* மொத்த பட்ஜெட் தொகை ரூ.51,89,144 கோடி;
* இதில் ஒன்றிய அரசு திட்டங்கள் & ஒன்றிய ஆதரவு திட்டங்கள் நிதி ரூ.14,64,479 கோடி.
* இதில் நிதி ஆயோக் வழிகாட்டல்படி பட்டியலின மக்கள் மேம்பாடு திட்டங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நிதி ரூ.2,14,109 கோடி.
*ஆனால் பட்ஜெட்டில் பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு ரூ.1,65,493 கோடி மட்டுமே.
* இலக்கிடப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ.46,192 கோடி.
* நிதி ஆயோக் வழிகாட்டலுக்கும் ஒதுக்கீடுக்கும் இடையிலான பள்ளம் ரூ.48,616 கோடி.
ஒதுக்கீட்டில் உள்ள பள்ளம் இது. ‘ஒதுங்குவதில்’ உள்ள பள்ளம் தனி.
பட்டியலின துணைத்திட்ட நிதியைபசுக்களுக்காக செலவிட்ட ம.பி. பாஜக அரசு
பட்டியல் சாதி, பழங்குடி துணைத் திட்ட நிதிகளின் மடை மாற்றத்திற்கு எல்லையே இல்லை என்பதற்கு பாஜகவின் மத்தியப் பிரதேச அரசு உதாரணம் ஆகும்.
பசுப் பாதுகாப்பு, மத வழிபாட்டுத் தலம், காட்சியகம் என கோடிக்கணக்கான ரூபாய் பட்டியல் சாதி பழங்குடி துணைத்திட்ட நிதியில் இருந்து வாரி இறைக்கப்பட்டுள்ளது.
துணைத் திட்ட நிதியில் இருந்து பசு பாதுகாப்பிற்கு ரூ. 95.76 கோடி எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.109 கோடி மதிப்புடைய ஆறு வழிபாட்டு தலங்கள் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவக செலவினத்தில் 50 % துணைத்திட்ட நிதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இவற்றினால் பட்டியல் சாதி பழங்குடி மக்களும் பயன் பெறுகிறார்கள் என்ற விளக்கத்தை அதிகாரிகள் தந்திருப்பதுதான் அராஜகத்தின் உச்சம்.