ல் அமெரிக்கா அங்கு தனது ராணுவத் தளங் களை அமைக்க டென்மார்க் அனுமதி அளித்தது. 1951-ல் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி ‘துலே’ (Thule) விமானத் தளம் (தற்போது பிட்டுஃபிக் விண்வெளி ஏவுதளம்) கட்டப்பட்டது.  இந்தத் தளம் சோவியத் யூனியனைக் கண் காணிக்கவும், ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க வும் அமெரிக்காவிற்குப் பெரிதும் உதவியது. இன்று, கிரீன்லாந்தின் யுரேனியம் மற்றும் அரிய வகை தாதுக்கள் உலக நாடுகளுக்கு இடையிலான கனிமப் போரில் மையப்புள்ளியாக மாறியுள்ளன. காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுவது, அங்குள்ள தாதுக்களைச் சுரண்டுவதற்கு ஏகாதிபத்திய நாடுகளுக்கு இன்னும் எளிதாகிவிட்டது. கனடாவின் ஆர்க்டிக் கனவு 2026 ஜனவரியில் கனடா வெளியிட்ட ‘

ஆர்க்டிக் வெளியுறவுக் கொள்கை’ அறிக்கையில், ஆர்க்டிக் பிராந்தியத்தில் தனது இறையாண்மையை நிலை நாட்டப்போவதாகக் கூறியுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண அறிக்கை போலத் தெரிந்தாலும், உண்மையில் கனடாவின் சுரங்க நிறுவனங்கள் ஆர்க்டிக் பிராந்தியத்தின் கனிம வளங் களைக் கொள்ளையடிக்கத் துடிக்கின்றன. உலகின் மிகப்பெரிய சுரங்க நிதி மையமான கனடா, கிரீன் லாந்தின் தங்கம் மற்றும் இதர வளங்கள் மீது  கண் வைத்துள்ளது. இது ஆர்க்டிக் கடல் வழித் தடத்தைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான மோதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆர்க்டிக் கவுன்சில் மற்றும் நேட்டோவின் தலையீடு ஆர்க்டிக் பிராந்தியத்தில் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ரஷ்யா, சுவீடன், கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகள் ‘ஆர்க்டிக் கவுன்சில்’ என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வந்தன. ஆனால், 2022-ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, இந்த அமைப்பு செயலிழந்துவிட்டது. ஆர்க்டிக் கடற்கரையின் பாதியைத் தன்னகத்தே கொண்டுள்ள ரஷ்யாவை ஒதுக்கிவிட்டு எத்தகைய முடிவையும் எடுக்க முடியாது. இதே நேரத்தில், நேட்டோ (NATO)

அமைப்பு தனது பார்வையை ஆர்க்டிக் மீது திருப்பியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யாவை முதன்மை அச்சுறுத்தலாக நேட்டோ சித்தரிக்கிறது. உண்மையில், சீனாவிற்கு ஆர்க்டிக் பிராந்தியத்தில் ராணுவத் தளங்கள் ஏது மில்லை. ஆனால், சீனா அங்கு ‘பட்டுப்பாதை’ (Silk Road) என்ற வர்த்தக வழித்தடத்தை உருவாக்க விரும்புவதை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சீன முதலீடும் அமெரிக்க அச்சமும் 2026 ஜனவரி 9 அன்று டிரம்ப் பேசும்போது, சீனா  அல்லது ரஷ்யா கிரீன்லாந்தில் கால் பதிப்பதை தான் விரும்பவில்லை என்று கூறினார். சீன நிறுவனங்கள் கிரீன்லாந்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளன. கிரீன்லாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீடு ஆண்டுக்கு வெறும் 34.9 மில்லியன் டாலர் மட்டுமே. அமெரிக்காவின் முதலீடு 130.1 மில்லியன் டாலர் மற்றும் கனடாவின் முதலீடு 549.3 மில்லியன் டாலராக உள்ளது. ஆனால், சீனாவோ 1.162 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இந்த மிகப்பெரிய பொருளா தார முதலீடு கிரீன்லாந்தின் எதிர்காலத்தை மாற்றிவிடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. ஆனால், கிரீன்லாந்து யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

சுரண்டப்படும் தெற்குலகின் கதை கிரீன்லாந்தின் கதை தெற்குலக நாடுகளுக்குப் புதியதல்ல. முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது, பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத் தளங்களை அமைப்பது, அந்த  நிலத்தின் பூர்வகுடி மக்களைப் பட்டினியில் ஆழ்த்து வது என ஏகாதிபத்தியத்தின் அதே பழைய கதைதான் இங்கும் நடக்கிறது. நிலம் என்பது யாருடைய உடைமை யும் அல்ல; அது மக்களின் சுதந்திரமானவாழ்விடம். கலாலிட் கவிஞரும், இன்யூட் இன மக்களின் உரிமைப் போராளியுமான அக்காலுக் லிங்கே (Aqqaluk Lynge) தனது

‘மதிப்புமிக்க வாழ்க்கை’ (A Life of Respect) என்ற கவிதையில் இவ்வாறு கேட்கிறார்: “நாட்டின் வரைபடங்களில், நாங்கள் இங்கே இருந்தோம் என்பதைச் சொல்ல, நீங்கள் புள்ளிகளையும் கோடுகளையும் வரைகிறீர்கள் நாங்கள் இங்கேதான் இருக்கிறோம், நரிகள் ஓடும் இடத்திலும், பறவைகள் கூடுகட்டும் இடத்திலும், மீன்கள் முட்டையிடும் இடத்திலும் நாங்கள் இருக்கிறோம். அனைத்தையும் நீங்கள் சுற்றி வளைக்கிறீர்கள், நாங்கள் இருப்பதை நாங்கள் நிரூபிக்க வேண்டும் என்கிறீர்கள். எங்களுடைய முன்னோர்களின் நிலத்தைப் பயன்படுத்த, எங்களுக்கு உரிமை உண்டு என்பதைச் சொல்லச் சொல்கிறீர்கள். இப்போது நாங்கள் கேட்கிறோம்: இங்கே இருப்பதற்கு ‘உங்களுக்கு’ என்ன உரிமை இருக்கிறது?” கிரீன்லாந்து விற்கப்பட வேண்டிய ஒன்றல்ல; அது ஒரு சமூகம், நினைவுகள் மற்றும் அபிலாஷைகள் கொண்ட மக்களின் தாயகம். ஏகாதிபத்திய நாடுகளின் இந்த மேலாதிக்கப் பசிக்கு எதிராகக் குரல் கொடுப்பது சர்வதேச சமூகத்தின் கடமையாகும். தோழர் குவாமே நக்ருமா கூறியது போல: “எப்போதும் முன்னோக்கி, எப்போதும் பின்வாங்காதே!” தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.