articles

img

துயருற்ற மக்களின் ஆக்ரோஷப் பேரணி

துயருற்ற மக்களின் ஆக்ரோஷப் பேரணி

கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து சட்டமன்றங்க ளுக்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொது வாக, இது ஒரு வழக்கமான நடைமுறையாகும். ஆனால், தற்போதைய அசாதாரணச் சூழல் இதை முன் னெப்போதும் இல்லாத ஒன்றாக மாற்றி இருக்கிறது.  முதல் முறையாக... தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் விவாதிக்க விருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

ஒருவேளை, பதவியில் இருக்கும் தலை மைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். அனைவ ருக்கும் சம வாய்ப்பு என்ற அடிப்படைக் கொள்கையின் அடிப்படையில், நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தலை உறுதிசெய்யும் பொறுப்புள்ள ஒரு சுதந்தி ரமான அரசமைப்புச்சட்டத்தின் கீழான அமைப்பின் மீதான நம்பிக்கை சிதைந்துவிட்டதையே இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தன்னிச்சையான,  ஒருதலைப்பட்ச நடவடிக்கை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்,  தேர்தல் முடிவின் உலகளாவிய ஏற்புத்தன்மை மீது ஒரு நிழ லைப் படரச் செய்திருக்கிறது. பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தச் செயல்முறை யிலிருந்தே பதற்றங்கள் உருவாகி வந்தன.

ஆனால் இப்போது, தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்கள் உட்பட மேலும் பன்னிரண்டு மாநிலங்களை உள்ள டக்கிய இந்த விரிவான நடவடிக்கையால், நம்பிக்கைக்  குறைபாடு தீவிரமடைந்துள்ளது. இறுதிப் பட்டியல் களைத் தயாரிப்பதற்கான ஓர் அங்கமாக, குடியுரிமை மற்றும் அதன் நிர்ணயம் குறித்த கேள்வியை இந்தியத் தேர்தல் ஆணையம் புகுத்த முயன்றிருப்பது என்பது, அதன் தன்னிச்சையான நடவடிக்கை மட்டுமல்ல ஒருதலைப்பட்சமான நடவடிக்கையுமாகும்.  நடுநிலையைக் கைவிட்ட ஆணையம் இத்தகைய விளைவானது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பங்கு, பாஜகவின் தூண்டுதலின் பேரில் இல்லாவிட்டாலும், அதற்குச் சாதகமாகவே உள்ளது என்பதை ஓரளவிற்கு உறுதியாக உணர்த்து கிறது. எனவே, ஒன்றிய அரசு மற்றும் அதன் உள்துறை  அமைச்சரின் இந்துத்துவா கொள்கையை எதிரொ லிக்கும் வகையில், ஒரு நடுநிலையான நடுவராகச் செயல்படும் தனது பொறுப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் கைவிட்டுவிட்டது என்று பரவலாகக் கருதப்படுகிறது.

தேர்தல் சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல் அரசமைப்புச்சட்டத்தின் கீழுள்ள ஓர் அமைப்பை இவ்வாறு சீர்குலைப்பதே, இந்தியாவை ஆளும் தற்போதைய கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறிக் கூட்டணியின் நவ-பாசிச அம்சங்களின் மையமா கும். சமீபத்தில், மக்களவை சபாநாயகர் மீதான இதே போன்ற ஒரு பதவி நீக்கத் தீர்மானம் மக்களவையில் விவாதிக்கப்பட்டது. அதன் முடிவு எதுவாக இருந்தா லும், மக்களவையின் தலைவர் மீது ஆழ்ந்த சந்தேகம் நிலவுகிறது என்பதை அது மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியது. இது ‘தேர்தல் சர்வாதிகாரத்தின்’ வளர்ந்து வரும் அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டு கிறது. நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள், சில கடு மையான மக்கள் விரோத, குறிப்பாக தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் மிக அவ சரமாக இயற்றப்பட்டதாலோ அல்லது இயற்றப்பட்டு வருவதாலோ குறிக்கப்பட்டன.

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’  இதழில் வெளியிடப்பட்ட பல்வேறு கட்டுரைகளில் விரி வாகக் கூறப்பட்டுள்ளபடி, இத்தகைய ஒரு வளர்ச்சி  ஆச்சரியமானதல்ல, அதை விரும்பவும் முடியாது. தொ ழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், பல ஆண்டுகளாக நடந்த போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட தொழிற் சங்கமயமாக்கல், பேரம் பேசும் உரிமை, வேலை நேரம்  போன்ற குறிப்பிடத்தக்க உரிமைகளை, பெரும்பா லும் கார்ப்பரேட்டுகளுக்குப் பயனளிக்கும் வகையில் பறிக்கப்பட்டிருக்கின்றன. அதிகரிக்கும் மக்கள் விரோதச் சட்டங்கள் அடுத்ததாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) வடிவில் இருந்த, கிராமப்புற வேலைவாய்ப்பை வலுப்படுத்து வதற்கான தேவை சார்ந்த சட்டப்பூர்வ கட்டமைப்பு கலைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக விபி-ஜி ராம் ஜி (VB-GRAMG) சட்டம் கொண்டுவரப்பட்டதால், ஏழை களுக்கான கிராமப்புற வேலைவாய்ப்பின் தேவை சார்ந்த தன்மைக்கு பதிலாக மோசடியான ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதியில் 40 சதவீதம் பண நெருக்கடி யில் உள்ள மாநில அரசுகளிடமிருந்து வருவதால், இது  நிதிப் பற்றாக்குறை என்ற சவாலை எதிர்கொள்கிறது.

 இவற்றுடன், மின்சார விநியோகம் தனியார்மய மாக்கப்படுவதும், தனிநபர் நுகர்வோர் மற்றும் விவசாயத் துறை ஆகிய நலிவடைந்த பிரிவின ருக்கான மானியங்கள் முற்றிலுமாக நீக்கப்படுவதும் சேர்ந்துள்ளன. ப்ரீ-பெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை அறி முகப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரிவினரிடமிருந்து வருவாயை அதிகரிப்பது உறுதி செய்யப்படுகிறது. இது நுகர்வோர் செலவிடும் தொகையை மேலும் அதிகரிக்கி றது. நாடாளுமன்றத்தில் முழுமையான பரிசீல னைக்கு உட்படுத்தப்படாமல் இயற்றப்பட்ட இது போன்ற அப்பட்டமான மக்கள் விரோதச் சட்டங்க ளின் பட்டியல் நீளமானது.  நாடு கடுமையான பொருளாதார மந்தநிலை மற்றும் சமமற்ற அளவிலான வேலையின்மையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இவை அனைத்தும் நடைபெற்றிருக்கின்றன.

உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்ட இத்த கைய அச்சுறுத்தலை, உழைக்கும் மக்களின் பரந்த பிரி வினரை ஒன்றிணைத்து, அவர்களின் வேதனையை கூட்டாக வெளிப்படுத்துவதன் மூலமே எதிர்கொள்ள முடியும் என்பதை அந்தச் சூழல் மிகத் தெளிவாக உணர்த்தியது.  விவசாயத் துறையையும்  திறந்துவிட்ட மோடி அரசு இத்தகைய பின்னணியில்தான், வட இந்திய மாநிலங்களில் ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ என்னும் பெயரில், மக்களின் ஆக்ரோஷமான பேரணியை  நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. துயருற்ற மற்றும் சீற்றமடைந்த உழைக்கும் மக்க ளின் மாபெரும் திரளாக இந்த யாத்திரை நிறைவடை யவுள்ளது.

ஆயினும், இந்த உள்நாட்டுக் கொள்கை சார்ந்த விவகாரங்களோடு சேர்த்து, இந்திய-அமெ ரிக்க வர்த்தக ஒப்பந்தமானது, மோடி அரசாங் கத்தின் வெளிப்படையான சரணாகதியுடன், இந்தியா  மீது ஏறக்குறைய ஒருதலைப்பட்சமாகத் திணிக்கப் பட்டுள்ளது. மிகத் தெளிவாகச் சொல்வதானால், இந்த  வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு, குறிப்பாக விவசா யத் துறை முதன்முறையாகத் திறந்துவிடப்படுவதன் மூலம், மக்களின் வாழ்வாதாரங்களை மிகக் கடுமை யாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்தத் துரதிர்ஷ்டவசமான நிகழ்வைத் தொ டர்ந்து, ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதைக் கை விட்டு, மிக அதிக விலையுள்ள அமெரிக்க எண்ணெய் யைத் தேர்ந்தெடுக்குமாறு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்திற்கு இந்தியா முழுமையாகப் பணிந்த செயல், இந்தச் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த விளைவுகள் குறித்த விவாதம் முன்னெ டுத்துச் செல்லப்படுவதற்கு முன்பாகவே, இந்தியா வின் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் சார்பு வெளியுறவுக் கொள்கையின் மற்றொரு பேரழிவுமிக்க அம்சம் நம் கண் முன்னே வந்து நிற்கிறது. மேலும் சுமையாக்கப்படும் வாழ்வு நரேந்திர மோடியின் இரண்டு நாள் இஸ்ரேல் பயணத்தின்போது, ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் சுதந்திரமான சுயாட்சிக்கான கொள்கைகளையும், பாலஸ்தீன மக்களின் சுதந்தி ரத்திற்கான ஆதரவையும் முழுமையாகக் கைவிட்ட நிலையில், இந்தியாவின் நீண்டகால நண்பனும் கூட்டாளியுமான ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்கா வும் தாக்குதல் நடத்தின.

கடந்த பதினைந்து நாட்க ளாக, சட்டவிரோதமாகவும் அநீதியாகவும் இந்தப் போர் எந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை அடைவதில் இத்தாக்குதலின் விளைவு கள் தோல்வியடைந்துவிட்டன என்பது மிகத் தெளி வாகத் தெரிகிறது. பெருகிவரும் ஆதரவை ஈர்த்துள்ள தும், குறிப்பாக அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியைத் தனிமைப்படுத்தியுள்ளதுமான ஈரானின் எதிர்ப்புத் திறன் தற்போது மிகத் தெளிவாக வெளிப்பட்டு நிற்கி றது. அமெரிக்கா-இஸ்ரேல் தரப்பை ஆதரிப்பதில் இந்தியா காட்டும் ஆர்வம், எரிபொருள்-குறிப்பாக சமையல் எரிவாயு (LPG) மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) தடையின்றி கிடைப்பதற்கு ஒரு தடையாக அமைந்து வருகிறது.

 இப்பிரச்சனைகளே, ‘ஜன் ஆக்ரோஷ்’  உணர்வை வெளிப்படுத்தும் செயல்முறையை மேலும் இன்றியமையாததாக ஆக்குகின்றன. மோடி அர சாங்கம் முன்னெடுத்துள்ள இச்செயல்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை, கள அளவில் இன்னும் தீவிரமாகவும் பரவலாகவும் அணிதிரட்டுவதன் மையக்கருவே இதுதான். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில், இடதுசாரிகளின் நிலையை வலுப் படுத்துவது எனும் கேள்வி, இந்த ‘ஜன் ஆக்ரோஷ்’ (மக்கள் சீற்ற) உணர்வுடன் நேரடியாகத் தொடர்புடை யதாக உள்ளது. எனவே, மார்ச் 24 அன்று - இந்தச் சீற்றத்தின் குரல் இன்னும் உரக்க ஒலிக்கட்டும்! பரந்த ஒற்றுமையை நோக்கியும், வலிமைமிக்க போராட் டங்களை நோக்கியும் முன்னேறுவோம்! மார்ச் 17, 2026, தமிழில் சுருக்கம் : ச.வீரமணி