articles

img

டிச.10 - வாகன நிறுத்தப் போராட்டம் ஏன்? - ஜி.சுகுமாறன்

பெட்ரோல் மற்றும் டீசலின் மீதான விலை லிட்டருக்கு ரூ.100ஐ கடந்தும் விலை உயர்வின் மீதான விவாதங்களும் அதிகரித்து,  சாதாரண மக்களின் பெரும் துயருக்கு வித்திட்டுள்ளது.  கேரளம், தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் மக்களின் மீது சுமத்தும் இந்த விலை உயர்வை குறைக்க பெட்ரோல் மீது மாநில அரசு விதித்திருந்த சர் சார்ஜில் ஒரு பகுதியை குறைத்தது. ஆனால் மக்கள் மீது பெரும் வரி சுமையை சுமத்து கின்ற ஒன்றிய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.   இந்நிலையில் கடந்த தீபாவளியன்று நரேந்திர மோடி அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக அறிவித்தபோது புதிய சர்ச்சைகள் துவங்கின. பெட்ரோல் விலையில் ரூ.5ம் டீசல் விலை யில் ரூ.10ம் குறைப்பது என பிரதமர் அறிவித்தார்.  இந்த அறிவிப்பு வெளியானதும் பிரதமரைப் பாராட்டி ஜால் ராக்கள் துதிபாடத் துவங்கின. பிரதமரின் இந்த நட வடிக்கை வரும் சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு உதவும் எனச் சொல்லி பிரதமரை திருப்திப்படுத்தினார் ஒன்றிய நிதியமைச்சர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அதற்கேற்ப இந்திய சந்தையில் விலை யும் குறையும் என ஒன்றிய அரசு சொல்லி வந்தது. ஆனால் இக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஒன்றிய அரசு சொன்னது போன்று சர்வ தேச சந்தையின் விலையோடு ஒப்பிட்டு இந்திய சந்தை யின் விலையை தீர்மானித்திருந்தால்  மக்களுக்கு பெட்ரோல், டீசலை இப்போது இருப்பதை விட மிகக் குறைந்த விலையில்  வழங்கியிருக்க முடியும்.  ஆனால் 2021 நவம்பர் தொடக்கம் வரை பெட்ரோல் மீது லிட்ட ருக்கு ரூ.31, டீசல் மீது ரூ.33 கூடுதல் செஸ் வரியை ஒன்றிய அரசு விதித்து வசூலித்து வந்தது.  பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு இனங்களில் பாஜக அரசு சலுகைகளுக்கு மேல் சலுகைகள் அளித்தால் ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்யவே சாமானிய மக்கள் மீது இச் சுமையை திணித்தனர்.

2014-ல் துவங்கிய வரிக்கொள்ளை

2014-ல் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசு கூடுதல் கலால் வரி மற்றும் செஸ் விதித்தபோது இடதுசாரிகள் கடும் கவலையை வெளிப்படுத்தினர். அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலால் வரி உயர்வை அமல்படுத்தியதற்கு எதிராக நாடாளு மன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  கலால் வரி உயர்வு க்கு எதிரான தீர்மானத்தை இடதுசாரிகள் கொண்டு வந்தனர்.   நியாயமான காரணமின்றி பெரிய வரிகளை விதிக்க நமது அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை. இருப்பி னும், விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், அடிப்படை வரிகள் மற்றும் கடமைகளுக்கு கூடுதலாக செஸ்  மற்றும் கூடுதல் கட்டணங்களை விதிக்க அரசியல மைப்பு அனுமதிக்கிறது.

ஆனால், அடிப்படை வரியை பத்து மடங்கு உயர்த்தி யதன் மூலம் அரசியல் சாசன விதிகளை ஒன்றிய அரசு துஷ்பிரயோகம் செய்தது. வரி உயர்வின் சுமை, மக்கள் மற்றும் மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகள் மீதான அத்துமீறலாகவே பார்க்கப்பட வேண்டும். கூடுதல் கட்டணம் என்பது ஏற்கனவே உள்ள வரிகளின் மீது விதிக்கப்படும் சிறிய வரியாகும்.  இதன் அளவு மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் இங்கு என்ன நடந்தது? அடிப்படை வரியை விட ஏழு முதல் எட்டு மடங்கு கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது  கட்டணம். இதற்கான நியாயம் என்ன? தற்போது அடிப்படை கலால் வரி ரூ.1.40 ஆக உள்ளது. மீத முள்ள வரி தனி கூடுதல் கலால் வரி மற்றும் செஸ் ஆகும். இதில் மாநிலங்களுக்கு எந்த பங்கும் கிடைக்காது. முற்றிலும் இந்த வரி ஒன்றிய அரசிற்கு தான் செல்லும்.

மாநில அரசுகளையும் மக்களையும் ஒரே நேரத்தில் வஞ்சிப்பது...

பிபிஏசி (PPAC) (பெட்ரோலியம் மற்றும் திட்ட மிடல் பகுப்பாய்வு செல்) வெளியிட்டுள்ள அறிக்கை யின்படி, 2020-21ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொ ருட்களின் மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.3.72 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், 18000 கோடி  ரூபாய் அடிப்படை கலால் வரியாக வசூலிக்கப்பட்டது. செஸ் வரியாக ரூ.2.3 லட்சம் கோடியும், சிறப்பு கலால் வரியாக ரூ.1.2 லட்சம் கோடியும் வசூலிக்கப்பட்டது. இங்கே மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.  முதலில் ரூ.3.72 லட்சம் கோடியில் அடிப்படை வரி வெறும் ரூ.18,000 கோடிதான். இது பெட்ரோலிய பொருட்களின் மொத்த வருவாயில் 4.8 சதவீதம் மட்டுமே. இரண்டாவதாக, 18,000 கோடி ரூபாயில் 41 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு வகுக்கக் கூடிய தொகுப்பிற்கு வருகிறது. மூன்றா வதாக, பெட்ரோலியப் பொருட்களின் மொத்த வரு வாயில் 95 சதவீதம் செஸ் மற்றும் கூடுதல் கலால் வரியிலிருந்து வருகிறது.

இந்த ஒதுக்கீட்டில் ஒரு பைசா கூட மாநிலங்களுடன் ஒன்றிய அரசு பகிர்ந்து கொள்ளாது. நாட்டில் கூட்டாட்சி அமைப்பு பலவீனமடைந்து வருகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இது தீவிரமாக விவாதிக் கப்பட வேண்டிய பொருளாகும். செஸ் மற்றும்  கட்ட ணங்கள் விதிப்பது தொடர்பான அரசியலமைப்பின் விதிகள் உட்பட விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே உள்ளது.  ஆனால் இங்கே பெட்ரோல், டீசல் மூலம் வரும் வரி வருவாயில் பெரும்பகுதியை ஒருதலைப்பட்சமாக பறித்து மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பெரும் அநீதியை இழைத்துள்ளது. இது பொருளாதார கூட்டாட்சி முறையின் துஷ்பிரயோகமாகும். இதை மாநிலங்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.

பெருந்தொற்று காலத்திலும் பெரும் கொள்ளை

கோவிட் பெருந்தொற்று காலத்தில் கூட, இந்த வரிகளின் மூலம் ஒன்றிய அரசிற்கு பல லட்சம் கோடிகள் பெரும் வருவாய் கிடைத்தது. ஆனால் இந்த பணம் எல்லாம் எங்கே போனது? இந்தப் பணத்தால் யாருக்கு லாபம்? இதற்கான பதிலை ஒன்றிய அரசு நாட்டு மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். நாடு வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து  வருகிறது. கோவிட் தொற்றுநோய் அதை மோச மாக்கியது. இந்த கட்டத்தில், மக்களுக்கு உதவ மாநிலங்கள் நிதியைக் கண்டுபிடிக்க வேண்டியி ருக்கிறது. பொது முடக்கம் காரணமாக வருமானம் இழந்த, வருமான வரி வரம்பில் இல்லாத மக்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.7500 வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரினால் அது அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்படுகிறது.  

தேசத்தின் சொத்துக்களை விற்று யாரை வளர்க்கப் பார்க்கிறீர்கள்?

இது தவிர, தேசிய பணமாக்கல் திட்டம் நாட்டின் இறையாண்மையையே பாதிக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட அன்றாட செலவுக ளுக்காக நாட்டின் சொத்துக்களில் பெரும் தொகையை ஒன்றிய அரசு விற்று வருகிறது. இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணம் என்ன? 1991 முதல் ஒன்றிய அரசு  கடைப்பிடித்து வரும் புதிய தாராளமயக் கொள்கைகள் தான். லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் என அனைத்தையும் விற்பனைக்கு வைத்துள்ளன. இந்த நடவடிக்கைகளின் இறுதிப் பயனாளிகள் யார்? பதில் எளிது. சில கார்ப்பரேட் நிறுவனங்களை தவிற வேறு யாரும் இல்லை. ஆறு லட்சம் கோடி ரூபாய் சொத்து விற்பனை மூலம் திரட்டிட ஒன்றிய அரசு இலக்கு வைத்துள்ளது. அதே ஒன்றிய அரசு, ரூ.8.75 லட்சம் கோடி நிறுவனக் கடன்களை தள்ளுபடி செய்தது. கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்படாத சொத்துக்க ளை தனியான ‘வங்கி’ போன்ற ஏற்பாடு (கெட்ட வங்கி) கவனிக்கும் என்று கூறுகிறது. பொதுத்துறை வங்கிகளின் பொதுப்பணம் இதற்குப் பயன்படுத்தப் படுகிறது.

ஒருபுறம், பொதுப் பணம் ஒரு தட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றப்படுகிறது. மறுபுறம், ஒன்றிய அரசு இந்த நிறுவனங்களின் கடனை பொதுப் பணத்தைக் கொண்டு அடைக்கிறது. என்ன முரண் இது. கடந்த நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கார்ப்ப ரேட் வரி விலக்கு அளிக்கப்பட்டது. கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளால் ஒன்றிய அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது வகுக்கக்கூடிய தொகுப்பிலிருந்து மாநிலங்கள் பெற வேண்டிய வருவாயையும் பாதித்தது. மொத்தத்தில் ஒன்றிய அரசு வரி என்கிற பெயரில் மக்களை பிழிந்து கார்ப்பரேட்டுகளுக்கு மடைமாற்றம் செய்யும் பணியைத் தவிர, வாக்களித்த மக்களுக்கு உதவுவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.

டிசம்பர் 10-  வாகன நிறுத்தப் போராட்டம்

எனவே, ஒன்றிய மோடி அரசின் அதிகார துஷ்பிரயோகத்தையும் அரசியல் சாசனத்தை தவறாக பயன்படுத்துவதையும் எதிர்த்தும் பெட்ரோல், டீசல் மீது விதித்துள்ள கலால் வரியையும், கூடுதல் செஸ் வரியையும் திரும்பப் பெற வலியுறுத்தியும் டிசம்பர் 10 அன்று நடைபெறும் 10 நிமிட வாகன  நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம். அனைத்து மக்களையும் இப்போராட்டத்தில் ஒருங்கிணைப்போம்.  டிசம்பர் 10ஐ  வாகனப்புகை இல்லாத தமிழகமாக 10 நிமிடத்தை உருவாக்குவோம்; நமது ஒற்றுமையை ஒன்றிய அரசிற்கு மீண்டும் எடுத்துரைப்போம்!  

கட்டுரையாளர் : மாநில பொதுச் செயலாளர், சிஐடியு

 

;