பிரமிக்க வைக்கும் மக்கள் சீனம்: 4 வேலைவாய்ப்பும் சமூகப் பாதுகாப்பும்
தீவிர வறுமையிலிருந்து தனது மக்களை விடுவித்து, சோசலிசத் தின் உயிராற்றலை மக்கள் சீனம் இன்று உலகிற்குப் பறைசாற்றி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, மருத்துவம், பொது சுகாதாரம், விளை யாட்டு, நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தி என அனைத்துத் துறைகளிலும் ஒரு சோசலிச அரசு எத்த கைய உன்னத நிலையை எட்ட முடியும் என்பதற்குச் சீனமே சாட்சி. குறிப்பாக, வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாது காப்பில் சீனம் கடைப்பிடிக்கும் கொள்கை கள், முதலாளித்துவ நாடுகளின் லாப வெறி கொண்ட சுரண்டல் முறைக்குச் சவுக்கடியாக அமைந்துள்ளன.
அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில்! சீனாவில் சில துறைகளில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டாலும், அவை அரசின் கடுமையான கண்காணிப்பிற்கு உட்பட்டே இயங்குகின்றன. வோல்க்ஸ் வேகன், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற அந்நிய நிறுவனங்கள் அங்கு இருந்தா லும், பாதுகாப்பு உற்பத்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி, மின்னணு தொழில்நுட்ப அறிவியல் மற்றும் கனரகக் கட்டுமானம் உள்ளிட்ட தேசத்தின் இறையாண்மை சார்ந்த துறைகளில் தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தேசத்தின் முது கெலும்பாக விளங்கும் இத்துறைகள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசின் நேரடி அதிகாரத்தின் கீழ் உள்ளன. தேவைப்படும் இடங்களில் மட்டும் தனியார் மற்றும் அந்நிய முதலீட்டின் அனு கூலங்களை வரையறைகளுடன் சீனம் பயன்படுத்திக் கொள்கிறது. வேலைவாய்ப்புச் சூழலைப் பொறுத்த வரை, 2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் சராசரியாக 5.2 சதவீதமாக இருந்தது. சீனத்தில் வேலையின்மை விகி தத்தைக் கணக்கிடும் முறை உலகி லேயே மிகவும் வெளிப்படையானது. வேலையில்லாத நபர்களின் எண் ணிக்கை மற்றும் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையைக் கொண்டு இது துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக, 5.0% வேலையின்மை என்பது ஒவ்வொரு 100 நபர்களில் 5 பேர் வேலையில்லாமல் இருப்பதை மிகத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கிறது. இந்தத் தரவுகளின் நம்பகத்தன்மையே சீன இளைஞர்களிடம் ஒரு வலுவான உள வியல் பாதுகாப்பை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா - சீனா: ஒரு சமூக ஒப்பீடு அமெரிக்க உளவியல் சங்கம் (APA) 2025 மே மாதம் நடத்திய ஆய்வில், 54% அமெரிக்கத் தொழிலாளர்களிடம் வேலைப் பாதுகாப்பின்மை என்பது ஒரு முக்கிய மன அழுத்தமாக மாறியுள்ளது அம்பலமாகியுள்ளது. கொள்கை மாற்றங் கள் காரணமாக 39% அமெரிக்கர்கள் அடுத்த ஆண்டே வேலையை இழந்து விடுவோமோ என்று அஞ்சுகின்றனர். ஆனால், சீனத்தில் ‘வேலையின்மை பாதுகாப்பு காப்பீடு’ (Unemployment Security Insurance) எனும் கட்டாய சமூ கப் பாதுகாப்புத் திட்டம் அமலில் உள்ள தால், தொழிலாளர்களுக்கு அத்தகைய அச்சம் இருப்பதில்லை. அங்கு வேலை என்பது வெறும் வருமானத்திற்கான வழிமுறை மட்டுமல்ல, அது ஒரு குடி மகனின் கௌரவம்.
சீன அரசு தனது கொள்கையில், “வேலை என்பது சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதோடு முழுமையான மனித வளர்ச்சியையும் நாகரிகத்தின் முன் னேற்றத்தையும் அளிக்கிறது” என்று பிரகடனப்படுத்தியுள்ளது. அனைத்து குடிமக்களுக்கும் வேலை செய்யும் உரி மையையும் கடமையையும் சோசலிசச் சட்டம் வழங்குகிறது. வேலை செய்யும் உரிமையைப் பாதுகாப்பது என்பது மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதாகும் என்று சீனம் கருதுகிறது. பாகுபாடற்ற பணிச்சூழலும் முன்னுரிமைக் கொள்கைகளும் சீனாவின் தொழிலாளர் சட்டம் மற்றும் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புச் சட்டங்கள், இனம், பாலினம் அல்லது மத நம்பிக்கைகளின் அடிப்படையில் தொழி லாளர்கள் பாகுபாடு காட்டப்படுவதைத் திட்டவட்டமாகத் தடை செய்கின்றன. பெண்களுக்கு அனைத்துப் பதவிகளி லும் சமமான வாய்ப்புகள் மற்றும் ஊதியம் வழங்கப்படுகின்றன. 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் எவரையும் பணிகளில் அமர்த்தக் கூடாது என்ற கடுமையான சட்டம் நிலவுகிறது. சீனாவில் “முன்னுரிமைக் கொள்கை கள்” (Preferential Policies) என்பது இந்தியாவின் “இடஒதுக்கீடு” முறையிலி ருந்து மாறுபட்டது. சீன இனச் சிறு பான்மையினருக்கு வேலைவாய்ப்பில் “போனஸ் புள்ளிகள்” வழங்கப்படு கின்றன. மேலும், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்குச் சீன அரசு வரிச் சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி ஊக்கப்படுத்துகிறது.
2025 ஜூலை முதல் டிசம்பர் வரை செயல் படுத்தப்படும் புதிய திட்டத்தின்படி, வேலையில்லாத இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி, தொழில் வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்சம் மூன்று வேலைப் பரிந்துரைகள் வரை அரசு கட்டாய மாக வழங்குகிறது. சமூகப் பாதுகாப்பு என்னும் இரும்புக்கவசம் சீனாவில் பணிபுரியும் அனைவரும், அவர்கள் தனியார் நிறுவனமாக இருந்தா லும் சரி அல்லது வெளிநாட்டு நிறுவன மாக இருந்தாலும் சரி, கட்டாய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் பங்கேற்க வேண்டும். ஓய்வூதியம், மருத்துவப் பரா மரிப்பு, வேலையின்மைப் பாதுகாப்பு, இயலாமைப் பாதுகாப்பு, மகப் பேறு நலன் ஆகிய ஐந்து அம்சங்கள் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழி யர்களைச் சமூகக் காப்பீட்டுப் பணிய கங்களில் பதிவு செய்யத் தவறினால், கடுமையான அபராதங்களைச் சந்திக்க நேரிடும்.
15-ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2026-30), சீனாவின் சமூகக் காப்பீட்டு முறை அனைத்துக் குடிமக்க ளுக்கும் ஒரு கவசமாக மாறும். 2023-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, ஓய்வூதி யதாரர்களின் சராசரி ஓய்வூதியம் 2012-ஐ விட இருமடங்காக அதிகரித்துள்ளது. 2005 முதல் கடந்த 21 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதி யத் தொகையை அரசு உயர்த்தி வருகிறது. 2025-ஆம் ஆண்டில் 15 கோடி பேருக்கு ஓய்வூதியத் தொகை 2 சத வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது 21-ஆவது வருடாந்திரத் தொடர் உயர்வாகும். “குறைந்த ஓய்வூதியம் உள்ளவர்க ளுக்குப் பெரிய அதிகரிப்புகளை அளிப்ப தன் மூலம் சமூகச் சமநிலையை ஏற் படுத்துகிறோம்” என்று பெய்ஜிங் பல்கலைக் கழக ஆய்வு மையம் கூறுகிறது.
ஓய்வூதிய நிதி மற்றும் சோசலிச அதிகாரம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வலது சாரி நபர், இந்தியாவில் பங்களிப்பு ஓய்வூ தியத் திட்டத்தை எதிர்க்கும் இடதுசாரி கள் சீனாவில் மட்டும் ஏன் அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு நாம் அளித்த பதில் இதுதான்: சீனாவில் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதி என்பது ‘தேசிய சமூகப் பாதுகாப்பு நிதியக் குழுவின்’ (NCSSF) கீழ் உள்ளது. அந்த நிதி, அரசுக்குச் சொந்தமான வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவ னங்களில் முதலீடு செய்யப்பட்டு மீண்டும் நாட்டு முன்னேற்றத்திற்கே பயன்படுத் தப்படுகிறது. அதன் ஒட்டுமொத்தக் கட்டுப் பாடும் அரசாங்கத்திடமே உள்ளது. ஆனால் இந்தியாவில் தொழிலா ளர்களின் ஓய்வூதிய நிதி, அம்பானிக்கும் அதானிக்கும் தாரைவார்க்கப்படுகிறது
. “முதலை வாயில் சென்ற முயலாக” இந்தி யத் தொழிலாளர்களின் எதிர்காலம் சிதைக்கப்படுகிறது. சீனாவில் உள்ள சோசலிசப் பாதுகாப்பு முறையை இந்தியாவிலும் பிரகடனப்படுத்துங்கள், சிவப்புக் கம்பளம் விரித்து அதை நாங்க ளும் வரவேற்போம் என்று நாம் சொன்ன போது, அவர் வாயடைத்துப் போனார். சீன வேலை முகாம்களில் “பாவோசி” வரிசையில் (ஒரு வகை பன் ரொட்டி) நிற்பது இளைஞர்களுக்கு ஒரு பொழுதுபோக் காகவே மாறியுள்ளது. வேதனையாக இருந்த வேலைவாய்ப்புச் சந்தையை, நம்பிக்கையான ஒரு தேடலாக மாற்றி யது சோசலிசத்தின் வெற்றி. சோசலிசமே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான அரண் என்பதை மக்கள் சீனத்தின் ஒவ்வொரு கொள்கையும் உரக்கச் சொல்கிறது.
