கடந்த ஆகஸ்ட் 28 அன்று பரம்பொருள் பவுண்டேசனைச் சார்ந்த மகாவிஷ்ணு என்பவர் சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அதன் பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘நன்நெறி வகுப்பு’ என்ற பெயரில் அறிவியலுக்குப் புறம்பான, உண்மைக்கு மாறான மூட நம்பிக்கை யிலான விஷமக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தார். குறிப்பாக, கடவுள் எல்லோரையும் ஒரே மாதிரியாக படைப்பதில்லை; ஒருவர் கையில்லாமல், காலில்லா மல் மாற்றுத்திறனாளியாக உருவாகிறார் என்றால், அது அவர் தனது முற்பிறவியில் செய்த பாவ புண்ணி யம்படிதான் என்று அறிவியலுக்கும், உண்மைக்கும் முற்றிலும் புறம்பான கருத்துக்களை கூறியுள்ளார்.
மனுவாதக் கருத்தியல்
அறிவியலுக்கு புறம்பான மனுவாத மற்றும் வர்ணாசிரமக் கருத்துக்களை உள்வாங்கியே அதனை மாணவ, மாணவியர் மத்தியில் வாந்தி எடுத்துள்ளார் மகாவிஷ்ணு என்ற நச்சு வியாபாரி. இவருடைய இத்த கைய வெளிப்பாட்டிற்கு மூலமாய் அமையப் பெற்றது மனுவாத கருத்தியல்தான். அந்த மனுவாத கருத்தி யல்தான் ஒருவர் மாற்றுத் திறனாளியாக பிறப்பது என்பது அவரது முன்னோர்கள் செய்த கர்ம வினை களின் பலன்தான் என்றும், எனவே அவர்கள் பாவம் செய்தவர்கள், தீண்டத் தகாதவர்கள் என்றும் குறிப்பிடு கிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் நடமாடக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டும் என்றும், வீட்டிற்குள் கூட பெற்றோரோடு, உடன் பிறந்தவரோடு சேர்ந்து இருக்கக் கூடாது என்றும், அவர்களை தனியாக வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்து கிறது. அதுமட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகளுக்கு சொத்தில் உரிமை வழங்கக் கூடாது என்றும் அவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்றும் மனுவாத சட்டம் குறிப்பிடுகிறது.
21 வகையான மாற்றுத்திறனாளிகள்
நமது நாட்டில் 2016ஆம் ஆண்டு வரை 7 வகை யான உடல் குறைபாடு/பாதிப்பு உடையோரை மட்டுமே அரசு மாற்றுத் திறனாளிகளாக அங்கீகரித்து இருந்தது. பின்னர் ‘ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் -2016’ படி கூடுதலாக 14 வகையான உடல் குறை பாடு/பாதிப்பு உடையோரையும் சேர்த்து தற்போது 21 வகையான உடல் குறைபாடு/பாதிப்பு உடையோரை அரசு மாற்றுத் திறனாளிகளாக அங்கீகரித்து உள்ளது. இந்த 21 வகை மாற்றுத் திறனாளிகளுள் ஒவ்வொரு வகை மாற்றுத் திறனாளிகள் உருவாகுவதற்கும் ஒரு/பல அறிவியல்பூர்வமான, மருத்துவரீதியிலான காரணங்கள் உள்ளன.
மாற்றுத்திறனாளிகள் உருவாகக் காரணம் என்ன?
உலகில் உள்ள பெரும்பாலான மாற்றுத் திறனாளி களும், வறுமைக் கோட்டிற்கு கீழ் சமுதாயத்தின் அடி மட்டத்தில் வாழ்பவர்களாகத்தான் உள்ளனர். சமூக பொருளாதார காரணிகளே, மாற்றுத் திறனாளி உருவாவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு ஏழைத்தாய் கருவுற்றிருக்கையில் அவருக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கப் பெறாவிடின் அக்குழந்தை பிறக்கும்போதே அல்லது பிறந்த சில காலங்களி லேயே மாற்றுத்திறனாளியாக மாறுகிறது. ஒரு பகுதி யில் நிலவக் கூடிய சுகாதாரச் சீர்கேடு மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு காரணமாகவும், மாற்றுத் திறனாளிகள் உருவாகின்றனர்.
போதைப் பொருள்களை அதிகமாக உட்கொள் வது, கொள்ளை லாபத்திற்காக மருந்து மாஃபியாக்க ளால் சமூகத்தில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போலி மருந்து மாத்திரைகள் - அவற்றை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் - மருத்துவர்களை இரட்சகராக பாவித்து அவற்றை உட்கொள்ளும் நோயுற்றோர், மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறை ஆகிய வற்றாலும் மாற்றுத் திறனாளிகள் உருவாகின்றனர்.
பாதுகாப்பற்ற கட்டமைப்புடன் கூடிய பணித்தளங் கள் - அதன் பொருட்டு விபத்துக்குள்ளாகும் ஊழி யர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகின்றனர். உரிய, பாது காப்பான சாலை கட்டமைப்புகள் இல்லாதது, சாலை கள் முறையாக பராமரிக்கப்படாதது, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றாதது, அதிக வேகத்தில் பயணிப்பது, கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவது- இதனால் விபத்து ஏற்பட்டு மாற்றுத் திறனாளிகளாக மாறுகின்றனர்.
மேலும், எந்திரமயமாக்கப்பட்ட பணிச் சூழலில் வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாகவும், பலர் மாற்றுத் திறனாளிகளாக மாறுகின்றனர். இரத்த உறவில் திருமணம் செய்வதும், பரம்பரை மரபணு காரணங்களாலும் மாற்றுத்திறனாளிகளாக உரு வாகின்றனர். இதுபோன்ற அறிவியல் பூர்வமான காரணிகள் தான் மாற்றத்திறனாளிகள் உருவா வதற்கு அடித்தளமாக அமைந்துள்ளன.
இறுதியாக, போர்களினாலும் பெருமளவில் மாற்றுத் திறனாளிகள் உருவாகின்றனர். எந்தவொரு நாடும் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு உரிய மதிப்பு அளிப்பதை போன்று தங்கள் நாட்டு எல்லை யையொட்டிய அண்டை நாடுகளின் இறை யாண்மைக்கும் உரிய மதிப்பளித்து அண்டை நாடு களோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி போர் இல்லாத சமூகத்தை ஏற்படுத்துகையில் மாற்றுத் திறனாளிகள் பெருமளவில் உருவாவதையும் தடுக்க முடியும்.
தீர்வு அரசிடமே...
மேற்கூறிய அம்சங்கள் மாற்றுத் திறனாளிகள் உருவாவதற்கான அறிவியல்பூர்வமான காரணிகளாக அமைந்துள்ளபோதிலும், மாற்றுத் திறனாளிகள் பெருமளவில் உருவாவதை கட்டுப்படுத்துவது அரசின் கொள்கை முடிவுகளில்தான் உள்ளது. உதார ணமாக சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை போலியோ நோய் பாதித்த மாற்றுத் திறனாளிகளை நமது சமூ கத்தில் பெருமளவில் காண முடிந்தது. ஆனால் அதன் பிறகு சில பத்தாண்டுகளாக அரசு போலியோ நோயை ஒழிப்பதற்காக எடுத்த தீவிர நடவடிக்கைகளின் விளைவாக குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இரண்டு முறை குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி வருவதன் விளைவாக இன்று போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அதன் பொருட்டு மாற்றுத் திறனாளிகளாக உருவாவதும் தடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று அரசின் முயற்சி யால் தொழு நோய் பாதிப்பும், அதன் பொருட்டு உருவாகி வந்த மாற்றுத் திறனாளிகளும் தற்போது குறைந்து வருகின்றனர். இவை ‘மக்கள் நல அரசு’ என்ற கருத்தாக்கத்தின்படி, அரசே சுகாதாரத்திற்கு முழுமையாக செலவழித்து மேற்கொண்ட ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளுக்கு கிடைத்த பலனா கவே கருத முடியும்.
எனவே மாற்றுத் திறனாளிகள் உருவாவதற்கான மேற்கூறிய அறிவில்பூர்வமான காரணிகள் அனைத் திற்கும் அரசு உரிய நடவடிக்கை மூலம் தீர்வு கண்டால் மகாவிஷ்ணு போன்றோர் விதைக்க முற்படும் ‘கர்ம பலன்கள்’ எனும் நச்சு விதைகள் முளையிலேயே அழிக்கப்பட்டு விடும்.
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,TARATDAC