10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு: இன்று தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண் டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 11 முதல் தொடங்கவுள்ள நிலையில், 10 ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் 28 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் இரு வேளைகளில் தேர்வு நடைபெறும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் விரும்பி னால் தலைமையாசிரியரிடம் கடிதம் அளித்து தேர்வில் இருந்து விலக்கு பெறலாம். தேர்வு முடிந்த பின் மதிப்பெண் பட்டியல்களை மார்ச் 2-க்குள் சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.