articles

img

காவிக் கம்பெனிகளுக்கு எதிரான இயக்கங்கள் - ப.தெட்சிணாமூர்த்தி

நேற்றைய தொடர்ச்சி

அமெரிக்க பத்திரிகையாளரும் மனித உரிமை போராளியுமான பீட்டர் பிரடெரிகின் அரசியல் அடித் தளத்தைப் பற்றிய சர்ச்சைகள் உருவாக்கப்பட்டாலும் அநேகமாக சர்வதேச அரங்கில் ஆர்எஸ்எஸ்-ஐ தோலுரித்து உலகிற்கு அம்பலப்படுத்திய முதல் பத்தி ரிகையாளர் என இவரைக் கூறலாம். 6.2.2020 அன்று, அமெரிக்காவின் மும்பை துணைத் தூதரக கான்சல் ஜெனரல் டேவிட் ரான்ஸ், நாக்பூரில் உள்ள ஹெட்கே வார் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தி யதை கண்டித்து கீழே கையொப்பமிடப்பட்ட நாங்கள், கான்சல் ஜெனரல் டேவிட் ரான்ஸ் பதவி விலக வேண்டும் அல்லது திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம் என்று சமூக ஆர்வலர்க ளின் கையெழுத்துக்களை சேகரித்து அமெரிக்க அர சிற்கு அனுப்பினார் பீட்டர்.  

19.2.2020 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மாணவர் கருத்தரங்கில்  மிகப்பெரும்  ஒளித்திரை காட்சிகளோடு உரையாற்றிய பீட்டர் பிரெடெரிக், “1920-களில் மேற்கில் உள்ள பாசிசத்திற்கும் கிழக்கில், இந்துத்துவா  தேசியவாதத்திற்கும் இடையிலான துவக்கம், தொடர்பு ஒரே மாதிரியாக இருந்ததை”க் குறிப்பிட்டார். “ஆர்எஸ்எஸ்  நிறுவப்பட்ட அதே ஆண்டில் ஹிட்லர் ‘மெயின் கேம்ப்’-ஐ வெளியிட்டு  எஸ்எஸ் படை (நாஜிசத்தின்  இனப்படுகொலையை நிறைவேற்றிய படை) துவங்கியதையும்  அதே சம காலத்தில் ஆர் எஸ்எஸ் தனது துணை ராணுவப் படையை நிறுவியது என்பதையும் விவரித்த அவர், இந்துத்துவாவின் பிதாமகர்கள் இத்தாலி மற்றும் ஜெர்மனியில் வளர்ந்து வரும் பாசிச இயக்கங்களிலிருந்து கருத்தி யல் உத்வேகம் பெற்றனர் - மேலும் நேரடி தொடர்பு களில் ஈடுபட்டனர்” என்றும் குறிப்பிட்டார்.  பிரெஞ்சு பத்திரிகையாளரும் பிரெஞ்சு நாடாளு மன்ற உறுப்பினருமான கிளமென்ட்டைன் ஆடெய்ன், 23.3.2021 அன்று பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் உரை யாற்றும்போது, “அடால்ஃப் ஹிட்லரையும் பெனிட்டோ முசோலினியையும் ஆர்எஸ்எஸ்-இன்  ஆரம்பகால தலைவர்கள் வெளிப்படையாகப் போற்றினர்; ஆர்எஸ் எஸ் மதங்களுக்கு இடையிலான வெறுப்பைத் தூண்டு கிறது, வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறது” எனக் கூறினார். இந்தியாவுக்கான பிரெஞ்சு  தூதர் இம்மானு வேல் லெனைன்  9.2.2021  அன்று ஆர்எஸ்எஸ் தலை மையகத்திற்குச் சென்றது ஏன் என்று, பிரெஞ்சு நாடாளு மன்றத்தில் அவர் வினா எழுப்பினார். அரசு முறை  உறவு கள் இல்லாத ஒரு அமைப்பான ஆர்எஸ்எஸ் க்கும் பிரெஞ்ச் அரசுக்கும்  இடையே உள்ள தொடர்பு என்ன என்பதையும்  “பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு இடையே வேறு சந்திப்பு கள் ஏதேனும் உள்ளதா?” என்பதையும் அறிய விரும்பு கிறேன் என்று பகிரங்கமாக கேள்வி கேட்டார்.   அந்த பிரெஞ்சு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கள் பெரும்பாலான  இந்திய பத்திரிகை களில் பிரசுரிக்கப்படவேயில்லை. 

டிராய் மாநகராட்சி மாமன்றத்தில்...

2021  செப்டம்பர்  இறுதியில் அமெரிக்காவின் டிராய் நகர மேயர் பேக்கர், எச்எஸ்எஸ்-ஐ பாராட்டி அறிக்கை  வெளியிட்டிருந்தார். இதை எதிர்த்து 11.10.2021 அன்று பீட்டர் பிரடெரிக், டிராய் மேயர் பேக்கரின் மாமன்றத்தில் பல கேள்விகளை எழுப்பினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே மாமன்றம், எச்எஸ்எஸ்-ஐ பாராட்டி அறிக்கை வெளியிட்டது, என்று மேயர் பேக்கரை நோக்கி  கம்பீரமாக துவங்கிய பீட்டர், “அமெரிக்கா வில் செயல்படும் எச்எஸ்எஸ்- இந்திய ஆர்எஸ்எஸ் -இன்  சர்வதேச ஊதுகுழல்தான் என்பதும், ஆர்.எஸ். எஸ்-சின்  இந்துராஷ்டிராதான் அதன் இறுதி இலக்கு என்பதும், அதில் இந்துக்கள் அல்லாதவர்கள் ஒழிக்கப் படுவார்கள்  என்பதும் உங்களுக்குத் தெரியுமா? தனது இந்துத்துவா திட்டங்களுக்காக இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள் மீது ஆர்எஸ்எஸ் நடத்திய  இனப்படுகொலைகளைப் பற்றி  உங்க ளுக்குத் தெரியுமா? ஆர்எஸ்எஸ்-இன் உறுப்பினர் மகாத்மா காந்தியை படுகொலை செய்தார் என்பதும்  அந்தக் கொலையாளியை புகழ்ந்து ஆர்எஸ்எஸ் ஆட்கள் விழா எடுத்ததும் உங்களுக்குத் தெரியுமா? ஆர்எஸ்எஸ்-க்கு ஐரோப்பிய பாசிஸ்ட்டுகளான ஹிட்லர், முசோலினிதான் வழிகாட்டிகளாக  கருதப் பட்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். 

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), தேசிய எழுத்தாளர்கள் சங்கம் (NWU)- ஆகிய வற்றைச் சேர்ந்தவரும் ‘அமெரிக்கா தி அப்சர்வர்’ இதழின் தலைமைச் செய்தியாளருமான விஜயலட்சுமி நாடார்  பேசும்போது, “நாஜிகளால் ஈர்க்கப்பட்ட வலது சாரி துணை ராணுவக் குழுவான ஆர்.எஸ்.எஸ்ஸின் தயாரிப்புதான்  நரேந்திர மோடி. இந்துவாக பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் நான்  மோடி அரசின் கபட  விளையாட்டுகளை  வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்; இந்தியா  இன்று ஆழ்ந்த சிக்கலில் உள்ளது. சர்வாதிகார ஆட்சியால் இந்தியா  அரிக்கப்பட்டு வருகிறது.   இது புறக்கணிக்கப்பட்டால், அது இந்தியா, ஆசியா, ஐரோப்பா மட்டுமல்ல, அமெ ரிக்காவிற்கும் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க அரசியலின், ஒவ்வொரு நிலையிலும் காங்கிரஸ் மற்றும் செனட்டிலும் எச்எஸ்எஸ் ஊடுருவி யுள்ளது“ என்றார்.  அடுத்தடுத்து அக்கூட்டத்தில் பேசிய வர்கள் எல்லாம் எச்எஸ்எஸ் மற்றும் ஆர்எஸ்எஸ்-சின் உண்மை நோக்கங்களைப்பற்றி எச்சரித்தனர். விவா தத்தின் முடிவில், ஆர்.எஸ்.எஸ்-ஆல்  இந்தியாவில் நடக்கும் பிரச்சனைகள் பற்றிய தகவல் அறிவு இல்லாத தைக் கண்டு நான் திகைத்துள்ளேன். எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்” என  மேயர் பேக்கர் ஏற்றுக்கொள்ள நேர்ந்தது. 

அமெரிக்க ஐரோப்பிய  நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் -க்கு எதிரான  போராட்டங்கள், பொதுவெளியில் நடை பெற்ற வாதங்கள் இந்திய ஊடகங்களில் முழுமையாக பேசப்படுவதில்லை. ஆர்எஸ்எஸ்-க்கு சாதகமாகவே இச்செய்திகள் ஒரு கட்டுக்குள் எப்போதாவது பிரசுரிக் கப்படுகின்றன. கலிபோர்னியாவின் மாண்டெகா மாநகர மன்றம், “மனிதகுலத்திற்கான ஆரோக்கியம் - யோகா 2022” என்ற இந்து சுயம் சேவக் சங்-நிகழ்ச்சி யைப்   பாராட்டி ஒரு நகர பிரகடனத்தை 18.1.2022  அன்று  வெளியிட்டிருந்தது. இதைக் கண்டித்து, அந்த பிர கடனத்தை திரும்பப்பெற வேண்டும் என 19.7.2022 அன்று மாநகர மன்றத்திற்கு எதிரே ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளர்கள், “ஆர்எஸ்எஸ்-ஐ தடுத்து நிறுத்து; எச்எஸ்எஸ் அமெரிக்காவை விட்டு வெளியேறு” எனப் பதாகைகளைத் தாங்கி போராட்டம் நடத்தினர். பார்வையாளர்களால் நிரம்பி வழிந்த மாண்டெகா மாமன்ற அவையில் உரையாற்றியவர்கள் அனைவ ரும் எச்எஸ்எஸ், ஆர்எஸ்எஸ்-ஐ அம்பலப்படுத்தி 18.1.2022 பிரகடனத்தை  ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து எச்எஸ்எஸ்-ஐ பாராட்டிய அந்த பிரகடனம்  ரத்து செய்யப்பட்டது. மேலும்  இதனால் புண்படுத்தப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவும் மாண்டெகா நகரம் விரும்புகிறது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

கடந்த  ஆகஸ்ட் 14 அன்று, நியூஜெர்சி மாகாணம் எடிசன் நகரில் நடந்த இந்திய சுதந்திர தின அணி வகுப்பில், இந்தியாவில் முஸ்லிம்களின் வீடுகளை இடித்ததன் அடையாளமாக  நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் படங்களுடன் “டாடி புல்டோ சர்” என்று எழுதப்பட்ட புல்டோசருடன் காவி குழுக்க ளின் குண்டாந்தடி சேவக்குகள் ஊர்வலம் நடத்தினர். வெறுப்பரசியலின் வெட்கக்கேடானதும் அருவருப்பா னதுமான இச்செயலை நியூஜெர்சி மக்கள் வெறுத்து கண்டித்தனர். ஆளும் ஜனநாயகக் கட்சியின் நியூஜெர்சி முனிசிபல் பிரிவு (டிடிஎம்சி) தறிகெட்டு திரியும் இந்த இந்துத்துவா குழுக்களை கண்டித்து அந்நிய வெறுப்புக் குழுக்கள் என்று முத்திரை குத்தி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தில் இந்துத்துவா குழுக்கள் மீது எப்பிஐ மற்றும் சிஐஏ விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தது.

“அட்லாண்டா, சிகாகோ, சார்லோட், ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சாண் டியாகோ, சியாட்டில் மற்றும் மெட்டா நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியா ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் மாத விடுமுறைகளில் பெரும் எண்ணிக்கையில் அமெரிக் கர்கள் கூடி, பேஸ்புக் பாசிசத்தை செயல்படுத்துகிறது  என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி, இந்தியாவில் வெளியிடப்பட்ட வெறுக்கத்தக்க பாசிச பேச்சுக்களை சுதந்திரமாக அனுமதிக்கும் பேஸ்புக் கிற்கு  எதிர்ப்புத் தெரிவித்ததோடு  தீவிர இந்துத்துவா  வலதுசாரி வன்முறைத் தூண்டுதலுக்கு ​​உடனடி முடிவு கட்ட வேண்டும்” என்று கோரினர்.  

ஹூஸ்டனில் நடைபெற்ற போராட்டத்தில், இந்தியா வில் வெறுப்பை பரப்பும் ஒரு மூர்க்கத்தனமான கருவி யாக பேஸ்புக் மாறி வருகிறது; இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின்  கருத்தி யல் மூல அமைப்பு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் மற்றும் அவற்றின் ஆயுதமேந்திய துணை அமைப்புக ளான விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் ஆகிய அமைப்புகளை ஆபத்தான மற்றும் பயங்கர வாத அமைப்புகளாக டெக் டைட்டான் (பேஸ்புக்)  அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். 

ஆர்எஸ்எஸ் அரசியலின் நயவஞ்சக வடிவம்தான் இந்துத்துவா

அமெரிக்க வரலாற்றில்  முதன்முறையாக, ஹார்வர்டு, ஸ்டான்ஃபோர்டு மற்றும் பிரின்ஸ்டன் உட்பட 50- க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் துறைகள் மற்றும் மையங்களின் அனுசரணையுடன்  ஒன்றிணைந்து, இந்துத்துவா பற்றிய மிகப்பெரும் மூன்று நாள் ஆன்லைன் மாநாட்டை (10.9.2021—12.9.2021) கிழக்கு நேர மண்டல (ET) நேரம் முற்பகல் 9.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை நடத்த ஏற்பாடு செய்திருந்தன. “உலகளாவிய இந்துத்துவா வை அம்பலப்படுத்துதல்” என்ற அம்மாநாடு இந்தியா விலும் பிற இடங்களிலும் உள்ள இந்து மேலாதிக்க சித்தாந்தம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை விவாதித்தது. கருத்துச் சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கும் பாசிச இந்துத்துவா கம்பெனிகள் இம் மாநாட்டை தடுத்து நிறுத்த  உலகமெங்கும்  சகல வழிகளிலும் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டன. லட்சோப லட்சம் மிரட்டல் மின்னஞ்சல்கள் பல்கலைக்கழ கங்களுக்கும் மாநாட்டு பங்கேற்பாளர்களுக்கும் அனுப்பப்பட்டன.  

இம்மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்ப தற்காக தனது நான்கு வயது குழந்தைக்கு கொலை மிரட்டல் வந்தது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலோடு அம்மாநாட்டின்  திரைகளில் இந்திய எழுத்தாளர் மீனா கந்தசாமி தோன்றினார். “சனாதன தர்மத்திலிருந்து  சங் பரிவாரம் வரை- இந்துத்துவாவின் அரசியல் பரிணாமம்” என்ற  தலைப்பில் உரையாற்றிய அவர் காவி அமைப்புகளின் மிரட்டல்களை தனது உரைத் துவக்கத்திலேயே அம்பலப்படுத்தினார். அம்மாநாட் டில் கலந்து கொள்ளக்கூடாது என்று அனைவ ருக்கும் மிரட்டல்கள் வந்தன என்ற உண்மைகள்  பங்கேற்பாளர்கள் மூலம் வெடித்து வெளியே வந்தன. உலகம் முழுவதிலுமிருந்து 937 கல்வியாளர்கள், மாநாட்டிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளி யிட்டனர்  “அமெரிக்கா, ஐரோப்பா அல்லது உலகெங்கி லும் உள்ள கல்வி நிறுவனங்களில்  இந்துத்துவா துணை அமைப்புகளால் நடத்தப்படும் மிரட்டல் பிரச்சா ரத்தை அனுமதிக்க முடியாது. பேச்சு சுதந்திரம் பாது காக்கப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. சர்வதேச அரங்கில் இந்துத்துவா பாசிசத்தைப் பற்றிய  ஆய்வுகளின்  முடிவுகள், கருத்துக் கள்  முழுமையான கருத்தியல் வடிவம் பெறுவதற் கும் இக்காலகட்டத்தின் பொதுக்கருத்தை பிரகடனப் படுத்துவதற்கும் வழிகாட்டியாக அம்மாநாடு அமைந்திருந்தது. 

1925-களில் ஐரோப்பாவில் தோன்றி விசுவரூபம் எடுத்த ஹிட்லரின் நாஜி பூதத்தை  ஒத்த கொடூர பாசிச இயல்புகளோடு   ஆர் எஸ் எஸ்- ஆசிய கண்டத்தில் மையங்கொண்டு விரிந்து பரவிக்கொண்டி ருக்கிறது. உலகின் மிகப்பெரும் பயங்கரவாத இயக்க மாகவும் இன்று மாறிவருகிறது. இந்துத்துவா என்பது  வாழ்வியல் முறையல்ல; 21ஆம் நூற்றாண்டின் மனித குலத்திற்கு எதிரான ஆர்எஸ்எஸ்  மதவெறி அரசிய லின் சக்திவாய்ந்த, நயவஞ்சக வடிவமாகும் என்ற கருத்து பல நாடுகளிலும் பரவியும்  வருகிறது.   இது  மனிதகுல முன்னேற்றத்தை அமைதியான வாழ்விய லின்  மாண்புகளை நேசிக்கும் அனைவருக்கும் நிறை வளிப்பதாகும்.                  (முற்றும்)