தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் - தத்துவார்த்த பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவோம்! - ஜி.ராமகிருஷ்ணன்
கேள்வி : மார்க்சிஸ்ட் கட்சி, ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சி, ஆனால், தொழிலாளர் வர்க்கத்தினரிடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், கட்சியின் அரசியல் செல்வாக்கு, தொழிலாளர்களிடையே என்ன நிலையில் உள்ளது? மாநாடு அதைப் பற்றி பேசுமா?
த்து மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு வரைவு அரசியல் பரிசீலனை அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டுள் ளது. “கடந்த 3 ஆண்டுகளில் தொழில் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் உள்ள தொழிலாளர்களின் பல்வேறு வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் நடை பெற்றுள்ளன. பிப்ரவரி 16, 2024 அன்று மத்திய தொழிற்சங்கங்கள், சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகியவை துறை ரீதி யான வேலை நிறுத்தம், வெகுஜன அணி திரட்டல், கிராம அளவிலான முழு அடைப்பு ஆகியவற்றுக்கு அறைகூவல் விடுத்தன.” இத்தகைய இயக்கங்கள் நடைபெற்றி ருந்தாலும் செயல்பாட்டில் உள்ள குறை பாடுகளை வரைவு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது: “நவீன உற்பத்தித் துறையில் தொழி லாளர்களை அணிதிரட்டுவதில் உள்ள பலவீனம், பொதுத்துறையில் பலவீன மாகிக் கொண்டு வரும் நமது செல்வாக்கு ஆகியவற்றைச் சுட்டிக் காட்டியது. அணி திரட்டப்பட்ட தொழில்களில் உள்ள தொழிலாளர் சக்தியில் பெரும்பகுதியாக இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் நமக்குள்ள பல வீனத்தை களைய வேண்டும் என்றும் அது அறைகூவல் விடுத்தது. ஒட்டுமொத்தத் தில், தொழிலாளி வர்க்கத்தின் மீது கட்சியின் அரசியல் ரீதியான செல்வாக்கு தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது”. கட்சியின் மத்தியக்குழு அமைத்த ஆய்வுக்குழு, தாராளமய கொள்கை யினால் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து குறிப்பிடுகிறது. முதலாளித்துவ சுரண்டல் குறித்து ஆய்வறிக்கை “முதலாளித்துவத்தின் தற்போதைய கட்டத்தின் மிக முக்கியமான அம்சம், பல்வேறு உத்திகளையும், நடவடிக்கை களையும் பயன்படுத்தி மூலதனத்தின் கொடுங்கோல் ஆதிக்கத்தை பலப்படுத்து தல் ஆகும்.
இந்தச் சூழலில், அரசு உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி, முத லாளிகளின் லாபத்தைப் பெருக்க உதவு கிறது. முதலாளிகளோ உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றனர். தங்கள் லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்லது கிடைக்கும் லாபத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, உற்பத்தி பெருகும்போது - உழைப்பவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காமல் கொள்ளை யடிக்கின்றன.” அமைப்புசார் துறையின் அமைப்புசாரா உழைப்பாளர்கள் “நவீன தாராளமயக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர், பணி யாளர் உறவுகளின் தன்மை வெகுவாக மாறிவிட்டது. தனியார்துறையில் மட்டு மின்றி, அரசுத் துறையிலும் பெரும் பகுதித் தொழிலாளர்களுக்கு, முதலாளிகள், தொழிலாளர்கள் - இந்த உறவுகள் இன்னதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது (உபர், ஓலா ஓட்டுநர்களுக்கு தங்கள் முதலாளி யார் என்று தெரியாது) நிச்சயமற்ற பணிச் சூழல், நிச்சயமற்ற வருமானம், சமூகப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் இல்லாத நிலை, சட்டப்பாதுகாப்பின்மை - இத்தகைய நிலையில் பணிபுரியும் அமைப்புசாராத தொழிலாளர்களின் விகிதம் இன்றைய தாராளமயக் கொள்கை யைக் கடைபிடிக்கும் ஆட்சியாளர் காலத்தில் அதிகரித்துள்ளது.
வியாபாரச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் விளைவாக ஏற்படும் பொருளாதாரச் சுமைகள், உழைக்கும் மக்களின் மீது சுமத்தப்படுகின்றன.” கடந்த 2022 ஆம் ஆண்டு தொழிற்சங்க அரங்கப் பணிகள் குறித்து பரிசீலித்த கட்சியின் மத்தியக்குழு தாராள மய பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி குறிப்பிடுகிறது. “நமது தொழிற்சங்க அரங்கின் உறுப்பின ர்கள் எண்ணிக்கையில் 70 சதவிகிதம் அணிதிரட்டப்படாத தொழிலாளர்கள். ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடுகிறபோது, இந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை சிறு பகுதியே ஆகும். அணிதிரட்டப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும், மேலும் அதிகரித்து வருகிறது.” முறைசார் தொழில்களில் (பொதுத் துறை மற்றும் தனியார் துறை) பணி யாற்றும் நிரந்தரமற்ற ஒப்பந்த தொழி லாளர்களின் எண்ணிக்கையும் அதிக மாகி வருவதை கணக்கில் கொண்டு இத்தகைய தொழிலாளர்களை திரட்டு வதற்கு கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே தொழிற்சங்க இயக்கத்தையும் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தையும் பலப்படுத்த முடியும். உதாரணமாக, என்எல்சி (நெய்வேலி) நிறுவனத்தில் 1980ல் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட அனல்மின் நிலையமும், ஒரு சுரங்கமும் இயங்கியது.
அப்போது 19000 நிரந்தர தொழிலாளர்கள், ஊழியர்கள் பணி யாற்றினார்கள். தற்பொழுது 3 சுரங்கங் களும் 3390 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின்நிலையங்கள் என அளவில் நிறுவனம் விரிவடைந்துள் ளது. ஆனால், மொத்த நிரந்தர தொழி லாளர்களின் எண்ணிக்கை 6200 மட்டுமே. இந்நிறுவனத்தில் பணியாற்றும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் எண்ணிக்கை 17,000 (சொசைட்டி மற்றும் காண்ட்ராக்ட்). சென்னை எண்ணூரில் உள்ள அசோக்லேலண்ட் நிறுவனத்தில் 1985ல் 8500 தொழிலாளர்கள் பணியாற்றி னார்கள். நிறுவனத்தின் உற்பத்தித் திறன் பலமடங்கு உயர்ந்திருந்தாலும், தற்போது இந்நிறுவனத்தில் 1200 நிரந்தர தொழி லாளர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 3500 காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார் துறை நிறுவனங்களிலும் இதே நிலைமைதான்.
இம்மாற்றத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு அனைத்து பகுதி தொழிலாளர் களையும் திரட்டிட திட்டமிட வேண்டும். முறைசார் பொதுத்துறை மற்றும் தனி யார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்களையும் மற்றும் நிரந்தரமற்ற காண்டராக்ட் தொழிலாளர் களையும் திரட்டுவதோடு கட்டுமானம் உள்ளிட்ட அணிதிரட்டப்படாத தொழி லாளர்களையும் திரட்டுவதன் மூலமே பலமான தொழிற்சங்க இயக்கத்தையும் போர்க்குணமிக்க வர்க்கப் போராட்டத்தை நடத்திட இயலும். கேள்வி : பொருளாதாரப் போராட்டங்களில் பெருமளவில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் அரசியல்படுத்த என்ன திட்டமிடல் உள்ளது? பதில் : பொருளாதார கோரிக்கை களுக்கான போராட்டங்களில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் மத்தியில் கட்சி செய்ய வேண்டிய அரசியல் பணி குறித்தும் வரைவு அரசியல் பரிசீலனை அறிக்கை விளக்கியுள்ளது: “கடந்த காலங்களில் நடைபெற்ற தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும், விவசாயிகளின் போராட்டங்களும், இந்த போராட்டங்களில் பங்கேற்ற பெருந்திர ளான மக்களை அரசியல்மயமாக்க இட்டுச் செல்லவில்லை.” தொழிலாளர்கள் மத்தியிலும் மற்றும் மற்ற வர்க்க வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர்கள் மத்தியிலும் நமது கட்சி அரசியல் பணியை சரிவர செய்யவில்லை என்ற குறைபாட்டை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்கும் தொழிலாளர்கள் மத்தியில் திட்டமிட்ட அரசியல் பணியை மேற்கொள்ள வேண்டுமென வரைவு அறிக்கை வலியுறுத்துகிறது. “போராட்டங்கள், வெகுஜன இயக்கங்களோடு கூடவே கட்சியின் போராட்டங்களில் இணையும் இந்த மக்கள் திரளின் மீது செல்வாக்கு செலுத்தி அவர்களை வென்றெடுக்கும் வகையில் கட்சி அவர்களிடையே அரசியல் பணி யையும், தத்துவார்த்த பிரச்சாரத்தையும் நடத்த வேண்டும். நாம் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் போராட்டங்கள் மக்கள் பிரச்சனைகள் மீதான நமது வேலைகளுக்கேற்ப நமது அரசியல் செல்வாக்கு வளராததற்கு இதுவே காரணமாகும்”. இன்றைய சமூக, பொருளாதார சூழல், தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகிய நிலைமையை கணக்கில் கொண்டு தொழிலாளர்களை திரட்டி போர்க்குணமிக்க வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென வரைவு தீர்மானங்கள் வலியுறுத்துகின்றன.