articles

img

நகரங்களும் நரகக் குழி உயிர்ப் பலிகளும் - மாறன்

நகரங்களும் நரகக் குழி உயிர்ப் பலிகளும்

“இறந்து 26 மணி நேரம் ஆகிவிட்டது. அவர்களை மரி யாதையுடன் அடக்கம் செய்ய கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்கள்” என அரசு அதிகாரி கூட்டத்தினரிடம் கெஞ்சி நின்றார். ஆனால் கூட்டத்தி லிருந்து எழுந்த கேள்வி அதிகாரி களின் கல்நெஞ்சத்தைக் கிழித் தெறிந்தது: “உயிரோடிருக்கும்போது அவர்களை சாக்கடை நரகத்துக்குள் தள்ளி அவமானப்படுத்தி கொலை செய்த பிறகு, இப்போது செத்த மனி தனுக்கு என்ன மரியாதை செய்யப் போகிறீர்கள்?” அரசின் அலட்சியமே கொலையாளி திருச்சி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை பராமரிப்புப் பணியை சென்னை சுப்பையா கட்டுமான நிறு வனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. கடந்த 22.9.2025 அன்று திருவெறும்பூர் வார்டு 40-ல் புதை வடிகால் (Under ground Drainage) பணியின் போது

, மேலாளர் கந்தசாமி மற்றும் மேற்பார்வையாளர் இளவரசன் ஆகி யோர் பிரபாகரன் (37) என்ற தொழி லாளியை எந்த பாதுகாப்பு உபகரணமுமின்றி மேன்ஹோ லுக்குள் (Manhole) இறக்கிவிட்டனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனத்தில் வேலை பார்த்த பிரபாகரன் வெகு நேரமாகி யும் மேலே வராத நிலையில், மேற்பார்வையாளர் இளவரசன் மற்றொரு தொழிலாளி ரவியை (45) அவசரமாக அழைத்து “உள்ளே சென்ற பிரபாகரன் வரவில்லை, நீ குழிக்குள் இறங்கி அவனை மேலே கொண்டு வா” என கட்டளையிட்டார்.   பொதுமக்கள் “உள்ளே போனவர் வரவில்லை, இவரை ஏன் உள்ளே இறக்க வேண்டும்?” என கேட்ட போதும், மேற்பார்வையாளர் இளவர சன் கேட்காமல் இரண்டாவது உயிரையும் பலிக்கு அனுப்பினார். இருவரும் விஷவாயு தாக்குதலால் மரணம் அடைந்தனர். 2 உயிர்களும்  பறிபோன நிலையில், மேலாளர் கந்தசாமி தலைமறைவானார்.  பொய் வழக்கும் போலீசின்  அரசு விசுவாசமும்  விஷவாயு மரணம் என்ற உண்மை தெரிந்ததும்,

சிபிஎம், சிஐடியு, தீண்டாமை ஒழிப்பு முன் னணி, வாலிபர் சங்கம், மாண வர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மாலை 6 மணியி லிருந்து துவாக்குடி அரசு மருத்து வமனையை முற்றுகையிட்டன.  2013 கைமுறை தூய்மைப் பணியாளர் சட்டத்தின் (Manual Scavenging Act) படி வழக்குப் பதிவு செய்யக் கோரினோம். ஆனால் காவல்துறை ஆய்வாளர் அந்த சட்டத்தையே கேள்விப்பட்டதாக இல்லை. பிறகு பிஎன்எஸ் (BNS) 106(1) - பழைய ஐபிசி (IPC) 304Aயின் படி அலட்சிய மரணம் (Culpable Homicide) என்று மட்டுமே பதிவு செய்தனர். காவல்துறையின் சூழ்ச்சியால் குடும்பத்தினரின் ஒப்புதலின்றி பிரேத பரிசோதனை (Post-mortem) நடத்த முயன்றனர். ஆனால் தோழர்களின் முற்றுகையால், அடுத்த நாள் மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. போராட்டத்தின் வெற்றியும் நியாயமும் ஒப்பந்த நிறுவன முதலாளி வராமல் வக்கீல் படையை அனுப்பி னார். அவர்கள் “தவறி விழுந்து இறந்துவிட்டார் என கையெழுத்து போட்டு கொடுங்கள், பணம் கொடுக் கிறோம்” என லஞ்சம் கொடுக்க முயன்றனர். பெரிய அரசியல்வாதி கள், அரசு அதிகாரிகளின் அனைத்து அழுத்தங்களையும் நிராகரித்து உறுதியுடன் நின்றதால்,

இறுதியாக 2013 கைமுறை தூய்மைப் பணி யாளர் சட்டத்தின் (Manual Scaven ging Act) படி வழக்கு பதிவாகி, விஷ வாயு மரணம் என அறிவிக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி ரூ. 30 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உறுதி யளித்தது.  அறிவியலும் சாதியும் விண்வெளி ஆராய்ச்சி, இஸ்ரோ பற்றி பேசும் நம் நாட்டில், ஏன்   பாதாளச் சாக்கடை சுத்தம் செய்ய  நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப் படவில்லை? நம் பாதைகளில் காணப்படும் வட்டமான மேன்ஹோல் கதவுகள் (Manhole Covers) கூட மனிதன் உள்ளே இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் நவீன  இயந்திரங்கள்  மூலம் மனிதர்கள் உள்ளே இறங்காமல் வெளியி லிருந்தே இப்பணி முடிக்கப்படுகிறது. ஆனால் இங்கே சாதிய கட்ட மைப்பும், மலிவான கூலியும் காரண மாக பெரும்பாலும் தலித்துகளே இம்மரணங்களுக்கு ஆளாகின்றனர். முதலாளிகளின் லாபத்துக்காக மட்டுமே அறிவியல் பயன்படுகிறதே தவிர,

சக மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்க பயன்படுவதில்லை.  தீர்வு என்ன? விஷவாயு மரணங்கள் நடக்கும் போது காண்ட்ராக்ட் முதலாளிகள் தப்பி விடுகின்றனர். இதைத் தடுக்க 2013 கைமுறை தூய்மைப் பணி யாளர் சட்டத்தின் படி வேலை வழங்கும் முதன்மை அலுவலர், மாநகராட்சி ஆணையர், ஒப்பந்த முதலாளி, மேலாளர், மேற்பார்வை யாளர் என வரிசைப்படி அனைவரும் கைது செய்யப்பட்டால் மட்டுமே இக்கொலைகள் நிற்கும்.  தமிழக அரசு தனது தேர்தல் வாக்கு றுதி எண் 281-ன்படி நவீன ரோபோ  இயந்திரங்களைப் (Robotic Machines) பயன்படுத்தி இவ்வேலை யிலிருந்து மனிதர்களை விடுவிக்க வேண்டும். முதலில் மேன்ஹோல் வடிவமைப்பையே மாற்ற வேண்டும். விஷவாயு மரணங்களை மறைக்க பொய் வழக்குகள் போடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.