articles

img

மோடியின் பட்டப்படிப்பு : ஏழாண்டு காலமாய் தொடரும் காத்திருப்பு - பிருந்தா கோபிநாத்

பல நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும், முடிந்த வரை இந்த விஷயத்தை அரசாங்கம் தாமதிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் போலியான கல்வித் தகுதி குறித்த சர்ச்சைக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில், இது பற்றி ஒரு முறை அவர் தெளிவுபடுத்துவது பொருத்தமானதாக இருந்திருக்கும். மாறாக, சிஐசியின் உத்த ரவுகளாலும், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளாலும், எதிர்க்கட்சித் தலைவர்களான தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் காங்கிரஸின் ராகுல் காந்தி வரை, தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் போன்ற பொதுமக்களின் குற்றச்சாட்டுகளாலும், பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டபோது, மோடி அரசாங்கம் முதலில் சர்ச்சையைப் புறக்கணிப்பதன் மூலம் அதை மறுப்ப தில் இருந்து வெளியேறிவிட்டது. இப்போது மோடி மற்றும் அவ ரது குழுவினர் தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்தப் பிரச்ச னையை உயிரோடு வைத்திருக்கும் சங்கடத்தில் உள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிமன்றத்தில் பட்டியலி டப்பட்ட பின்னர் நவம்பர் 18 ஆம் தேதி மீண்டும் விசாரணை க்கு வந்தது. தில்லி பல்கலை.யின் வழக்கறிஞர் வராததால் அடுத்தாண்டு ஏப்ரல் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில், ஆர்டிஐ ஆர்வலர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் மோடியின் கல்லூரிப் பட்டப்படிப்பின் நகலைக் கேட்டபோது, இந்த ஊழல் முதன்முதலில் வெளி வந்தது. ஆனால் அவர்கள் ஆச்சர்யப்படும் விதமாக பிஎம்ஓ மற்றும் அவர் குஜராத்தில் இருந்து தில்லி பல்கலைக்கழ கங்கள் வரை சேர்ந்ததாகக் கூறப்படும் பல்கலைக்கழக அதிகாரிகள் பட்டப்படிப்புச் சான்றிதழைத் தர மறுப்பதற்கான தடை உத்தரவுகளைப் பெற நீதிமன்றத்திற்கு ஓடினார்கள். மோடி தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உண்மை யைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இது முதல் முறையல்ல;  2014இல் பிரதமர் பதவிக்கான பிரமாணப் பத்திரத்தில், ‘திருமண நிலை’ என்ற பத்தியில் முதல்முறை யாக மனைவி யசோதாபெனை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  இதற்கு முன்னர் இந்தப் பத்தியைக் காலி யாக விடுவார். உச்சநீதிமன்றம் தீர்ப்பு மற்றும் செப்டம்பர் 2013 இல் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப் படி, வேட்பா ளர்கள் பிரமாணப் பத்திரத்தில் உள்ள அனைத்து நிபந்த னைகளுக்கும் பதிலளிக்க வேண்டும். அதன் படி இவர் படி வத்தை முழுமையாக நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2012 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடி யின் திருமண நிலையை காலியாக விட்டதற்காக தேர்தல் ஆணையம் மோடியின் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அகமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அனிதா கர்வால் புதிய வழி காட்டுதல்கள் ஒரு வருடம் கழித்துதான் நடைமுறைக்கு வந்த தாகக் கூறி அதை மறுத்தார். மோடியின் சகோதரர் சோமா பாய், இது ஒரு குழந்தை திருமணம் என்றும் அதற்காக அவர் தண்டிக்கப்படக்கூடாது என்றும் கெஞ்சினார்/கோரினார்.

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உண்மையான தகவல்க ளை அளிக்க வேட்பாளர்கள் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டி ருப்பது ஏன் முக்கியமானது? ஒவ்வொரு வேட்பாளரும் குற்றப் பதிவுகள், சொத்துக்கள் மற்றும் கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் பிற அளவுகோல்கள் பற்றிய துல்லியமான தகவல்க ளைச் சமர்ப்பித்து, அவர்களின் பின்னணி குறித்து வாக்கா ளர்களுக்குத் தெரியப்படுத்தி தேர்வு செய்யப்படக் கடமைப் பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 125 (A) இன் கீழ் எந்தவொரு பொய்யும் தீவிரமாகக் கருதப்படும், மேலும் ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். பொது ஊழியருக்குத் தவறான தகவல்களை அளித்தால் இதச IPC (பிரிவு 177)-இன் அச்சுறுத்தல் உள்ளது, இந்த வழக்கில்,  இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஆகஸ்ட் 27, 2015 அன்று, ஆர்டிஐ ஆர்வலர் நீரஜ் ஷர்மா ஆர்டிஐ சட்டம் 2015 இன் கீழ் முதன்முதலில், மோடி பட்டம் பெற்றதாகக் கூறும் 1978 இல், தில்லி பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களின் முடிவுகளின் சான்றளிக்கப்பட்ட நகலைக் கேட்டுத் தாக்கல் செய்தார். சர்மாவின் முழு வியப்புக்கு, தில்லி பல்கலை. ஒரு நபரின் தனியுரிமையைப் பற்றிய தகவலைத் தர மறுத்தது - வினோத மானது, ஏனெனில் அனைத்து முடிவுகளும் பல்கலைக்கழ கத்தின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சர்மா சிஐசி (CIC) க்கு மேல்முறையீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிஐசி ஒன்பது மாதங்கள் எடுத்து டிசம்பர் 21, 2016 அன்று விவரங்களை வழங்குமாறு தில்லி பல்கலை.யை கேட்டது. மீண்டும், ஜனவரி 2, 2017 அன்று சிஐசி உத்தரவுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் தில்லிபல்கலை மேல்முறையீடு செய்தது, மேலும் மோடி யின் பட்டம் குறித்த விவரங்களைத் தர மறுத்தது.

மோடியின் பட்டப்படிப்பு குறித்த பதிவுகளை வழங்குமாறு தில்லி பல்கலை.-க்கு உத்தரவிட்ட சிஐசி கமிஷனர் ஸ்ரீதர் ஆச் சார்யலு, உத்தரவு பிறப்பித்த 10 நாட்களுக்குள் மனிதவளத் துறையிலிருந்து மாற்றப்பட்டார் என்று தான் கூற வேண்டும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது, ஆனால் ஒத்தி வைப்புகளால் சூழப்பட்டுள்ளது என்று சர்மா கூறுகிறார். “முதலாவதாக,  மோடியின் பட்டத்தை ஆய்வு செய்ய அனுமதிக்காததற்காக, தில்லி பல்கலை. சார்பில் ஆஜரா னது, வேறு யாரும் அல்ல, மோடி அரசாங்கத்தின் சட்ட அதி காரி உதவி சொலிசிட்டர் ஜெனரல் (ASG) துஷார் மேத்தா தான். இது தில்லி பல்கலை.யை ஆதரிக்கும் மோடி அரசாங்கத்தின் உறுதியைப் பற்றிக் கூறுகிறது.” ஜனவரி 2017 முதல் இன்று வரை தில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகளின் காலவரிசை வெளிப்படுத்துகிறது. ஷர்மாவின் கூற்றுப்படி, ஜனவரி 23, 2017 அன்று, தில்லி உயர் நீதிமன்றம், 1978 ஆம் ஆண்டில் பிஏ-இல் தேர்ச்சி பெற்ற, பட்டியல் எண்களுடன், தந்தையின் பெயர்களைக் கொண்ட மாணவர்களின் பெயர்கள், தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வியடைந்த மாணவர்களின் விவரங்கள் கொண்ட அனைத்து மாணவர்களின் முடிவுகள் பற்றிய முழுமை யான தகவல் தொடர்புடைய பதிவேட்டை (DU) ஆய்வு செய்ய அனுமதிக்கும் சிஐசி உத்தரவை தடுத்து நிறுத்தியது. உயர் நீதிமன்ற முடிவு குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை என்றும், பதிலளிக்க அழைக்கப்படவில்லை என்றும் சர்மா கூறுகிறார். மறுநாள்தான் அவர்களுக்கு அறி விக்கப்பட்டது - இருப்பினும், தில்லி பல்கலை. மனுவுக்கு எதி ரான தங்கள் வாதங்களுக்கு எழுத்துப்பூர்வ பதிலை அனுப்பி னார்கள் - அது 1978 இன் முடிவுகள் குறித்த எந்தத்தகவலும் வெளியாட்களுக்கு வழங்கப்படாது என்று வலியுறுத்தியது.

தில்லி பல்கலை.சார்பில் மோடி அரசின் உயர்மட்ட சட்ட அதிகாரி மேத்தா ஆஜரானார். நீதிபதி சஞ்சீவ் சச்தேவா அடுத்த விசாரணையை ஏப்ரல் 27, 2017க்கு ஒத்திவைத்தார். நியமிக்கப்பட்ட நாளில், ஷர்மாவின் வாதங்களுக்கு மறுபிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, தில்லி பல்கலை.க்காக மேத்தா மேலும் நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டார். அதற்கு நீதிமன்றம்  தேவையான கால அவகாசம் வழங்கியது. நவம்பர் 16, 2017 அன்று தேதி நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி விபு பக்ரு,தில்லி பல்கலை.யின் வழக்கறிஞர் மறுஆய்வு மனு தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் கேட்டபோது, இடைப்பட்ட மாதங்களில் தினமும் ஒரு பக்கம் வக்கீல் எழுதியிருந்தால் கூட ஒரு புத்த கத்தோடு வந்திருக்கலாம் என்று நீதிபதி கிண்டலாகக் கூறிய தாக ஷர்மா கூறுகிறார். தில்லிபல்கலை. வழக்கறிஞருக்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட்ட போதிலும், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும், “அவ்வாறு செய்வதற்கான அதன் (தில்லி பல்கலை.) உரிமை மூடப்பட்டுள் ளது” என்றும் நீதிபதி கூறினார். இந்த வழக்கு பிப்ரவரி 28, 2018 அன்று பட்டியலிடப்பட்டது.

விசாரணை நாளில், மற்றுமொரு பிரதிவாதிகள் ஒரு மனுவைத் தாக்கல் செய்யத் தலையிட்டனர். அதாவது ஆர்டிஐ ஆர்வலர்களான அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே மற்றும் அம்ரிதா ஜோஹ்ரி,தில்லி பல்கலை. முடிவுகளை அறி விப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இது  ஆர்டிஐ இன் தலைவிதி மற்றும் பொருத்தத்தின் மீது தீவிர மான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினர். மூன்று ஆர்டிஐ ஆர்வலர்களையும் சேர்த்துக் கொள் வதை கடுமையாக எதிர்த்த தில்லி பல்கலை. வழக்கறிஞர் மேத்தாவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், நீதிபதி ராஜீவ் ஷக்தேர் தில்லி பல்கலை. க்கு நோட்டீஸ் அனுப்பினார். அத்துடன் அதன் வழக்கறிஞரிடம் மூன்று வாரங்களுக்குள் பதில் தாக்கல் செய்யுமாறும், வேறு ஏதேனும் இருந்தால், மறுபரிசீலனை விசாரணை தேதி, மே 22, 2018 அன்று தாக்கல் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். இருப்பினும், அவர் வேறொரு அறையில் இருந்ததால், நியமிக்கப்பட்ட நேரத்தில் மேத்தா ஆஜராகவில்லை. அதே நாளில் பிற்பகுதிக்கு நீதிபதி மற்றொரு அவகாசம் கொடுத்தும், மேத்தா மாலை 4 மணிக்குக் கூட ஆஜராக வில்லை. மேத்தாவின் கோரிக்கையின் பேரில், நீதிபதி ஷக்தேர் விசாரணையை ஆகஸ்ட் 23, 2018 அன்று ஒத்திவைத்தார். ஆச்சரியப்படுவதற்கில்லை, மேத்தா மீண்டும் வரவில்லை, மாலை 5 மணி வரை நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, நீதிபதி விபு பக்ரு இந்த வழக்கை பிப்ரவரி 4, 2019 க்கு பட்டியலிட்டார்.

விசாரணையின் நாளில், நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி, தகவல் வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும் ஆர்டிஐ சட்டத்தின் விளக்கம் குறித்தும் மற்றும் தனிப்பட்ட தகவலின் சிக்கல், “எந்தவொரு பொது நடவடிக்கை அல்லது ஆர்வத்துடன் தொடர்பு இல்லாத அல்லது சம்பந்தப்பட்ட நபரின் தனியுரிமையின் மீது தேவையற்ற படையெடுப்பை ஏற்படுத்தும்” என்றும் நீண்ட விவாதங்களை நடத்தினார். பின்னர் நீதிபதி இந்த வழக்கை ஏப்ரல் 23, 2019 அன்று இறுதி வாதங்களுக்கு மீண்டும் பட்டியலிட்டார். மேத்தா ஊருக்கு வெளியே இருப்பதாகக் கூறி ஆஜராகவில்லை; ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கும் ஒரு பிரதிவாதி ஆனார்; மேலும் நீதிபதி வி .காமேஸ்வர ராவ் இந்த வழக்கை ஜூலை 25, 2019 க்கு ஒத்திவைத்தார். உச்ச நீதி மன்றத்தில் விசாரணையில் மும்முரமாக இருப்ப தாக மேத்தா கூறியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பி னும், பதிலளித்தவர்கள் கடுமையாக எதிர்த்த போதிலும், நீதிபதி ராவ், “நீதியின் நலனுக்காக” நவம்பர் 28, 2019 அன்று வழக்கை ஒத்திவைத்தார். மேத்தா உள்ளிட்டோர் முன்னிலை யில் இருந்தாலும் புதிய தேதியில் எந்த வாதங்களும் முன்வைக் கப்படவில்லை, மேலும் நீதிபதி ஜெயந்த் நாத் விசாரணைக்கு மற்றொரு தேதியை ஜனவரி 28, 2020 அன்று நிர்ணயித்தார். அன்று, வழக்கை வாதாட இருந்த சொலிசிட்டர் ஜெனரல் வேறொரு நீதிமன்றத்தில் உள்ளதாகக் கூறி மேத்தா கெஞ்சி னார். மறுபுறம் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், நீதிபதி நாத் மற்றொரு தேதிக்கு விசாரணையை ஏப்ரல் 15, 2020 அன்று மாற்றினார்.

அதற்குள், கொரோனா தொற்று வெடித்ததால், பிரதமர் மோடி தேசிய முடக்கம் (lockdown) அறிவித்தார், மேலும் அனை த்து விஷயங்களும் முன்னேறாமல் அங்கேயே நின்றன. மோடியின் முழு அரசியல் அறிவியலில் ( Entire Political Science -பல்கலைக்கழகத்தில் இதுவரை வழங்கப்படாத பாடம்) எம்.ஏ பட்டத்தின் பதிவுகளை வழங்குவதற்கான மனுவை நிராகரித்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை மேத்தா எப்போதும் வாதிட்டார். குஜராத் பல்கலை. இன்  துணைவேந்தர் 2016 இல் விளக்கியது போல், மதிப் பெண்களின் விவரங்களை விண்ணப்பதாரருக்கு மட்டுமே வழங்க முடியும், மேலும் பல்கலைக்கழகம் 20 ஆண்டுக ளுக்கு முந்தைய பதிவுகளை வழங்காது. இருப்பினும், துணை வேந்தர் இறுதியாக மோடியின் முடிவுகளின் விவரங்களை அளித்தார் - அவர் முழு அரசியல் அறிவியலில் எம்.ஏ.வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இதற்கிடையில், செப்டம்பர் 2016 இல், சர்ச்சை உச்சத்தில் இருந்தபோது, அமித் ஷா மற்றும் மறைந்த அருண் ஜெட்லி ஆகிய இருவரும் மோடியின் தில்லி பல்கலை பட்டத்தின் நகல்களை வெற்றிகரமாக ஒளிரச் செய்து, இறுதியாக இது சந்தேகங்களைத் தீர்க்கும் என்று கூறினர். பதில்களைக் கோரி முன்னணியில் இருந்த ஆம் ஆத்மி உறுப்பினர்கள் பட்டச் சான்றிதழில் உள்ள பல முரண்பாடுகளை அம்பலப் படுத்தினர் - மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ்களில் உள்ள இரண்டு வெவ்வேறு பெயர்கள் முதல் பட்டம் வழங் கப்பட்ட ஆண்டு வரை - மோடியின் தேர்தல் பிரமாணப் பத்திரம் 1978 இல் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறியது, ஆனால் பட்டச் சான்றிதழில் 1979 ஆம் ஆண்டைக் காட்டியது. இது ஒரு சிறிய பிழை என்று தில்லி பல்கலை. கூறியது.

அப்படியென்றால், தனது பல்கலைக்கழக பட்டப் படிப்பு சர்ச்சை குறித்து பிரதமர் மோடி என்ன சொல்கிறார்? 2001ஆம் ஆண்டு, பிரதமர் பதவிக்கான வளையத்திற்குள் தொப்பியை வீசுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர், முன்னாள் பத்திரிகை யாளர் ராஜீவ் சுக்லாவுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காண லில் மட்டும், பிரதமர் இதைப் பற்றி பேசியிருக்கிறார். சுக்லா  தொகுத்து வழங்கிய U-gh-U என்ற நிகழ்ச்சியில், தனது கல்வி குறித்த கேள்விக்கு மோடி அளித்த பதிலில், “நான் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். பள்ளி முடிந்ததும் வெளியேறினேன். அன்றிலிருந்து நான் புதிய விஷயங்க ளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.” பள்ளி வரை மட்டுமே படித்தீர்களா என்று சுக்லா கேட்ட தற்கு, மோடி மேலும் கூறினார், “ஒரு சங் தொழிலாளியின் வற்புறுத்தலின் பேரில் நான் வெளித் தேர்வுகளை எழுதத் தொடங்கினேன். நான் டெல்லி பல்கலைக்கழகத்தில் வெளிப் புறத் தேர்வு மூலம் பி.ஏ. படித்தேன், ஆனால் அவரது விடா முயற்சியால், நான் எம்.ஏ. வெளிப்புறத் தேர்வு (அதுவும்). நான் கல்லூரி வாயிலைப் பார்த்ததில்லை.” 

நன்றி: நியூஸ்கிளிக், மொழியாக்கம்: தங்கப்ரியா

;