articles

img

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் பெருமைமிகு நூற்றாண்டு

இந்திய சுதந்திரப் போராட் டத்தை பிளவுபடுத்துவதற்கு பிரிட்டிஷார் செய்த சூழ்ச்சி களில் ஒன்று வங்கப் பிரிவினையாகும். அதில் துவங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1964 ஆம் ஆண்டு உருவான கால மாகும். இந்திய வரலாற்றில் மகத்தான பாத்திரத்தை வகித்த கம்யூனிச இயக்கத்தின் 60 ஆண்டு காலத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங் களையும், ஆழமான கருத்தியல் மோதல் களையும் எளிய மொழியில் எழு தியுள்ளார் தோழர் என்ராமகிருஷ்ணன்.

பாசிசத்தின் எழுச்சியும் எதிர்ப்பும்

பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான தேசிய வெறி மிகுந்த, பழுத்த ஏகாதிபத்திய கூறுகளின் பகிரங்கமான பயங்கரவாத சர்வாதிகாரம் என்கிறார் ஜார்ஜ் டிமிட்ரோவ். இந்த பாசிச வெறி பிடித்த ஹிட்லர் கம்யூ னிஸ்டுகளை ஒழித்துக் கட்ட செய்த முயற்சிகள் ஏராளம். ஜெர்மன் நாடாளு மன்ற கட்டிடமாகிய ரீஸ்ஸ்டாக் தீ விபத்தில் தோழர் ஜார்ஜ் டிமிட்ரோ மீதான பொய் குற்றச்சாட்டை தானே வாதாடி உடைத்தெறிந்த வரலாறு இங்கே விவரிக்கப்படுகிறது.

சர்வதேச பார்வையும் உள்நாட்டு போராட்டங்களும்

லெனின் மறைவும் இந்திய மக்க ளின் அஞ்சலியும், கம்யூனிஸ்ட் அகி லத்தின் மாநாடு, பாசிச அபாயமும் அகி லத்தின் எச்சரிக்கையும் போன்ற அத்தியா யங்கள் உலகளாவிய பார்வையை வழங்குகின்றன. விவசாயிகளின் எழுச்சி களான தெலுங்கானா, புன்னப்புரா, வயலார் தெபாகா போராட்டங்கள் விரி வாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தலைமைத்துவமும் தியாகங்களும் 28 வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த பி சி ஜோஷியின் மகத்தான பணிகள் விரி வாக விவரிக்கப்படுகிறது. கையூர் தியாகி களின் நேரடி அனுபவங்கள் நெஞ்சை  உருக்கும் வகையில் பதிவு செய்யப் பட்டுள்ளன. வங்க பஞ்சத்தின் கொடூரங்கள், ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் நடந்த ஆறு பெரும் பஞ்சங்களின் வரலாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இயக்கத்தின் வளர்ச்சியும் விரிவாக்கமும்

அமீர் ஹைதர் கான், தோழர் சுந்தரய்யா, இ எம் எஸ் நம்பூதிரி பாட், பி சீனிவாச ராவ் போன்றோர் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஆற்றிய  பங்களிப்புகள் விரிவாக விவரிக்கப்படு கிறது. 1934 ஆம் ஆண்டில் மாதம் 25 ரூபாய் ஊதியத்தில் முழுநேர ஊழியர் களாக பணியாற்றிய தியாகிகளின் கதை நெகிழ வைக்கிறது.

புதுச்சேரி போராட்டமும்  மீரட் வழக்கும்

புதுவை சவானாமில் தொழிலாளர் போராட்டத்தில் பீரங்கி சூட்டில் உயிர்த்தியாகம் செய்த அப்துல் மஜீத் உள்ளிட்ட 12 தோழர்களின் தியாகம் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மீரட் சதி வழக்கில் டாக்டர் ஜி அதிகாரி மீதான தீர்ப்பை எதிர்த்து ஐன்ஸ்டீன், ரோமன் ரோலந்து போன்ற உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் குரல் கொடுத்த வரலாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவில்  கம்யூனிச இயக்கம்

விடுதலைக்குப் பின் சீன பாதையா? ரஷியப் பாதையா? என்ற விவாதங்கள், பொதுத்தேர்தல், மொழி வாரி மாநி லங்கள், கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட  பிளவுகள் ஆகியவை விரிவாக ஆராயப் படுகின்றன. 86 அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் ஆரம்ப கால புகைப்படங்கள், ஸ்ரீ ரசாவின் போராட்ட ஓவியங்களுடன் கூடிய முழுமை யான வரலாற்று ஆவணமாக திகழ்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் பெருமைமிகு நூற்றாண்டு  முதல் பகுதி (1920 முதல் 1964 வரை) ஆசிரியர்: என்.ராமகிருஷ்ணன் பக்கங்கள்: 512 - விலை: ரூ.800 வெளியீடு: மதுரை புத்தக மையம்