articles

img

ஒற்றைக் கோரிக்கை மாநாடு! வெற்றி காண கூடுவோம் உறுதியோடு! - மு.அன்பரசு

டிசம்பர் 18, 19 தேதிகளில் சென்னையில்  நடை பெறும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என்ற மாபெரும் இயக்கத்தின் 14ஆம் மாநில மாநாடு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை மற்றும் அரசு சார்ந்த பணிகளில் உள்ள பெரும் பான்மை ஊழியர்களிடையே ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பி னை ஏற்படுத்தியிருக்கிறது.  அரசு ஊழியர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்பே எதிர்காலத் தலைமுறையினர் பெருமை யோடு சொல்லிக்கொள்கிற அடிச்சுவடு ஒன்றை  விட்டுச் செல்வதே ஆகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்ததாகவோ, தொகுப் பூதியம் மதிப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களை காலவரை ஊதியத்தில் கொண்டு வந்ததாகவோ, ஊதிய முரண்பாடுகளை களைந்ததாகவோ அரசுத் துறைகள் தனியார் மயத்தைத் தடுத்து நிறுத்தியதாகவோ மட்டு மல்ல; அரசு ஊழியர்கள் இழந்திருக்கிற, அவர்களிடமி ருந்து பறிக்கப்பட்டிருக்கிற அனைத்து உரிமைகளை யும் பெற்றுத்தந்ததாக இருக்க வேண்டும். அதற்கான ஆரம்பப் புள்ளியாக இந்த மாநாடு இருக்கும்.

கொத்தடிமை போன்ற  நிலை அகலட்டும்

இன்றைக்கும் கொத்தடிமை கூலிமுறையின் கீழ் சத்துணவு மைய அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், சமூக வனப் பாதுகாவலர்கள், சமூகநலத்துறை உடனாட்கள் போன்றவர்கள் எவ்வித பதவி உயர்வும், பணி நன்மை களும் இல்லாமல் உழன்று வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்ற சட்டமன்றத் தேர்தலின்போது தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்ற கூலிமுறைகள் ஒழிக்கப் பட்டு முறையான காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற முக்கியமானதொரு வாக்குறுதியை தெரிவித்தார். ஆனால் அது குறித்து இதுநாள் வரையில் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அம்மாவின் ஆட்சியை நடத்துவதாக கூறிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அம்மாவின் வாக்குறுதியையும், சட்டமன்றத் தில் விதி எண்.110ன் கீழ் வெளியிட்ட ஜெயலலிதா அம்மையார் வெளியிட்ட அறிவிப்பினையும், காற்றில் பறக்க விட்டார். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பலநோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட திமுக அரசிடம் ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

21 மாத ஊதிய மாற்ற  நிலுவைத் தொகையை உடனே வழங்கிடக் கோரிக்கை

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்  1.1.2016 முதல் ஊதிய மாற்றம் பெற்று விட்டார்கள். காவல்துறை ஐ.பி.எஸ் அதிகாரிக ளும் 1.1.2016 முதல் ஊதியமாற்ற நிலுவையை பாக்கி யின்றி ஊதியம் பெற்று விட்டார்கள். மக்கள் பிரதிநிதி களாய் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் கேபினட் அமைச்சர்கள் வரை 100 சதவீத சம்பள உயர்வு பெற்று விட்டனர். ஐந்தாண்டுகள் மட்டுமே சட்ட மன்ற  உறுப்பினர் பதவியில் இருந்தாலும் அவர்கள் ஆயுள் முழுவதும் ஓய்வூதியம் பெற அந்தத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகளும் 1.1.2016 முதல் ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டார்கள். அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளவர்கள் மட்டும் ஒரு நயா பைசா மீதம் வைக்காமல் ஊதிய மாற்ற நிலுவைகள் பெறும் போது அரசு ஊழியர்க ளுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டும் அது வழங்கப்படா தது சமத்துவம் சம உரிமை பேசும் மக்களாட்சித் தத்துவத்திற்கு விரோதமானது ஆகும். எனவே, தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள் கோரிக்கையில் உள்ள நியா யத்தை உணர்ந்து 1.1.2016 முதல் அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கும் ஊதியமாற்ற நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் முறையிடப்பட்டுள்ளது.

பணிவரன்முறை - ஊதியம் 

2003, 2004 மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப் படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக நிலவையில் உள்ளது. அதையும் திமுக அரசு பரிசீலிக்க கோரப் பட்டுள்ளது. 

தமிழகம் தலை நிமிர வேண்டும்

இந்தியாவில் தமிழகம் எப்போதும் முன்னோடி மாநிலமாக இருந்து வந்திருக்கிறது. சமூகநீதி, சமத்து வம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், பெண் களுக்கான உரிமை போன்ற பல தளங்களில் முன்னோ டியாக இருந்த மாநிலம் தற்போது எல்லாவற்றிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் இம்மாநில இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதும் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசுத்துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெறுவதும் ஆகும். அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளிக ளில் ஆசிரியர்களும் முழுமையான அளவில் நியமிக்கப் பட்டு பணி செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஒன்றிய அரசுக்கு இணையான உரிமைகளும் ஊதியமும் வழங்கப்பட்டால் அனைத்துத் துறைகளிலும் முன்னேற உழைப்பதுடன் சமுதாய மேம்பாட்டையும் பேணிக் காப்பதில் தீவிர கவனம் செலுத்துவார்கள். இதை இப்போதுள்ள அரசு கவனத்தில் கொள்ள வேண்டியதன்  அவசியத்தை இந்த மாநாடு உணர்த்தும்.  

மறுக்கப்பட்டுள்ள  சட்டப்படியான உரிமைகள்

சட்டங்களாலும் நிர்வாக விதிமுறைகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான உரிமைகளை தருவதற்கு அரசாங்கங்கள் மறுப்பதும், குறைப்பதும், நிலுவைகளை தரமுடியாது எனக் கூறுவ தும், ஊழியர்களுக்கான உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமைகள் மறுக்கப்படும்போது நீதிமன்றம் அரசை அதைக் கொடுக்கச்சொல்லி வலியுறுத்தாமல் இருப்ப தும், தங்களது மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அதற்கு தடை விதிப்பதும் மக்களாட்சித் தத்துவத்தை கேலிக் கூத்தாக்கும் நிகழ்வுகள்.  

ஊதிய முரண்பாடுகளைக் களைய பத்தாண்டுகளு க்கு மேலாக போராடுகிறோம். வஞ்சிக்கப்படுகிறோம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கிறோம் போராடுகிறோம்.   ஊதிய நிலுவை கேட்டு போராடுகிறோம். முள்வேலி தடுப்புகளால் முடக்கப்படுகிறோம். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஊழியர்களுக்கு வரையறுக்கப் பட்ட ஊதியத்தை வழங்க வேண்டி போராடுகிறோம், அவை வெறும் பரிசீலனையில் உள்ள அறிவிப்புகளா கவே உள்ளன. தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் வரையறுக்கப்படாத ஊதிய விகிதங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று குரல் கொடுத்தால், “பணியா ளர்கள் பகுப்பாய்வுக் குழு’’ என்ற ஒரு குழு அமைக் கப்பட்டு நிரந்தரப் பணியிடங்களை ஒப்பந்தப் பணி யிடங்களாகவோ அல்லது தற்காலிகப் பணியிடங்களா கவோ மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப் படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள், காலிப் பணியிடங்களை நிரப்புங்கள் என்று சங்கெடுத்து ஊதுகிறோம்; அரசா ணைகள் போடப்பட்டு ஆசிரியர் பணியிடங்கள் ஒழிக்கப் படுகின்றன. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் விடப்பட்டுள்ள அநீதியை எடுத்துரைக்கிறோம்; அதில் முனைப்பு காட்டாமல் தொடக்கப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவுகள் வேகமாக மேற்கொள்ளப் படுகின்றன. வெயிலோ, மழையோ, பனியோ, புயலோ எத்தகைய இடர்ப்பாடுகளிலும் இயற்கைப் பேரிடர்களி லும் மக்கள் சேவையாற்ற அரசு ஊழியர்கள் உறுதுணை யாக இருந்து வருகிறார்கள். இந்த நடவடிக்கையை சேவையாகப்பார்க்காமல் ஒரு அரசாங்கம் செலவாகப் பார்க்கும் தன்மை இரக்கமற்றது. 

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தைக் கைவிடக்கோரியும், இளை ஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசின் அர சாணை எண்.56ன் மூலம் அரசுத்துறையில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளைக் கைவிடக்கோரியும், சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியா ளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களு க்கு காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும் தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள நாலரை லட்சம் பணியிடங்களை உடனே நிரப்பிடக் கோரியும் தொடர்ந்து நாம் மேற்கொண்டு வரும் கோரிக்கைகள் ஈடேற வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த மாநாடு உதவிடும். 

புதிய பொருளாதாரக்  கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள சீரழிவுகள்

புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் இன்றைய அரசாங்கங்கள் தாங்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை தனியார்வசத்திடம் ஒப்படைப் பதன் மூலம் தங்களுக்கான கடமைகளிலிருந்தும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை தாயுள்ளத்தோடு தாங்கிப் பிடிக்கும் தர்மத்திலிருந்தும் விலகிக் கொள்ள நினைக்கின்றன. அரசாங்கம் என்ற சேவைமையம் தனி யார்மயம் என்ற லாபமயத்திடம் அடகுவைக்கப்பட்டு விட்டது. இதன் விளைவு இளைஞர்களின் எதிர் காலத்தை பாதிக்கும் என்பதை நன்கறிந்தும் தமிழக அரசாங்கம் தனியார் நிறுவனத்தைப்போல் அரசு நிர்வா கத்தை ‘அமர்த்து - துரத்து’ என்ற அடிப்படையில் நடத்த ஆரம்பித்துள்ளது.

அரசாங்க வேலையில் சேர்பவர்களுக்கு இனிமேல் ஓய்வூதியம் என்பது அவர்களின் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியமாகத்தான் இருக்கும் என்பதிலிருந்து தொடங்கி இன்று அரசுத்துறைகளையே தனியார் சசம் ஒப்படைக்கும் நிலைமைக்கு அரசு நிர்வாகம் வந்திருக்கிறது. இதன்விளைவுகள் நாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத சமூகப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதைப்பற்றி ஆட்சியாளர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. அரசு நிர்வாகத்தை ஏழை, எளிய மக்களுக்குரிய பாதுகாப்புடன் மக்களின் அடிப்படைத் தேவைகள் பாதிக்காத வகையில் நிர்வகிக்க தனியார் மயங்களும், அவுட் சோர்சிங் முறைகளும், ஆட்குறைப்பு நடவடிக்கைகளும் ஒருபோதும் உதவாது. 

அரசாங்க வேலைக்கு ஆள் எடுப்பதில் சுணக்கம், காலிப்பணியிடங்களை நிரப்பாமல் அப்படியே விட்டு விடுதல், புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படாதது; தேவைப்படும் இடங்களில் தற்காலிகப் பணியாளர்க ளை நியமித்துக் கொள்ளுதல், வேலை முடிந்ததும் அவர்களை விரட்டிவிடுதல், ஒப்பந்த முறையில் பணி யாளர்களை அமர்த்துதல், அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமித்தல் போன்ற பலகட்ட வடிகட்ட லுக்குப்பின்னர் தமிழக அரசு பெரும்பான்மையான துறைகளை தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவில் உள்ளது. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் மட்டும் போராடினால் போதாது. தனியார் மயமாக்கலின் விளை வுகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினால் தவிர தனியார் மயம் என்ற ஆபத்து இந்த நாட்டை விட்டு நீங்காது. 

தமிழக அரசாங்கத்தில் பல்வேறு அரசுத்துறை களில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், வரையறுக் கப்படாத ஊதிய விகிதம், தினக்கூலி ஆகியவற்றின் கீழ் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வரு கின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொண்டு வேலைக்காக காத்துக்கிடக்கின்றனர்.  இந்த இளை ஞர்களின் எதிர்காலத்தை வேலையில்லாத் திண் டாட்டம் மிகவும் இருளடையச் செய்து வருகிறது. இந்தி யாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொண்டு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை பத்துகோடியை நெருங்கிக் கொண்டி ருக்கிறது என்றும், கிராமப்புறங்களில் வேலை கிடைக் காத நபர்களின் எண்ணிக்கை 20 கோடி பேர்களுக்கும் மேல் என்றும் பல்வேறு நிறுவனங்களின் ஆய்வறிக்கை கள் தெரிவிக்கின்றன.  இந்த நிலைக்கு தீர்வு வேண்டிய நிலையில் ஒன்றிய -மாநில அரசுகள் உள்ளன. 

தமிழக அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் விடப்பட்டுள்ள நிலை ஒரு புறமிருக்க, படித்துவிட்டு வேலை வழங்கப்படாமல் இருக்கும் இளை ஞர்களும் பெண்களும் மறுபுறம். இவற்றுக்கிடையில் இளைஞர்களையும், பெண்களையும் மிகக்குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தி அவர்களின் உழைப்புச் சக்தியைச் சுரண்டும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.   இத்தகைய கொத்தடிமை கூலிமுறையின் கீழ் சத்துணவு மைய அமைப்பாளர்கள், சமையலர்கள்,  உதவியாளர்கள்,  அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், சமூகவனப் பாதுகாவலர்கள், சமூகநலத்துறை உடனாட்கள் போன்ற பல்வேறு பணிகளை செய்யக்கூடிய ஊழியர்களின் உழைப்பு முறையான  ஊதியமின்றி பல ஆண்டுகளாக சுரண்டப் பட்டு வருகிறது. இவர்கள் எவ்வித பதவி உயர்வும், பணி நன்மைகளும் இல்லாமல் உழன்று வருகின்றனர்.   

இதேபோல் ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் மாநிலங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும்  நிறுவனங்களிலும் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிறுவனங்களிலும் முற்றிலும் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நிய மிக்கப்பட்டு குறைவான ஊதியத்தில் பணியில் அமர்த்தப்படுகின்ற போக்குகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், தேசிய பார்வைகுறைபாடு கட்டுப்பாட்டு கழகம், மாநில தொழு நோயாளிகள் கழகம், தேசிய ஊரக சுகாதாரப் பணி,  தேசிய நகர்ப்புற சுகாதாரப்பணி, தமிழ்நாடு சுகாதார  அமைப்பு திட்டம், தமிழ்நாடு மூலிகைப் பண்ணை மற்றும் மூலிகை மருந்து கழகம், நோயாளிகள் நல கழகம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் போன்ற நிறுவனங்களின் சேவைகள்  என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு விடக் கூடியவை அல்ல. காலவேக மாற்றத்தில் இத்தகைய நிறுவனங்கள்/ கழகங்கள்/வா ரியங்கள் தொடர்ந்து இயங்க வேண்டிய அவசியம் உள்ள நிலையில் அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக் கான ஊழியர்கள்  ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டு ஊழியம் செய்வதானது, அர சாங்கமே கொத்தடிமை அத்துக்கூலி முறையையும், உழைப்புச் சுரண்டலையும் அரசுடைமை ஆக்கும் செயலாகும்.      

தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் தனித்தன்மைகள்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அரசு ஊழியர்க ளுக்காக மட்டுமல்லாமல் சமூக அவலங்களுக்காக வும் அநீதிகளை எதிர்த்தும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது. விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினர் உரிமைகளுக்கா கவும் குரல் கொடுப்பதும் போராட்டம் நடத்துவதும் அதன் சமூக குணமாகும். ஆசிரியர் சமுதாயத்துடன் இணைந்து ஜாக்டோ ஜியோ என்ற கூட்டியக்கத்தின் மூலம் தனி முத்திரை படைத்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தனி கொட்டகை போட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் உழைப்பாளர் வர்க்கம் என்ற பொதுபிரவாகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள இயக்கமாகும். ஒன்றிய மாநில அரசுகளின் மக்கள்விரோத கொள்கைகளுக்கு எதிராக மாநில அளவிலும் இந்திய அளவிலும் போராட் டம் நடத்தும் இயக்கமாகும். இன்று நமது நாட்டின் மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் வண்ணம் வகுப்பு வாதத்தையும் சாதி பேதங்களையும் தேச விரோதங்க ளையும் ஊக்குவிக்கும் சக்திகளை எதிர்த்து கேட்கும் போராட்ட குணம் கொண்ட இயக்கமாகவும் இது உள்ளது. 

அத்தகைய போராட்ட உணர்வுகளை தட்டி எழுப்பும் விதமாக, விடை தேடும் களமாக தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டின் நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர் சமு தாயத்தின் புதிய விடியலுக்கான மாநாடாக இது நிச்சயம் இருக்கும். அதை மாநாட்டில் கலந்து கொண்டு உறுதிப் படுத்த அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் மாநாட்டு க்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். கூடுவோம், பேசுவோம், அரசிடம் கோரிக்கை வைப்போம். ஆட்சியா ளர்களை திரும்பிப் பார்க்க வைப்போம். நிச்சயம் பறிக்கப்பட்ட உரிமைகளையும் நிறுத்தப்பட்ட சலுகை களையும் பெற்றே தீருவோம்!

கட்டுரையாளர் : தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்



 

;