பாடம் கற்பித்தல்” நீதி அல்ல
சத்தீஸ்கரில் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட தலித் ஒருவர் மரணம டைந்த வழக்கில் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் வெளியிட்ட கருத்து சட்டத்தின் ஆட்சியை நம்பும் எவரையும் பதற வைப்பதாகும். பொது இடத்தில் தவறாக நடந்து கொண்டதற்காக “அவருக்கு பாடம் கற்பிக்கும் நோக்கம்” காவல் துறை அதிகாரிகளுக்கு இருந்ததாகத் தெரிகிறது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.
குற்றச்சாட்டை மாற்றிய உயர்நீதிமன்றம்!
பயன்படுத்தப்பட்ட வார்த்தைச் சொல்லாடல் போன்றே, வழக்கின் உண்மைகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துபவை. பொது இடத்தில் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி ஒரு தலித் கைது செய்யப் பட்டு காவலில் இறந்து போனார். மருத்துவப் பரிசோத னையில் எந்த காயங்களும் இல்லை எனச் சான்று அளிக்கப்பட்டாலும் பிரேத பரிசோதனையில் 26 காயங்கள் இருப்பதாகத் தெரியவந்தது. நான்கு காவல்துறை அதிகாரிகள் மீதும் விசாரணை நீதி மன்றம் கொலை குற்றம் சாட்டியது. தாக்குதல் மர ணத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை அறிந்திருந்தா லும் அதிகாரிகளின் நோக்கம் அதுவல்ல என்பதால் உயர்நீதிமன்றம் அந்த குற்றச்சாட்டை நோக்கமற்ற கொலை குற்றம் (Culpable Homicide) என குறைத்தது.
வன்முறை, தடுப்பு நடவடிக்கை ஆகாது!
விரிவான சட்டக்கருத்தின்படி அமைதியாக தரப்பட்ட இந்த அறிக்கை வெறும் தற்செயலான ஒன்று அல்ல.இது ஒரு ஆழமான சிக்கலான நிறு வனம் சார்ந்த மனநிலையின் பிரதிபலிப்பாகும். அரசு செய்யும் வன்முறை அரசியலமைப்புச் சட்டத்தின் மீறல் அல்ல மாறாக ஒழுக்கத்தை நிலைநாட்ட சகித் துக் கொள்ள வேண்டிய அவசியமான கருவி என நியா யப்படுத்துவதும் இதன் பின்னணியில் உள்ளது.
காவல்துறையின் மிருகத்தனம்
இதற்காக காவல்துறை கையாளும் மிருகத் தனத்தை நீதித்துறை நியாயப்படுத்தக் கூடாது. பாடம் கற்பித்தல் என்பது இந்திய அரசியல் அமைப் பில் அங்கீகாரமாகவோ அல்லது ஒரு கொள்கையா கவோ வரையறுக்கப்படவில்லை. மாறாக இது விழிப் புணர்வு என்ற போர்வையில் வேரூன்றிய ஒரு சொற் றொடர். வன்முறையை அதிக வன்முறையுடன் எதிர்கொள்ளும் ஒரு கட்டமைப்பு. அங்கு சட்டம், பயம் மற்றும் தண்டனை முன்னுரிமை பெறுகிறது. உரிமைகள் மற்றும் நடைமுறைகள் பின்னுக்குச் செல்கின்றன.
காவல்துறையே நீதித்துறையாக மாறும்!
உண்மையான கவலை தண்டனையை குறைப்ப தில் இல்லை. மாறாக என்ன நடந்தது என்பதற்கான கருத்தியல் கட்டமைப்பில் உள்ளது.பாடம் கற்பிக்க அதிகாரிகள் விரும்பினர் என உயர்நீதிமன்றம் கவ னக்குறைவாக கூறுகிறது. காவல் நிலைய சித்ரவ தையை இயல்பாக்கும் தர்க்கத்தை அதன் மூலம் வலுப்படுத்துகிறது.வன்முறையை ஒரு அமைப்பு அழுகிச் சீர்குலைவதன் விளைவாக கருத வேண்டும். மாறாக கூடுதல் அதிகாரத்தை பயன்படுத்தி ஒழுக் கத்தை நிலை நிறுத்துவது வேண்டும் என்பதை நீதி மன்றம் தன் தீர்ப்பில் முன்வைக்கிறது. இது சொல், பொருள் பற்றிய விஷயம் அல்ல.மொழியானது சட்டப் பகுத்தறிவை வடிவமைக்கிறது, சட்டப் பகுத்த றிவு கொள்கையை வடிவமைக்கிறது. ஒரு அரசியல் அமைப்பு நீதிமன்றம், பாடம் கற்பிக்கும் காவல் வன்முறையை நியாயப்படுத்தி டும் வகையில் விளக்கம் அளிக்க துணிந்தால் அதி காரிகளே அமலாக்க அதிகாரியாகவும் நீதிபதியாக வும் செயல்பட உரிமை உண்டு என்ற ஒரு கலாச்சா ரத்தை வலுப்படுத்துகிறது.எதிர்காலத்தில் அத்தகை யவர்களின் செயல்கள் சட்டவிரோதமானவை அல்ல, மாறாக கூடுதல் லட்சியம் நிறைந்ததாக கருதப் படும் அளவுக்குக் கூட மாறலாம்.
சாதி ரீதியில் அமலாகும் வன்முறை
பட்டியல் சாதியைச் சார்ந்த பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இந்த வழக்கில் அழிக்கப்படுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் எஸ்சி/எஸ்டி, 1989 சட்டத்தின் கீழ் பிரதான குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. உயர்நீதிமன்றம் இதை தடுக்கவில்லை. சாதி ரீதியாக வன்முறை தூண்டப் பட்டதற்கான ஆதாரத்தை நீதிமன்றம் கோருகிறது. சாதி அதிகாரம் தான் எங்கும் ஆதிக்கம் செலுத்து கிறது எனும் எதார்த்தத்தை நீதிமன்றம் புறக்க ணித்தது. இந்தியாவின் கிராமம் ஒன்றில் உயர் சாதி அதிகாரிகளால் போலீஸ்காவலில் ஒரு தலித் நபர் அடித்துக் கொல்லப்பட்டது தற்செயலான ஒரு சோகம் அல்ல. இது சாதிக் குறியீட்டு அமலாக் கத்தின் பரந்த வடிவத்தை பிரதிபலிக்கிறது.
நீதித்துறையின் குறுகிய புரிதல்
எஸ்சி எஸ்டி (SC/ST) சட்டத்தை குறித்து இந்தியா வின் நீதித்துறை ஒரு குறுகிய புரிதலில் சிக்கி இருக்கி றது.சாதி தொடர்பாகவே தாக்குதல் நடந்தது என்ப தற்கான வெளிப்படையான ஆதாரம் தேவை என்று வாதிடுகிறது.ஆனால் சாதிக் கட்டமைப்பின் சக்தியே பெரும்பாலும் வன்முறையை தூண்டுகிறது என் பதை ஏற்க மறுக்கிறது. இந்த ஆதாரங்களை அது கேட்பதை நிறுத்தும் வரை சட்டத்தை கையாள வடிவமைக்கப்பட்ட பெரும்பாலான வழக்குகள் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு எந்த ஒரு நீதியும் கிடைக்கப் போவதில்லை.
அதிகரிக்கும் லாக்கப் மரணங்கள்
இந்தியாவில் காவல் நிலைய வன்முறை தொடர்கி றது என்பதை பல வழக்குகள் நிரூபிக்கின்றன. ஸ்ரீ.டி.கே.வாசு, அசோக், கே.ஜோகிரி எதிர் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேச அரசுகள் முதல் முன்சே சிங் கௌதம் டி மற்றும் பிறர் எதிர் மத்தியப் பிரதேச மாநில அரசு வரை பல வழக்குகளில் தடுப்புக் காவ லின் வெளிப்படையற்ற தன்மை மற்றும் காவல்துறை யின் வரம்பு மீறல்கள் குறித்து கடும் விமர்சனத்தை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது. இருப்பினும் காவல் மரணங்கள் ஆபத்தான விகிதத்தில் அதி கரித்து வருகிறது. இது தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஏழைகளை அதிகமாக பாதிக்கிறது. துஷ்டி யோகத்தில் வம்படியாக நிறுவனங்கள் ஈடுபடு கின்றன. நீதித்துறையின் வழிகாட்டுதல்கள் அப்பட்ட மாகவே மீறப்படுகின்றன.
நீதித்துறையின் நேர்மை அவசியம்
தனி நபரை பொறுப்பை ஏற்க வைப்பது மட்டு மல்லாமல் வன்முறையில் ஈடுபடும் நிறுவன விதிக ளையும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். பாடம் கற்பிக்க வன்முறை பயன்படுத்தப்பட்டது என அது கூறும் ஒவ்வொரு முறையும் அரசின் மிருகத்தனம் வருந்தக்கூடியது. ஆனால் அது சில நேரங்களில் புரிந்து கொள்ளக்கூடியது என்ற நுட்பமான சக்தி வாய்ந்த கருத்தையும் திணிக்கிறது. சில சூழ்நிலை களில் சிலருக்கு தகுதி இருக்கலாம். ஆனால் பொதுமைப்படுத்த முடியாது. நீதி துறையின் பாதை ஆபத்தாக மாறி உள்ளது. காவல்துறையினர் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவோர் அல்ல. மாறாக சட்டத்திற்கு கட்டுப் பட்ட அரசியல் அமைப்பின் செயல்பாட்டாளர்கள். ஒரு சிறிய குற்றத்திற்காக காவல் நிலைய வன்முறை யை நீதிமன்றம் நியாயப்படுத்துவதை அனு மதிக்க முடியாது. பாடம் கற்பிப்பது நீதி அல்ல. குற்றங்கள் தடுப்பு சட்டப்பூர்வமான தண்டனையிலி ருந்து வரவேண்டும்.நீதிமன்றங்கள் இதை உறு திப்படுத்தவில்லை என்றால் அது நிலை நிறுத்த வேண்டிய அரசியல் அமைப்பை அவர்களே பலவீனப்படுத்துகிறார்கள் என்று தான் அர்த்தம். நீதியின் கட்டமைப்பில் உடனடி மாற்றம் தேவை. சமூக அதிகாரங்கள் தலையிடும் எந்த ஒரு வழக்கிலும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கூறுகள் நீர்த்து போகாததை உறுதிப்படுத்த வேண்டும். தனிநபர் பொறுப்பும் நடைமுறை பாதுகாப்பும் மிகவும் அவசியம்.
மெல்லத் தலை தூக்கும் சர்வாதிகாரம்
சட்டத்திற்குப் புறம்பான உள் உணர்வுகளுக்கு நீதித்துறை தார்மீக அடைக்கலம் அளிக்கக்கூடாது. பொது இடத்தில் தவறான நடத்தைக்கு தனிப்பட்ட தண்டனை தேவை என்ற கருத்து நீதியல்ல.மாறாக மெல்லத் தலை தூக்கும் சர்வாதிகாரமே ஆகும். சமத்துவம், கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சி யில் அமைக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பில் ரத்தக்கறை காயங்களுடன் “புகட்டப்படும் பாடங்க ளை” பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று ஓதும் நீதி அமைப்புக்கு சற்றும் இடமில்லை.