articles

img

சென்னை மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம் தாராளமயக் கொள்கைக்கும் மனுவாதிகளுக்கும் எதிரானது எஸ். கண்ணன்

சென்னை மாநகராட்சியின் தொழிலா ளர்கள், தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை , உலகம் அறிய எடுத்துச் சென்றுள்ளனர். தாராள மயக் கொள்கையானது,  “அமர்த்து பின் துரத்து”  (Hire and fire) என்ற தன்மையில் வேலைவாய்ப்பை மாற்றி வருகிறது. வேலை நிரந்தரம் என்பதே காலா வதி ஆகி விடுமோ என்ற அச்சம் தொழிலாளர்களை கவ்விப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, பிரதானமாக முன் வைத்து 13 நாட்கள் நடந்த காத்திருப்பு போராட்டம், மிக முக்கிய மான ஒன்றாகும்.  போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலா ளர்கள், எல்.டி.யு.சி தொழிற்சங்கம் இதற்கு ஆதர வாக களமிறங்கிய இடதுசாரிகள், செங்கொடி இயக் கங்கள் அனைத்தும் பாராட்டுக்குரியவர்களாவர்

தனியார்மயமும் – நிரந்தரமின்மையும்

1991க்குப் பின் அமைந்த ஒன்றிய அரசுகள் அனை த்துமே, தொடர்ச்சியாக நவீன தாராளமய பொருளா தாரக் கொள்கையை அமலாக்கி வருகின்றன. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளையும், உழைப்பை விற்றுக் கிடைக்கிற ஊதியத்தில் வாழ்ந்து வரும், விவசாயி, தொழிலாளி போன்ற  மக்கள் மீது கொடும் சுரண்டலையும் அரங்கேற்று கின்றன. அந்த சுரண்டலுக்காக, முன்மாதிரி வேலை அளிப்பவர் என குறிப்பிடப்படுகிற அரசுத்துறை மற்றும் பொதுத்துறைகளை தனியாரிடம் ஒப்ப டைத்து, அவுட் சோர்சிங் என பெயர் வைத்துள்ளன.  காண்ட்ராக்டர்களுக்கு கீழ் வேலை, அனைத்து அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் பொருந்தக் கூடிய (Essential Services and Maintenance Act) துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பது அல்லது காண்ட்ராக்ட் மயமாக்கு வது,  வேலை நேரம் ஒரு நாளில் எட்டு மணி நேரம் என இருப்பதை கூடுதலாக்க முயற்சித்தல், (புலம் பெயர் தொழிலாளர்களை அத்தகைய தன்மையில் சுரண்டி வருவது ஒரு உதாரணம்) - என ஒட்டு மொத்த மாக மூலதனம் பெருகி வேகமாக வளர்வதற்கு உரிய கொள்கையாக இந்த நவீன தாராளமயக் கொள்கை உள்ளது.

 காண்ட்ராக்ட் சட்டமும் –  மார்க்சிஸ்ட் கட்சியும்'

அவுட் சோர்ஸ் (Out Source) என்பதை ஆதாரங்க ளை அல்லது வளங்களை வெளியேற்றுவது என மொழியாக்கம் செய்யலாம். அரசுத் துறைகளின்,  மனித வளம், நிதி வளம் ஆகிய முக்கியமானவற்றை தனியார் சூறையாடுவதற்கு உதவியாக, பிரதான  வாயிலை திறந்து விடும் கொள்கை வழி செயல் பாடாக அவுட் சோர்ஸ் முறை உள்ளது. பாஜக ஆட்சி க்கு வந்த பின், வெளிப்படையாகவே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், “பொதுத் துறை நிறுவனங்கள் ஓரளவு லாபம் ஈட்டுகிறது என்றால், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் தான் காரணம்” எனப் பேசுகின்ற னர். நிரந்தர தொழிலாளர்களுக்கு ஒரு ஊதியமும், காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஒரு ஊதியமும் என ஒரே வேலையை செய்யும் தொழிலாளர்களுக்கு இடையில் பாரபட்சத்தை உருவாக்கி, உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தினர்.  காண்ட்ராக்ட் தொழிலாளர் ஒழுங்கு செய்தல் மற்றும் நிரந்தரப்படுத்தல் சட்டம் 1970, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய நாடாளு மன்ற குழுத் தலைவர், ஏ.கே. கோபாலன் அவர்கள் முயற்சியால் உருவானது. இதன் நோக்கம், காண்ட்ராக்ட் தொழிலாளர்களை வரைமுறைப்படுத்துவது, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நிரந்தரம் செய்வது, மொத்தத்தில் தொழிலாளர் நலனை பாதுகாப்பது என்பதாகும். 20 அல்லது அதற்கு மேல் உள்ள அனைத்து காண்ட்ராக்ட் நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். ஆனால் கணக்கிட முடியாத காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்க ளால் பணியமர்த்தப்படுகின்றனர். அரசுத் துறைகளி லும் இந்த காண்ட்ராக்ட் முறை விரிவாக்கம் செய் யப்பட்டு வருகிறது.  மோடி ஆட்சி முன் மொழிந்துள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் ஒன்றான, தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தொகுப் பானது,  20 தொழிலாளர்கள் இருந்தாலே அமலாக வேண்டிய சட்டத்தை, 50 தொழிலாளர் அல்லது அதற்கு மேல் இருந்தால் அமலாகும் என திருத்தம் செய்துள்ளது. இதன்படி, காண்ட்ராக்ட்தாரர், தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பினை வழங்க வேண்டிய தில்லை. 50 க்கு கீழ் உள்ள காண்ட்ராக்ட் நிறுவனத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை சட்டப்படி கோர முடியாத நெருக்கடியை உருவாக்குகின்றனர்.  தொழிலாளர்களை மோசமான கொடுமைக்கு உள்ளாக்கும் இத்தகைய தொகுப்புச் சட்டங்கள், அமலாகக் கூடாது என்ற முறையில், 2016 செப் டம்பர் 2, 2017 செப்டம்பர் 2, 2019 ஜனவரி 8,9, 2020 ஜனவரி 8, 2020 நவம்பர் 26, 2022 மார்ச் 28, 29, 2024 பிப்ரவரி 16, 2025 ஜூலை 20 ஆகிய தேதிகளில் மோடி ஆட்சியில் மட்டும்  எட்டு முறை வேலை  நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதில் செங்கொடித்  தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல, முதலாளித்துவக் கட்சிகளால் வழி நடத்தப்படுகிற தொழிற்சங்கங்க ளும் பங்கெடுத்துள்ளன. கோடிக்கணக்கிலான தொழிலாளர்களைப் பங்கெடுக்க வைக்கவும் செய்தன. தமிழ்நாட்டில் தொழிலாளர் முன்னேற்ற பேரவை (திமுக) மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி (விசிக) ஆகிய தொழிற்சங்கங்கள் ஆக் கப்பூர்வமான பங்களிப்பைச் செய்தன, என்பதைத் தொழிலாளர்கள் நன்கு அறிவர். விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் இந்த புரிதலில்  இருந்தே, சென்னை மாநகராட்சி தொழிலாளர்க ளின் போராட்டப் பந்தலுக்கு சென்று துவக்கத்தில் ஆதரிக்கவும் செய்தார்.  

செங்கொடி சங்கம்  நீடித்து நடத்தும் போராட்டங்கள்

பாஜகவின் ஆட்சி மோடி தலைமையில் 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து, முதலாளிக ளுக்கான சலுகைகள் அதிகரித்து வருகின்றன. தனியார் மற்றும் காண்ட்ராக்ட்மயமும் அதிகரித்து வருகிறது.  பொதுவாக காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான போராட்டங்களை, சிஐடியு தலைமையில் செயல்படும் செங்கொடித் தொழிலாளர் சங்கம், தொடர் போராட்டங்களை முன் னெடுத்து பணி நிரந்தரம் பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக 2007ஆம் ஆண்டில் 1600 தொழிலா ளர்களும், 2011 முதல் 2016 காலத்தில், 2100 தொழி லாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஆணையை போராடிப் பெற முடிந்தது. அன்றைய நாட்களில் சிஐடியு நடத்திய போராட்டங்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. கைது, சஸ்பெண்ட் போன்ற பழி வாங்கும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட போதிலும், உறுதியாக நின்று சாதிக்க முடிந்தது. பல போராட்ட வடிவங்களில், 54 மணி நேரம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற காத்திருக்கும் போராட்டம் மிக முக்கியமானது. இந்தப் போராட்டங்களை அதிமுக ஆட்சியின் போதும், திமுக ஆட்சியின் போதும் செங்கொடி சங்கம் நடத்தியது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காத்திருப்புப் போராட் டத்தின் போது சுவர்ண ஜெயந்தி ரோஜ்கார் யோஜனா என்ற பெயரில், சுய வேலைவாய்ப்பு திட்டம் அடிப்ப டையில், தூய்மைப் பணியாளர் வேலை வாங்கப்ப டுவர்; மற்ற நியாயங்களை நீதிமன்ற வழிகாட்டுதலில் அமலாக்குவது என தற்காலிகமாக முடித்து வைத்தனர். தனியார் காண்ட்ராக்டர் ஒரு பகுதி பணத்தை எடுத்துக் கொள்வதற்கு பதில், தொழி லாளி காண்ட்ராக்ட் என்றாலும், முழு சம்பள தொகை யும் தொழிலாளிக்கு கிடைக்கும் என்ற முறையை, சிஐடியுவின் தொடர் போராட்டங்கள் காரணமாக அன்றைய அதிமுக ஆட்சி அமலாக்கியது. இப் போது சென்னை உயர்நீதிமன்றம் உழைப்போர் உரிமைப் போர் இயக்கம் தொடர்ந்த வழக்கிலும், சம்பளத்தை குறைக்கக் கூடாது என்பதை இந்த அடிப்படையில் தான் சுட்டிக் காட்டி உள்ளது.

தாராளமயக் கொள்கைகளுக்கு இரையாகக் கூடாது

ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து விலகாமல், மாநில மக்களுக்கு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக அமலாக்க முடியாது என்பதை திமுக உணர வேண்டும். அதிமுக ஒரு போதும் பொருளாதாரக் கொள்கை கள் குறித்து விவாதிப்பதில்லை. NULM (National Urban LivelyHood Mission) என்ற பெயரில் பாஜக ஆட்சி, (அதன் மறைந்த தலைவர் பெயரில் - தீன்தயாள் உபாத்யாய திட்டம்) மூலம் நகராட்சி நிர்வாகச் செயல்பாடுகளை தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கையை முன் வைத்தது. ஏற்கனவே தூய்மைப் பணியில் மனிதர்கள் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இன்றி வேலை வாங்கப்படும் நிலையில், தனியாரிடம் ஒப்ப டைப்பது, வேலை நிலையை மிகக் கொடியதாக, அநாகரீகமானதாக மாற்றக் கூடியதாக இருக்கும். வேலைத் தன்மையை நவீனப்படுத்துவதே, சமூக நீதிக் கோட்பாடாக இருக்கும். ஆனால் இதைக் கருத்தில் கொள்ளாமல் தூய்மைப் பணிகளை தனி யார் வசம் ஒப்படைக்கவும், ஆட்குறைப்பு செய்யும் நோக்கத்திலும், அரசாணை எண் 152, 139, 116 ஆகியவை 2022ஆம் ஆண்டில் திமுக ஆட்சியினால் முன் வைக்கப்பட்டது. தூய்மைப் பணியில் நிரந்தர தொழிலாளர்கள் என்ற தன்மையை ஒழிப்பதாக இதன் சரத்துகள் உள்ளன. தொழிலாளர்கள் மத்தி யில் மிக கடுமையான அதிருப்தி உருவாக இந்த அரசாணைகள் வழிவகுத்தன.

தூய்மைப் பணிக்கு நிரந்தரத் தொழிலாளி அவசியமா?

இந்நிலையில் தான், போராடும் தொழிலாளர்க ளை - நீதிமன்ற வழிகாட்டுதல் என்ற பெயரில் அப்பு றப்படுத்த மாநில அரசு மற்றும் காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கை, கடுமையான விமர்ச னங்களை சந்தித்துள்ளது.  துவக்கத்தில் போராட் டத்தை களத்திற்கு நேரடியாக சென்று ஆதரித்த திருமாவளவன் அவர்கள், “தூய்மைப் பணியை ஒரு குறிப்பிட்ட சாதியினரே செய்ய வேண்டுமா? இந்த தொழிலில் நிரந்தரம் தேவையில்லை” என்றார். இவரைத் தொடர்ந்து அதியமான் அவர்களும் குறிப்பிட்டார்.  தொழிலாளர்கள் போராடியது, நிரந்தர வருமா னம் சார்ந்தது. தங்களது வேலைக்கு சமூகப் பாது காப்பு வேண்டும் என்பது. காண்ட்ராக்ட் முறை பந்தாடும்; குறைவான கூலியைத் தரும், போராடு வதற்கு இருந்த உரிமைகள் பறிபோகும். காண்ட் ராக்ட் எடுப்போர், கார்ப்பரேட் நிறுவனங்களாக இருக்கின்றனர். நிரந்தர வருமானம் அற்ற வேலை யைக் கொண்டு எப்படி, சாதிய இழிவுக்கு எதிரான போராட்டங்களை நடத்த முடியும் என்பது மேற்கண்ட தலைவர்கள் அறியாததல்ல. தூய்மைப் பணியாளர்கள் குறித்து உச்ச நீதி மன்றம் பல வழக்குகளை சந்தித்துள்ளது. கையி னால் மனிதக் கழிவுகள் அகற்றுதல் உள்ளிட்ட கையி னால் செய்யும் தூய்மைப் பணிகள் ஒழிக்கப்பட வேண்டும் என 2013இல் உச்ச நீதிமன்றம் வழி காட்டி யுள்ளது. குடிமக்களுக்கான நீதி மற்றும் அமைதி என்ற வழிகாட்டுதலில், உடனடியாக ஆய்வு மேற் கொண்டு, கையினால் கழிவுகள் அகற்றும் வேலையை முடிவுக்கு கொண்டுவர அனைத்து பெருநகர நிர்வாகங்களும் செயல்பட வேண்டும் என, நீதிமன்றம் கூறியுள்ளது. இப்பணிகளின் போது இறக்கும் தொழிலாளருக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகள் குறித்தும் வழிகாட்டியுள்ளது. 2025 ஜனவரியில் இதற்கான விதிமுறைகள் குறித்து விவாதிக்கும் போதும், தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய மாநகராட்சி நிர்வாக ஆணையர்கள், கையினால் கழிவுகள் அகற்றும் பணியைத் தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவை அம லாக்கிட, செங்கொடி இயக்கங்கள் மற்றும் சமூக விடுதலைக்கான இயக்கங்கள் கூட்டாகப் போராட வேண்டி உள்ளது. மனுவாதிகள் வேலை அடிப்படை யிலும், தீட்டு மற்றும் புனிதம் என்ற கற்பிதங்களை முன் வைத்தனர். இந்த கற்பிதம் சமுதாய ரீதியில் உழைப்புச் சுரண்டலையும், கூலியில்லாத உழைப் பைப் பெறுவதற்கும் வழிவகை செய்கிறது. இன் றைய நவீன தாராளமய கொள்கையும், மனுவின் புதிய வடிவமாக உள்ளது. சமுதாய அடுக்குமுறை யை, புதிய தொழில் அடுக்குமுறையாக கட்டமைக்கி றது. அதில் காண்ட்ராக்ட்மயம் என்பது அடி அடுக்காக உள்ளது. உழைப்பும் சுரண்டப்பட்டு, நிரந்தரமில்லாத காரணத்தால் வருமானத்தையும் நிலையற்றதாக வைத்துள்ளது. தீட்டு மற்றும் தலை விதி எப்படி போராட்டங்களை கட்டுப்படுத்த பயன் பட்டதோ, அதேபோல் நிரந்தரமற்ற வருமானம், காண்ட்ராக்ட் வடிவம் போராடும் வேகத்தை மட்டுப் படுத்துகிறது. அதுமட்டுமல்ல, நிரந்தரத் தொழிலா ளர்களிடம் இருந்து பிரித்து வைக்க பயன்படுகி றது. வேலைத் தளத்தில் பிரிவினையை உருவாக்கு கிறது. எனவே உழைப்புச் சுரண்டலுக்கு சமுதாய கட்ட மைப்பும், வேலை அடுக்குமுறைகளும் காரணங்க ளாக உள்ளன. இதை முழுமையாக மாற்றி அமைப்பதே சமூகநீதியாகும். அதற்கான போராட் டங்களே இன்றைய தேவை. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நடத்திய போராட்டம், சமூக நீதி போராட்டப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியே ஆகும். எனவே சமுதாயச் சுரண்டலில் இருந்தும், உழைப்புச் சுரண்டலில் இருந்தும் விடுதலை பெறும் போராட் டத்தை தீவிரமடையச் செய்வோம்!

உழைப்புச் சுரண்டலுக்கு சமுதாய கட்டமைப்பும், வேலை அடுக்குமுறைகளும் காரணங்களாக உள்ளன. இதை முழுமையாக மாற்றி அமைப்பதே சமூகநீதியாகும். அதற்கான போராட்டங்களே இன்றைய தேவை. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நடத்திய போராட்டம், சமூக நீதி போராட்டப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியே ஆகும்.