articles

img

அரை வயிற்றுக் கஞ்சியையும் அடித்துப் பறிக்கும் மோடி அரசு - ஏ.லாசர்

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டு நிறைவ டைகிறது. இக்காலத்தில் தேசத்தை மிகப்பெரிய அளவுக்கு அனைத்து துறைகளிலும் முன்னேற்றிவிட்டோம் என்று மோடியும் அவரது கட்சியினரும் மார்தட்டி வருகின்றனர். 75வது சுதந்திரத் தினத்தை இந்த தேசமே மிகச்சிறப்பாக கொண்டாடப் போகிறது என்றால் அதில் எங்களுடைய பங்கு மகத்தானது என்றும் அவர்கள் மீடியாக்களின் மூலமா கவும் மேடைகளின் மூலமாகவும் மிகப்பெருமிதமாக பேசி வருகிறார்கள்.  ஆனால் உண்மை,  இந்தியாவில் 80 கோடி மக்கள் தினம் ரூபாய் 150க்கும் குறைவான (வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள்) வருவாயில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.  பெட்ரோல் - டீசல் விலை ரூ.38லிருந்து 105-110 வரை, அதாவது இரண்டரை மடங்கு (250 சதம்)- இவர்கள் ஆட்சியில்தான் உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கு ரூ.350 லிருந்து 1100 ஆக உயர்ந்துள்ளது. அரிசி விலை ரூ.35லிருந்து 55ஆக உயர்ந்துள்ளது. பருப்பு விலை ரூ.60லிருந்து ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. 

வயிற்றில் அடிக்கும் ஜிஎஸ்டி

அதேபோல் சமையல் எண்ணெய் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இவைகளுக்கு இப்போது புதிதாக ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு விதித்து மேலும் உயர்த்துகிற நடவடிக்கையை செய்துள் ளார்கள். கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், இரும்பு, பெயிண்ட், மரங்கள், செங்கல் விலை இரண்டு மடங்கு மேலாக (200 சதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.)  சீனி, பால், டீத்தூள், காபித்தூள் இவைகளின் விலை இரண்டு மடங்குக்கு மேலாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சக்கரா கோல்டு டீத்தூளுக்கு 140 ரூபாய் ஜிஎஸ்டி மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டடிமனை கள் இக்காலத்தில் இரண்டு மடங்காக விலை உயர்ந்துள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் (300சதம்) உயர்ந்துள்ளது. இப்படி சொல்லொண்ணாக் கஷ்டங்க ளுக்கு ஆளாகி வாழ்க்கையில் தாக்குப்பிடிக்க முடியா மல் மரணமடைந்தால் செத்து சுடுகாட்டிற்கு போனால் சுடுகாட்டு கட்டணத்தையும் உயர்த்திவிட்டார்கள். இப்படி தாயின் கருவறையில் தோன்றி உயிர் போகும் வரை மோடியின் ஆட்சியில் உழைக்கின்ற மக்கள் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் தவிர வேறு ஒன்றையும்  சந்திக்கவில்லை.  ஆனால் கார்ப்பரேட்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2லட்சம், 3 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகையும் ஒரு லட்சம் 2 லட்சம் கோடி வரி தள்ளுபடியும் செய்யப் படுகிறது. அதனால்தான் அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் இந்த எட்டு ஆண்டு காலத்தில் உலக முதலாளிகளுடைய எண்ணிக்கையில் நூற்றுக்க ணக்கானோரை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்திற்கு வந்திருக்கின்றனர். 

வேலையின்மை உச்சத்தில்...

வேலையில்லாத் திண்டாட்டத்தினுடைய உச்சம் இன்று இந்த தேசத்தில் இளைஞர்களை மிகப்பெரிய அளவிற்கு பாதிப்படைய வைத்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை, வேலையில் இருந்த நிரந்தரப் பணியாளர்களும் வெளியேற்றப்படுகி றார்கள். பணியில் சேர வேண்டும் என்றால் தொகுப்பூதி யத்தில்தான்(அத்தக்கூலி)சேர வேண்டும். இவர்க ளுக்கு எந்த சட்ட சலுகைகளும் இல்லை. சங்கம் வைத்துக் கொள்வதற்கோ, போராடுவதற்கோ, வேலை நிறுத்தம் செய்வதற்கோ எந்த உரிமையும் இல்லை. அப்படி செய்பவர்கள் தேச துரோகிகள், அவர்கள் மீது வழக்கு தொடுத்து சிறையில் அடைப்போம் என்று பகிரங்கமாக மோடி அரசு அறிவித்து களத்தில் இறங்கியுள்ளது.  இப்போது அக்னி பாதைத் திட்டத்தின் மூலம் தேசம் காக்கும் ராணுவ வீரர்களை நான்காண்டு காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலைக்கு அமர்த்துவது என்றும் அந்த காலத்தில் தொகுப்பூதியம்தான் வழங்கப்படும்; வேறு எந்த சலுகையும் இல்லை; நான்காண்டு கழித்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தேசம் காக்கும் ராணுவ வீரர்களையே அத்தக் கூலியாக அறிவித்துள்ளது மோடி அரசு. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற சட்ட சலுகைகள்  இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை களைக் கண்டு தேசத்தின் ஒட்டுமொத்தத் தொழிலாளி களும் மிகப்பெரும் கோபம் கொண்டு கொந்தளித்து வீதியில் இறங்க தயாராகி வருகின்றனர். 

40 நாளாக சுருங்கிப்  போன வேலை

மோடி அரசு, இந்திய மக்களின் வாழ்வாதாரங்கள் மீது நடத்தியுள்ள தாக்குதல்களில் மிகவும் முக்கிய மானது  மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டம் கடுமை யாக சிதைக்கப்பட்டு வருவது ஆகும். இந்தியாவில் 20 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்க ளுக்கு என்று, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், இடதுசாரிகளின் வலுவான நிர்ப்பந்தத்தால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி சட்டம் மோடியின் ஆட்சிக் காலத்தில் சிறுகச் சிறுக சிதைக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஒதுக்கப்படும் நிதியை முற்றாக நிறுத்துவதற்கு முயற்சித்தார்கள். ஆனால் நாடாளுமன்றத்திலும் வீதியிலும் இதற்கு எதிராக நடந்த போராட்டங்களினால் அதை ரத்து செய்வதை நிறுத்தி உள்ளார்கள். ஆனால் அதற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்துக் கொண்டே வரு கிறார்கள். இவ்வாண்டு பட்ஜெட்டில் கூட 28ஆயிரம் கோடி ரூபாய் நிதியை குறைத்துள்ளது.  மேலும் கூலித் தொழிலாளிகளுக்கு நேரடி உடலு ழைப்புகளுக்காகவே இந்த நிதியில் 70சதத்தை ஒதுக்க வேண்டும் என்று 2015ல் போடப்பட்ட சட்டத்தில் விதி இருந்தாலும், அதை மாற்றி பெரும்பகுதியான பணத்தை தற்போது கட்டுமானப் பணிகளுக்கும், இயந்திரங்களை வைத்து வேலை செய்வதற்கும் காண்ட்ராக்ட் மூலமாக வேலை செய்வதற்கும் ஒதுக்கப் படுவதால் நூறுநாள் வேலைத்திட்டப் பணிகள் சுருங்கி 30 நாள், 40 நாள் வேலைகளாக மாற்றப்பட்டு வருகிறது தேசம் முழுவதும். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது. 

கொரோனா காலத்தில் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம்தான் கிராமப்புற மக்களுக்கு அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைத்தது. அது இல்லை யென்றால் இந்த மக்கள் செத்து மடிந்திருப்பார்கள் என்று பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை களை வெளியிட்டுள்ளன. இதை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய நாடாளுமன்ற நிலைக்குழு கூட, நூறுநாள் வேலைத்திட்டத்தை பலப்படுத்துங்கள்; அதன் வேலைநாட்கள் 40க்கும் கீழாக சுருங்கிவிட்டது.  அவர்களுக்கு கொடுக்கப் படும் சம்பளம் இன்றைக்குள்ள விலைவாசி உயர்வுக்கு சம்பந்தமில்லாமல் உள்ளது. அதில் ஏராளமான முறை கேடுகளும், ஊழல்களும் நடக்கிறது. எனவே கோடிக்க ணக்கான ஏழைகளின் வாழ்வோடு சம்பந்தப்பட்டி ருக்கிற இந்த திட்டத்தை ஒன்றிய அரசு சீரமைத்திட வேண்டும். வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும். கூலியை உயர்த்தித் தர வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. தேசம் முழுவதும் மக்கள் கொந்தளித்து களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசு வாய்மூடி நிற்கிறது. 

விவசாயிகள் இந்த நாட்டில் கடுமையாக பாதிக்கப் பட்ட நிலையில் விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருளுக்கு நியாயமான விலை வேண்டும்; அதை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்; அரசு வங்கிகள், குறைந்தவட்டியில் கடன் களை வழங்க வேண்டும்; ஏற்கெனவே விவசாயிக ளுக்கு வழங்கி வந்த விதை மானியம், கடன் மானியம், உரமானியம் போன்ற மானியத் திட்டங்களை தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடிக் கொண்டுள்ள நிலையில், மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிக ளுடைய நிலங்களை பறிமுதல் செய்து கார்ப்பரேட்டுக ளின் கைகளில் கொடுப்பதற்கான நடவடிக்கையை யும் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு கொள்முதல் விலையை தனியார்களே இனிமேல் தீர்மானிப்பார்கள் என்று அரசு அறிவித்தது; மக்க ளுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்களை அரசு வழங்காது என்று கூறியது. இதனால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. தில்லியில் ஒரு வருட காலமாக லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு மோடி அரசின் - விவசாயிகளுக்கு விரோதமான - அகம் பாவமான கொள்கை முடிவை பின்வாங்க வைத்தார்கள்.  தொழிலாளி வர்க்கத்தை பாதுகாக்கக் கூடிய பல சட்டங்களை, ஒன்றிய அரசு அகற்றி எடுத்துவிட்டது. இன்று தொழிலாளி வர்க்கம் தன்னுடைய சட்ட சலுகைகளை இழந்து உரிமைகளையும் இழந்து விட்ட சூழ்நிலைமையில் அவர்களும் தேசம் முழுவதும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளார். 

ஆகஸ்ட்-1 பேரியக்கம்

இப்படி இந்திய நாட்டில் இருக்கக்கூடிய ஆலைத் தொழிலாளி, விவசாயக் கூலித் தொழிலாளி, ஏழை,  எளிய விவசாயிகள், சாலையோர வியாபாரிகள், சிறு-குறு வர்த்தகர்கள், கட்டுமானத் தொழிலாளி கள், ஆட்டோ, வேன் தொழிலாளர்கள் என்று பலதரப் பட்ட உழைக்கும் மக்கள் இந்த அரசின் கொள்கை யினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீதியில் இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற அடிப்படையில் தான் ஆகஸ்ட் 1 ந்தேதி இந்திய நாடு முழுவதும் அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம், இடதுசாரி இயக்கங்களில், சிஐடியு போன்ற அனைத்து அமைப்புகளும் மாவட்ட ஆட்சியர் அலுவல கங்களுக்கு முன்பு பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, பிரதமர் மோடிக்கே, உங்களுடைய கொள்கை கள் வாபஸ் வாங்கப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று மனு கொடுக்க இருக்கிறார்கள்.  தேசம் தழுவிய இந்தப் போராட்டத்தில் அனைத்து தரப்பு உழைப்பாளிகளும் பங்கெடுப்பதன் மூலமே மோடியின் உழைப்பாளிகளுக்கு விரோதமான கொள்கைகளை வாபஸ் வாங்க வைக்க முடியும்.

கட்டுரையாளர்: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்  சங்க மாநிலத் தலைவர்


 

;