articles

img

நாட்டாமையும் நாடி ஜோசியரும் இனி பேராசிரியர்கள் ஆகலாம்... - பொ.இராஜமாணிக்கம்

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அனுபவ அறிவுப் பேராசிரியர்கள்   (Pro fessor of Practice) என்ற ஒரு புதிய வகைப் பேராசிரியர்களை உயர்கல்வி நிறுவனங்கள் பணி  அமர்த்திக் கொள்ளலாம் என பரிந்துரை செய்கிறது. அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இவர்கள் மூலம் அன்றாட செய்முறையையும் பயிற்சி யையும் வகுப்புகளில் உடனடியாகக் கொடுக்க வாய்ப்புள்ளது என்றும் இதன் வழியாக பயிற்சி பெற்ற தகுதியுடைய திறன் மேம்பட்ட பட்டதாரிகள் மூலம் தொழில் நிறுவனங்களும் சமுதாயமும் பயன்பட முடியும் என்கிறது. தேசிய கல்விக் கொள்கை -2020 பொதுக்கல்வியோடு தொழிற்கல்வியை இணைத்து கல்வியையும் தொழில் நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு வழி செய்கிறது.

1.இதன் நோக்கம் என்னென்ன?

அ. தொழில் நிறுவனங்கள், சமூகம் ஆகியவற்றின் தேவையையொட்டி படிப்பு வகைகள், பாடத்திட்டம் உருவாக்குதல்; தொழில்நிறுவன நிபுணர்களுடன் இணைந்து ஆய்வுத் திட்டங்கள் மற்றும் கன்சல்டன்சி சேவைகளை வழங்குதல்.  

ஆ.பொறியியல், அறிவியல்,தொழில்நுட்பம், தொழில் முனைவு,வர்த்தகம், சமூக அறிவியல், ஊட கம், இலக்கியம், நுண்கலை, சிவில் சர்வீசஸ், ராணு வம், சட்டம், பொது நிர்வாகம் ஆகிய தளங்களில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.

இ.தகுதிமிகு நபர்களை உயர்கல்வி நிறுவ னங்கள் இணைத்துக் கொள்வதன் மூலம் அனுப வழி கற்றல்,ஆய்வு, பயிற்சி, திறன் வளர்ப்பு, விரிவாக்கப் பணிகளில் இவர்களை இணைத்துக் கொள்ளலாம்.

2.இவர்களுக்கான தகுதி என்னென்ன?

அ. மேற்சொன்ன துறைகளில் 15 வருட பணி அனுபவம் அல்லது அனுபவ அறிவு,  

ஆ. இவர்களுக்கு உரிய கல்வித் தகுதி இல்லா விட்டாலும் தங்களுடைய தொழிலில் திறன் மிக்க வராக இருந்தாலே போதும். மேலே குறிப்பிட்ட வேலை யையும் பொறுப்பையும் செய்யக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும்.

இ.ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் ஒரு நேரத்தில் இவர்களின் பதவி 10 சதவீதத்திற்கு மேல் இருக் கக்கூடாது.

3.பணியும் பொறுப்புகளும் என்னென்ன?

அ. படிப்பு வகைகள், பாடத்திட்டம் உரு வாக்குதல்,  

ஆ.நிறுவனத்திற்கேற்ப புதிய படிப்புகளை உரு வாக்குதல் பாடம் நடத்துதல்,  

இ.மாணவர்களுக்கு புதியன கண்டு பிடித்தலுக்கும் தொழில்முனைய திட்டம் தயாரிக்க வழிகாட்டுதல்,  ஈ. கல்வி-தொழில் இரண்டுக்கும் கூட்டு உருவாக்கு தல்,  உ. கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே பணியாற்றும் துறைப் பேராசிரியர்களோடு இணைந்து பயிலரங்கம், கருத்தரங்கம், சிறப்பு உரைகள், பயிற்சி ஆகியன நடத்துதல்,  ஊ.பேராசிரியர்களுடன் இணைந்து ஆய்வுத் திட்டம் தயாரித்தல் ஆலோசனை அளித்தல்.

4) பொதுவான வரையறைகள்

அ. இவ்வகைப் பேராசிரியர்களுக்கு குறிப்பிட்ட காலம் மட்டுமே பணி வழங்கவேண்டும்.முதற்கட்ட மாக ஒரு வருடம். அவர்களின் செயல்பாட்டைப் பொறுத்து மேலும் மூன்று வருட காலம் நீட்டிக்க லாம்.மொத்தம் நான்கு ஆண்டுகள்,  

ஆ. இவ்வகைப் பேராசிரியர்களினால் பல்கலைக் கழக /கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்க ளில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது,  

இ. பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற பேராசிரி யர்கள் இதில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

5) யார் யாரைப் பயன்படுத்தலாம்?

அ.தொழிற்சாலைகளின் நிதி ஆதரவோடு வருப வர்கள்: தொழில் நிறுவனங்கள் பணிக்குத் தேர்வு செய்த பின் திறன் வளர்ப்பு என்ற வகையில் செய்யும் பணியை படிக்கும் போது இவர்கள் வழங்குவதால் இருவரும் நன்மை பெறுகிறார்கள். இதனால் நிறுவனங்களே பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

ஆ. உயர்கல்வி நிறுவனத்தின் சுய சம்பாத் திய நிதி ஆதரவோடு கெளரவ அடிப்படையில்: பகுதி நேரமாகவோ முழு நேரமாகவோ பணியில் சேர்ப வர்களுக்கு உரிய நிதியை உயர் கல்வி நிறுவனமே வழங்குதல் என்பது தேசியக் கல்விக்கொள்கை மூலம் சாத்தியப்படுத்தலாம். அதாவது கல்விக் கொள்கை பல்வகைப் படிப்பு, முழுமையான படிப்பு என்ற வகையில் வாய்ப்புத் தருவதால் அதனடிப்ப டையில் தங்களுடைய நிதி வளங்களில் இருந்தே வழங்கலாம்.

இ.கெளரவ அடிப்படையில் பணிக்கு வருவோ ருக்கு கல்வி நிறுவனமே தனது நிதி ஆதாரத்தில் இருந்து மதிப்பூதியம் வழங்கலாம்.

6) எப்படி தேர்வு செய்யப்படுவர்?

அ. துணை வேந்தர், உயர்கல்வி நிறுவன இயக்கு நர்கள் இந்நிபுணர்களை நியமிக்கலாம்.

ஆ. அல்லது நிபுணர்களே துணை வேந்தர்கள்/இயக்குனர்களுக்கு தங்களது தகுதியை குறிப்பிட்டு, விருப்பத்தைத் தெரிவித்து மனுச் செய்து பதவி பெறலாம்.

இ. இவ்வாறு பெறப்பட்ட விருப்ப மனுக்களை இரண்டு சீனியர் பேராசிரியர்கள், தலைசிறந்த வெளி  நபர் ஆகியோர் கொண்ட தேர்வுக்கமிட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டு கல்விப் பேரவை/ செயல் கவுன்சில்/சட்ட ரீதியான அமைப்புகள் தீர்மானித்து முடிவெடுக்க வேண்டும்.

7) இதன் சாத்தியமும் பிரச்சனைகளும்:

இந்தியா முழுமைக்கும் சுமார் மூன்று லட்சம் பேராசிரியர்கள் பணியிடங்களும் மத்திய பல்கலைக் கழகங்களில் 8000 க்கு மேலும் நிரப்பப்படாமல் உள்ளன. இதை நிரப்புவதற்கு வழிவகை செய்யாமல் அனுபவ அறிவுப் பேராசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வழி சொல்லுவது திசை திருப்பும் வேலையாகும். 

பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் “ஏற்கனவே இணைப்புப் பேராசிரியர்கள்  (Adjunct Professors)கெளரவ பேராசிரியர்கள்(Honorary Professors), வருகைப் பேராசிரியர்கள்(Visiting Pro fessors)  என தகுதி உள்ளவர்கள் இதே வழிமுறை களின்படி பணியைச் செய்து வரும் நிலையில் தகுதி உள்ளவர்களை நீக்கிவிட்டு தகுதியற்ற அனுபவப் பேராசிரியர்களை நியமிப்பது ஏன்? தகுதி தேவை யில்லை; அனுபவ அறிவு இருந்தால் போதும் என்பதே தங்களுக்குத் தேவையான நபர்களை நியமிப்பதற்கு வழி வகுக்கும்” என்கிறார். மேலும் 10 சதவீதம் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இதில் சமூக நீதி புறக்க ணிக்கப்பட்டு ஒதுக்கீட்டு முறை காலாவதி ஆகி விடும். பல பல்கலைக்கழகங்களில் முறையான ஜனநாயக அமைப்புகள் இல்லவே இல்லை. எனவே தேர்வு செய்யப்படும் முறையும் சாதகமானவர்களை நிய மிக்கவே வழி செய்யும் என்கிறார். 

புறவழிக் கொள்கை

தற்போதைய தேசிய கல்விக்கொள்கை இந்திய பாரம்பரிய அறிவுக் கல்வி  (Indian Knowledge System)என்ற அடிப்படையில் படிப்புகளைத் துவக்கச் சொல்லி வலியுறுத்தி இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இது கல்வியை காவி மயமாக்கும் புறவழிக் கொள்கையாகப் பார்க்கலாம். இதன் காரணமாக வாஸ்து சாஸ்திர மேதாவிகள், சோதிடர்கள், நாடி ஜோசியர்கள் எனப் பழமைவாத மூட நம்பிக்கையில் அன்றாட வாழ்க்கை நடத்தும் தொழில் முனைவோர்(!) பல்கலை., கல்லூரிகளில் நுழைய ஆரம்பித்து விடுவார்கள்.

ஏற்கனவே தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்க ளில் வாஸ்து சாஸ்திரமும் கலை அறிவியல் பல்கலைக் கழகங்களில் சோதிடப் படிப்புக்களும்,யோகா படிப்பு களும் நுழைந்து விட்டன. மருத்துவக் கல்லூரிகளில் ஆயுஷ் என்ற தலைப்பில் அலோபதி மருத்துவத்துடன் இணைக்கப்பட உள்ளது. மத்தியப் பிரதேச மருத்துவக் கல்லூரியில் சோதிடர் ஒருவர் வெளி நோயாளி பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இதே நிலை தொடர்ந்தால் தனியார் பல்கலைக்கழ கங்களில் தற்போது துவங்கப்படும் சட்டக் கல்விப் படிப்புக்குக் கூட நம்ம நாட்டாமைகள் கூட எப்படி தீர்ப்பு வழங்கலாம் என வகுப்பு எடுக்க  வந்து விடுவார்கள்.

கட்டுரையாளர் : மேனாள் பொதுச் செயலர்,  அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு
 

 

 

 

;