இரண்டு ஆண்டுகளில் ₹65 கோடி அசுர வளர்ச்சி!
சொத்தை மறைத்ததால் முடங்கியது ராஜீவ் சந்திரசேகரின் வேட்புமனு!
பாஜகவில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ‘அதிசயப் பொருளாதார வளர்ச்சி’க்கும், அந்தச் சொத்துக்களை அப்படியே அமுக்கி வாசிக்க முயன்ற ‘திருகுதாளத்திற்கும்’ ஒரே சான்றாகச் சிக்கியுள்ளார் கேரள பாஜக தலைவரும் நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர். சொத்துக்களை முழுமையாக வெளியிடவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, அவரது வேட்புமனு பரிசீலனையைத் தேர்தல் அதிகாரி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்! இரண்டே ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த சொத்து மதிப்பு ₹28 கோடி யாக இருந்தது. ஆனால், தற்போது சட்டமன்றத் தேர்தலுக்காக அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திர த்தில் சொத்து மதிப்பு ₹93.88 கோடி யாகக் காட்டப்பட்டுள்ளது. வெறும் இரண்டே ஆண்டுகளில் ₹65.79 கோடி அதிகரித்துள்ளது எப்படி என்ற கேள்வி கேரள வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு கார் இல்லை... ஆனால் ₹107 கோடி கடன்! புதிய பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு ₹78.81 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்து களும், ₹19.34 லட்சம் மதிப்பிலான விவ சாய நிலமும் உள்ளன. விசித்திரமாக அவருக்குச்சொந்தமாக கார் எதுவும் இல்லை; ஆனால் 1942 மாடல் ‘இந்தியன் ஸ்கவுட்’ மோட்டார் சைக்கிள் மட்டும் உள்ளதாம்! இவருக்கு ₹107 கோடி கடனும், இவரது மனைவிக்கு ₹18.10 கோடி மதிப்பி லான சொத்துகளும் உள்ளதாகக் கூறியுள்ளார். சொத்து மறைப்பு அம்பலம் - வேட்புமனு நிறுத்தி வைப்பு மத்திய அமைச்சராகவும் இருந்த ராஜீவ் சந்திரசேகர், தனது ‘ஜூபிடர் கேப்பிட்டல்’ உள்ளிட்ட பிரம்மாண்ட நிறுவனங்களின் பங்குகள் மற்றும் துல்லியமான சொத்து விபரங்களை மறைத்து, குறைத்துக் காட்டியுள்ளார் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அவனி பென்சாலா மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதன் விளைவாக, வேட்பு மனு பரிசீலனை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முறைகேடு நிரூபிக்கப்பட்டால் வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது!
