articles

img

மோடி ஆட்சியின் கேள்விக்குறியான பாதுகாப்பு நாடாளுமன்றத்துக்குள் ஏறிக் குதித்த இளைஞர்

மோடி ஆட்சியின் கேள்விக்குறியான பாதுகாப்பு

நாடாளுமன்றத்துக்குள் ஏறிக் குதித்த இளைஞர்

புதுதில்லி, ஆக. 22 - புதுதில்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடமானது, ராணுவம் மற்றும் துணை ராணு வத்தினரின் பாதுகாப்பு வளை யத்திற்குள் உள்ளது. 24 மணி நேரமும் அங்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அத்தனை பாது காப்பு வளையங்களையும் மீறி, வெள்ளிக்கிழமையன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் நாடாளுமன்ற வளா கத்துக்குள் ஏறிக் குதித்து, நாடாளு மன்ற காம்பவுண்ட் சுவரை  தீவிரமாக அளவெடுத்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாமதமாகவே, சிசிடிவி-யில் இதனை கவனித்த பாதுகாப்புப் படை யினர், உடனடியாக அங்கு விரைந்து அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்த னர். பின்னர், அவரை தில்லி போலீசாரி டம் பாதுகாப்புப் படையினர் ஒப்ப டைத்தனர். அவரிடம் தற்போது உளவுத்துறை அதிகாரிகளும், தில்லி சிறப்புப் பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.  பிடிபட்ட நபர், நாடாளுமன்றத்து க்கு வெளியே உள்ள மரத்தின் மீது  ஏறி, அதன் கிளைகளை பற்றிச் சென்று நாடாளுமன்ற வளாகத்துக்குள் குதித்திருப்பது தெரிய வந்தது. ஏற்கெனவே, 2023 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற மக்கள வைக்குள் நுழைந்த இரண்டு பேர்,  அங்கு மஞ்சள் நிறப் புகைக் குப்பி களை வீசிய சம்பவம் நாடு முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு, 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற வளா கத்தில் புகுந்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கர வாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். நாடாளுமன்ற பாதுகாப்பை கேள்வி க்குள்ளாக்கிய இந்த மூன்று சம்பவங்க ளும் பாஜக ஆட்சியில்தான் நடந்துள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.