articles

img

100 நாள் வேலைக்கு சோதனை மேல் சோதனை

100 நாள் வேலைக்கு சோதனை மேல் சோதனை-கட்டுரையாளர் : துணைத் தலைவர், 
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்

இந்தியாவில் மோடியின் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த நாள் முதல் இன்று வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கும், அதன் நிதிகளை வேறு பயன்பாட்டிற்கு திருப்புவதற்கும் தொடர்ச்சி யான சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள இந்த சட்டத்தையே அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுக்கப்படும் இந்த முயற்சிகளை, நாட்டின் அறிவு ஜீவிகளும், பொருளா தார வல்லுனர்களும், இடதுசாரி அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும் தொடர்ந்து எதிர்த்து வரு கின்றனர். கோடிக்கணக்கான விவசாயக் கூலித் தொழி லாளர்களும் நாடு முழுவதும் கண்டித்து தெருக்களில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

லிப்டெக் அமைப்பின் அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் அமைப்பான லிப்டெக், சமீபத்திய ஆய்வில் திடுக்கி டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் மட்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பதிவேட்டில் இருந்து 84.8 லட்சம் தொழி லாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 45.4 லட்சம் தொழிலாளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள னர். ஆனால் நிகர நீக்கம் 39.3 லட்சமாக உள்ளது. குறிப்பாக தமிழகம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்க ளில் அதிகப்படியான தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ள னர்.

திட்டத்தை சிதைக்க கையாளப்படும் சூழ்ச்சிகள்

2014-ல் மோடியின் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பின்பு, இத்திட்டத்தை சிதைக்கும் பணிகள் துவங்கியது. எழுத்தறிவு கிடைக்கப் பெறாத கிராமப்புற கூலித் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கு துவக்குவது, டிஜிட்டல் முறையில் புகைப்படங்கள் எடுத்து தினமும் இரண்டு-மூன்று வேளை பதிவு செய்வது, ஆதார் அட்டையை வேலை அட்டையோடு இணைப்பது, ஆன்லைன் மூலமே வேலைக்கான பதிவுகள் செய்ய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது. இவற்றை செய்யாவிட்டால் வேலை வழங்கப்படாது, ஜாப் கார்டும் ரத்து செய்யப்படும் என அறிவித்தது.

தொழிலாளர்கள்  எதிர்கொள்ளும் சிக்கல்கள்

இந்தியாவில் 25 கோடி விவசாயக் கூலித் தொழிலா ளர்களுக்கு துவக்க காலத்தில் வேலைத் திட்ட அடை யாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஆனால் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் என்ற காரணத்தால், 14 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் திட்டமாக மாற்றப்பட்டது. இன்று அதிலும் 8 கோடி தொழிலாளர்களின் ஜாப் கார்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 153 கோடி மனித நாட்கள் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மோடி அரசின் திட்டமிட்ட சதிகளால், 25 கோடி விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளா தாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

2023 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை - 84.8 லட்சம் தொழிலாளர்கள் பதிவேட்டி லிருந்து நீக்கம் - 45.4 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்ப்பு - நிகர இழப்பு: 39.3 லட்சம் தொழிலாளர்கள்

டிஜிட்டல்மயமாக்கல் சிக்கல்கள் - வங்கிக் கணக்கு கட்டாயம் - ஆதார் இணைப்பு - ஆன்லைன் பதிவு - டிஜிட்டல் வருகைப் பதிவு

பாதிப்புகள் - 8 கோடி தொழிலாளர்களின் வேலை அட்டை கள் செல்லாததாக்கப்பட்டன - 153 கோடி மனித நாட்கள் வேலை இழப்பு - தமிழ்நாடு, ஒடிசா மாநிலங்களில் அதிக        பாதிப்பு - 6.7 கோடி தொழிலாளர்கள் ஆதார் அடிப்படை யிலான பண பரிமாற்ற முறையிலிருந்து விலக் கப்பட்டுள்ளனர்

இந்த மாற்றங்களின் விளைவுகள் - தொழிலாளர்களின் வருமானம் குறைவு - வாங்கும் சக்தி வீழ்ச்சி - சந்தையில் தேக்க நிலை - பொருளாதார மந்தநிலை அபாயம்

அதே நேரத்தில், பெரு முதலாளிகளுக்கு - வரிச் சலுகைகள் - கடன் தள்ளுபடிகள் - தேர்தல் நிதி ஆதாயங்கள்

தமிழ்நாட்டில்...

இந்தப் பின்னணியில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. தொழிலாளர் பதிவில் முறைகேடுகள்:

 H ஏற்கனவே உள்ள தொழிலாளர்களை புறக்க ணித்து, வெளியூர் மற்றும் வெளிமாநில ஆட்களை போலியாக பதிவு செய்தல்

 H இல்லாத நபர்களை தொழிலாளர்களாக காட்டி பொய் ஆவணங்கள் தயாரித்தல்

2. திட்ட விதிமுறைகள் மீறல்:

H மனித உழைப்புக்கு பதிலாக எந்திரங்களை பயன்படுத்துதல்

H கட்டுமான பணிகளுக்கான 20% வரம்பை மீறுதல் H தனியார் நிலங்களில் சட்டவிரோதமாக பணிகள் மேற்கொள்ளல்

3. நிர்வாக அலட்சியம்:

H மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், தொழிலாளர்களின் நிலை குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

H அதிகாரிகளே ஊழலில் பங்கேற்பது

நீதிமன்ற நடவடிக்கை

மூன்று தனித்தனி மனுதாரர்கள் - கரூர் மாவட்டம் கோபிநாத், தென்காசி மாவட்டம் மணிகண்டன், தேனி மாவட்டம் ராஜா ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளில் தான் மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்துள்ளனர்.

இவற்றை விசாரித்த உயர்நீதிமன்றம், முறைகேடு களில் உண்மை இருப்பதாக கருத்து தெரிவித்துள் ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள் ளது, மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள இத் திட்டம் ஊழல் திட்டமாக மாறியுள்ளதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டம், அதிகாரிகள் மற்றும்  பல இடங்களில் உள்ளாட்சிப்  பிரதிநிதிக ளின் கைகளில் சீரழிந்துள்ளது. ஆட்சியாளர்கள் வெறும் வாக்குறுதிகளோடு நில்லாமல், இத்தகைய முறைகேடுகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

கட்டுரையாளர் : துணைத் தலைவர், 
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்